< எண்ணாகமம் 15 >
1 ௧ யெகோவா மோசேயை நோக்கி:
૧પછી યહોવાહ મૂસા સાથે બોલ્યા. તેમણે કહ્યું,
2 ௨ “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,
૨ઇઝરાયલી લોકોને કહે કે, તમારા વસવાટ માટેનો જે દેશ યહોવાહ તમને આપે છે તેમાં જયારે તમે પ્રવેશો ત્યારે,
3 ௩ விசேஷித்த பொருத்தனையையோ, உற்சாக பலியையோ, உங்களுடைய பண்டிகைகளில் செலுத்தும் பலியையோ, யெகோவாவுக்கு மாடுகளிலாவது ஆடுகளிலாவது சர்வாங்கதகனபலியையாவது மற்ற ஏதாவது ஒரு பலியையாவது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனமாகப் பலியிடும்போது,
૩અને જ્યારે તમે અર્પણ માટે ઐચ્છિકાર્પણ તરીકે તમારા નક્કી કરેલા પર્વોમાં યહોવાહને સારુ સુવાસને અર્થે ઘેટાંબકરાંનો કે અન્ય જાનવરોના હોમયજ્ઞ તથા દહનીયાર્પણ અથવા યજ્ઞ ચઢાવો.
4 ௪ தன்னுடைய படைப்பைக் யெகோவாவுக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.
૪ત્યારે પોતાનું અર્પણ કરતી વખતે અર્પણ ચઢાવનારે એની સાથે પા હિન ચોથા ભાગના તેલથી મોહેલા એક દશાંશ એફાહ મેંદાનું ખાદ્યાર્પણ યહોવાહને અર્પણ કરવું.
5 ௫ பானபலியாக காற்படி திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும்.
૫અને દરેક હલવાનને સારુ દહનીયાર્પણ સાથે કે યજ્ઞ સાથે પા હિન દ્રાક્ષારસનું પેયાર્પણ તું તૈયાર કર.
6 ௬ ஆட்டுக்கடாவாக இருந்ததென்றால், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,
૬જો તું ઘેટાંનું અર્પણ ચઢાવે તો, એક તૃતીયાંશ હિન તેલથી મોહેલા બે દશાંશ એફાહ મેંદાનું ખાદ્યાપર્ણ તૈયાર કર.
7 ௭ பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் யெகோவாவுடைய நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
૭અને એક તૃતીયાંશ હિન દ્રાક્ષારસનું સુવાસિત પેયાર્પણ યહોવાહને ચઢાવ.
8 ௮ நீ சர்வாங்கதகனபலிக்காவது, விசேஷித்த பொருத்தனைபலிக்காவது, சமாதானபலிக்காவது, ஒரு காளையைக் யெகோவாவுக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,
૮અને જ્યારે તું દહનીયાર્પણ કે પ્રતિજ્ઞા પૂર્ણ કરવાના યજ્ઞને માટે અથવા યહોવાહને માટે શાંત્યર્પણોને સારુ બળદ તૈયાર કરે,
9 ௯ அதனோடு பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
૯ત્યારે તે બળદ સાથે અડધા હિન તેલથી મોહેલા ત્રણ દશાંશ એફાહ મેંદાનું ખાદ્યાર્પણ ચઢાવે.
10 ௧0 பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
૧૦અને યહોવાહને માટે સુવાસિત પેયાર્પણ તરીકે અર્ધો હિન દ્રાક્ષારસ હોમયજ્ઞ તરીકે ચઢાવ.
11 ௧௧ “இந்தவிதமாகவே ஒவ்வொரு மாட்டுக்கும், ஆட்டுக்கடாவுக்கும், செம்மறியாட்டுக் குட்டிக்கும், வெள்ளாட்டுக் குட்டிக்கும் செய்து படைக்கவேண்டும்.
૧૧પ્રત્યેક બળદ વિષે, કે પ્રત્યેક ઘેટા વિષે કે પ્રત્યેક નર હલવાન વિષે, કે પ્રત્યેક બકરીના બચ્ચા વિષે આ પ્રમાણે કરવું.
12 ௧௨ நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.
૧૨પ્રત્યેક બલિદાન જે તું તૈયાર કરી અને અર્પણ કરે તેના સંબંધમાં અહીં દર્શાવ્યાં મુજબ કરવું.
13 ௧௩ சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
૧૩યહોવાહ પ્રત્યે સુવાસિત હોમયજ્ઞ ચઢાવવામાં જે સર્વ ઇઝરાયલના વતનીઓ છે, તેઓએ તે કાર્યો આ રીતે કરવા.
