< மத்தேயு 6 >
1 ௧ “மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ⲁ̅ⲘⲀϨⲐⲎⲦⲈⲚ ⲆⲈ ⲈⲠⲈⲦⲈⲚⲦⲀⲒⲞ ⲘⲠⲈⲢⲀⲒϤ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲈⲐⲢⲞⲨⲚⲀⲨ ⲈⲢⲰⲦⲈⲚ ⲘⲘⲞⲚⲦⲈⲦⲈⲚ ⲂⲈⲬⲈ ⲘⲘⲀⲨ ⲚⲦⲞⲦϤ ⲘⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ.
2 ௨ ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲃ̅ⲈϢⲰⲠ ⲞⲨⲚ ⲈⲔⲚⲀⲒⲢⲒ ⲚⲞⲨⲘⲈⲐⲚⲀⲎⲦ ⲘⲠⲈⲢⲈϢ ⲦⲀⲠ ϦⲀϪⲰⲔ ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲞⲨⲢⲀ ⲘⲘⲞⲤ ⲚϪⲈⲚⲒϢⲞⲂⲒ ϦⲈⲚⲚⲒⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲚⲈⲘ ⲚⲒⲀⲄⲞⲢⲀ ϨⲒⲚⲀ ⲚⲤⲈϮⲰⲞⲨ ⲚⲰⲞⲨ ⲚϪⲈⲚⲒⲢⲰⲘⲒ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲨⲔⲎⲚ ⲈⲨϬⲒ ⲘⲠⲞⲨⲂⲈⲬⲈ.
3 ௩ நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
ⲅ̅ⲚⲐⲞⲔ ⲆⲈ ⲈⲔⲚⲀⲒⲢⲒ ⲚⲞⲨⲘⲈⲐⲚⲀⲎⲦ ⲘⲠⲈⲚⲐⲢⲈⲬ ⲀⲦⲈⲔϪⲀϬⲎ ⲈⲈⲘⲒ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲈ ⲦⲈⲔⲞⲨⲒⲚⲀⲘ ⲒⲢⲒ ⲘⲘⲞϤ.
4 ௪ அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
ⲇ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲦⲈⲔⲘⲈⲐⲚⲀⲎⲦ ϢⲰⲠⲒ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ ⲞⲨⲞϨ ⲠⲈⲔⲒⲰⲦ ⲈⲐⲚⲀⲨ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ ⲈϤⲈϮ ⲚⲀⲔ.
5 ௫ அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲉ̅ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲈⲢⲈⲦⲈⲚⲚⲀⲦⲰⲂϨ ⲚⲚⲈⲦⲈⲚⲈⲢ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ϢⲀⲨⲘⲈⲒ ⲚⲞϨⲒ ⲈⲢⲀⲦⲞⲨ ϦⲈⲚⲚⲒⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲚⲈⲘ ⲚⲒⲖⲀⲔϨ ⲚⲦⲈⲚⲒϢⲐⲈϨ ⲚⲤⲈⲦⲰⲂϨ ϨⲞⲠⲰⲤ ⲚⲤⲈⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲨⲔⲎⲚ ⲈⲨϬⲒ ⲘⲠⲞⲨⲂⲈⲬⲈ.
6 ௬ நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்.
ⲋ̅ⲚⲐⲞⲔ ⲆⲈ ⲈⲔⲚⲀⲦⲰⲂϨ ⲘⲀϢⲈ ⲚⲀⲔ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲈⲔⲦⲀⲘⲒⲞⲚ ⲘⲀϢⲐⲀⲘ ⲘⲠⲈⲔⲢⲞ ⲈⲢⲞⲔ ⲞⲨⲞϨ ⲦⲰⲂϨ ⲘⲠⲈⲔⲒⲰⲦ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ ⲞⲨⲞϨ ⲠⲈⲔⲒⲰⲦ ⲈⲐⲚⲀⲨ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ ⲈϤⲈϮ ⲚⲀⲔ.
7 ௭ அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
ⲍ̅ⲈⲢⲈⲦⲈⲚⲚⲀⲦⲰⲂϨ ⲆⲈ ⲘⲠⲈⲢⲈⲢ ⲞⲨⲘⲎϢ ⲚⲤⲀϪⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲒⲈⲐⲚⲒⲔⲞⲤ ⲤⲈⲘⲈⲨⲒ ⲄⲀⲢ ϪⲈ ϦⲈⲚⲠⲞⲨⲘⲎϢ ⲚⲤⲀϪⲒ ⲤⲈⲚⲀⲤⲰⲦⲈⲘ ⲈⲢⲰⲞⲨ.
