< எண்ணாகமம் 3 >

1 சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:
Eyi ne nea ɛfa Aaron ne Mose mmusua ho bere a Awurade kasa kyerɛɛ Mose wɔ Sinai Bepɔw so no.
2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
Aaron mmabarima din na edidi so yi: Nadab, nʼabakan, Abihu, Eleasar ne Itamar.
3 ஆசாரிய ஊழியம் செய்வதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியர்களான ஆரோனுடைய மகன்களின் பெயர்கள் இவைகளே.
Eyinom ne Aaron mma a wɔasra wɔn ngo na wɔayi wɔn asi hɔ sɛ asɔfo.
4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, யெகோவாவுடைய சந்நிதியில் இறந்துபோனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;
Nadab ne Abihu de, wowuwuu wɔ Awurade anim bere a wɔhyew afɔrebɔde wɔ ogya a ɛmfata so wɔ Sinai sare so no. Na wonni mma nti, Eleasar ne Itamar nko ara na wɔsom sɛ asɔfo, bere a wɔn agya Aaron te ase no.
5 யெகோவா மோசேயை நோக்கி:
Awurade ka kyerɛɛ Mose se:
6 “நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.
“Frɛ Lewifo no, na fa wɔn ma ɔsɔfo Aaron sɛ nʼaboafo.
7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.
Wɔbɛyɛ adwuma wɔ Ahyiae Ntamadan no mu ama ɔsɔfo Aaron ne nnipa no nyinaa.
8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.
Afei, wɔbɛhwɛ nneɛma a wɔde siesie Ahyiae Ntamadan mu no so de asi Israelfo no anan mu ayɛ asodi a wɔyɛ wɔ Ahyiae Ntamadan no mu.
9 ஆகையால் லேவியர்களை ஆரோனிடத்திலும் அவனுடைய மகன்களிடத்திலும் ஒப்புக்கொடு; இஸ்ரவேல் மக்களில் இவர்கள் முழுவதுமாக அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
Fa Lewifo no ma Aaron ne ne mmabarima; wɔn ne Israelfo a wɔde wɔn bɛma no korakora.
10 ௧0 ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
Ma Aaron ne ne mmabarima no nsom sɛ asɔfo; onipa foforo biara a ɔbɛbɛn kronkronbea hɔ no, ɛsɛ sɛ wokum no.”
11 ௧௧ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Awurade ka kyerɛɛ Mose se,
12 ௧௨ “இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.
“Mayi Lewifo no afi Israelfo no mu de wɔn asi Israel babea biara abakan a ɔyɛ ɔbarima anan mu. Lewifo no yɛ me de,
13 ௧௩ முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.
efisɛ abakan biara wɔ me. Bere a mikunkum mmakan wɔ Misraim no, migyaw Israel mmakan, sɛ wɔyɛ nnipa anaa mmoa. Wɔyɛ me dea. Mene Awurade.”
14 ௧௪ பின்னும் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
Afei, Awurade ka kyerɛɛ Mose wɔ Sinai sare so se,
15 ௧௫ “லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.
“Kan Lewifo no wɔ wɔn mmusua ne afi mu. Kan ɔbarima biara fi nea wadi ɔsram baako so.”
16 ௧௬ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.
Enti Mose kan wɔn sɛnea Awurade hyɛɛ no no.
17 ௧௭ லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Eyinom ne Lewi mmabarima: Gerson, Kohat ne Merari.
18 ௧௮ தங்களுடைய வம்சத்தின்படியே கெர்சோனுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
Gerson asefo ni: Libni ne Simei.
19 ௧௯ தங்களுடைய வம்சங்களின்படியே கோகாத்துடைய மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Kohat asefo: Amram, Ishar, Hebron ne Usiel.
20 ௨0 தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.
Merari asefo: Mahli ne Musi. Eyinom ne Lewifo, sɛnea wɔn mmusua ne wɔn afi te.
21 ௨௧ கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
Gerson asefo no na wɔyɛ mmusua a wofi Libni ne Simei ase.
22 ௨௨ அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 7,500 பேராக இருந்தார்கள்.
Na Gersonfo mmarima a wɔadi ɔsram ne nea ɛboro saa a wofi Gerson mmusua mu no dodow yɛ mpem ahanson ne ahannum.
23 ௨௩ கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.
Wɔn atenae wɔ Ahyiae Ntamadan no akyi wɔ atɔe fam.
24 ௨௪ கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.
Na Gersonfo no ntuanoni ne Lael babarima Eliasaf.
25 ௨௫ ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,
Saa mmusua abien yi na na wɔhwɛ Ahyiae Ntamadan no ne ne nkataho no ne ɔkwan nkataano no so.
26 ௨௬ வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
Afei, na wɔhwɛ adiwo nkataano a etwa Ahyiae Ntamadan no ho ne afɔremuka ne adiwo nkataano nhoma ne ɛhɔ nneɛma a wɔde di dwuma ahorow no nyinaa so.
27 ௨௭ கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சாரியர்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.
Kohat asefo yɛ mmusua a wofi Amram, Ishar, Hebron ne Usiel ase.
28 ௨௮ ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள்.
Na Kehat mmusua no mu mmarima a wɔadi ɔsram ne nea ɛboro saa no dodow yɛ mpem awotwe ne ahansia. Wɔn na na wɔhwɛ kronkronbea no so.
