< மத்தேயு 7 >

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.
Inte bola pirdetonta mala hara asa bolla pirdofitte.
2 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Inte pirdida mala inte bola pirdistana. Inte makkida mishara intes makistana.
3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?
Ne ayfen diza gita miththa beyonta dashe ne isha ayfen diza qeri bura aazas xelay?
4 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
Ne ayfen gita mith dishin ne isha “ane ta ne ayfeppe qeri buuryo kesays” ganas wana danda7ay?
5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.
Neno qodheppe qommon hanizayso kasistada ne ayfen diza gita miththa kesa gida hessafe kalada ne isha ayfen diza bura kesanas lo7otha xelandasa.
6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
Be ton yedhonta malane simidi intena saxi dakerethonta mala anjetidaysa kanata sinthanine Worqa gudunthata sinthan yegopitte.
7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
wosite intes imistana, koyte inte demana kare qoxitte intes doyistana.
8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
Wosidades wursos imistana koyza uray demana qoxizades karey doyistana.
9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
inte gidoppe isadenay uketh wosikko shuchu immiza aaway dandde?
10 ௧0 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
woykko mole wosikko shoshu imizadey dande?
11 ௧௧ ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
Histin inte itata gidi utidi inte naytas lo7o miish immo erizayta gidikko inte salo away iza wosizaytas waanidi adhiza lo7o miish imane?
12 ௧௨ ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
Hessa gish hara assi intes othana mala inte koyzaysa mala intekka haratas othite. Musse wogayne nabeti hayssan kuuyetes.
13 ௧௩ குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
Xuntha pengera gelitte, dhaysana efiza oggey gita, pengeykka aho, daro asay he pengezara geles.
14 ௧௪ ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
deyos gathiza ogey gidiko xuntha, pengeykka xuntha, gelanaytikka guuthata xalala.
15 ௧௫ கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
istas garssa bagay sudhume /kana suyqqe/ mala giidi utidine dorssa ite mayidi inte gido gelid garssara oothiza wordo nabetappe naagetite.
16 ௧௬ அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
inte ista ista oothon erandista. Aguntha worappe woyney, qum7ude agunthafe etha ayfey maxetizee?
17 ௧௭ அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
Hessathokka lo7o mithi wuri lo7o ayfes iita mithika iita ayfe ayfees.
18 ௧௮ நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
lo7o mithi iita ayfe ayfanas danda7ontaysa mala iita mithi lo7o ayfe ayfanas danda7ena.
19 ௧௯ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
lo7o ayfe ayfonta mithi wurikka qannxxistanane taman yegistana.
20 ௨0 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
hesssa gish inte ista ista ayfen erana.
21 ௨௧ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
salon diza ta aawa shene polonta dishe tana ‘godo godo’ gizay wuri salo kawotethi gelena.
22 ௨௨ அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
he gelas daroti “godo godo nuni ne sunthan buro hananaysa yootibeykoni? ne sunthan daydanthi kesibeykoni? ne sunthan daro malata oothibeykoni?” gaana shin
23 ௨௩ அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
he wode ta istas “ta intena mulekka erabeykke inte iitati taape haakite” gaada qoncera ta istas yootana.
24 ௨௪ ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.
histikko hayssa ta qaala siyidi oothon peyshizadey ba keeth zaala bolla keexizade milatees.
25 ௨௫ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
Handzidze iray bukin haroykka gogides carkoyka carkides, keethaka sugides, shin zaala bolla keexetida gish kundibena.
26 ௨௬ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
Haysa ta qaala siyidi oothonta uray gidiko ba keeth ace bolla keexxida eeya ura mala.
27 ௨௭ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
Handzidze iray bukin haroyka harotides, carkoyka carkides, he keethaka sugides keethayka iita kundethi kundides.
28 ௨௮ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
Yesuusay tamarsi wursin asay iza timirtezan malaletides.
29 ௨௯ மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Gasoyka Musse wogga tamarsizayta mala gidonta izi godatethi diza asa mala tamarsida gishasa.

< மத்தேயு 7 >