< மத்தேயு 7 >
1 ௧ நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.
ⲁ̅ⲘⲠⲈⲢϮϨⲀⲠ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨϢⲦⲈⲘϮϨⲀⲠ ⲈⲢⲰⲦⲈⲚ.
2 ௨ ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
ⲃ̅ⲠⲒϨⲀⲠ ⲄⲀⲢ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲦⲎⲒϤ ⲀⲨⲚⲀϮϨⲀⲠ ⲈⲢⲰⲦⲈⲚ ⲚϦⲎⲦϤ ⲞⲨⲞϨ ϦⲈⲚⲠⲒϢⲒ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀϢⲒ ⲘⲘⲞϤ ⲀⲨⲚⲀϢⲒ ⲚⲰⲦⲈⲚ ⲘⲘⲞϤ.
3 ௩ நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?
ⲅ̅ⲈⲐⲂⲈⲞⲨ ⲬⲚⲀⲨ ⲈⲠⲒϪⲎⲒ ϦⲈⲚⲪⲂⲀⲖ ⲘⲠⲈⲔⲤⲞⲚ ⲠⲒⲤⲞⲒ ⲆⲈ ⲈⲦϦⲈⲚ ⲠⲈⲔⲂⲀⲖ ⲔϮⲚⲒⲀⲦⲔ ⲘⲘⲞϤ ⲀⲚ.
4 ௪ இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
ⲇ̅ⲒⲈ ⲠⲰⲤ ⲬⲚⲀϪⲞⲤ ⲘⲠⲈⲔⲤⲞⲚ ϪⲈ ⲬⲀⲦ ⲚⲦⲀϨⲒ ⲠⲒϪⲎⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲔⲂⲀⲖ ⲞⲨⲞϨ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲠⲒⲤⲞⲒ ϤⲬⲎ ϦⲈⲚⲠⲈⲔⲂⲀⲖ.
5 ௫ மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.
ⲉ̅ⲠⲒϢⲞⲂⲒ ϨⲒ ⲠⲒⲤⲞⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲔⲂⲀⲖ ⲚϢⲞⲢⲠ ⲞⲨⲞϨ ⲦⲞⲦⲈ ⲈⲔⲈⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲈϨⲒ ⲠⲒϪⲎⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲂⲀⲖ ⲘⲠⲈⲔⲤⲞⲚ.
6 ௬ பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
ⲋ̅ⲘⲠⲈⲢϮ ⲘⲠⲈⲐⲞⲨⲀⲂ ⲚⲚⲒⲞⲨϨⲰⲢ ⲞⲨⲆⲈ ⲘⲠⲈⲢϨⲒⲞⲨⲒ ⲚⲚⲈⲦⲈⲚⲀⲚⲀⲘⲎⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲚⲒⲈϢⲀⲨ ⲘⲎⲠⲞⲦⲈ ⲚⲤⲈϨⲰⲘⲒ ⲈϪⲰⲞⲨ ⲚⲚⲞⲨϬⲀⲖⲀⲨϪ ⲞⲨⲞϨ ⲚⲤⲈⲔⲞⲦⲞⲨ ⲚⲤⲈⲪⲈϦ ⲐⲎⲚⲞⲨ.
7 ௭ கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
ⲍ̅ⲀⲢⲒⲈⲦⲒⲚ ⲞⲨⲞϨ ⲈⲨⲈϮ ⲚⲰⲦⲈⲚ ⲔⲰϮ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈϪⲒⲘⲒ ⲔⲰⲖϨ ⲞⲨⲞϨ ⲈⲨⲈⲀⲞⲨⲰⲚ ⲚⲰⲦⲈⲚ.
8 ௮ ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ⲏ̅ⲞⲨⲞⲚ ⲄⲀⲢ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈⲢⲈⲦⲒⲚ ϢⲀϤϬⲒ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦⲔⲰϮ ϢⲀϤϪⲒⲘⲒ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦⲔⲰⲖϨ ϢⲀⲨⲞⲨⲰⲚ ⲚⲀϤ.
