< நெகேமியா 7 >

1 மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
Sucedeu, pois, que, quando o muro já havia sido edificado, e já tinha posto as portas, e sido estabelecidos os porteiros, os cantores e os Levitas,
2 நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
Mandei o meu irmão Hanani, e Hananias, chefe do palácio de Jerusalém (porque era um homem fiel e temente a Deus, mais que muitos),
3 அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
E disse-lhes: Não se abram as portas de Jerusalém até que o sol aqueça; e enquanto ainda estiverem presentes, fechem as portas, e [as] trancai. E ponham-se guardas dos moradores de Jerusalém, cada um em sua guarda, e cada um diante de sua casa.
4 பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
E a cidade era espaçosa e grande, porém pouca gente havia dentro dela, e as casas [ainda] não haviam sido reconstruídas.
5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
Então Deus pôs em meu coração que juntasse os nobres, os oficiais, e o povo, para que fossem registrados pela ordem de suas genealogias; e achei o livro da genealogia dos que haviam subido antes, e achei nele escrito [o seguinte]:
6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
Estes são os filhos da província que subiram do cativeiro, dos que foram levados por Nabucodonosor, rei de Babilônia, e que voltaram a Jerusalém e a Judá, cada um à sua cidade;
7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
Os quais vieram com Zorobabel, Jesua, Neemias, Azarias, Raamias, Naamani, Mardoqueu, Bilsã, Misperete, Bigvai, Neum, Baaná. Este é o número dos homens do povo de Israel:
8 பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
Os filhos de Parós, dois mil cento e setenta e dois;
9 செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
Os filhos de Sefatias, trezentos e setenta e dois;
10 ௧0 ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
Os filhos de Ara, seiscentos e cinquenta e dois;
11 ௧௧ யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
Os filhos de Paate-Moabe, dos filhos de Jesua e de Joabe, dois mil oitocentos e dezoito;
12 ௧௨ ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
Os filhos de Elão, mil duzentos e cinquenta e quatro;
13 ௧௩ சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
Os filhos de Zatu, oitocentos e quarenta e cinco;
14 ௧௪ சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
Os filhos de Zacai, setecentos e sessenta;
15 ௧௫ பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
Os filhos de Binui, seiscentos e quarenta e oito;
16 ௧௬ பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
Os filhos de Bebai, seiscentos e vinte e oito;
17 ௧௭ அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
Os filhos de Azgade, dois mil seiscentos e vinte e dois;
18 ௧௮ அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
Os filhos de Adonicão, seiscentos e sessenta e sete;
19 ௧௯ பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
Os filhos de Bigvai, dois mil e sessenta e sete;
20 ௨0 ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
Os filhos de Adim, seiscentos e cinquenta e cinco;
21 ௨௧ எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
Os filhos de Ater, de Ezequias, noventa e oito;
22 ௨௨ ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
Os filhos de Hasum, trezentos e vinte e oito;
23 ௨௩ பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
Os filhos de Bezai, trezentos e vinte e quatro;
24 ௨௪ ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
Os filhos de Harife, cento e doze;
25 ௨௫ கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
Os filhos de Gibeom, noventa e cinco;
26 ௨௬ பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
Os homens de Belém e de Netofá, cento e oitenta e oito;
27 ௨௭ ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
Os homens de Anatote, cento e vinte e oito;
28 ௨௮ பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
Os homens de Bete-Azmavete, quarenta e dois;
29 ௨௯ கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
Os homens de Quiriate-Jearim, Cefira e Beerote, setecentos e quarenta e três;
30 ௩0 ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
Os homens de Ramá e de Geba, seiscentos e vinte e um;
31 ௩௧ மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
Os homens de Micmás, cento e vinte e dois;
32 ௩௨ பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
Os homens de Betel e de Ai, cento e vinte e três;
33 ௩௩ வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
Os homens da outra Nebo, cinquenta e dois;
34 ௩௪ மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
Os filhos do outro Elão, mil duzentos e cinquenta e quatro;
35 ௩௫ ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
Os filhos de Harim, trezentos e vinte;
36 ௩௬ எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
Os filhos de Jericó, trezentos e quarenta e cinco;
37 ௩௭ லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
Os filhos de Lode, de Hadide, e Ono, setecentos vinte e um;
38 ௩௮ செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
Os filhos de Senaá, três mil novecentos e trinta.
39 ௩௯ ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
Os sacerdotes: os filhos de Jedaías, da casa de Jesua, novecentos e setenta e três;
40 ௪0 இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
Os filhos de Imer, mil e cinquenta e dois;
41 ௪௧ பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
Os filhos de Pasur, mil duzentos quarenta e sete;
42 ௪௨ ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
Os filhos de Harim, mil dez e sete.
