< மத்தேயு 9 >
1 ௧ அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲀⲖⲎⲒ ⲈⲠϪⲞⲒ ⲀϤⲒ ⲈⲘⲎⲢ ⲀϤⲒ ⲈϦⲞⲨⲚ ⲈⲦⲈϤⲂⲀⲔⲒ.
2 ௨ அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
ⲃ̅ⲞⲨⲞϨ ϨⲎⲠⲠⲈ ⲈⲦⲀⲨⲒⲚⲒ ⲚⲀϤ ⲚⲞⲨⲀⲒ ⲈϤϢⲎ ⲖⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲈϤϢⲦⲎⲞⲨⲦ ϨⲒϪⲈⲚ ⲞⲨϬⲖⲞϪ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲠⲞⲨⲚⲀϨϮ ⲠⲈϪⲀϤ ⲘⲪⲎ ⲈⲦϢⲎⲖ ⲈⲂⲞⲖ ϪⲈ ϪⲈⲘⲚⲞⲘϮ ⲠⲀϢⲎⲢⲒ ⲚⲈⲔⲚⲞⲂⲒ ⲤⲈⲬⲎ ⲚⲀⲔ ⲈⲂⲞⲖ.
3 ௩ அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
ⲅ̅ⲞⲨⲞϨ ⲒⲤ ϨⲀⲚⲞⲨⲞⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲤⲀϦ ⲠⲈϪⲰⲞⲨ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ ϪⲈ ⲪⲀⲒ ϪⲈⲞⲨⲀ.
4 ௪ இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲚⲞⲨⲘⲞⲔⲘⲈⲔ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲦⲈⲦⲈⲚⲘⲞⲔⲘⲈⲔ ⲈϨⲀⲚⲠⲈⲦϨⲰⲞⲨ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚϨⲎⲦ.
5 ௫ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
ⲉ̅ⲞⲨ ⲄⲀⲢ ⲈⲐⲘⲞⲦⲈⲚ ⲈϪⲞⲤ ϪⲈ ⲚⲈⲔⲚⲞⲂⲒ ⲤⲈⲬⲎ ⲚⲀⲔ ⲈⲂⲞⲖ ϢⲀⲚ ⲈϪⲞⲤ ϪⲈ ⲦⲰⲚⲔ ⲞⲨⲞϨ ⲘⲞϢⲒ.
6 ௬ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
ⲋ̅ϨⲒⲚⲀ ⲆⲈ ⲚⲦⲈⲦⲈⲚⲈⲘⲒ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲚⲦⲈⲠϢⲎ ⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ ⲚⲈⲢϢⲒϢⲒ ⲘⲘⲀⲨ ⲈⲬⲀ ⲚⲞⲂⲒ ⲈⲂⲞⲖ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ ⲦⲞⲦⲈ ⲠⲈϪⲀϤ ⲘⲪⲎ ⲈⲦϢⲎⲖ ⲈⲂⲞⲖ ϪⲈ ⲦⲰⲚⲔ ⲰⲖⲒ ⲘⲠⲈⲔϬⲖⲞϪ ⲞⲨⲞϨ ⲘⲀϢⲈ ⲚⲀⲔ ⲈⲠⲈⲔⲎⲒ.
7 ௭ உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
ⲍ̅ⲞⲨⲞϨ ⲀϤⲦⲰⲚϤ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲠⲈϤⲎⲒ.
8 ௮ மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ⲏ̅ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲆⲈ ⲚϪⲈⲚⲒⲘⲎϢ ⲀⲨⲈⲢϨⲞϮ ⲞⲨⲞϨ ⲀⲨϮⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ ⲪⲎ ⲈⲦⲀϤϮⲈⲢϢⲒϢⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲚⲚⲒⲢⲰⲘⲒ.
9 ௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
ⲑ̅ⲞⲨⲞϨ ⲀϤⲤⲒⲚⲒⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀϤⲚⲀⲨ ⲈⲞⲨⲢⲰⲘⲒ ⲈϤϨⲈⲘⲤⲒ ϨⲒ ⲞⲨⲦⲈⲖⲰⲚⲒⲞⲚ ⲈⲠⲈϤⲢⲀⲚ ⲠⲈ ⲘⲀⲦⲐⲈⲞⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲘⲞϢⲒ ⲚⲤⲰⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲰⲚϤ ⲀϤⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ.
