< எண்ணாகமம் 12 >
1 ௧ எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி:
И возглаголаста Мариам и Аарон на Моисеа жены ради Ефиопляныни, юже поя Моисей, ибо жену поя Ефиопляныню,
2 ௨ “யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.
и рекоста: еда Моисею единому глагола Господь? Еда и нам не глаголаше? И услыша Господь.
3 ௩ மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.
И человек Моисей кроток зело паче всех человек сущих на земли.
4 ௪ உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
И рече Господь внезапу к Моисею и Аарону и Мариаме: изыдите вы трие в скинию свидения.
5 ௫ யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
И изыдоша трие в скинию свидения. И сниде Господь в столпе облачне ста над дверми скинии свидения: и призва Аарона и Мариам. И изыдоста оба.
6 ௬ அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.
И рече к ним: послушайте словес Моих: аще будет в вас пророк Господнь, в видении ему познаюся, и во сне возглаголю ему:
7 ௭ என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
не тако якоже раб Мой Моисей, во всем дому Моем верен есть:
8 ௮ நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார்.
усты ко устом возглаголю ему яве, и не гаданием, и славу Господню виде: и почто не убоястеся глаголати на раба Моего Моисеа?
9 ௯ யெகோவாவுடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
И гнев ярости Господни (бысть) на них. И отиде.
10 ௧0 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.
И облак отступи от скинии, и се, Мариам прокажена бысть яко снег: и воззре Аарон на Мариам, и се, прокажена.
11 ௧௧ அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும்.
И рече Аарон к Моисею: молю тя, господи, не возлагай на ны греха, понеже не ведяхом, яко согрешихом:
12 ௧௨ தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான்.
да не будет сия яко мертва, яко изверг извержен из ложесн матерних, и (се, уже) пояде пол плоти ея.
13 ௧௩ அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
И возопи Моисей ко Господу, глаголя: Боже, молютися, исцели ю.
14 ௧௪ யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார்.
И рече Господь к Моисею: аще бы отец ея плюя заплевал в лице ея, не посрамится ли седмь дний? Да отлучится седмь дний вне полка, и по сих да внидет.
15 ௧௫ அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.
И отлучися Мариам вне полка на седмь дний: и людие не воздвигошася, дондеже очистися Мариам.
16 ௧௬ பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
И по сих воздвигошася людие от Асирофа и ополчишася в пустыни Фарани.