< நாகூம் 1 >
1 ௧ நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம்.
Пророцтво на Ніневію. Книга видіння елкошейця Наума.
2 ௨ யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர்.
„Палки́й Бог, і мсти́вий Госпо́дь, Господь мстивий та лютий, — Господь мстивий до тих, хто Його ненавидить, і пам'ятає про кривду Своїх ворогів.
3 ௩ யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.
Господь довготерпели́вий і великої поту́ги, та очистити винного — Він не очистить. Господь — у бурі та в ви́хрі доро́га Його, а хмара — від стіп Його ку́рява.
4 ௪ அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
Як загні́вається Він на море, то сушить його, і всі рі́ки висушує, в'яне Баша́н та Карме́л, і в'яне та квітка Ліва́ну.
5 ௫ அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.
Гори тремтять перед Ним, а підгі́рки топні́ють, перед обличчям Його трясеться земля та вселе́нна, та всі її ме́шканці.
6 ௬ அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும்.
Хто встоїть перед гнівом Його́, і хто стане у по́лум'ї люті Його? Його шал виливається, мов той огонь, і розпада́ються скелі від Нього!
7 ௭ யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
Добрий Господь, пристано́вище Він у день у́тиску, і знає Він тих, хто на Нього наді́ється!
8 ௮ ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும்.
Але в зливі нава́льній Він зробить кінця́ між Його заколо́тниками, і ворогів зажене́ у темно́ту.
9 ௯ நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது.
Що ви ду́маєте проти Господа? Бо Він зробить кінця́, — не поста́не два ра́зи наси́льство.
10 ௧0 அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள்.
Бо вони переплу́тані, наче той те́рен, і повпива́лись, немов би вином, — вони будуть пожерті зовсі́м, мов солома суха!
11 ௧௧ யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.
З тебе вийшов заду́муючий проти Господа лихо, радник нікче́мний.
12 ௧௨ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
Так говорить Госпо́дь: Хоч були б найсильніші і дуже числе́нні, та пости́нані будуть вони, та й мину́ться! І хоч Я тебе мучив, та мучити більше тебе вже не бу́ду!
13 ௧௩ இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன்.
А тепер Я злама́ю ярмо́ його, яке на тобі, і пу́та твої позрива́ю.
14 ௧௪ உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
І накаже на тебе, Ашшу́ре, Господь: Більш не буде вже сі́ятися з твого йме́ння! З дому бога твого́ Я бовва́на та і́дола ви́тну, зроблю́ тобі гро́ба із них, бо ти став легкова́жений.
15 ௧௫ இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.
Ось на горах ноги́ благові́сника, що звіщає про мир: Святкуй, Юдо, свята свої, виконуй прися́ги свої, бо більше не буде нікче́мний ходи́ти по тобі, — він ви́тятий ввесь!