< மத்தேயு 4 >
1 ௧ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
ⲁ̅ⲦⲞⲦⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲀⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲞⲖϤ ⲈⲠϢⲀϤⲈ ⲈⲠϪⲒⲚⲦⲈ ⲠⲒⲆⲒⲀⲂⲞⲖⲞⲤ ⲈⲢⲠⲒⲢⲀⲌⲒⲚ ⲘⲘⲞϤ.
2 ௨ அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲚⲘⲚⲈϨⲞⲞⲨ ⲚⲈⲘ ⲘⲚⲈϪⲰⲢϨ ⲈⲠϦⲀⲈ ⲀϤϨⲔⲞ.
3 ௩ அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
ⲅ̅ⲞⲨⲞϨ ⲀϤⲒ ⲚϪⲈⲪⲎ ⲈⲦϬⲰⲚⲦ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲒⲤϪⲈ ⲚⲐⲞⲔ ⲠⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲀϪⲞⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲚⲀⲒⲰⲚⲒ ⲈⲢⲰⲒⲔ.
4 ௪ அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
ⲇ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲤⲤϦⲎ ⲞⲨⲦ ϪⲈ ⲚⲀⲢⲈ ⲠⲒⲢⲰⲘⲒ ⲚⲀⲰⲚϦ ⲈⲰⲒⲔ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲈϪⲈⲚ ⲤⲀϪⲒ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲎⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲢⲰϤ ⲘⲪⲚⲞⲨϮ.
5 ௫ அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
ⲉ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲞⲖϤ ⲚϪⲈⲠⲒⲆⲒⲀⲂⲞⲖⲞⲤ ⲈϮⲂⲀⲔⲒ ⲈⲐⲞⲨⲀⲂ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲀϨⲞϤ ⲈⲢⲀⲦϤ ⲈϪⲈⲚ ⲠⲦⲈⲚϨ ⲚⲦⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ.
6 ௬ “நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
ⲋ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲒⲤϪⲈ ⲚⲐⲞⲔ ⲠⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ϨⲒⲦⲔ ⲈⲠⲈⲤⲎⲦ ⲈⲂⲞⲖ ⲦⲀⲒ ⲤⲤϦⲎ ⲞⲨⲦ ⲄⲀⲢ ϪⲈ ϤⲚⲀϨⲞⲚϨⲈⲚ ⲚⲦⲞⲦⲞⲨ ⲚⲚⲈϤⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲈⲐⲂⲎⲦⲔ ⲞⲨⲞϨ ⲈⲨⲈϤⲒⲦⲔ ϨⲒϪⲈⲚ ⲚⲞⲨϪⲒϪ ⲘⲎⲠⲞⲦⲈ ⲚⲦⲈⲔϬⲒϬⲢⲞⲠ ⲈⲞⲨⲰⲚⲒ ⲚⲦⲈⲔϬ ⲀⲖⲞϪ.
7 ௭ அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
ⲍ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚⲀϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲠⲀⲖⲒⲚ ⲤⲤϦⲎ ⲞⲨⲦ ϪⲈ ⲚⲚⲈⲔⲈⲢⲠⲒⲢⲀⲌⲒⲚ ⲘⲠϬⲞⲒⲤ ⲠⲈⲔⲚⲞⲨϮ.
8 ௮ மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
ⲏ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤⲞⲖϤ ⲚϪⲈⲠⲒⲆⲒⲀⲂⲞⲖⲞⲤ ⲈϪⲈⲚ ⲞⲨⲦⲰⲞⲨ ⲈϤϬⲞⲤⲒ ⲈⲘⲀϢⲰ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲀⲘⲞϤ ⲈⲚⲒⲘⲈⲦⲞⲨⲢⲰⲞⲨ ⲦⲎⲢⲞⲨ ⲚⲦⲈⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲚⲈⲘ ⲠⲞⲨⲰⲞⲨ.
9 ௯ “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;
ⲑ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ϮⲚⲀⲦⲎⲒⲦⲞⲨ ⲚⲀⲔ ⲀⲔϢⲀⲚϨⲒⲦⲔ ⲈϦⲢⲎⲒ ⲚⲦⲈⲔⲞⲨⲰϢⲦ ⲘⲘⲞⲒ.