14 ௧௪ “உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்களுடைய தலைமுறைதோறும் குடியிருக்கிறவனோ, யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
૧૪અને જો કોઈ પરદેશી તમારી સાથે રહેતો હોય, અથવા તમારા લોકની પેઢીનું જે કોઈ તમારી વચ્ચે રહેતું હોય અને જો તે યહોવાહને સારુ સુવાસિત હોમયજ્ઞ ચઢાવવા ઇચ્છે તો તે જેમ તમે કરો છો તે મુજબ કરે.
15 ௧௫ சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்களுடைய தலைமுறைகளில் நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
૧૫આ નિયમ તમારે માટે તથા તમારી સાથે રહેતા વિદેશીઓ માટે સમાન છે અને તે નિયમ સદાને માટે તમારા લોકના વંશજોને સારુ હોય. જેમ તમે છો તેમ યહોવાહ સમક્ષ વિદેશી પણ હોય.
16 ௧௬ உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
૧૬તમારે સારુ તથા તમારી સાથે રહેતા વિદેશી માટે એક જ નિયમ તથા એક જ કાનૂન હોય.’”
17 ௧௭ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
૧૭પછી યહોવાહ મૂસા સાથે બોલ્યા. તેમણે કહ્યું કે,
18 ௧௮ நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
૧૮ઇઝરાયલપુત્રોને એમ કહે કે, જે દેશમાં હું તમને લઈ જાઉં છું ત્યાં તમે આવો પછી,
19 ௧௯ தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.
૧૯જ્યારે તમે એ દેશનું અનાજ ખાઓ ત્યારે તમારે યહોવાહને અર્પણ ચઢાવવું.
20 ௨0 நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
૨૦ઉચ્છાલીયાર્પણને માટે પ્રથમ બાંધેલા લોટની પૂરી ચઢાવવી. જેમ ખળીનું ઉચ્છાલીયાર્પણ કરો છો તેમ તમારે તેને ઉપર ઉઠાવવી.
21 ௨௧ இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே யெகோவாவுக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
૨૧તમે બાંધેલા લોટમાંથી પ્રથમ ભાગ તમારે યહોવાહ માટે ઉચ્છાલીયાર્પણ કરવું.
22 ௨௨ “யெகோவா மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,
૨૨જ્યારે તમે અજાણતામાં આવી સરતચૂક કરો અને મારા હસ્તક મૂસાને કહેલી આજ્ઞાઓનું પાલન ન કરો.
23 ௨௩ யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்களுடைய சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,
૨૩એટલે જે સર્વ આજ્ઞાઓ યહોવાહે મૂસા મારફતે તમને આપી છે તે યહોવાહે જે દિવસે આજ્ઞા આપી ત્યારથી માંડીને પેઢી દરપેઢી પાલન નહિ કરો.
24 ௨௪ அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லோரும் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், கட்டளையின்படி அதற்கேற்ற உணவுபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
૨૪અને જો આખા સમાજે અજાણતામાં ભૂલ કરી હોય, તો આખી પ્રજા યહોવાહને સુવાસને અર્થે દહનીયાર્પણ તરીકે એક વાછરડો અને તેની સાથે ખાદ્યાર્પણ તથા પેયાર્પણ શુધ્ધા વિધિ મુજબ ચઢાવે. આ સાથે પાપાર્થાર્પણ તરીકે એક બકરાનું પણ અર્પણ કરે.
25 ௨௫ அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அது அறியாமையினால் செய்யப்பட்டதாலும், அதற்காக அவர்கள் யெகோவாவுக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
૨૫યાજક સમગ્ર ઇઝરાયલ સમાજ માટે પ્રાયશ્ચિત કરે અને તેઓને માફ કરવામાં આવશે. કેમ કે એ સરતચૂક હતી અને તેઓ પોતાનું અર્પણ એટલે તેમને માટે હોમયજ્ઞ તથા પોતાની ભૂલને લીધે પાપાર્થાર્પણ લાવ્યા છે.
26 ௨௬ அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.
૨૬તેથી સમગ્ર ઇઝરાયલ સમાજને અને તેમની સાથે વસતા વિદેશીઓને પણ માફ કરવામાં આવશે, કારણ કે સઘળા લોકથી અજાણતામાં એ પાપ થયું હતું.
27 ௨௭ “ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால், ஒருவயதுடைய வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தவேண்டும்.
૨૭જો કોઈ વ્યક્તિ અજાણતામાં પાપ કરે, તો તેણે એક વર્ષની બકરી પાપાર્થાર્પણ તરીકે ચઢાવવી.
