< மீகா 5 >
1 ௧ சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
Sbeřiž se nyní po houfích, ó záškodnice, oblehni nás, nechať bijí holí v líce soudce Izraelského.
2 ௨ எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
A ty Betléme Efrata, jakžkoli jsi nejmenší mezi tisíci Judskými, z tebe mi vyjde ten, kterýž má býti Panovníkem v Izraeli, a jehož východové jsou od starodávna, ode dnů věčných.
3 ௩ ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள்.
Protož, ač je vydá v rozptýlení, ažby ta, kteráž rodí, porodila, však ostatek bratří jeho navrátí se s syny Izraelskými.
4 ௪ அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார்.
I stane a pásti bude v síle Hospodinově, a u velebnosti jména Hospodina Boha svého. I budou bydliti, nebo již velikomocný bude až do končin země.
5 ௫ இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
I budeť takový pokoj, že když Assur přitáhne do země naší, a šlapati bude po palácích našich, tedy postavíme proti němu sedm pastýřů, a osmero knížat z lidu,
6 ௬ இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
Kteříž spasou zemi Assyrskou mečem, a zemi Nimrodovu v pomezích jejích. A tak vytrhne od Assura, když přitáhne do země naší, a šlapati bude po našem pomezí.
7 ௭ யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
A protož ostatkové Jákobovi u prostřed národů mnohých budou jako rosa od Hospodina, jako tiší dešťové skrápějící bylinu, jichž neočekává od žádného, aniž čeká od synů lidských.
8 ௮ யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
Budou též ostatkové Jákobovi mezi pohany, a u prostřed národů mnohých, jako lev mezi zvěří divokou, jako mladý lev mezi stády ovec. Kterýžto když jde, a pošlapává, i lapá, není žádného, kdo by vytrhl.
9 ௯ உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
Vyvýšiť se ruka tvá nad tvými nepřátely, a všickni protivníci tvoji vypléněni budou.
10 ௧0 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து,
I stane se v ten den, dí Hospodin, že vypléním koně tvé z prostředku tvého, a zkazím vozy tvé.
11 ௧௧ உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
A vypléním města země tvé, a rozbořím všecky pevnosti tvé.
12 ௧௨ சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
Vypléním též kouzly z tebe, a planetářů nebude v tobě.
13 ௧௩ உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.
Zahladím i rytiny tvé, i obrazy tvé z prostředku tvého, a nebudeš se klaněti více dílu rukou svých.
14 ௧௪ நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
Vykořením i háje tvé z prostředku tvého, a zkazím nepřátely tvé.
15 ௧௫ செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
A tak v hněvu a v prchlivosti vykonám pomstu nad těmi národy, kteříž nebyli poslušni.