< மீகா 1 >
1 ௧ யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.
Awurade de saa nsɛm yi brɛɛ Moresetni Mika bere a na Yotam, Ahas ne Hesekia di ade wɔ Yuda no. Anisoade a ohu faa Samaria ne Yerusalem ho.
2 ௨ அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார்.
Monyɛ aso, mo nnipa nyinaa, muntie, asase ne mo a mote so nyinaa. Otumfo Awurade redi adanse atia mo, ɔkasa fi nʼasɔredan kronkron no mu.
3 ௩ இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.
Monhwɛ! Awurade fi nʼatenae reba; ɔresian na ɔnam asase sorɔnsorɔmmea so.
4 ௪ மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
Mmepɔw nan wɔ nʼase, aku mu paapae te sɛ ama a aka ogya, te sɛ nsu a ɛresian waa fi koko so.
5 ௫ இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?
Eyi nyinaa yɛ Yakob nnebɔne, ne bɔne ahorow a ɛwɔ Israel fi nti. Yakob nnebɔne ne dɛn? Ɛnyɛ Samaria ana? Na he ne Yuda sorɔnsorɔmmea? Ɛnyɛ Yerusalem ana?
6 ௬ ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன்.
“Enti mɛyɛ Samaria kurow no nnwiriwii siw, baabi a wɔbɛyɛ bobe turo. Mehwie nʼabo agu obon mu ama ne fapem ho ada hɔ.
7 ௭ அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.
Wobebubu nʼahoni nyinaa mu asinasin; wɔde ogya bɛhyew nʼasɔredan mu ayɛyɛde nyinaa. Mɛsɛe ne nsɛsode nyinaa. Esiane sɛ nʼakyɛde a waboa ano no nyinaa, onya fii nguamanfo akatua mu no nti wɔde bɛma nguamanfo.”
8 ௮ இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
Eyinom nti mesu atwa agyaadwo; mede adagyaw bɛnantew na merenhyɛ mpaboa. Mɛworo so sɛ odompo na masu sɛ patu.
9 ௯ அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.
Nʼapirakuru no wu ayɛ den; abedu Yuda. Abedu me nkurɔfo pon ano mpo adu Yerusalem ankasa.
10 ௧0 அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.
Monnka no wɔ Gat munnsu koraa Mo a mowɔ Bet-Leafra de, monyantam mfutuma mu.
11 ௧௧ சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது.
Monsen nkɔ adagyaw ne aniwu mu, mo a mote Safir. Wɔn a wɔte Saanan ntumi mpue. Bet-Esel wɔ awerɛhow mu; efisɛ, wo hɔ na onya ne bammɔ.
12 ௧௨ மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Wɔn a wɔte Marot de ɔyaw nunununu wɔn mu de twɛn mmoa, efisɛ amanehunu a efi Awurade hɔ aba abedu Yerusalem pon ano.
13 ௧௩ லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது.
Mo a mote Lakis, munsiesie nteaseɛnam no. Mone bɔne farebae ma Ɔbabea Sion, na mudii Israel anim kɔɔ bɔne mu.
14 ௧௪ ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும்.
Enti mode ntetewmu akyɛde bɛma Moreset-Gat, Aksib kurow bɛdaadaa Israel ahemfo.
15 ௧௫ மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள்.
Mede nkonimdifo bɛtoa mo; mo a mote Maresa. Nea ɔyɛ Israel onuonyamfo no bɛba Adulam.
16 ௧௬ உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.
Munyi mo tinwi mfa nni awerɛhow, wɔ mma a mo ani gye wɔn ho no ho; mommɔ tikwaw te sɛ opete, efisɛ, wɔbɛfa wɔn afi mo nkyɛn akɔ nnommum mu.