28 ௨௮ அப்பொழுது அறியாமையினால் பாவம்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.
૨૮અને અજાણતામાં પાપ કરનારને યાજક યહોવાહ સમક્ષ પ્રાયશ્ચિત કરે તો તે વ્યક્તિને તેની ભૂલ માફ કરવામાં આવશે.
29 ௨௯ இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
૨૯અજાણતામાં પાપ કરનાર પ્રત્યેક માટે, એટલે કે ઇઝરાયલના વતની માટે અને તેઓ મધ્યે વસનાર વિદેશી માટે આ એક જ નિયમ રાખવો.
30 ௩0 “அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலோ அந்நியர்களிலோ எவனாவது துணிகரமாக ஏதாவது ஒன்றைச்செய்தால், அவன் யெகோவாவை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும்.
૩૦પણ જો કોઈ વ્યક્તિ પછી તે ઇઝરાયલનાં વતની હોય કે વિદેશી હોય પણ જાણી જોઈને ઇરાદાપૂર્વક તે પાપ કરે તો તે મારું અપમાન કરે છે. તે માણસ પોતાના લોકોમાંથી અલગ કરાય.
31 ௩௧ அவன் யெகோவாவின் வார்த்தையை அசட்டைசெய்து, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா துண்டிக்கப்பட வேண்டும்; அவனுடைய அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல்” என்றார்.
૩૧તેણે મારું વચન ગણકાર્યું નથી અને મારી આજ્ઞા તોડી છે. તેથી એ માણસનો સંપૂર્ણ બહિષ્કાર કરવો. તેનો અન્યાય તેના માથે.’”
32 ௩௨ இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
૩૨જ્યારે ઇઝરાયલી લોકો અરણ્યમાં હતા, ત્યારે તેઓએ એક માણસને વિશ્રામવારે લાકડાં વીણતા જોયો.
33 ௩௩ விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்திற்கும் கொண்டுவந்தார்கள்.
૩૩જેઓએ તેને જોયો તેઓ તેને મૂસા, હારુન અને સમગ્ર સમાજ પાસે લાવ્યા.
34 ௩௪ அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
૩૪તેઓએ તેને બંદીખાનામાં રાખ્યો કેમ કે તેઓને શું કરવું તે હજી નક્કી થયું નહોતું.
35 ௩௫ “யெகோவா மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.
૩૫પછી યહોવાહે મૂસાને કહ્યું, “તે માણસ નક્કી માર્યો જાય. સમગ્ર સમાજ એને છાવણી બહાર લાવી પથ્થરે મારે.”
36 ௩௬ அப்பொழுது சபையார் எல்லோரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
૩૬તેથી યહોવાહે મૂસાને આજ્ઞા કરી હતી તે મુજબ સમગ્ર સમાજ તેને છાવણીની બહાર લઈ ગયા અને પથ્થરે માર્યો.
37 ௩௭ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
૩૭વળી, યહોવાહ મૂસા સાથે બોલ્યા. તેમણે કહ્યું કે,
38 ௩௮ “நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் பேசி, அவர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் தங்களுடைய ஆடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.
૩૮“ઇઝરાયલ લોકોને તું કહે અને આજ્ઞા કર કે, વંશપરંપરા પોતાના વસ્ત્રને કિનારીઓ લગાડે દરેક કિનારીઓની કોર પર ભૂરા રંગની પટ્ટીઓ કિનારી લગાડે.
39 ௩௯ நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்களுடைய இருதயத்திற்கும் உங்களுடைய கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படி, அது உங்களுக்குத் தொங்கலாக இருக்கவேண்டும்.
૩૯તે જોઈને તમને યહોવાહની સર્વ આજ્ઞાઓનું સ્મરણ થશે અને તમે એનું પાલન કરશો તથા તમારું અંતઃકરણ તથા તમારી પોતાની આંખો કે, જે ગણિકાઓની પાછળ ભટકી જવાની તમને ટેવ પડી છે તેઓની પાછળ ખેંચાશો નહિ.
40 ௪0 நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.
૪૦જેથી તમે મારી સર્વ આજ્ઞાઓ પાળવાનું યાદ રાખો અને તમારા ઈશ્વરની આગળ પવિત્ર બનો.
41 ௪௧ நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய யெகோவா; நானே உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
૪૧હું યહોવાહ તમારો ઈશ્વર છું. કે જે તમને મિસર દેશમાંથી તમારો ઈશ્વર થવાને બહાર લાવ્યો છે. હું યહોવાહ તમારો ઈશ્વર છું.”