< மத்தேயு 6 >

1 “மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
Uyenyaje ungandi abhombe imbo inyinza hubhantu ili huyilolesye, subhapate ifaida hwa Dada uwahumwanya.
2 ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ishi nufumya isadaka usahayitufye sana usahabhe ndeshe abhanafiki shebhabhomba mumasinagogi na mumitaa, nkaabhantu bhabhatime semubhapae ifaida nkiimo.
3 நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
Lelo awe lufumya ukhona gwaho ugwa humongo gusahamanye sheshibhombeha hundilo,
4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
ili huje isadaka yaho ufumye hu siri. Nkhu Udada waho yalola muhati abhalupele ithawabu yaho.
5 அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Na luputa usahabhe, udeshe anafiki, pipo abhene bhasungwa ahwimilile na pute, mumasinagogi na mukona izya mukhaya zyabho nka abhantu bha bhenye. Lelo ihumbabhuzya bhapite ithawabu yabho.
6 நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்.
Awe luputa injila hu hati ufunje ulwiji upuute hwa Daada uwamumwoyo udaada ya lola muhati asipele ithawabu yaho.
7 அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
Nu puta ungandi pyanile inongwa zyesezili ni maana, ndeshe abhamunsi shebhabhomba pipo bhasibha abhantu bhabhahubhiuvwe pipo bhayanga inongwa inyinji.
8 அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
Ishi usahabhe ndeshe abhene pipo uDada aminye uhwanza henu shusile alabhe hukwakwe.
9 நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
Uputaje ishi: Dada witu uwahumwanya itawa lyaho lyimishilwaje.
10 ௧0 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
Ubhumwini waho winze, ulugano lwaho lubhombeshe pansi na humwanya.
11 ௧௧ எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
Utipele ishalye shitu insiku zyonti.
12 ௧௨ எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
Utukhobhoshele amalando gitu, ndeati shetihubhakhobhoshela abhimalando bhitu.
13 ௧௩ எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.
Usahatipe injelo, utidime nu setano.
14 ௧௪ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
Nkemwabhakhobhoshela abhantu amalando gabho, Udada winyu uwahumwanya abhahubhakhobhoshele namwi.
15 ௧௫ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.
Nkushe mubhabhakhobhoshele abhantu Udada abhabhakhobhoshele makosa ginyu.
16 ௧௬ நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Hu gonti, lufunga usahalolesye uzugunizu humaso ndeshe abhanafiki shebhabhomba bhazugumila humiso nke abhantu bhamanye aje bhafunjile. Lyooli ihubhuzya bhapite ithawabu yabho.
17 ௧௭ நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
Lelo, lufunga pahala amafuta hwitwe lyaho uyoje hunaso.
18 ௧௮ அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
Subhaloleshe humaso gabhantu aje ufunjile, u Ngulubhi mweene yabhamanye Udada yamanya muhati abhahupele ithawabu yaho.
19 ௧௯ பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
Usahabhishe amali gaho munsi umu zinanjiha na bhole na bhibha bhahwibha.
20 ௨0 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
Badala yakwe, abhishe amali gaho hwa Ngulubhi, sibhahwibha, sigabhola wa segananjiha.
21 ௨௧ உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
Pipo amali gaho pegali umwoyo waho pebhubhabhe.
22 ௨௨ கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.
Ilinso lukhozyo lwi bili. Nkushele, ilyinso lyaho lyumi ubili wonti, bhubhabhe nulukhozyo.
23 ௨௩ உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்!
Nkushele ilyinso lyaho lifwiye, ubili waho wonti bhuli hisi haani. Ishi nkulukhozyo lweluli muhati muliwe hisi ahagosi ndeshe bhuli!
24 ௨௪ இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.
Numo nka weka yangabha na lume bha bhili, pipo abhahunvitwe unu na hugane uwinji lumo abhahwepe hwunu abhahu sufye uwinji. Hamuwezi kumtumikia Mungu na mali.
25 ௨௫ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Ishi ihuhabhe nu sanje ahusu amaisha gaho aje ubhalyeshi, ubhamweleshi, ahusu ubili waho ubhakwate shi! Amaisha se haani yi shalye ubili haani yi meenda?
26 ௨௬ வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
Enya inyonyi zyezipuluha humwanya. Saazitota sazivunza sazibhunganya na bhishe mushanka, lelo Udada uwahumwanya ahuzilisya. Je amwisemulibhi maana hani kuliko inyonyi?
27 ௨௭ கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
Weemu hulimwe uwahuyitamye ankayonjezya idhiraa yeka huwomi wimaisha gakwe?
28 ௨௮ உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
Ye enu mubha musaga aje yibhakwate nshi? Msubhilile amaua mmashamba shegabha segabhomba imbombo segahuyikwatizya.
29 ௨௯ என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Bado ihumbabhuzya hata yu Sulemani nu tuntumu wakwe saga ahakwatiziwilwe mojawapo yiga.
30 ௩0 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
Nkushele Ungulubhi ahugakwatizya amasole agamumagunda, gegakhala isiku lyeka ni ndabhi gatagwa mumwoto je bhulibhuli angabhakwatizya amwi mwemuli nulwitiho uludodo?
31 ௩௧ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.
Eshi musahasaje aje, 'Je tibhalyeshi?' au “Je tibhamweleshi?” au “Je tibhakhwate menda bhuli?”
32 ௩௨ இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார்.
Pipo abhinsi bhahuganza amambo iga, nu Dada winyu uwahumwanya aminye aje muhuganza igo.
33 ௩௩ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
Ishi nasuti mwanze ubhumwini wakwe ni lyoli yakwe nigo gonta gabhahwonjeleshe huliwe.
34 ௩௪ ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
Ishi usahalole usahasaje kwa ajili yi ndabhi, pipo indabhi zibhamanyishe hunuhwo. Isiku lyolyonti likwiliye hwi tatizizo lyakwe.

< மத்தேயு 6 >