9 ௯ உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
ⲑ̅ⲒⲈ ⲚⲒⲘ ⲚⲢⲰⲘⲒ ⲈⲦϦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈⲦⲈ ⲠⲈϤϢⲎⲢⲒ ⲚⲀⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞϤ ⲚⲞⲨⲰⲒⲔ ⲘⲎ ϤⲚⲀϮ ⲚⲀϤ ⲚⲞⲨⲰⲚⲒ.
10 ௧0 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
ⲓ̅ⲒⲈ ⲚⲦⲈϤⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞϤ ⲚⲞⲨⲦⲈⲂⲦ ⲘⲎ ϤⲚⲀϮ ⲚⲀϤ ⲚⲞⲨϨⲞϤ.
11 ௧௧ ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ⲓ̅ⲁ̅ⲒⲤϪⲈ ⲞⲨⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲤⲀⲘⲠⲈⲦϨⲰⲞⲨ ⲦⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲈϮ ⲚⲚⲒⲦⲀⲒⲞ ⲈⲐⲚⲀⲚⲈⲨ ⲚⲚⲈⲦⲈⲚϢⲎⲢⲒ ⲒⲈ ⲀⲨⲎⲢ ⲘⲀⲖⲖⲞⲚ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲈϤⲈϮ ⲚⲚⲒⲀⲄⲀⲐⲞⲚ ⲚⲚⲎ ⲈⲐⲚⲀⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞϤ.
12 ௧௨ ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
ⲓ̅ⲃ̅ϨⲰⲂ ⲆⲈ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈⲦⲈⲚⲞⲨⲰϢ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲚⲒⲢⲰⲘⲒ ⲀⲒⲦⲞⲨ ⲚⲰⲦⲈⲚ ⲀⲢⲒⲞⲨⲒ ⲚⲰⲞⲨ ϨⲰⲦⲈⲚ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲪⲀⲒ ⲄⲀⲢ ⲠⲈ ⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲚⲈⲘ ⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ.
13 ௧௩ குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ⲓ̅ⲅ̅ⲀⲘⲰⲒⲚⲒ ⲈϦⲞⲨⲚ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ϮⲠⲨⲖⲎ ⲈⲦϪⲎⲞⲨ ϪⲈ ⲤⲞⲨⲞϢⲤ ⲚϪⲈϮⲠⲨⲖⲎ ⲞⲨⲞϨ ϤⲞⲨⲈⲤⲐⲰⲚ ⲚϪⲈⲠⲒⲘⲰⲒⲦ ⲈⲦϬⲒ ⲈⲠⲦⲀⲔⲞ ⲞⲨⲞϨ ⲤⲈⲞϢ ⲚϪⲈⲚⲎ ⲈⲐⲚⲀϢⲈ ⲚⲰⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ.
14 ௧௪ ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
ⲓ̅ⲇ̅ϪⲈ ⲤϪⲎⲞⲨ ⲚϪⲈϮⲠⲨⲖⲎ ⲞⲨⲞϨ ϤϨⲈϪϨⲰϪ ⲚϪⲈⲠⲒⲘⲰⲒⲦ ⲈⲦϬⲒ ⲈⲠⲰⲚϦ ⲞⲨⲞϨ ϨⲀⲚⲔⲞⲨϪⲒ ⲠⲈⲐⲚⲀϪⲈⲘϤ.
15 ௧௫ கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
ⲓ̅ⲉ̅ⲀⲢⲈϨ ⲆⲈ ⲈⲢⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲚⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ⲚⲚⲞⲨϪ ⲚⲎ ⲈⲐⲚⲎⲞⲨ ϨⲀⲢⲰⲦⲈⲚ ϦⲈⲚϨⲀⲚϨⲈⲂⲤⲰ ⲚⲈⲤⲰⲞⲨ ⲤⲀϦⲞⲨⲚ ⲆⲈ ⲘⲘⲰⲞⲨ ϨⲀⲚⲞⲨⲰⲚϢ ⲚⲢⲈϤϨⲰⲖⲈⲘ ⲚⲈ.