29 ௨௯ கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.
Wɔmaa wɔn atenae wɔ Ahyiae Ntamadan no anafo fam.
30 ௩0 அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
Na Kohatfo ntuanoni no ne Usiel babarima Elisafan.
31 ௩௧ அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
Saa mmusua anan yi na na wɔhwɛ apam adaka, ɔpon, kaneadua, afɔremuka ahorow, ne nea ɛkeka ho a na wɔde di dwuma wɔ kronkronbea hɔ, mfimfini ntwamtam ne nneɛma a wɔde di dwuma ahorow wɔ hɔ nyinaa no so.
32 ௩௨ ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.
Aaron babarima ɔsɔfo Eleasar no na na ɔyɛ ɔpanyin wɔ Lewifo no nyinaa so. Ɔyɛɛ no panyin wɔ asɔfo a wɔhwɛ kronkronbea no so.
33 ௩௩ மெராரியின் வழியாக மகலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
Na Merari asefo no yɛ mmusua a wofi Mahli ne Musi ase.
34 ௩௪ அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள்.
Merarifo mmusua no mu na mmarima a wɔadi ɔsram ne nea ɛboro saa no dodow yɛ mpem asia ne ahannu.
35 ௩௫ அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.
Merari abusua no ntuanoni ne Abihail babarima Suriel, na wɔtenaa Ahyiae Ntamadan no atifi fam.
36 ௩௬ அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,
Dwumadi a wɔde hyɛɛ saa mmusuakuw abien yi nsa ne sɛ, wɔbɛhwɛ Ahyiae Ntamadan no nnyinaso so. Afei, wɔbɛhwɛ mmeamu nnua, mpuran, nsisiso ne ɛho nneɛma a wɔde di dwuma no nyinaa,
37 ௩௭ சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
ne mpuran a ɛwɔ adiwo hɔ nyinaa ne ne nsisiso, nnyinaso, ne ntampehama nyinaa, wɔbɛhwɛ so.
38 ௩௮ ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.
Ahyiae Ntamadan no apuei fam, nea owia pue fi no, wogyaw maa Mose ne Aaron ne ne mmabarima sɛ wonsisi wɔn ntamadan wɔ hɔ. Saa nnipa yi na na wosi Israelfo no anan mu di Ahyiae Ntamadan no ho dwuma nyinaa. Obi foforo biara a ɔbɛbɛn kronkronbea hɔ no, ɛsɛ sɛ wokum no.
39 ௩௯ மோசேயும், ஆரோனும், யெகோவாவுடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் 22,000 பேராக இருந்தார்கள்.
Lewifo a Awurade hyɛɛ Mose ne Aaron sɛ wɔnkan wɔn sɛnea wɔn mmusua te a ɔbarima biara a wɔadi ɔsram ne nea ɛboro saa ka ho no dodow yɛ mpem aduonu abien.
40 ௪0 “அதன் பின்பு யெகோவா மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,
Awurade ka kyerɛɛ Mose se, “Kan Israelfo mmakan a wɔyɛ mmarima na wɔadi ɔsram ne nea ɛboro saa no, na kyerɛw wɔn din.
41 ௪௧ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக லேவியர்களையும், இஸ்ரவேல் சந்ததியின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் யெகோவா என்றார்.
Lewifo no bɛyɛ me de. Ma wonsi Israelfo mmakan nyinaa anan mu, na Lewifo nyɛmmoa mmakan nsi Israelfo nyɛmmoa mmakan anan mu. Mene Awurade.”
42 ௪௨ அப்பொழுது மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
Enti Mose kan Israelfo mmakan nyinaa sɛnea Awurade hyɛɛ no no.
43 ௪௩ ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லோரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, 22,273 பேராக இருந்தார்கள்.
Mmakan mmarima a wɔadi ɔsram ne nea ɛboro saa no a ɔkyerɛw wɔn din no ano si mpem aduonu abien ahannu ne aduɔson abiɛsa.
44 ௪௪ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
Afei, Awurade ka kyerɛɛ Mose se,
45 ௪௫ “நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் யெகோவா.
“Ma Lewifo nsi Israelfo mmakan anan mu. Na Lewifo nyɛmmoa mmakan nso nsi Israelfo nyɛmmoa mmakan anan mu. Lewifo yɛ me dea. Mene Awurade.
46 ௪௬ இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய 273 பேரிடத்திலும்,
Ansa na mubegye Israelfo mmakan ahannu aduɔson abiɛsa no a wɔboro Lewifo no dodow so no,
47 ௪௭ நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
momma wontua ti ade, sɛnea hyiadan mu nnwetɛbona te, a emu duru yɛ gram aduonum nson.
48 ௪௮ லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு” என்றார்.
Fa ti ade sika no ma Aaron ne ne mma.”
49 ௪௯ அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
Enti Mose gyigyee Israelfo ahannu aduɔson abiɛsa a na wɔboro Lewifo no dodow so no ti ade.
50 ௫0 1,365 சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
Sika a wogyigyee no nyinaa ano sii dwetɛ kilogram dunum ne fa.
51 ௫௧ யெகோவாவுடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
Na Mose de maa Aaron ne ne mmabarima sɛnea Awurade hyɛɛ no no.

< எண்ணாகமம் 3 >