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
ⲓ̅ⲈϤⲢⲞⲦⲈⲂ ⲆⲈ ϦⲈⲚⲠⲎⲒ ⲚⲤⲒⲘⲰⲚ ⲒⲤ ϨⲀⲚⲦⲈⲖⲰⲚⲎⲤ ⲀⲨⲒ ⲀⲨⲢⲞⲐⲂⲞⲨ ⲚⲈⲘ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
ⲓ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲚϪⲈⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲀⲨϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲠⲈⲦⲈⲚⲢⲈϤϮⲤⲂⲰ ϤⲞⲨⲰⲘ ⲚⲈⲘ ⲚⲒⲦⲈⲖⲰⲚⲎⲤ ⲚⲈⲘ ⲚⲒⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ.
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
ⲓ̅ⲃ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲚⲎ ⲈⲦϪⲞⲢ ⲤⲈⲈⲢⲬⲢⲒⲀ ⲀⲚ ⲘⲠⲒⲤⲎⲒⲚⲒ ⲀⲖⲖⲀ ⲚⲎ ⲈⲐⲘⲞⲔϨ.
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
ⲓ̅ⲅ̅ⲘⲀϢⲈ ⲚⲰⲦⲈⲚ ⲆⲈ ⲀⲢⲒⲈⲘⲒ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲞⲨⲚⲀⲒ ⲠⲈϮⲞⲨⲀϢϤ ⲞⲨⲞϨ ⲚⲞⲨϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲀⲚ ⲚⲈⲦⲀⲒⲒ ⲄⲀⲢ ⲀⲚ ⲈⲐⲀϨⲈⲘ ⲚⲒⲐⲘⲎⲒ ⲀⲖⲖⲀ ⲚⲒⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ.
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
ⲓ̅ⲇ̅ⲦⲞⲦⲈ ⲀⲨⲒ ϨⲀⲢⲞϤ ⲚϪⲈⲚⲒⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲚⲦⲈⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲀⲚⲞⲚ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲦⲈⲚⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲚϨⲀⲚⲘⲎ ϢⲚⲈⲔⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲆⲈ ⲚⲐⲰⲞⲨ ⲤⲈⲈⲢⲚⲎ ⲤⲦⲈⲨⲒⲚ ⲀⲚ.
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
ⲓ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲘⲎ ⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲚⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈⲠⲒⲠⲀⲦϢⲈⲖⲈⲦ ⲈⲈⲢϨⲎⲂⲒ ϨⲰⲤ ⲈϤⲚⲈⲘⲰⲞⲨ ⲚϪⲈⲠⲒⲠⲀⲦϢⲈⲖⲈⲦ ⲤⲈⲚⲎⲞⲨ ⲆⲈ ⲚϪⲈϨⲀⲚⲈϨⲞⲞⲨ ⲈϢⲰⲠ ⲀⲨϢⲀⲚⲰⲖⲒ ⲘⲠⲒⲠⲀⲦϢⲈⲖⲈⲦ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲰⲞⲨ ⲦⲞⲦⲈ ⲈⲨⲈⲈⲢⲚⲎ ⲤⲦⲈⲨⲒⲚ.
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
ⲓ̅ⲋ̅ⲘⲠⲀⲢⲈ ϨⲖⲒ ⲈⲖ ⲞⲨⲦⲰⲒⲤ ⲘⲂⲈⲢⲒ ⲚⲦⲈϤϨⲒⲦⲤ ⲈⲞⲨⲪⲈⲖϪⲒ ⲚϨⲂⲞⲤ ϢⲀⲤⲰⲖⲒ ⲄⲀⲢ ⲘⲠⲈⲤⲘⲞϨ ⲈⲂⲞⲖ ϨⲒ ⲠⲒϨⲂⲞⲤ ⲞⲨⲞϨ ϢⲀⲢⲈ ⲞⲨⲪⲰϦ ϢⲰⲠⲒ ⲚϨⲞⲨⲞ.
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
ⲓ̅ⲍ̅ⲞⲨⲆⲈ ⲘⲠⲀⲨϨⲒ ⲎⲢⲠ ⲘⲂⲈⲢⲒ ⲈⲀⲤⲔⲞⲤ ⲚⲀⲠⲀⲤ ⲘⲘⲞⲚ ϢⲀⲢⲈ ⲚⲒⲀⲤⲔⲞⲤ ⲪⲰϦ ⲞⲨⲞϨ ϢⲀⲢⲈ ⲠⲒⲎⲢⲠ ⲪⲰⲚ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ϢⲀⲢⲈ ⲚⲒⲀⲤⲔⲞⲤ ⲦⲀⲔⲞ ⲀⲖⲖⲀ ϢⲀⲨϨⲒ ⲎⲢⲠ ⲘⲂⲈⲢⲒ ⲈⲀⲤⲔⲞⲤ ⲘⲂⲈⲢⲒ ⲞⲨⲞϨ ϢⲀⲨϤⲒ ⲚⲚⲞⲨⲈⲢⲎⲞⲨ.
