< நெகேமியா 11 >
1 ௧ மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.
И жили начальники народа в Иерусалиме, а прочие из народа бросили жребии, чтоб одна из десяти частей их шла на жительство в святой город Иерусалим, а девять оставались в прочих городах.
2 ௨ ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
И благословил народ всех, которые добровольно согласились жить в Иерусалиме.
3 ௩ யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்:
Вот главы страны, которые жили в Иерусалиме, - а в городах Иудеи жили, всякий в своем владении, по городам своим: Израильтяне, священники, левиты и нефинеи и сыновья рабов Соломоновых;
4 ௪ எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
в Иерусалиме жили из сыновей Иуды и из сыновей Вениамина. Из сыновей Иуды: Афаия, сын Уззии, сын Захарии, сын Амарии, сын Сафатии, сын Малелеила, из сыновей Фареса,
5 ௫ சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
и Маасея, сын Варуха, сын Колхозея, сын Хазаии, сын Адаии, сын Иоиарива, сын Захарии, сын Шилония.
6 ௬ எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
Всех сыновей Фареса, живших в Иерусалиме, четыреста шестьдесят восемь, люди отличные.
7 ௭ பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன்.
И вот сыновья Вениамина: Саллу, сын Мешуллама, сын Иоеда, сын Федаии, сын Колаии, сын Маасеи, сын Ифиила, сын Исаии,
8 ௮ அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்.
и за ним Габбай, Саллай - девятьсот двадцать восемь.
9 ௯ அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே.
Иоиль, сын Зихри, был начальником над ними, а Иуда, сын Сенуи, был вторым над городом.
10 ௧0 ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
Из священников: Иедаия, сын Иоиарива, Иахин,
11 ௧௧ அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும்,
Сераия, сын Хелкии, сын Мешуллама, сын Садока, сын Мераиофа, сын Ахитува, начальствующий в доме Божием,
12 ௧௨ ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
и братья их, отправлявшие службу в доме Божием - восемьсот двадцать два; и Адаия, сын Иерохама, сын Фелалии, сын Амция, сын Захарии, сын Пашхура, сын Малхии,
13 ௧௩ குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
и братья его, главы поколений - двести сорок два; и Амашсай, сын Азариила, сын Ахзая, сын Мешиллемофа, сын Иммера,
14 ௧௪ அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான்.
и братья его, люди отличные - сто двадцать восемь. Начальником над ними был Завдиил, сын Гагедолима.
15 ௧௫ லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும்,
А из левитов: Шемаия, сын Хашшува, сын Азрикама, сын Хашавии, сын Вунния,
16 ௧௬ தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சப்பேதாயியும், யோசபாத்தும்,
и Шавфай, и Иозавад, из глав левитов по внешним делам дома Божия,
17 ௧௭ ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே.
и Матфания, сын Михи, сын Завдия, сын Асафа, главный начинатель славословия при молитве, и Бакбукия, второй по нем из братьев его, и Авда, сын Шаммуя, сын Галала, сын Идифуна.
18 ௧௮ பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர்.
Всех левитов во святом городе двести восемьдесят четыре.
19 ௧௯ வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
А привратники: Аккув, Талмон и братья их, содержавшие стражу у ворот - сто семьдесят два.
20 ௨0 மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
Прочие Израильтяне, священники, левиты жили по всем городам Иудеи, каждый в своем уделе.
21 ௨௧ ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
А нефинеи жили в Офеле; над нефинеями Циха и Гишфа.
22 ௨௨ எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன்.
Начальником над левитами в Иерусалиме был Уззий, сын Вания, сын Хашавии, сын Матфании, сын Михи, из сыновей Асафовых, которые были певцами при служении в доме Божием,
23 ௨௩ பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
потому что от царя было о них особое повеление, и назначено было на каждый день для певцов определенное содержание.
24 ௨௪ யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.
И Петахия, сын Мешезавела, из сыновей Зары, сына Иуды, был доверенным от царя по всяким делам, касающимся до народа.
25 ௨௫ தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
Из живших же в селах, на полях своих, сыновья Иуды жили в Кириаф-Арбе и зависящих от нее городах, в Дивоне и зависящих от него городах, в Иекавцеиле и селах его,
26 ௨௬ யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
в Иешуе, в Моладе и в Беф-Палете,
27 ௨௭ ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
в Хацар-Шуале, в Вирсавии и зависящих от нее городах,
28 ௨௮ சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
в Секелаге, в Мехоне и зависящих от нее городах,
29 ௨௯ என்ரிம்மோனிலும், சோரியாவிலும், யர்மூத்திலும்,
в Ен-Риммоне, в Цоре и в Иармуфе,
30 ௩0 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
в Заноахе, Одолламе и селах их, в Лахисе и на полях его, в Азеке и зависящих от нее городах. Они расположились от Вирсавии и до долины Енномовой.
31 ௩௧ கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
Сыновья Вениаминовы, начиная от Гевы, в Михмасе, Гае, в Вефиле и зависящих от него городах,
32 ௩௨ ஆனதோத், நோப், அனனியா,
в Анафофе, Нове, Анании,
33 ௩௩ ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
Гацоре, Раме, Гиффаиме,
34 ௩௪ ஆதீத், செபோயிம், நெபலாத்,
Хадиде, Цевоиме, Неваллате,
35 ௩௫ லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
Лоде, Оно, в долине Харашиме.
36 ௩௬ லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
И левиты имели жилища свои в участках Иуды и Вениамина.