< மத்தேயு 1 >
1 ௧ ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
இப்³ராஹீம: ஸந்தாநோ தா³யூத்³ தஸ்ய ஸந்தாநோ யீஸு²க்²ரீஷ்டஸ்தஸ்ய பூர்வ்வபுருஷவம்’ஸ²ஸ்²ரேணீ|
2 ௨ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
இப்³ராஹீம: புத்ர இஸ்ஹாக் தஸ்ய புத்ரோ யாகூப்³ தஸ்ய புத்ரோ யிஹூதா³ஸ்தஸ்ய ப்⁴ராதரஸ்²ச|
3 ௩ யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
தஸ்மாத்³ யிஹூதா³தஸ்தாமரோ க³ர்பே⁴ பேரஸ்ஸேரஹௌ ஜஜ்ஞாதே, தஸ்ய பேரஸ: புத்ரோ ஹிஷ்ரோண் தஸ்ய புத்ரோ (அ)ராம்|
4 ௪ ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
தஸ்ய புத்ரோ (அ)ம்மீநாத³ப்³ தஸ்ய புத்ரோ நஹஸோ²ந் தஸ்ய புத்ர: ஸல்மோந்|
5 ௫ சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
தஸ்மாத்³ ராஹபோ³ க³ர்பே⁴ போ³யம் ஜஜ்ஞே, தஸ்மாத்³ ரூதோ க³ர்பே⁴ ஓபே³த்³ ஜஜ்ஞே, தஸ்ய புத்ரோ யிஸ²ய: |
6 ௬ ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
தஸ்ய புத்ரோ தா³யூத்³ ராஜ: தஸ்மாத்³ ம்ரு’தோரியஸ்ய ஜாயாயாம்’ ஸுலேமாந் ஜஜ்ஞே|
7 ௭ சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
தஸ்ய புத்ரோ ரிஹபி³யாம், தஸ்ய புத்ரோ(அ)பி³ய: , தஸ்ய புத்ர ஆஸா: |
8 ௮ ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
தஸ்ய ஸுதோ யிஹோஸா²ப²ட் தஸ்ய ஸுதோ யிஹோராம தஸ்ய ஸுத உஷிய: |
9 ௯ உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
தஸ்ய ஸுதோ யோத²ம் தஸ்ய ஸுத ஆஹம் தஸ்ய ஸுதோ ஹிஷ்கிய: |
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
தஸ்ய ஸுதோ மிநஸி²: , தஸ்ய ஸுத ஆமோந் தஸ்ய ஸுதோ யோஸி²ய: |
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
பா³பி³ல்நக³ரே ப்ரவஸநாத் பூர்வ்வம்’ ஸ யோஸி²யோ யிக²நியம்’ தஸ்ய ப்⁴ராத்ரும்’’ஸ்²ச ஜநயாமாஸ|
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
ததோ பா³பி³லி ப்ரவஸநகாலே யிக²நிய: ஸ²ல்தீயேலம்’ ஜநயாமாஸ, தஸ்ய ஸுத: ஸிருப்³பா³வில்|
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
தஸ்ய ஸுதோ (அ)போ³ஹுத்³ தஸ்ய ஸுத இலீயாகீம் தஸ்ய ஸுதோ(அ)ஸோர்|
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
அஸோர: ஸுத: ஸாதோ³க் தஸ்ய ஸுத ஆகீ²ம் தஸ்ய ஸுத இலீஹூத்³|
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
தஸ்ய ஸுத இலியாஸர் தஸ்ய ஸுதோ மத்தந்|
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
தஸ்ய ஸுதோ யாகூப்³ தஸ்ய ஸுதோ யூஷப்² தஸ்ய ஜாயா மரியம்; தஸ்ய க³ர்பே⁴ யீஸு²ரஜநி, தமேவ க்²ரீஷ்டம் (அர்தா²த்³ அபி⁴ஷிக்தம்’) வத³ந்தி|
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
இத்த²ம் இப்³ராஹீமோ தா³யூத³ம்’ யாவத் ஸாகல்யேந சதுர்த³ஸ²புருஷா: ; ஆ தா³யூத³: காலாத்³ பா³பி³லி ப்ரவஸநகாலம்’ யாவத் சதுர்த³ஸ²புருஷா ப⁴வந்தி| பா³பி³லி ப்ரவாஸநகாலாத் க்²ரீஷ்டஸ்ய காலம்’ யாவத் சதுர்த³ஸ²புருஷா ப⁴வந்தி|
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஜந்ம கத்²த²தே| மரியம் நாமிகா கந்யா யூஷபே² வாக்³த³த்தாஸீத், ததா³ தயோ: ஸங்க³மாத் ப்ராக் ஸா கந்யா பவித்ரேணாத்மநா க³ர்ப⁴வதீ ப³பூ⁴வ|
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
தத்ர தஸ்யா: பதி ர்யூஷப்² ஸௌஜந்யாத் தஸ்யா: கலங்க³ம்’ ப்ரகாஸ²யிதும் அநிச்ச²ந் கோ³பநேநே தாம்’ பாரித்யக்தும்’ மநஸ்²சக்ரே|
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
ஸ ததை²வ பா⁴வயதி, ததா³நீம்’ பரமேஸ்²வரஸ்ய தூ³த: ஸ்வப்நே தம்’ த³ர்ஸ²நம்’ த³த்த்வா வ்யாஜஹார, ஹே தா³யூத³: ஸந்தாந யூஷப்² த்வம்’ நிஜாம்’ ஜாயாம்’ மரியமம் ஆதா³தும்’ மா பை⁴ஷீ: |
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
யதஸ்தஸ்யா க³ர்ப⁴: பவித்ராதா³த்மநோ(அ)ப⁴வத், ஸா ச புத்ரம்’ ப்ரஸவிஷ்யதே, ததா³ த்வம்’ தஸ்ய நாம யீஸு²ம் (அர்தா²த் த்ராதாரம்’) கரீஷ்யஸே, யஸ்மாத் ஸ நிஜமநுஜாந் தேஷாம்’ கலுஷேப்⁴ய உத்³த⁴ரிஷ்யதி|
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
இத்த²ம்’ ஸதி, பஸ்²ய க³ர்ப⁴வதீ கந்யா தநயம்’ ப்ரஸவிஷ்யதே| இம்மாநூயேல் ததீ³யஞ்ச நாமதே⁴யம்’ ப⁴விஷ்யதி|| இம்மாநூயேல் அஸ்மாகம்’ ஸங்கீ³ஸ்²வரஇத்யர்த²: |
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
இதி யத்³ வசநம்’ புர்வ்வம்’ ப⁴விஷ்யத்³வக்த்ரா ஈஸ்²வர: கதா²யாமாஸ, தத் ததா³நீம்’ ஸித்³த⁴மப⁴வத்|
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
அநந்தரம்’ யூஷப்² நித்³ராதோ ஜாக³ரித உத்தா²ய பரமேஸ்²வரீயதூ³தஸ்ய நிதே³ஸா²நுஸாரேண நிஜாம்’ ஜாயாம்’ ஜக்³ராஹ,
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
கிந்து யாவத் ஸா நிஜம்’ ப்ரத²மஸுதம்’ அ ஸுஷுவே, தாவத் தாம்’ நோபாக³ச்ச²த், தத: ஸுதஸ்ய நாம யீஸு²ம்’ சக்ரே|