< நெகேமியா 4 >
1 ௧ நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
А кад чу Санавалат да зидамо зид, разгневи се и расрди се врло, и ругаше се Јеврејима,
2 ௨ அந்த அற்பமான யூதர்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளில் முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியாவின் படைக்கும் முன்பாகச் சொன்னான்.
И говораше пред браћом својом и војницима самаријским: Шта раде ти немоћни Јудејци? Хоћемо ли их оставити? Хоће ли приносити жртве? Хоће ли сада свршити? Еда ли ће у живот повратити из праха камење спаљено?
3 ௩ அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
А Товија Амонац који беше уза њ рече: Нека зидају; да лисица дође провалиће камени зид њихов.
4 ௪ எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
Чуј, Боже наш, како нас презиру; обрати руг њихов на њихову главу, и дај да буду грабеж у земљи где би робовали.
5 ௫ அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
И не покривај безакоња њихова, и грех њихов да се не избрише пред Тобом, јер Те дражише за оне који зидају.
6 ௬ நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
И тако зидасмо зид, и сав се зид састави до половине, и народ имаше вољу да ради.
7 ௭ எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து,
А кад чу Санавалат и Товија и Арапи и Амонци и Азоћани да се поправља зид јерусалимски и да се почело затварати шта је проваљено, разгневише се врло;
8 ௮ எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.
И сложише се сви заједно да дођу и да ударе на Јерусалим и да смету.
9 ௯ ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
А ми се молисмо Богу свом и постављасмо стражу према њима дан и ноћ од страха њиховог.
10 ௧0 அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.
А Јудејци рекоше: Клонула је снага носиоцима, а праха има много, не можемо зидати зида.
11 ௧௧ எங்களுடைய எதிரிகளோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடும்வரை, அவர்கள் அதை அறியாமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாக அந்த வேலையை நிறுத்துவோம் என்றார்கள்.
А наши непријатељи рекоше: Да не дознаду и не опазе докле не дођемо усред њих, па ћемо их побити и прекинути посао.
12 ௧௨ அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள்.
Али дођоше Јудејци који код њих живљаху и казаше нам десет пута: Чувајте сва места куда се иде к нама.
13 ௧௩ அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன்.
Тада наместих народ у низинама иза зида и на стрменима, поставих народ по породицама са мачевима и копљима и луковима.
14 ௧௪ அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன்.
И разгледавши устах и рекох старешинама и главарима и осталом народу: Не бојте их се. Помените Господа великог и страшног, и бијте се за браћу своју, за синове своје и кћери своје, за жене своје и куће своје.
15 ௧௫ எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
А кад чуше непријатељи наши да смо дознали, разби Господ њихову намеру, и ми се вратисмо сви к зиду, сваки на свој посао.
16 ௧௬ அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதி ஆட்கள் வேலை செய்தார்கள், பாதி ஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள்.
И од тада половина мојих момака пословаше, а друга половина држаше копља и штитове и лукове и оклопе, и кнезови стајаху иза свега дома Јудиног.
17 ௧௭ மதிலை கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையிலே வேலைசெய்து, மறுகையிலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
И који зидаху и који ношаху терет и који товараху сваки једном руком рађаше, а у другој држаше копље.
18 ௧௮ கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.
А који зидаху, сваки имаху мач приписан уз бедрицу и тако зидаху. А трубач стајаше код мене.
19 ௧௯ நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
Јер рекох старешинама и главарима и осталом народу: Посао је велик и дуг и ми смо се расули по зиду далеко један од другог.
20 ௨0 நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன்.
Где чујете трубу да труби, онамо трчите к нама; Бог наш војеваће за нас.
21 ௨௧ இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
Тако рађасмо посао, и половина их држаше копља од зора па докле звезде не изиђу.
22 ௨௨ அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
У то време још рекох народу: Сваки са момком својим нека ноћује у Јерусалиму да би нам ноћу стражили, а дању радили.
23 ௨௩ நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ஆயுதங்களையும் தண்ணீரையும் வைத்திருந்தார்கள்.
А ја и моја браћа и момци моји и стражари што иду за мном нећемо свлачити са себе хаљина; у сваког да је мач и вода.