< நாகூம் 2 >
1 ௧ சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து.
Взыде вдыхаяй в лице твое, отемляй от оскорбления: усмотри путь, укрепи чресла, возмужай крепостию зело:
2 ௨ வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார்.
понеже отврати Господь укоризну Иаковлю, якоже укоризну Израилеву: зане отрясающии отрясоша я и лозы их растлиша.
3 ௩ அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
Оружия силы их от человек, мужы сильныя играющыя во огни: брозды колесниц их в день уготования его, и конницы возмятутся на путех,
4 ௪ இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும்.
и смятутся колесницы и сплетутся на стогнах: вид их яко свещы огненны, и яко молния протекающая.
5 ௫ அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
И помянутся старейшины их, и побегнут в день, и изнемогут в пути своем, и потщатся на забрала его, и уготовят предния стражбы своя.
6 ௬ ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
Врата градная отверзошася, и царства падоша, и имение открыся.
7 ௭ அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
Сия же восхождаше, и рабыни ея ведяхуся, яко голубицы воркующя в сердцах своих:
8 ௮ நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
и Ниневиа, аки купель водная воды ея, и тии бежаще не сташа, и не бе взирающаго.
9 ௯ வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.
Расхищаху сребро, расхищаху злато, и не бяше конца имения ея: отяготишася паче всех сосудов вожделенная ея.
10 ௧0 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது.
Истрясение и вострясение, и воскипение и сердца сокрушение, и разслабление колен и болезни по всем чреслом, и лице всех, аки опаление котла.
11 ௧௧ சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே?
Где есть виталище львов и пажить сущая львичищем? Камо иде лев, еже влезти тамо львичищу, и не бяше устрашающаго.
12 ௧௨ சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று.
Лев восхити доволная львичищем своим и удави львицам своим, и наполни ловитвы гнездо свое и виталище свое похищения.
13 ௧௩ இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Се, Аз на тя, глаголет Господь Вседержитель, и пожгу дымом множество твое, и львы твоя пояст оружие: и потреблю от земли ловитву твою, и не услышатся ктому дела твоя.