< எண்ணாகமம் 29 >
1 ௧ “ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது; அது உங்களுக்கு எக்காளம் ஊதும் நாளாக இருக்கவேண்டும்.
౧ఏడో నెల మొదటి రోజు మీరు పరిశుద్ధ సమాజంగా సమావేశం కావాలి.
2 ௨ அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
౨ఆ రోజు మీ జీవనోపాధి కోసం ఏ పనీ చేయకూడదు. అది మీరు బాకానాదం చేసే రోజు.
3 ௩ அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
౩ఏ లోపం లేని ఒక కోడె, ఒక పొట్టేలు, ఒక సంవత్సరం వయసున్న ఏడు మగ గొర్రె పిల్లలను యెహోవాకు ఇష్టమైన సువాసన గల దహనబలిగా అర్పించాలి.
4 ௪ ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
౪వాటి వాటి పద్ధతి ప్రకారం దహనబలిని, దాని నైవేద్యాన్ని, వాటి పానార్పణలు అర్పించాలి.
5 ௫ உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
౫వాటి నైవేద్యం నూనెతో కలిపిన గోదుమపిండి, ప్రతి కోడెతో ఆరున్నర కిలోలు, పొట్టేలుతో నాలుగున్నర కిలోలు, ఏడు గొర్రె పిల్లలతో ఒక్కొక్క దానికి రెండుంబావు కిలోలు అర్పించాలి.
6 ௬ மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.
౬అలాగే మీ కోసం ప్రాయశ్చిత్తం చేయడానికి పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
7 ௭ “இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
౭ఈ ఏడో నెల పదో రోజు మీరు పరిశుద్ధ సమాజంగా సమకూడాలి. అప్పుడు మిమ్మల్ని మీరు అదుపులో పెట్టుకోవాలి, ఆహారం తీసుకోకూడదు. పనులేమీ చేయకూడదు.
8 ௮ யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
౮ప్రాయశ్చిత్తం కోసం పాపపరిహార బలి, నిత్యమైన దహనబలి, దాని నైవేద్యం, వాటి వాటి పానార్పణలు కాక, ఒక కోడెదూడ, ఒక పొట్టేలు, ఒక సంవత్సరం వయసున్న ఏడు మగ గొర్రెపిల్లలను యెహోవాకు ఇష్టమైన సువాసనగల దహనబలిగా అర్పించాలి. వాటిలో ఏలోపమూ ఉండకూడదు.
9 ௯ அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
౯వాటి నైవేద్యం నూనెతో కలిపిన గోదుమపిండి, ప్రతి కోడెతో ఆరున్నర కిలోలు, పొట్టేలుతో నాలుగున్నర కిలోలు,
10 ௧0 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
౧౦ఏడు గొర్రె పిల్లలతో ఒక్కొక్క దానికి రెండుంబావు కిలోలు అర్పించాలి.
11 ௧௧ பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்.
౧౧అలాగే మీ కోసం ప్రాయశ్చిత్తం చేయడానికి పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
12 ௧௨ “ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும்.
౧౨ఆ తరవాత ఏడో నెల 15 వ రోజున మీరు పరిశుద్ధ సమాజంగా సమావేశం కావాలి. అప్పుడు మీరు జీవనోపాధి కోసం పనులేమీ చేయకూడదు. ఏడు రోజులు యెహోవాకు పండగ జరపాలి.
13 ௧௩ நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౧౩దహనబలి, దాని నైవేద్యం, దాని పానార్పణ, కాకుండా, యెహోవాకు ఇష్టమైన సువాసనగల దహనబలిగా 13 కోడెలూ రెండు పొట్టేళ్ళు, ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రె పిల్లలను అర్పించాలి. వాటిలో ఏ లోపమూ ఉండకూడదు.
14 ௧௪ அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
౧౪నైవేద్యంగా ప్రతి కోడెతో ఆరున్నర కిలోలు, ప్రతి పొట్టేలుతో నాలుగున్నర కిలోలు
15 ௧௫ பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
౧౫ప్రతి గొర్రె పిల్లతో రెండుంబావు కిలోలు నూనెతో కలిపిన గోదుమ పిండి తేవాలి.
16 ௧௬ நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౧౬అలాగే పాపపరిహార బలిగా ఒక మేక పిల్లను అర్పించాలి.