10 ௧0 அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
ⲓ̅ⲦⲞⲦⲈ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲀϤ ϪⲈ ⲘⲀϢⲈ ⲚⲀⲔ ⲠⲤⲀⲦⲀⲚⲀⲤ ⲤⲤϦⲎⲞⲨⲦ ⲄⲀⲢ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲠⲈⲔⲚⲞⲨϮ ⲠⲈⲦⲈⲔⲈⲞⲨⲰϢⲦ ⲘⲘⲞϤ ⲞⲨⲞϨ ⲚⲐⲞϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲠⲈⲦⲈⲔⲈϢⲈⲘϢⲎⲦϤ.
11 ௧௧ அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
ⲓ̅ⲁ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲬⲀϤ ⲚϪⲈⲠⲒⲆⲒⲀⲂⲞⲖⲞⲤ ⲞⲨⲞϨ ⲒⲤ ϨⲀⲚⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲀⲨⲒ ⲀⲨϢⲈⲘϢⲒ ⲘⲘⲞϤ.
12 ௧௨ யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
ⲓ̅ⲃ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ϪⲈ ⲀⲨϮ ⲚⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈϮⲄⲀⲖⲒⲖⲈⲀ.
13 ௧௩ பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀϤⲬⲰ ⲚⲚⲀⲌⲀⲢⲈⲐ ⲚⲤⲰϤ ⲀϤⲒ ⲀϤϢⲰⲠⲒ ϦⲈⲚⲔⲀⲪⲀⲢⲚⲀⲞⲨⲘ ⲐⲎ ⲈⲦϨⲒⲤⲔⲈⲚ ⲪⲒⲞⲘ ϦⲈⲚⲚⲒϬⲒⲎ ⲚⲦⲈⲌⲀⲂⲞⲨⲖⲰⲚ ⲚⲈⲘ ⲚⲈⲪⲐⲀⲖⲒⲘ.
14 ௧௪ கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
ⲓ̅ⲇ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲪⲎ ⲈⲦⲀϤϪⲞϤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ ⲚⲎⲤⲀⲒⲀⲤ ⲠⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ.
15 ௧௫ இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,
ⲓ̅ⲉ̅ϪⲈ ⲠⲔⲀϨⲒ ⲚⲌⲀⲂⲞⲨⲖⲰⲚ ⲚⲈⲘ ⲠⲔⲀϨⲒ ⲚⲚⲈⲪⲐⲀⲖⲒⲘ ⲠⲒⲘⲰⲒⲦ ⲚⲦⲈⲪⲒⲞⲘ ϨⲒⲘⲎⲢ ⲘⲠⲒⲒⲞⲢⲆⲀⲚⲎⲤ ϮⲄⲀⲖⲒⲖⲈⲀ ⲚⲦⲈⲚⲒⲈⲐⲚⲞⲤ.
16 ௧௬ ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ⲓ̅ⲋ̅ⲠⲒⲖⲀⲞⲤ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϦⲈⲚⲠⲬⲀⲔⲒ ⲀϤⲚⲀⲨ ⲈⲞⲨⲚⲒϢϮ ⲚⲞⲨⲰⲒⲚⲒ ⲞⲨⲞϨ ⲚⲎ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϦⲈⲚⲦⲬⲰⲢⲀ ⲚⲈⲘ ⲦϦⲎⲒⲂⲒ ⲘⲪⲘⲞⲨ ⲞⲨⲞⲨⲰⲒⲚⲒ ⲀϤϢⲀⲒ ⲚⲰⲞⲨ.
17 ௧௭ அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
ⲓ̅ⲍ̅ⲒⲤϪⲈⲚ ⲠⲒⲤⲎⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚϨⲒⲰⲒϢ ⲚⲈⲘ ⲈϪⲞⲤ ϪⲈ ⲀⲢⲒⲘⲈⲦⲀⲚⲞⲒⲚ ⲀⲤϦⲰⲚⲦ ⲄⲀⲢ ⲚϪⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ.
