< நாகூம் 3 >
1 ௧ இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
禍哉! 血債的城,滿城欺詐,處處劫掠,搶奪不息。
2 ௨ சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
聽皮鞭颼颼,車輪隆隆,戰馬奔馳,戰車疾駛,
3 ௩ வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.
騎士躍馬,刀劍晃亮,槍矛閃輝,被殺者眾,死者成堆,屍體無邊,人人為屍體絆倒:
4 ௪ தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம்,
這都是因那嬌艷妖冶的淫婦,行妖術的女巫的許多淫行所致。她以淫蕩欺騙了列邦,用妖術迷惑了萬民。
5 ௫ இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,
看,我必攻擊你,──萬軍上主的斷語──我必將妳的衣裙掀到妳的臉上,使萬民見到妳的裸體,使列邦看到妳的恥辱:
6 ௬ உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
我必要將糞溺拋在妳身上侮辱妳,使妳成為鑑戒。
7 ௭ அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான்.
凡看見妳的,必逃避妳說:「尼尼微終於毀滅了! 」誰會向妳表同情﹖我從哪裏能找到安慰妳人﹖
8 ௮ நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன.
妳哪裏能勝過那位於尼羅上,四面環水的諾阿孟。妳有海洋為屏障,有水為垣牆;
9 ௯ எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது.
雇士和埃及是好的力量,力大無窮;普特和利比亞是好的助1 ;
10 ௧0 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
但是好也被擄去,充當俘虜,好的嬰兒也在各街頭被摔死,人抽籤分配好的貴族,用鐵鏈縛住她的縉紳。
11 ௧௧ நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய்.
妳也要這樣被攻破而消失,妳也要一個安全處為逃避仇敵。
12 ௧௨ உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும்.
好的一切堡壘好像早熟的無花果樹,人一搖動,就落在姇食者的口裏。
13 ௧௩ இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும்.
看哪! 在妳中間的百姓都是婦女,妳境內的門已為妳的敵人敞開,火已燒毀了妳的門閂。
14 ௧௪ முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து.
妳應吸水防備圍困,應鞏固妳的堡壘,踏黏土,踩膠泥,緊握磚型。
15 ௧௫ அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.
火要在那裏燒滅妳,刀劍要殲滅妳, [把妳吞食有如蚱蜢。] 妳盡可增多妳的人數有如蚱蜢,多如飛蝗;
16 ௧௬ உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்.
增加妳的商賈,多過天上的星辰! ──蚱蜢一脫殼就飛去了。
17 ௧௭ உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
妳的守衛正如蝗蟲,妳的官吏正像一群蚱蜢;冷天蟄伏在牆上,但太陽一昇起,就飛去了,沒有人知道牠們究在何處。
18 ௧௮ அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.
亞述王! 你的牧者已酣睡,你的貴族已永眠,你的人民已散在各山上,無人再能聚集。
19 ௧௯ உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?
你的瘡痍無法治療,你的創傷是致命傷。凡聽到你這消息的,都朝你鼓掌,因為有誰沒有時常受你虐待﹖