8 ௮ அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
ⲏ̅ⲘⲠⲈⲢⲒⲚⲒ ⲞⲨⲚ ⲘⲘⲰⲞⲨ ϤⲤⲰⲞⲨⲚ ⲄⲀⲢ ⲚϪⲈⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲚⲚⲎ ⲈⲦⲈⲦⲈⲚⲈⲢⲬⲢⲒⲀ ⲘⲘⲰⲞⲨ ⲘⲠⲀⲦⲈⲦⲈⲚⲦⲞⲂϨϤ ⲈⲐⲂⲎⲦⲞⲨ.
9 ௯ நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
ⲑ̅ⲦⲰⲂϨ ⲞⲨⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲠⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲘⲀⲢⲈϤⲦⲞⲨⲂⲞ ⲚϪⲈⲠⲈⲔⲢⲀⲚ.
10 ௧0 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
ⲓ̅ⲘⲀⲢⲈⲤⲒ ⲚϪⲈⲦⲈⲔⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲠⲈⲦⲈϨⲚⲀⲔ ⲘⲀⲢⲈϤϢⲰⲠⲒ ⲘⲪⲢⲎϮ ϦⲈⲚⲦⲪⲈ ⲚⲈⲘ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ.
11 ௧௧ எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
ⲓ̅ⲁ̅ⲠⲈⲚⲰⲒⲔ ⲚⲦⲈⲢⲀⲤϮ ⲘⲎⲒϤ ⲚⲀⲚ ⲘⲪⲞⲞⲨ.
12 ௧௨ எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
ⲓ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲬⲀ ⲚⲈⲦⲈⲢⲞⲚ ⲚⲀⲚ ⲈⲂⲞⲖ ⲘⲪⲢⲎϮ ϨⲰⲚ ⲚⲦⲈⲚⲬⲰ ⲈⲂⲞⲖ ⲚⲚⲎ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚ ⲚⲦⲀⲚ ⲈⲢⲰⲞⲨ.
13 ௧௩ எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢⲈⲚⲦⲈⲚ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲢⲀⲤⲘⲞⲤ ⲀⲖⲖⲀ ⲚⲀϨⲘⲈⲚ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲠⲒⲠⲈⲦϨⲰⲞⲨ.
14 ௧௪ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
ⲓ̅ⲇ̅ⲈϢⲰⲠ ⲄⲀⲢ ⲚⲦⲈⲦⲈⲚⲬⲰ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲚⲞⲨⲠⲀⲢⲀⲠⲦⲰⲘⲀ ⲈϤⲈⲬⲰ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲚⲚⲈⲦⲈⲚⲠⲀⲢⲀⲠⲦⲰⲘⲀ.
15 ௧௫ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.
ⲓ̅ⲉ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲚⲦⲈⲦⲈⲚϢⲦⲈⲘⲬⲰ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲞⲨⲆⲈ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ϤⲚⲀⲬⲰ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ⲀⲚ ⲚⲚⲈⲦⲈⲚⲠⲀⲢⲀⲠⲦⲰⲘⲀ.
16 ௧௬ நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲓ̅ⲋ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲚⲦⲈⲦⲈⲚⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲚⲚⲈⲦⲈⲚⲈⲢ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲒϢⲞⲂⲒ ⲈϢⲀⲨⲰⲔⲈⲘ ⲘⲠⲞⲨϨⲞ ϢⲀⲨⲦⲀⲔⲈ ⲚⲞⲨϨⲞ ⲄⲀⲢ ϨⲒⲚⲀ ⲚⲤⲈⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲈⲨⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲨⲔⲎⲚ ⲈⲨϬⲒ ⲘⲠⲞⲨⲂⲈⲬⲈ.
17 ௧௭ நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
ⲓ̅ⲍ̅ⲚⲐⲞⲔ ⲆⲈ ⲈⲔⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲐⲰϨⲤ ⲚⲦⲈⲔⲀⲪⲈ ⲞⲨⲞϨ ⲒⲀ ⲠⲈⲔϨⲞ ⲈⲂⲞⲖ.
18 ௧௮ அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
ⲓ̅ⲏ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲔϢⲦⲈⲘⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲈⲔⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲀⲖⲖⲀ ⲠⲈⲔⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲠⲈⲦϨⲎⲠ ⲞⲨⲞϨ ⲠⲈⲔⲒⲰⲦ ⲈⲐⲚⲀⲨ ϦⲈⲚⲠⲈⲦϨⲎⲠ ⲈϤⲈϮϢⲈⲂⲒⲰ ⲚⲀⲔ.