16 ௧௬ அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
ⲓ̅ⲋ̅ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲞⲨⲞⲨⲦⲀϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲤⲞⲨⲰⲚⲞⲨ ⲘⲎⲦⲒ ϢⲀⲨⲤⲈⲔ ⲀⲖⲞⲖⲒ ⲈⲂⲞⲖ ϨⲒ ϨⲀⲚϢⲞⲚϮ ⲒⲈ ϢⲀⲨⲤⲈⲔ ⲔⲈⲚⲦⲈ ⲈⲂⲞⲖ ϨⲒ ⲚⲒⲤⲈⲢⲞϪⲒ.
17 ௧௭ அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
ⲓ̅ⲍ̅ⲠⲀⲒⲢⲎϮ ϢϢⲎⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲀⲚⲈϤ ϢⲀϤⲈⲚ ⲞⲨⲦⲀϨ ⲈⲚⲀⲚⲈϤ ⲈⲂⲞⲖ ⲠⲒϢϢⲎⲚ ⲆⲈ ⲈⲦϨⲰⲞⲨ ϢⲀϤⲈⲚ ⲞⲨⲦⲀϨ ⲈϤϨⲰⲞⲨ ⲈⲂⲞⲖ.
18 ௧௮ நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
ⲓ̅ⲏ̅ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲚⲞⲨϢϢⲎⲚ ⲈⲚⲀⲚⲈϤ ⲈⲈⲢⲞⲨⲦⲀϨ ⲈϤϨⲰⲞⲨ ⲞⲨⲆⲈ ⲞⲨϢϢⲎⲚ ⲈϤϨⲰⲞⲨ ⲈⲈⲢⲞⲨⲦⲀϨ ⲈⲚⲀⲚⲈϤ.
19 ௧௯ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
ⲓ̅ⲑ̅ϢϢⲎⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈϤⲚⲀⲒⲢⲒ ⲀⲚ ⲚⲞⲨⲞⲨⲦⲀϨ ⲈⲚⲀⲚⲈϤ ⲤⲈⲚⲀⲔⲞⲢϪϤ ⲚⲤⲈϨⲒⲦϤ ⲈⲠⲒⲬⲢⲰⲘ.
20 ௨0 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
ⲕ̅ϨⲀⲢⲀ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲞⲨⲞⲨⲦⲀϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲤⲞⲨⲰⲚⲞⲨ.
21 ௨௧ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲀⲚ ⲈⲦϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲎⲒ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲠϬⲞⲒⲤ ⲈⲐⲚⲀⲒ ⲈϦⲞⲨⲚ ⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲀⲖⲖⲀ ⲠⲈⲦⲒⲢⲒ ⲘⲠⲈⲦⲈϨⲚⲈ ⲠⲀⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ.
22 ௨௨ அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
ⲕ̅ⲃ̅ⲞⲨⲞⲚ ⲞⲨⲘⲎϢ ⲄⲀⲢ ⲈⲨⲚⲀϪⲞⲤ ⲚⲎⲒ ϦⲈⲚⲠⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲠϬⲞⲒⲤ ⲘⲎ ϦⲈⲚⲠⲈⲔⲢⲀⲚ ⲀⲚ ⲀⲚⲈⲢⲠⲢⲞⲪⲎⲦⲈⲨⲒⲚ ⲞⲨⲞϨ ϦⲈⲚⲠⲈⲔⲢⲀⲚ ⲀⲚϨⲒ ⲆⲈⲘⲰⲚ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ϦⲈⲚⲠⲈⲔⲢⲀⲚ ⲀⲚⲒⲢⲒ ⲚⲞⲨⲘⲎϢ ⲚϪⲞⲘ.