18 ௧௮ இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
ⲓ̅ⲏ̅ⲈϤⲘⲞϢⲒ ⲆⲈ ⲈⲤⲔⲈⲚ ⲪⲒⲞⲘ ⲚⲦⲈϮⲄⲀⲖⲒⲖⲈⲀ ⲀϤⲚⲀⲨ ⲈⲤⲞⲚ ⲤⲒⲘⲰⲚ ⲪⲎ ⲈⲦⲞⲨⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲠⲈⲦⲢⲞⲤ ⲚⲈⲘ ⲀⲚⲆⲢⲈⲀⲤ ⲠⲈϤⲤⲞⲚ ⲈⲨϨⲒ ϢⲚⲈ ⲈⲪⲒⲞⲘ ⲚⲈϨⲀⲚⲞⲨⲞϨⲒ ⲄⲀⲢ ⲚⲈ.
19 ௧௯ “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.
ⲓ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲘⲰⲒⲚⲒ ⲘⲞϢⲒ ⲚⲤⲰⲒ ⲚⲦⲀⲈⲢ ⲐⲎⲚⲞⲨ ⲚⲞⲨⲞϨⲒ ⲚⲢⲈϤⲦⲀϨⲈ ⲢⲰⲘⲒ.
20 ௨0 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲕ̅ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲤⲀⲦⲞⲦⲞⲨ ⲀⲨⲬⲰ ⲚⲚⲞⲨϢⲚⲎ ⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲨⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ.
21 ௨௧ அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲤⲒⲚⲒ ⲈⲦϨⲎ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲀϤⲚⲀⲨ ⲈⲔⲈⲤⲞⲚ ⲒⲀⲔⲰⲂⲞⲤ ⲠϢⲎⲢⲒ ⲚⲌⲈⲂⲈⲆⲈⲞⲤ ⲚⲈⲘ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲈϤⲤⲞⲚ ⲈⲨϨⲒ ⲠⲒϪⲞⲒ ⲚⲈⲘ ⲌⲈⲂⲈⲆⲈⲞⲤ ⲠⲞⲨⲒⲰⲦ ⲈⲨⲤⲞⲂϮ ⲚⲚⲞⲨϢⲚⲎ ⲞⲨ ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ.
22 ௨௨ உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲕ̅ⲃ̅ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲤⲀⲦⲞⲦⲞⲨ ⲀⲨⲬⲰ ⲘⲠⲒϪⲞⲒ ⲚⲈⲘ ⲌⲈⲂⲈⲆⲈⲞⲤ ⲠⲞⲨⲒⲰⲦ ⲀⲨⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ.
23 ௨௩ பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤⲔⲰϮ ⲠⲈ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϦⲈⲚϮⲄⲀⲖⲒⲖⲈⲀ ⲦⲎⲢⲤ ⲈϤϮⲤⲂⲰ ϦⲈⲚⲚⲞⲨⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲞⲨⲞϨ ⲈϤϨⲒⲰⲒϢ ⲘⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲞⲨⲞϨ ⲈϤⲈⲢⲪⲀϦⲢⲒ ⲈϢⲰⲚⲒ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦϦⲈⲚ ⲠⲒⲖⲀⲞⲤ.
24 ௨௪ அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
ⲕ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲀⲦⲈϤⲤⲘⲎ ⲒⲈⲂⲞⲖ ϦⲈⲚϮⲤⲨⲢⲒⲀ ⲦⲎⲢⲤ ⲞⲨⲞϨ ⲀⲨⲒⲚⲒ ⲚⲀϤ ⲚⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲦϨⲈⲘⲔⲎⲞⲨⲦ ϦⲈⲚⲚⲞⲨϢⲰⲚⲒ ⲚⲈⲘ ⲚⲞⲨⲘⲔⲀⲨϨ ⲚⲞⲨⲘⲎϢ ⲚⲢⲎϮ ⲚⲎ ⲈⲦⲈ ⲚⲒⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲰⲞⲨ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲞⲒ ⲘⲠⲈⲢⲘⲞⲨ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦϢⲎⲖ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢⲪⲀϦⲢⲒ ⲈⲢⲰⲞⲨ.
25 ௨௫ கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲕ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ ⲚϪⲈϨⲀⲚⲚⲒϢϮ ⲘⲘⲎϢ ⲈⲂⲞⲖ ϦⲈⲚϮⲄⲀⲖⲒⲖⲈⲀ ⲚⲈⲘ ϮⲘⲎϮ ⲘⲂⲀⲔⲒ ⲚⲈⲘ ⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲚⲈⲘ ϮⲒⲞⲨⲆⲈⲀ ⲚⲈⲘ ϨⲒⲘⲎⲢ ⲘⲠⲒⲒⲞⲢⲆⲀⲚⲎⲤ.