17 ௧௭ “இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౧౭రెండో రోజు దహనబలి దాని నైవేద్యం, వాటి పానార్పణలు కాక ఏ లోపం లేని 12 కోడెలను, రెండు పొట్టేళ్ళను, ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రెపిల్లలను
18 ௧௮ காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౧౮వాటి వాటి లెక్క ప్రకారం వాటి వాటి నైవేద్యం,
19 ௧௯ நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౧౯పానార్పణలతోబాటు పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
20 ௨0 “மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౨౦మూడో రోజు నిత్యమైన దహనబలి దాని నైవేద్యం, దాని పానార్పణలు కాక ఏ లోపం లేని 11 కోడెలను, రెండు పొట్టేళ్లను, ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రెపిల్లలను
21 ௨௧ காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౨౧వాటి వాటి లెక్క ప్రకారం వాటి నైవేద్యం, పానార్పణలను
22 ௨௨ நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౨౨పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
23 ௨௩ “நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౨౩నాలుగో రోజు నిత్యమైన దహనబలి దాని నైవేద్యం, పానార్పణ కాక ఏ లోపం లేని 10 కోడెలను రెండు పొట్టేళ్లను ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రెపిల్లలను వాటి వాటి లెక్క ప్రకారం
24 ௨௪ காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౨౪వాటి నైవేద్యం, పానార్పణలను,
25 ௨௫ நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౨౫పాప పరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
26 ௨௬ “ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౨౬అయిదో రోజు నిత్యమైన దహనబలి, దాని నైవేద్యం, పానార్పణ కాక ఏ లోపం లేని తొమ్మిది కోడెలను, రెండు పొట్టేళ్లను ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రెపిల్లలను
27 ௨௭ காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౨౭వాటి వాటి లెక్క ప్రకారం, వాటి నైవేద్యం, పానార్పణను,
28 ௨௮ நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౨౮అలాగే పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
29 ௨௯ “ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౨౯ఆరో రోజు నిత్యమైన దహనబలి, దాని నైవేద్యం, పానార్పణ కాక ఏ లోపం లేని ఎనిమిది కోడెలను, రెండు పొట్టేళ్లను ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రెపిల్లలను, వాటి వాటి లెక్క ప్రకారం,
30 ௩0 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౩౦వాటి నైవేద్యం, పానార్పణను
31 ௩௧ நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலிகளையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౩౧పాపపరిహార బలిగా ఒక మేక పిల్లను అర్పించాలి.
32 ௩௨ “ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
౩౨ఏడో రోజు నిత్యమైన దహనబలి, దాని నైవేద్యం, పానార్పణ కాక ఏ లోపం లేని ఏడు కోడెలను, రెండు పొట్టేళ్లను ఒక సంవత్సరం వయసున్న 14 గొర్రె పిల్లలను వాటి వాటి లెక్క ప్రకారం,
33 ௩௩ காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౩౩వాటి వాటి నైవేద్యం, పానార్పణలను,
34 ௩௪ நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౩౪పాపపరిహార బలిగా ఒక మేక పిల్లను అర్పించాలి.
35 ௩௫ “எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
౩౫ఎనిమిదో రోజు మీకు ప్రత్యేకమైన రోజు. ఆ రోజు మీరు జీవనోపాధి కోసం ఏ పనీ చేయకూడదు.
36 ௩௬ அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
౩౬ఆ రోజు నిత్యమైన దహనబలి, దాని నైవేద్యం, పానార్పణ కాక మీరు యెహోవాకు ఇష్టమైన సువాసనగల దహనబలిగా ఏ లోపం లేని నిర్దోషమైన ఒక కోడెను ఒక పొట్టేలును ఒక సంవత్సరం వయసున్న ఏడు గొర్రెపిల్లలను వాటి వాటి లెక్క ప్రకారం
37 ௩௭ காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
౩౭వాటితో వాటి వాటి నైవేద్యం, పానార్పణను
38 ௩௮ நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
౩౮పాపపరిహార బలిగా ఒక మేకపిల్లను అర్పించాలి.
39 ௩௯ “உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
౩౯మీ మొక్కుబళ్ళు, మీ స్వేచ్ఛార్పణలు మీ దహనబలులు, మీ నైవేద్యాలు, మీ పానార్పణలు, మీ సమాధాన బలులు కాక వీటిని నియమిత సమయాల్లో యెహోవాకు అర్పించాలి.
40 ௪0 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னான்.
౪౦యెహోవా తనకు ఆజ్ఞాపించిన దాన్నంతా మోషే ఇశ్రాయేలీయులతో పూర్తిగా వివరించాడు.