43 ௪௩ லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
Os levitas: os filhos de Jesua, de Cadmiel, dos filhos de Hodeva, setenta e quatro.
44 ௪௪ பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
Os cantores: os filhos de Asafe, cento e quarenta e oito.
45 ௪௫ வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
Os porteiros: os filhos de Salum, os filhos de Ater, os filhos de Talmom, os filhos de Acube, os filhos de Hatita, os filhos de Sobai, cento e trinta e oito.
46 ௪௬ ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
Os servos do templo: os filhos de Zia, os filhos de Hasufa, os filhos de Tabaote,
47 ௪௭ கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
Os filhos de Queros, os filhos de Sia, os filhos de Padom,
48 ௪௮ லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
Os filhos de Lebana, os filhos de Hagaba, os filhos de Salmai,
49 ௪௯ ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
Os filhos de Hanã, os filhos de Gidel, os filhos de Gaar,
50 ௫0 ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
Os filhos de Reaías, os filhos de Rezim, os filhos de Necoda,
51 ௫௧ காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
Os filhos de Gazão, os filhos de Uzá, os filhos de Paseia,
52 ௫௨ பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
Os filhos de Besai, os filhos de Meunim, os filhos de Nefusesim,
53 ௫௩ பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
Os filhos de Baquebuque, os filhos de Hacufa, os filhos de Harur,
54 ௫௪ பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
Os filhos de Baslite, os filhos de Meída, os filhos de Harsa,
55 ௫௫ பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
Os filhos de Barcos, os filhos de Sísera, os filhos de Tamá,
56 ௫௬ நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
Os filhos de Nesias, os filhos de Hatifa.
57 ௫௭ சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
Os filhos dos servos de Salomão: os filhos de Sotai, os filhos de Soferete, os filhos de Perida,
58 ௫௮ யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
Os filhos de Jaala, os filhos de Darcom, os filhos de Gidel,
59 ௫௯ செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
Os filhos de Sefatias, os filhos de Hatil, os filhos de Poquerete-Hazebaim, os filhos de Amom.
60 ௬0 ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Todos os servos do templo, e filhos dos servos de Salomão, trezentos e noventa e dois.
61 ௬௧ தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
Também estes subiram de Tel-Melá, Tel-Harsa, Querube, Adom, e Imer, porém não puderam mostrar a casa de seus pais, nem sua linhagem, se eram de Israel:
62 ௬௨ தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
Os filhos de Delaías, os filhos de Tobias, os filhos de Necoda, seiscentos e quarenta e dois.
63 ௬௩ ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
E dos sacerdotes: os filhos de Habaías, os filhos de Coz, os filhos de Barzilai, o qual tomara mulher das filhas de Barzilai, o gileadita, e chamou-se pelo nome delas.
64 ௬௪ இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
Estes buscaram seu registro de genealogias, porém não se achou; por isso, como impuros, foram excluídos do sacerdócio.
65 ௬௫ ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
E o governador lhes disse que não comessem das coisas mais santas, até que houvesse sacerdote com Urim e Tumim.
66 ௬௬ சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
Toda esta congregação junta era quarenta e dois mil trezentos e sessenta,
67 ௬௭ அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
Exceto seus servos e suas servas, que eram sete mil trezentos e trinta e sete; e tinham duzentos e quarenta e cinco cantores e cantoras.
68 ௬௮ அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
Seus cavalos, setecentos e trinta e seis; seus mulos, duzentos e quarenta e cinco;
69 ௬௯ ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
Os camelos, quatrocentos e trinta e cinco; asnos, seis mil setecentos e vinte.
70 ௭0 வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
E alguns dos chefes das famílias fizeram doações para a obra. O governador deu para o tesouro mil dracmas de ouro, cinquenta bacias, e quinhentas trinta vestes sacerdotais.
71 ௭௧ வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
E [alguns] dos chefes das famílias deram para o tesouro da obra, vinte mil dracmas de ouro, e duas mil e duzentas libras de prata.
72 ௭௨ மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
E o que o resto do povo deu foi vinte mil dracmas de ouro, duas mil libras de prata, e sessenta e sete vestes sacerdotais.
73 ௭௩ ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
E os sacerdotes, os Levitas, e os porteiros, os cantores, os do povo, os servos do templo, e todo Israel, habitaram em suas cidades. E vindo o mês sétimo, estando os filhos de Israel em suas cidades,

< நெகேமியா 7 >