19 ௧௯ பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
ⲓ̅ⲑ̅ⲘⲠⲈⲢϨⲒⲞⲨⲒ ⲚⲰⲦⲈⲚ ⲈϦⲞⲨⲚ ⲚϨⲀⲚⲀϨⲰⲢ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ ⲠⲒⲘⲀ ⲈϢⲀⲢⲈ ⲦϨⲞⲖⲒ ⲚⲈⲘ ⲦϪⲞⲖⲒ ⲦⲀⲔⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲠⲒⲘⲀ ⲈϢⲀⲢⲈ ⲚⲒⲤⲞⲚⲒ ϨⲒϢⲀⲦⲤ ⲈⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲦⲞⲨⲔⲞⲖⲠⲞⲨ.
20 ௨0 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
ⲕ̅ϨⲒⲞⲨⲒ ⲆⲈ ⲚⲰⲦⲈⲚ ⲈϦⲞⲨⲚ ⲚϨⲀⲚⲀϨⲰⲢ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲦⲪⲈ ⲠⲒⲘⲀ ⲈⲦⲈⲘⲠⲀⲢⲈ ϨⲞⲖⲒ ⲞⲨⲆⲈ ϪⲞⲖⲒ ⲦⲀⲔⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲘⲠⲀⲢⲈ ⲚⲒⲤⲞⲚⲒ ϨⲒϢⲀⲦⲤ ⲈⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲦⲞⲨⲔⲞⲖⲠⲞⲨ.
21 ௨௧ உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
ⲕ̅ⲁ̅ⲠⲒⲘⲀ ⲄⲀⲢ ⲈⲦⲈ ⲠⲈⲔⲀϨⲞ ⲘⲘⲞϤ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲘⲘⲀⲨ ⲚϪⲈⲠⲈⲔⲔⲈϨⲎⲦ.
22 ௨௨ கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.
ⲕ̅ⲃ̅ⲠϦⲎⲂⲤ ⲘⲠⲒⲤⲰⲘⲀ ⲠⲈ ⲠⲒⲂⲀⲖ ⲈϢⲰⲠ ⲞⲨⲚ ⲠⲈⲔⲂⲀⲖ ⲞⲨϨⲀⲠⲖⲞⲨⲤ ⲠⲈ ⲠⲈⲔⲤⲰⲘⲀ ⲦⲎⲢϤ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲞⲨⲰⲒⲚⲒ.
23 ௨௩ உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்!
ⲕ̅ⲅ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲠⲈⲔⲂⲀⲖ ⲞⲨⲤⲀⲘⲠⲈⲦϨⲰⲞⲨ ⲠⲈ ⲠⲈⲔⲤⲰⲘⲀ ⲦⲎⲢϤ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲬⲀⲔⲒ ⲒⲤϪⲈ ⲞⲨⲚ ⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲦⲈⲚϦⲎⲦⲔ ⲞⲨⲬⲀⲔⲒ ⲠⲈ ⲒⲈ ⲀⲨⲎⲢ ⲠⲒⲬⲀⲔⲒ.
24 ௨௪ இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.
ⲕ̅ⲇ̅ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲚⲦⲈϨⲖⲒ ⲈⲢⲂⲰⲔ ⲚϬⲞⲒⲤ ⲂⲒⲈ ⲄⲀⲢ ⲚⲦⲈϤⲘⲈⲤⲦⲈ ⲞⲨⲀⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤⲘⲈⲚⲢⲈ ⲞⲨⲀⲒ ⲒⲈ ⲚⲦⲈϤϢⲈⲠ ⲞⲨⲀⲒ ⲈⲢⲞϤ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤⲈⲢⲔⲀⲦⲀⲪⲢⲞⲚⲒⲚ ⲘⲠⲒⲬⲈⲦ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲦⲈⲚ ⲈⲈⲢⲂⲰⲔ ⲘⲪⲚⲞⲨϮ ⲚⲈⲘ ⲘⲀⲘⲰⲚⲀ.
25 ௨௫ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
ⲕ̅ⲉ̅ⲈⲐⲂⲈ ⲪⲀⲒ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲠⲈⲢϤⲒⲢⲰⲞⲨϢ ϦⲀ ⲦⲈⲦⲈⲚⲮⲨⲬⲎ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲞⲨⲞⲘϤ ⲒⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲤⲞϤ ⲞⲨⲆⲈ ϦⲀ ⲠⲈⲦⲈⲚⲤⲰⲘⲀ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲦⲎ ⲒϤ ϨⲒ ⲐⲎⲚⲞⲨ ⲘⲎ ϮⲮⲨⲬⲎ ⲞⲨⲞⲦ ⲀⲚ ⲈϮϦⲢⲈ ⲞⲨⲞϨ ⲠⲒⲤⲰⲘⲀ ⲈϮϨⲈⲂⲤⲰ.