23 ௨௩ அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲦⲞⲦⲈ ⲈⲒⲈⲞⲨⲰⲚϨ ⲚⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ϪⲈ ⲘⲠⲒⲤⲞⲨⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈⲚⲈϨ ⲘⲀϢⲈ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲞⲒ ⲚⲒⲈⲢⲄⲀⲦⲎⲤ ⲚⲦⲈϮⲀⲚⲞⲘⲒⲀ.
24 ௨௪ ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.
ⲕ̅ⲇ̅ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲞⲨⲚ ⲈⲦⲤⲰⲦⲈⲘ ⲈⲚⲀⲤⲀϪⲒ ⲚⲀⲒ ⲞⲨⲞϨ ⲈϤⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈⲒⲈⲦⲈⲚⲐⲰⲚϤ ⲈⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲤⲀⲂⲈ ⲪⲎ ⲈⲦⲀϤⲔⲰⲦ ⲘⲠⲈϤⲎⲒ ϨⲒϪⲈⲚ ϮⲠⲈⲦⲢⲀ.
25 ௨௫ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ⲕ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲀϤⲒ ⲈⲠⲈⲤⲎⲦ ⲚϪⲈⲠⲒⲘⲞⲨⲚϨⲰⲞⲨ ⲀⲨⲒ ⲚϪⲈⲚⲒⲒⲀⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲨⲔⲰⲖϨ ⲘⲠⲒⲎⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲘⲠⲈϤϨⲈⲒ ⲚⲀⲢⲈ ⲦⲈϤⲤⲈⲚϮ ⲄⲀⲢ ⲦⲀϪⲢⲎⲞⲨⲦ ⲠⲈ ϨⲒϪⲈⲚ ϮⲠⲈⲦⲢⲀ.
26 ௨௬ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
ⲕ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲤⲰⲦⲈⲘ ⲈⲚⲀⲤⲀϪⲒ ⲚⲀⲒ ⲞⲨⲞϨ ⲈϤⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ ⲀⲚ ⲈⲒⲈⲦⲈⲚⲐⲰⲚϤ ⲈⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲤⲞϪ ⲪⲀⲒ ⲈⲦⲀϤⲔⲰⲦ ⲘⲠⲈϤⲎⲒ ϨⲒϪⲈⲚ ⲠⲒϢⲰ.
27 ௨௭ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
ⲕ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲀϤⲒ ⲈⲠⲈⲤⲎⲦ ⲚϪⲈⲠⲒⲘⲞⲨⲚϨⲰⲞⲨ ⲀⲨⲒ ⲚϪⲈⲚⲒⲒⲀⲢⲰⲞⲨ ⲀⲨⲚⲒϤⲒ ⲚϪⲈⲚⲒⲐⲎⲞⲨ ⲀⲨⲔⲰⲖϨ ⲘⲠⲒⲎⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲀϤϨⲈⲒ ⲞⲨⲞϨ ⲠⲈϤϨⲈⲒ ⲚⲈⲞⲨⲚⲒϢϮ ⲠⲈ.
28 ௨௮ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
ⲕ̅ⲏ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲈⲦⲀ ⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈⲔ ⲚⲀⲒⲤⲀϪⲒ ⲈⲂⲞⲖ ⲚⲀⲨⲈⲢϢⲪⲎⲢⲒ ⲠⲈ ⲚϪⲈⲚⲒⲘⲎϢ ⲈϪⲈⲚ ⲦⲈϤⲤⲂⲰ.
29 ௨௯ மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ⲕ̅ⲑ̅ⲚⲀϤϮⲤⲂⲰ ⲄⲀⲢ ⲚⲰⲞⲨ ⲠⲈ ϨⲰⲤ ⲈⲞⲨⲞⲚⲦⲈϤ ⲈⲢϢⲒϢⲒ ⲞⲨⲞϨ ⲘⲪⲢⲎϮ ⲀⲚ ⲚⲚⲞⲨⲤⲀϦ.