< மீகா 4 >
1 ௧ ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
Ale się stanie w ostateczne dni, że utwierdzona będzie góra domu Pańskiego na wierzchu gór, i wywyższona nad pagórki, a narody się do niej zbiegać będą.
2 ௨ திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
I pójdzie wiele narodów, mówiąc: Pójdźcie, a wstąpmy na górę Pańską, to jest do domu Boga Jakóbowego, a będzie nas nauczał dróg swoich, i będziemy chodzili ścieszkami jego; bo zakon z Syonu wyjdzie, a słowo Pańskie z Jeruzalemu.
3 ௩ அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
Onci sądzić będzie między wieloma narodami, a karać będzie narody mocne na długie czasy; i przekują miecze swe na lemiesze, a oszczepy swe na kosy: nie podniesie miecza naród przeciwko narodowi, ani się więcej ćwiczyć będą do boju
4 ௪ அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
Ale każdy będzie siedział pod winną macicą swoją, i pod figowem drzewem swojem, a nie będzie nikt, coby ich przestraszył; bo to usta Pana zastępów mówiły.
5 ௫ சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
Bo wszystkie narody chodzić będą, każdy w imieniu boga swego; ale my chodzić będziemy w imieniu Pana, Boga naszego, na wieki wieków.
6 ௬ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
Dnia onego, mówi Pan, zgromadzę chromą i wygnaną zbiorę, i onę, którejm był źle uczynił:
7 ௭ நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
A dam tej chromej potomstwo, a precz wygnanej naród możny; i będzie Pan królował nad nimi na górze Syon odtąd aż na wieki.
8 ௮ மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
A ty, wieżo trzody, baszto córki Syońskiej! wiedz, że aż do ciebie przyjdzie; przyjdzie mówię, pierwsze państwo, i królestwo córki Jeruzalemskiej.
9 ௯ இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
Czemuż teraz tak bardzo krzyczysz? Izali króla niemasz w tobie? Izali radca twój zginął, że cię zjął ból, jako rodzącą?
10 ௧0 மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
Bolej a stękaj, córko Syońska? jako rodząca; bo już wyjdziesz z miasta, i będziesz mieszkała w polu, a przyjdziesz aż do Babilonu; tam będziesz wybawiona, tam cię Pan odkupi z rąk nieprzyjaciół twoich.
11 ௧௧ சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
A choć się teraz zebrało przeciwko tobie wiele narodów, które mówią: Niech będzie splugawiony Syon, a niech na to patrzy oko nasze,
12 ௧௨ ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
Wszakże one nie znają myśli Pańskich, ani rozumieją rady jego, iż je zgromadza jako snopy na bojewisko.
13 ௧௩ மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
Wstańże, a młóć, córko Syońska! bo róg twój uczynię żelazny, a kopyta twoje uczynię miedziane, i pokruszysz wiele narodów; i poświęcę Panu korzyści ich, a majętności ich Panu wszystkiej ziemi.