< மத்தேயு 3 >
1 ௧ அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
U ono pak doba doðe Jovan krstitelj, i uèaše u pustinji Judejskoj.
2 ௨ “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
I govoraše: pokajte se, jer se približi carstvo nebesko.
3 ௩ கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
Jer je to onaj za koga je govorio prorok Isaija gdje kaže: glas onoga što vièe u pustinji: pripravite put Gospodu, i poravnite staze njegove.
4 ௪ இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
A Jovan imaše haljinu od dlake kamilje i pojas kožan oko sebe; a hrana njegova bijaše skakavci i med divlji.
5 ௫ அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
Tada izlažaše k njemu Jerusalim i sva Judeja, i sva okolina Jordanska.
6 ௬ தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
I on ih kršæavaše u Jordanu, i ispovijedahu grijehe svoje.
7 ௭ பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
A kad vidje Jovan) mnoge fariseje i sadukeje gdje idu da ih krsti, reèe im: porodi aspidini! ko kaza vama da bježite od gnjeva koji ide?
8 ௮ மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
Rodite dakle rod dostojan pokajanja.
9 ௯ ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
I ne mislite i ne govorite u sebi: imamo oca Avraama; jer vam kažem da može Bog i od kamenja ovoga podignuti djecu Avraamu.
10 ௧0 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
Veæ i sjekira kod korijena drvetu stoji; svako dakle drvo koje ne raða dobra roda, sijeèe se i u oganj se baca.
11 ௧௧ மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
Ja dakle kršæavam vas vodom za pokajanje; a onaj što ide za mnom, jaèi je od mene; ja nijesam dostojan njemu obuæe ponijeti; on æe vas krstiti Duhom svetijem i ognjem.
12 ௧௨ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
Njemu je lopata u ruci njegovoj, pa æe otrijebiti gumno svoje, i skupiæe pšenicu svoju u žitnicu, a pljevu æe sažeæi ognjem vjeènijem.
13 ௧௩ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
Tada doðe Isus iz Galileje na Jordan k Jovanu da se krsti.
14 ௧௪ யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
A Jovan branjaše mu govoreæi: ti treba mene da krstiš, a ti li dolaziš k meni?
15 ௧௫ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
A Isus odgovori i reèe mu: ostavi sad, jer tako nam treba ispuniti svaku pravdu. Tada Jovan ostavi ga.
16 ௧௬ இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
I krstivši se Isus iziðe odmah iz vode; i gle, otvoriše mu se nebesa, i vidje Duha Božijega gdje silazi kao golub i doðe na njega.
17 ௧௭ அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.
I gle, glas s neba koji govori: ovo je sin moj ljubazni koji je po mojoj volji.