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
ⲓ̅ⲏ̅ⲚⲀⲒ ⲆⲈ ⲈϤϪⲰ ⲘⲘⲰⲞⲨ ⲒⲤ ⲞⲨⲀⲢⲬⲰⲚ ⲀϤⲒ ⲀϤⲞⲨⲰϢⲦ ⲘⲘⲞϤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ Ⲁ- ⲦⲀϢⲈⲢⲒ ⲘⲞⲨ ϮⲚⲞⲨ ⲀⲖⲖⲀ ⲀⲘⲞⲨ ⲬⲀ ⲦⲈⲔϪⲒϪ ϨⲒϪⲰⲤ ⲞⲨⲞϨ ⲈⲤⲈⲰⲚϦ.
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
ⲓ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲀϤⲦⲰⲚϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀϤⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
ⲕ̅ⲞⲨⲞϨ ⲒⲤ ⲞⲨⲤϨⲒⲘⲒ ⲈⲢⲈ ⲠⲈⲤⲤⲚⲞϤ ϢⲀⲦ ⲈⲂⲞⲖ ϦⲀⲢⲞⲤ ⲘⲒⲂ ⲚⲢⲞⲘⲠⲒ ⲀⲤⲒ ⲈⲂⲞⲖ ⲤⲀⲪⲀϨⲞⲨ ⲘⲘⲞϤ ⲀⲤϬⲒ ⲚⲈⲘ ⲠϢⲦⲀϮ ⲚⲦⲈⲠⲈϤϨⲂⲞⲤ.
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
ⲕ̅ⲁ̅ⲀⲤϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲤ ϪⲈ ⲘⲞⲚⲞⲚ ⲀⲒϢⲀⲚϬⲒ ⲚⲈⲘ ⲠϢⲦⲀϮ ⲚⲦⲈⲠⲈϤϨⲂⲞⲤ ϮⲚⲀⲚⲞϨⲈⲘ.
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
ⲕ̅ⲃ̅ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲈⲦⲀϤⲪⲞⲚϨϤ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲈⲢⲞⲤ ⲠⲈϪⲀϤ ϪⲈ ϪⲈⲘⲚⲞⲘϮ ⲦⲀϢⲈⲢⲒ ⲠⲈⲚⲀϨϮ ⲠⲈⲦⲀϤⲚⲀϨⲘⲒ ⲞⲨⲞϨ ⲀⲤⲞⲨϪⲀⲒ ⲚϪⲈϮⲤϨⲒⲘⲒ ⲒⲤϪⲈⲚ ϮⲞⲨⲚⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ.
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲒ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲎⲒ ⲘⲠⲒⲀⲢⲬⲰⲚ ⲀϤⲚⲀⲨ ⲈⲚⲒⲢⲈϤϪⲰⲞⲨⲒ ⲚⲈⲘ ⲚⲒⲘⲎ ϢⲈⲨϢⲦⲈⲢⲐⲰⲢ.
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
ⲕ̅ⲇ̅ⲚⲀϤϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲘⲰⲒⲚⲒ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲘⲠⲈⲤⲘⲞⲨ ⲄⲀⲢ ⲚϪⲈϮⲀⲖⲞⲨ ⲀⲖⲖⲀ ⲀⲤⲚⲔⲞⲦ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲤⲰⲂⲒ ⲘⲘⲞϤ ⲠⲈ.
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
ⲕ̅ⲉ̅ϨⲞⲦⲈ ⲆⲈ ⲈⲦⲀϤϨⲒ ⲠⲒⲘⲎϢ ⲈⲂⲞⲖ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈϦⲞⲨⲚ ⲀϤⲀⲘⲞⲚⲒ ⲚⲦⲈⲤϪⲒϪ ⲞⲨⲞϨ ⲀⲤⲦⲰⲚⲤ ⲚϪⲈϮⲀⲖⲞⲨ.
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
ⲕ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲀⲦⲈⲤⲤⲘⲎ ϢⲈ ⲚⲀⲤ ⲈⲂⲞⲖ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ ⲦⲎⲢϤ ⲈⲦⲈⲘⲘⲀⲨ.
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
ⲕ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲈϤⲚⲎⲞⲨ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀⲨⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ ⲚϪⲈⲂⲈⲖⲖⲈ ⲂⲈⲨⲰϢ ⲈⲂⲞⲖ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲚⲀⲒ ⲚⲀⲚ ⲠϢⲎⲢⲒ ⲚⲆⲀⲨⲒⲆ.