26 ௨௬ வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
ⲕ̅ⲋ̅ⲘⲀⲒⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲚⲚⲒϨⲀⲖⲀϮ ⲚⲦⲈⲦⲪⲈ ϪⲈ ⲤⲈⲤⲒϮ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲤⲈⲰⲤϦ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲤⲈϨⲒⲞⲨⲒ ⲀⲚ ⲈⲀⲠⲞⲐⲎⲔⲎ ⲞⲨⲞϨ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ϤϢⲀⲚϢ ⲘⲘⲰⲞⲨ ⲘⲎ ⲚⲐⲰⲦⲈⲚ ⲀⲚ ⲘⲀⲖⲖⲞⲚ ⲈⲐⲞⲨⲞⲦ ⲈⲢⲰⲞⲨ.
27 ௨௭ கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
ⲕ̅ⲍ̅ⲚⲒⲘ ⲆⲈ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲈⲦϤⲒⲢⲰⲞⲨϢ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞϤ ⲈⲦⲀⲖⲈ ⲞⲨⲀⲘⲀϨⲒ ⲚϢⲒⲎ ⲈϪⲈⲚ ⲦⲈϤⲘⲀⲒⲎ.
28 ௨௮ உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
ⲕ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲈⲐⲂⲈⲞⲨ ⲦⲈⲦⲈⲚϤⲒⲢⲰⲞⲨϢ ⲈⲐⲂⲈ ϨⲈⲂⲤⲰ ⲘⲀⲒⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲚⲚⲒϨⲢⲎⲢⲒ ⲚⲦⲈⲦⲔⲞⲒ ϪⲈ ⲠⲰⲤ ⲤⲈⲀⲒⲀⲒ ⲚⲤⲈϦⲞⲤⲒ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲚⲤⲈⲈⲢⲒⲞⲠⲎ ⲀⲚ.
29 ௨௯ என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲑ̅ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲞⲨⲆⲈ ⲤⲞⲖⲞⲘⲰⲚ ϦⲈⲚⲠⲈϤⲰⲞⲨ ⲦⲎⲢϤ ⲘⲠⲈϤϮ ϨⲒⲰⲦϤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲀⲒ ⲚⲚⲀⲒ.
30 ௩0 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
ⲗ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ⲠⲒⲤⲒⲘ ⲚⲦⲈⲦⲔⲞⲒ ϤϢⲞⲠ ⲘⲪⲞⲞⲨ ⲞⲨⲞϨ ⲢⲀⲤϮ ϢⲀⲨϨⲒⲦϤ ⲈϮⲐⲢⲒⲢ ⲪⲚⲞⲨϮ ⲘⲠⲀⲒⲢⲎϮ ϤϮϨⲈⲂⲤⲰ ϨⲒⲰⲦϤ ⲒⲈ ⲀⲨⲎⲢ ⲘⲀⲖⲖⲞⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲀ ⲠⲒⲔⲞⲨϪⲒ ⲚⲚⲀϨϮ.
31 ௩௧ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.
ⲗ̅ⲁ̅ⲘⲠⲈⲢϤⲒⲢⲰⲞⲨϢ ⲞⲨⲚ ⲈⲢⲈⲦⲈⲚϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈⲚⲚⲀⲞⲨⲞⲘϤ ⲒⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈⲚⲚⲀⲤⲞϤ ⲒⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈⲚⲚⲀⲦⲎⲒϤ ϨⲒⲰⲦⲈⲚ.
32 ௩௨ இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார்.
ⲗ̅ⲃ̅ⲚⲀⲒ ⲄⲀⲢ ⲦⲎⲢⲞⲨ ⲚⲒⲈⲐⲚⲒⲔⲞⲤ ⲤⲈⲔⲰϮ ⲚⲤⲰⲞⲨ ϤⲤⲰⲞⲨⲚ ⲆⲈ ⲚϪⲈⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲈⲢⲬⲢⲒⲀ ⲚⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ.
33 ௩௩ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
ⲗ̅ⲅ̅ⲔⲰϮ ⲆⲈ ⲚϢⲞⲢⲠ ⲚⲤⲀⲦⲈϤⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲈⲘ ⲦⲈϤⲘⲈⲐⲘⲎⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲈϤⲈⲞⲨⲀϨⲞⲨ ⲈⲢⲰⲦⲈⲚ.
34 ௩௪ ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
ⲗ̅ⲇ̅ⲘⲠⲈⲢϤⲒⲢⲰⲞⲨϢ ϦⲀ ⲢⲀⲤϮ ⲢⲀⲤϮ ⲄⲀⲢ ⲈϤⲈϤⲒⲢⲰⲞⲨϢ ϦⲀⲢⲞϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲔⲎⲚ ⲈⲠⲒⲈϨⲞⲞⲨ ⲠⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈϤⲔⲀⲔⲒⲀ.