< எண்ணாகமம் 26 >
1 ௧ அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
疫病の後ヱホバ、モーセと祭司アロンの子エレアザルに告て言たまはく
2 ௨ “இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள்” என்றார்.
イスラエルの全會衆の總數をその父祖の家にしたがひて核べイスラエルの中凡そ二十歳以上にして戰爭に出るに勝る者を數へよと
3 ௩ அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி:
モーセ及び祭司エレアザルすなはちヱリコに對してヨルダンの邊にあるモアブの平野に於てかれらに告て言けるは
4 ௪ “யெகோவா மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள்” என்றார்கள்.
エジプトの地より出きたれるモーセとイスラエルの子孫にヱホバの命じ給へる如く汝ら其中の二十歳以上の者を計へよ
5 ௫ ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்: ரூபனுடைய மகன்கள், ஆனோக்கியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர்கள் குடும்பத்திற்குத் தகப்பனான பல்லூவும்,
イスラエルの長子はルベン、ルベンの子孫はヘノクよりヘノク人の族出でパルよりパル人の族出で
6 ௬ எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே.
ヘヅロンよりヘヅロン人の族出でカルミよりカルミ人の族出づ
7 ௭ இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர்.
ルベンの宗族は是のごとくにしてその核數られし者は四萬三千七百三千人
8 ௮ பல்லூவின் மகன் எலியாப்.
またパルの子はエリアブ
9 ௯ எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, யெகோவாவுக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள்.
エリアブの子はネムエル、ダタン、アビラムこのダタンとアビラムは會衆の中に名ある者にてコラの黨類とともにモーセとアロンに逆ひてヱホバに悸りし事ありしが
10 ௧0 பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி 250 பேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
地その口を開きて彼らとコラとを呑みその黨類二百五十人は火に燒れて死うせ人の鑑戒となれり
11 ௧௧ கோராகின் மகன்களோ சாகவில்லை.
但しコラの子等は死ざりき
12 ௧௨ சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும்,
シメオンの子孫はその宗族に依ば左のごとしネムエルよりはネムエル人の族出でヤミンよりはヤミン人の族出でヤキンよりはヤキン人の族出で
13 ௧௩ சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே.
ゼラよりはゼラ人の族出でシヤウルよりはシヤウル人の族出づ
14 ௧௪ இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர்.
シメオン人の宗族は是の如くにして其數られし者は二萬二千二百人
15 ௧௫ காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,
ガドの子孫は其宗族に依ば左の如しゼポンよりはゼポン人の族出でハギよりはハギ人の族出でシユニよりはシユニ人の族出で
16 ௧௬ ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும்,
オズニよりはオズニ人の族出でエリよりはエリ人の族出で
17 ௧௭ ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
アロドよりはアロド人の族出でアレリよりはアレリ人の族出づ
18 ௧௮ இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
ガドの宗族は是のごとくにしてその核數られし者は四萬五百人
19 ௧௯ யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
ユダの子等はエルとオナン、エルとオナンはカナンの地に死たり
20 ௨0 யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமுமே.
ユダの子孫はその宗族によれば左のごとしシラよりはシラ人の族出でペレヅよりはペレヅ人の族出でゼラよりはゼラ人の族出づ
21 ௨௧ பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
ペレヅの子孫は左のごとしヘヅロンよりはヘヅロン人の族出でハムルよりけハムル人の族出づ
22 ௨௨ இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.
ユダの宗族は是のごとくにしてその核數られし者は七萬六千五百人
23 ௨௩ இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும்,
イツサカルの子孫はその宗族によれば左のごとしトラよりはトラ人の族出でプワよりはプワ人の族出で
24 ௨௪ யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
ヤシユブよりはヤシユブ人の族出でシムロンよりはシムロン人の族出づ
25 ௨௫ இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர்.
イッサカルの宗族は是のごとくにしてその數へられし者は六萬四千三百人
26 ௨௬ செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
ゼブルンの子孫はその宗族によれば左の如しセレデよりはセレデ人の族出でエロンよりはエロン人の族出でヤリエルよりはヤリエル人の族出づ
27 ௨௭ இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.
ゼブルン人の宗族は是のごとくにしてその核數られし者は六萬五百人
28 ௨௮ யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
ヨセフの子等はその宗族に依ばマナセとエフライム
29 ௨௯ மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,
マナセの子等の中マキルよりマキル人の族出づマキル、ギレアデを生りギレアデよりギレアデ人の族出づ
30 ௩0 கீலேயாத் பெற்ற ஈயேசேர்களின் சந்ததியான ஈயேசேரியர்களின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியர்களின் குடும்பமும்,
ギレアデの子孫は左のごとしイエゼルよりはイエゼル人の族出でヘレクよりはヘレク人の族出で
31 ௩௧ அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,
アスリエルよりはアスリエル人の族出でシケムよりはシケム人の族出で
32 ௩௨ செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
セミダよりはセミダ人の族出でヘペルよりはヘペル人の族出づ
33 ௩௩ எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
ヘペルの子ゼロペハデには男子なく惟女子ありしのみその名はマアラ、ノア、ホグラ、ミルカ、テルザと曰ふ
34 ௩௪ இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 52,700 பேர்.
マナセの宗族は是のごとくにしてその核數られし者は五萬二千七百人
35 ௩௫ எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும்,
エフライムの子孫はその宗族によれば左のごとしシユテラよりはシユテラ人の宗族出でベケルよりはベケル人の族出でタハンよりはタハン人の族出づ
36 ௩௬ சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே.
シユテラの子孫は左のごとしエランよりエラン人の族出づ
37 ௩௭ இவைகளே எப்பிராயீம் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 32,500 பேர்; இவர்களே யோசேப்பு சந்ததியின் குடும்பங்கள்.
エフライムの子孫の宗族は是のごとくにしてその核數られし者は三萬二千五百人ヨセフの子孫はその宗族に依ば是のごとし
38 ௩௮ பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும்,
ベニヤミンの子孫はその宗族によれば左のごとしベラよりはベラ人の族出でアシベルよりはアシベル人の族出でアヒラムよりはアヒラム人の族出で
39 ௩௯ சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும்,
シユパムよりはシユパム人の族出でホパムよりはホパム人の族出づ
40 ௪0 பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
ベラの子等はアルデとナアマン、アルデよりはアルデ人の族出でナアマンよりはナアマン人の族出づ
41 ௪௧ இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
ベニヤミンの子孫はその宗族に依ば是のごとくにしてその核數られし者は四萬五千六百人
42 ௪௨ தாணுடைய மகன்களின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
ダンの子孫はその宗族に依ば左のごとしシユハムよりシユハム人の族出づダンの宗族はその宗族によれば是の如し
43 ௪௩ சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர்.
シユハム人の諸の族の中核數られし者は六萬四千四百人
44 ௪௪ ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
アセルの子孫はその宗族によれば左のごとしヱムナよりはヱムナ人の族出でヱスイよりはヱスイ人の族出でベリアよりはベリア人の族出づ
45 ௪௫ பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
ベリアの子孫の中ヘベルよりはヘベル人の族出でマルキエルよりはマルキエル人の族出づ
46 ௪௬ ஆசேருடைய மகளின் பெயர் சேராள்.
アセルの女子の名はサラと曰ふ
47 ௪௭ இவைகளே ஆசேர் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
アセルの子孫の宗族は是のごとくにしてその核數られし者五萬三千四百人
48 ௪௮ நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும்,
ナフタリの子孫はその宗族によれば左のごとしヤジエルよりヤジエル人の族出でグニよりグニ人の族出で
49 ௪௯ எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
ヱゼルよりヱゼル人の族出でシレムよりシレム人の族出づ
50 ௫0 இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,400 பேர்.
ナフタリの宗族はその宗族によればかくのごとくにしてその核數られしものは四萬五千四百人
51 ௫௧ இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள்.
すなはちイスラエルの子孫の核數られし者は六十萬一千七百三十人なりき
52 ௫௨ யெகோவா மோசேயை நோக்கி:
ヱホバ、モーセに告て言たまはく
53 ௫௩ “இவர்களுடைய பேர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
この人々にその名の數にしたがひて地を分ち與へてこれが產業となさしむべし
54 ௫௪ அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்.
人衆には汝多くの產業を與へ人寡には少の產業を與ふべし即ちその核數られし數にしたがひておのおの產業を受べきなり
55 ௫௫ ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
但しその地は鬮をもて之を分ちその父祖の支派の名にしたがひて之を獲べし
56 ௫௬ அநேகம்பேரோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும்” என்றார்.
即ち鬮をもてその產業を人衆き者と寡き者とに分つべきなり
57 ௫௭ எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;
レビ人のその宗族にしたがひて數へられし者は左のごとしゲルションよりはゲルション人の族出でコハテよりはコハテ人の族出でメラリよりはメラリ人の族出づ
58 ௫௮ லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
レビの族は左のごとしリブニ人の族ヘブロン人の族マヘリ人の族ムシ人の族コラ人の族コハテ、アムラムを生り
59 ௫௯ அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
アムラムの妻の名はヨケベデといひてレビの女子なり是はエジプトにてレビに生れし者なりしがアムラムにそひてアロンとモーセおよびその姉妹ミリアムを生り
60 ௬0 ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
アロンにはナダブ、アビウ、エレアザルおよびイタマル生る
61 ௬௧ நாதாபும் அபியூவும் யெகோவாவுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
ナダブとアビウは異火をヱホバの前にささげし時死り
62 ௬௨ அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் 23,000 பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.
その核數られし一箇月以上の男子は都合二萬三千人レビ人はイスラエルの子孫の中に產業を與へられざるが故にイスラエルの子孫の中に核數られざるなり
63 ௬௩ மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகிலிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
是すなはちモーセと祭司エレアザルがヨルダンの邊なるヱリコに對するモアブの平野にて數へたるイスラエルの子孫の數なり
64 ௬௪ முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
但しその中にはモーセとアロンがシナイの曠野においてイスラエルの子孫をかぞへし時に數へたる者は一人もあらざりき
65 ௬௫ வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.
其はヱホバ曾て彼らの事を宣て是はかならず曠野に死んといひたまひたればなり是をもてヱフンネの子カルブとヌンの子ヨシュアの外は一人も遺れる者あらざりき