< மத்தேயு 8 >
1 ௧ இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
А коли Він зійшов із гори, услід за Ним ішов на́товп великий.
2 ௨ அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான்.
І ось підійшов прокаже́ний, уклонився Йому та й сказав: „Коли, Господи, хочеш, — Ти можеш очистити мене!“
3 ௩ இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
А Ісус простяг руку, і доторкнувся до нього, говорячи: „Хо́чу, — будь чистий!“І тієї хвилини очистився той від своєї прокази.
4 ௪ இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
І гово́рить до нього Ісус: „Гляди, — не розповіда́й ніко́му. Але йди, покажися священикові, та дар принеси́, якого Мойсей заповів, їм на свідо́цтво “.
5 ௫ இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:
А коли Він до Капернау́му ввійшов, то до Нього набли́зився сотник, та й благати зачав Його,
6 ௬ ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
кажучи: „Господи, мій слуга лежить удома розсла́блений, і тяжко страждає“.
7 ௭ அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார்.
Він говорить йому: „Я прийду́ й уздоро́влю його“.
8 ௮ அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான்.
А сотник Йому відповів: „Недостойний я, Господи, щоб зайшов Ти під стрі́ху мою. Та промов тільки слово, — і ви́дужає мій слуга!
9 ௯ நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
Бо й я — люди́на підвла́дна, і воякі́в під собою я маю; і одному кажу: піди — то йде він, а тому: прийди́ — і приходить, або рабо́ві своєму: зроби те — і він зро́бить“.
10 ௧0 இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Почувши таке, Ісус здивувався, і промовив до тих, хто йшов услід за Ним: „Поправді кажу вам: навіть серед Ізраїля Я не знайшо́в був такої великої віри!
11 ௧௧ அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள்.
Кажу́ ж вам, що багато-хто при́йдуть від сходу та за́ходу, і засядуть у Царстві Небеснім із Авраамом, Ісаком та Яковом.
12 ௧௨ ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Сини ж Царства — повки́дані бу́дуть до те́мряви зо́внішньої — буде там плач і скре́гіт зубів“!
13 ௧௩ பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.
I сказав Ісус сотникові: „Іди, і як повірив ти, нехай так тобі й станеться!“І тієї ж години одужав слуга його.
14 ௧௪ இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.
Як прийшов же Ісус до Петрового дому, то побачив тещу його, що лежала в гарячці.
15 ௧௫ அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
І Він доторкнувся руки її, — і гарячка покинула ту... І встала вона, та й Йому прислуго́вувала!
16 ௧௬ மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.
А коли настав вечір, привели́ багатьох біснуватих до Нього, — і Він словом Своїм вигнав ду́хів, а недужих усіх уздорови́в,
17 ௧௭ அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
щоб спра́вдилося, що сказав був Ісая пророк, промовляючи: „Він узяв наші немочі, і неду́ги поніс“.
18 ௧௮ பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
А як угледів Ісус навко́ло Себе багато наро́ду, наказав перепли́нути на то́й бік.
19 ௧௯ அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
І приступив один книжник та й до Нього сказав: „Учителю, я піду́ за Тобою, хоч би куди ти пішов!“
20 ௨0 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
Промовляє до нього Ісус: „Мають но́ри лисиці, а гні́зда небесні пташки́, — Син же Лю́дський не має де й голови́ прихили́ти“.
21 ௨௧ அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
А і́нший із у́чнів промовив до Ньо́го: „Дозволь мені, Господи, перше піти та ба́тька свого похова́ти“.
22 ௨௨ அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
А Ісус йому каже: „Іди за Мною, і зостав мертвим ховати мерців своїх!“
23 ௨௩ அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள்.
І коли Він до чо́вна вступив, за Ним увійшли Його у́чні.
24 ௨௪ அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
І ось буря велика зірва́лась на морі, аж чо́вен зачав залива́тися хви́лями. А Він спав.
25 ௨௫ அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள்.
І кинулись учні, і збудили Його та й благали: Рятуй, Господи, — ги́немо!“
26 ௨௬ அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது.
А Він відповів їм: „Чого полохливі ви, маловірні?“Тоді встав, заказав бурі й морю, — і тиша велика настала.
27 ௨௭ அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
А народ дивувався й казав: „Хто ж це такий, що ві́три та море слухня́ні Йому́?“
28 ௨௮ அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது.
І, як прибув Він на то́й бік, до землі Гадари́нської, перестріли Його два біснуваті, що вийшли з могильних пече́р, дуже люті, так що ніхто не міг перехо́дити тією дорогою.
29 ௨௯ அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள்.
І ось, вони стали кричати, говорячи: „Що́ Тобі, Сину Божий, до нас? Прийшов Ти сюди передчасно нас мучити?“
30 ௩0 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
А опо́даль від них пасся гурт великий свине́й.
31 ௩௧ அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
І просилися де́мони, кажучи: „Коли виженеш нас, то пошли нас у той гурт свине́й“.
32 ௩௨ அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின.
А Він відповів їм: „Ідіть“. І вийшли вони, і пішли в гурт свиней. І ось кинувся з кручі до моря ввесь гурт, — і потопи́вся в воді.
33 ௩௩ அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள்.
Пастухи ж повтікали; а коли прибули́ вони в місто, то про все розповіли́, і про біснуватих.
34 ௩௪ அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
І ось, усе місто вийшло назу́стріч Ісусові. Як Його ж угледіли, то стали благати, щоб пішов Собі з їхнього кра́ю!