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
ⲕ̅ⲏ̅ⲈⲦⲀϤⲒ ⲆⲈ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲎⲒ ⲀⲨⲒ ϨⲀⲢⲞϤ ⲚϪⲈⲚⲒⲂⲈⲖⲖⲈⲨ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲚⲀϨϮ ϪⲈ ⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞⲒ ⲈⲈⲢ ⲪⲀⲒ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲤⲈ ⲠⲈⲚϬⲞⲒⲤ.
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
ⲕ̅ⲑ̅ⲦⲞⲦⲈ ⲀϤϬⲒ ⲚⲈⲘ ⲚⲞⲨⲂⲀⲖ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲔⲀⲦⲀ ⲠⲈⲦⲈⲚⲚⲀϨϮ ⲈⲤⲈϢⲰⲠⲒ ⲚⲰⲦⲈⲚ.
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
ⲗ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲞⲨⲰⲚ ⲚϪⲈⲚⲞⲨⲂⲀⲖ ⲞⲨⲞϨ ⲀϤϨⲞⲚϨⲈⲚ ⲚⲰⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚⲀⲨ ⲘⲠⲈⲚⲐⲢⲈ ϨⲖⲒ ⲈⲘⲒ.
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
ⲗ̅ⲁ̅ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲈⲦⲀⲨⲒ ⲈⲂⲞⲖ ⲀⲨⲤⲈⲢ ⲦⲈϤⲤⲘⲎ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲔⲀϨⲒ ⲦⲎⲢϤ ⲈⲦⲈⲘⲘⲀⲨ.
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
ⲗ̅ⲃ̅ⲈϤⲚⲎⲞⲨ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ϨⲎⲠⲠⲈ ⲀⲨⲒⲚⲒ ⲚⲀϤ ⲚⲞⲨⲈⲂⲞ ⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲀϤ.
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
ⲗ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤϨⲒ ⲠⲒⲆⲈⲘⲰⲚ ⲈⲂⲞⲖ ⲀϤⲤⲀϪⲒ ⲚϪⲈⲠⲒⲈⲂⲞ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲢϢⲪⲎⲢⲒ ⲚϪⲈⲚⲒⲘⲎϢ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲘⲠⲈ ϨⲖⲒ ⲞⲨⲞⲚϨϤ ⲈⲚⲈϨ ⲘⲠⲀⲒⲢⲎϮ ϦⲈⲚⲠⲒⲤⲖ.
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
ⲗ̅ⲇ̅ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲆⲈ ⲚⲀⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ϦⲈⲚⲠⲀⲢⲬⲰⲚ ⲚⲦⲈⲚⲒⲆⲈⲘⲰⲚ ⲀϤϨⲒⲞⲨⲒ ⲚⲚⲒⲆⲈⲘⲰⲚ ⲈⲂⲞⲖ.
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
ⲗ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤⲔⲰϮ ⲠⲈ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲚⲒⲂⲀⲔⲒ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈⲘ ⲚⲒϮⲘⲒ ⲈϤϮⲤⲂⲰ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲚⲞⲨⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲞⲨⲞϨ ⲈϤϨⲒⲰⲒϢ ⲘⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲞⲨⲞϨ ⲈϤⲈⲢⲪⲀϦⲢⲒ ⲈϢⲰⲚⲒ ⲚⲒⲂⲈⲚ ⲚⲈⲘ ⲒⲀⲂⲒ ⲚⲒⲂⲈⲚ.
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
ⲗ̅ⲋ̅ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲆⲈ ⲈⲚⲒⲘⲎϢ ⲀϤϢⲈⲚϨⲎⲦ ϦⲀⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲀⲨⲤⲞⲢⲈⲘ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲢⲞϪⲠ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲈⲤⲰⲞⲨ ⲘⲘⲞⲚⲦⲞⲨ ⲘⲀⲚⲈⲤⲰⲞⲨ.
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
ⲗ̅ⲍ̅ⲦⲞⲦⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ϪⲈ ⲠⲒⲰⲤϦ ⲘⲈⲚ ⲞⲨⲚⲒϢϮ ⲠⲈ ⲚⲒⲈⲢⲄⲀⲦⲎⲤ ⲆⲈ ϨⲀⲚⲔⲞⲨϪⲒ ⲚⲈ.
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
ⲗ̅ⲏ̅ⲦⲰⲂϨ ⲞⲨⲚ ⲘⲠϬⲞⲒⲤ ⲘⲠⲒⲰⲤϦ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲦⲀⲞⲨⲞ ⲚϨⲀⲚⲈⲢⲄⲀⲦⲎⲤ ⲈⲂⲞⲖ ⲈⲠⲈϤⲰⲤϦ.