< நெகேமியா 4 >

1 நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
桑巴拉特一聽說我們重修城垣,就大發忿怒,十分生氣,譏諷猶太人,
2 அந்த அற்பமான யூதர்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளில் முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியாவின் படைக்கும் முன்பாகச் சொன்னான்.
向他們的同僚即撒瑪黎雅的軍隊說:「這些可憐的猶太人想作什麼﹖他們想要修築城垣嗎﹖想要獻祭嗎﹖想要在一天內完成嗎﹖想從那堆灰土中,在立起那些燒過的石頭來嗎﹖」
3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
阿孟託人托彼雅也在旁說到:「讓他們修罷! 就是上去一隻野狗,也能推翻他們修了石牆。」
4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
我們的天主,請聽! 我們是怎樣受侮辱! 請把這辱罵歸到他們的頭上,使他們在流亡之地受迫害。
5 அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
不要遮掩他們的罪行,他們的罪孽也不應從你面前抹去,因為他們實在侮辱了修建的人。
6 நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
我們仍繼續修建城牆,把整個城牆都聯結起來,高底已到一半,因為民眾都有心火工作。
7 எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து,
當桑巴拉特和托彼雅,以及阿剌伯人、阿孟人和阿市多得人,聽說耶路撒冷城垣正在進行修建中,缺口已開始修補,就大發忿怒,
8 எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.
都聯合起來,圖謀來攻打耶路撒冷,擾亂我們。
9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
我們一面祈求我們的天主,一面派了衛隊,日夜防守。
10 ௧0 அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.
有一個猶太人說︰「運夫的力量已耗盡,積土又太多,我們不能再修建城牆了! 」
11 ௧௧ எங்களுடைய எதிரிகளோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடும்வரை, அவர்கள் அதை அறியாமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாக அந்த வேலையை நிறுத்துவோம் என்றார்கள்.
我們的仇敵已議決說:「不讓他們知道,不讓他們看出,我們直衝入他們中間,將他們殺掉,停止那工程。」
12 ௧௨ அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள்.
那時,有些靠近他們居住的猶太人,十次前來通知我們說︰「他們由所住的各方上來,攻打我們,
13 ௧௩ அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன்.
已在城牆下低處的田野中安了營。」我就按照家族分派了人,帶上刀槍和弓。
14 ௧௪ அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன்.
我巡視之後,就起來對權貴、長官和其餘的人民說︰「對他們,你們不可畏縮! 要記住吾主是偉大而可畏的:應為你們的兄弟、兒女、妻子、家庭而作戰。」
15 ௧௫ எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
我們的敵人一聽說我們得了情報,同時天主也破壞了他們的陰謀,他們遂都撤退;我們也都回到城牆那裏,各返自己的工作崗位。
16 ௧௬ அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதி ஆட்கள் வேலை செய்தார்கள், பாதி ஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள்.
從那天起,我的僕人一半做工,一半佩帶著刀、矛盾、弓和鎧甲,立在全猶大家後邊,
17 ௧௭ மதிலை கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையிலே வேலைசெய்து, மறுகையிலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
即在城牆作工的人後邊。那些搬運的人,也都武裝起來︰一手作工,一手拿著武器;
18 ௧௮ கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.
修牆的工人,每人腰間都配著刀工作。吹號筒的站在我身旁。
19 ௧௯ நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
我向權貴、長官和其餘的人民說︰「這工程範圍很大,我們在城牆上彼此分離甚遠,
20 ௨0 நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன்.
所以你們無論在什麼地方,一聽到號聲,就立時聚集在我們身旁;我們的天主必為我們戰爭。」
21 ௨௧ இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
我們便這樣繼續工作,由旭日初昇,直到星辰出現。
22 ௨௨ அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
同時我又吩咐民眾說:「每人和他的僕人,應在耶路撒冷過夜。如此在夜間可為我們守衛,白天可以工作。」
23 ௨௩ நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ஆயுதங்களையும் தண்ணீரையும் வைத்திருந்தார்கள்.
至於我和我的兄弟,以及我的僕人和跟隨我、護衛我的人,沒有一人脫過衣服,各人手中常拿著武器。

< நெகேமியா 4 >