< மத்தேயு 25 >
1 ௧ அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.
«Alors le Royaume des cieux sera semblable à dix vierges qui, allèrent, leurs lampes à la main, à la rencontre de l'époux.
2 ௨ அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.
Cinq d'entre elles étaient folles, cinq étaient sages.
3 ௩ புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
Folles, car, en prenant leurs lampes, elles n'avaient pas emporté d'huile avec elles;
4 ௪ புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
mais les sages avaient pris, avec leurs lampes, de l'huile dans des vases.
5 ௫ மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
L'époux tardant à venir, elles s'assoupirent toutes et s'endormirent.
6 ௬ நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
Au milieu de la nuit un cri retentit: «Voici l'époux! sortez au-devant de lui!»
7 ௭ அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
Alors toutes ces vierges se levèrent et apprêtèrent leurs lampes,
8 ௮ புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
et les folles dirent aux sages: «Nos lampes s'éteignent; donnez-nous de votre huile.»
9 ௯ புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Les sages répondirent: «Il n'y en aurait peut-être pas assez pour nous et pour vous; allez plutôt à ceux qui en vendent et vous en achetez.»
10 ௧0 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
«Or, pendant qu'elles allaient en acheter, l'époux vint, et celles qui étaient prêtes entrèrent avec lui au festin de noces; et la porte fut fermée.
11 ௧௧ பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
«Enfin arrivent aussi les autres vierges, en disant: «Seigneur! Seigneur! ouvre-nous!»
12 ௧௨ அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
mais il leur répondit: «En vérité, je vous le dis, je ne vous connais pas.»
13 ௧௩ மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
Donc, veillez, parce que vous ne savez ni le jour ni l'heure.»
14 ௧௪ அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.
«Tel encore le Royaume des cieux, tel un homme qui, partant pour un voyage, appela ses serviteurs et leur confia ses biens.
15 ௧௫ அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.
A celui-ci, il donna cinq talents; à celui-là, deux; à ce troisième, un seul; à chacun suivant sa capacité personnelle. Aussitôt après, il partit.
16 ௧௬ ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
Celui qui avait reçu les cinq talents alla les faire valoir et en gagna cinq autres.
17 ௧௭ அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
De même celui qui en avait deux en gagna deux autres.
18 ௧௮ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
Mais celui qui n'en avait reçu qu'un, alla faire un trou dans la terre et il y enfouit l'argent de son maître.
19 ௧௯ அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
Après un long temps écoulé, le maître revint et il fit rendre compte à ses serviteurs.
20 ௨0 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
Celui qui avait reçu les cinq talents se présenta, en apportant cinq autres. «Seigneur, dit-il, tu m'as confié cinq talents; en voici cinq autres que j'ai gagnés.»
21 ௨௧ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Le maître lui dit: «Bien, serviteur bon et fidèle; c'est dans peu de chose que tu t'es montré fidèle, c'est sur beaucoup que je t'établirai. Entre dans la joie de ton seigneur.»
22 ௨௨ இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
S'approchant aussi, celui qui avait reçu les deux talents, dit: «Seigneur, tu m'as confié deux talents; en voici deux autres que j'ai gagnés.»
23 ௨௩ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Son maître lui dit: «Bien, serviteur bon et fidèle; c'est dans peu de chose que tu t'es montré fidèle, c'est sur beaucoup que je t'établirai. Entre dans la joie de ton seigneur.»
24 ௨௪ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.
Mais celui qui avait reçu un seul talent vint à son tour et dit: Seigneur, je savais que tu es un homme dur, tu moissonnes là où tu n'as pas semé, tu ramasses sur l'aire où tu n'as pas étendu de gerbes;
25 ௨௫ ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
et, plein de crainte, je suis allé enfouir en terre ton talent. Le voilà; tu es en possession de ce qui t'appartient.»
26 ௨௬ அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Mais son maître lui répondit par ces paroles: «Mauvais serviteur! paresseux! tu savais que je moissonne là où je n'ai pas semé et que je ramasse sur l'aire où je n'ai pas étendu de gerbes.
27 ௨௭ அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
Il te fallait en conséquence placer ton argent chez les banquiers, et, à mon retour, j'aurais retiré ce qui est à moi avec un intérêt.
28 ௨௮ அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
Donc, ôtez lui le talent et donnez-le à celui qui a les dix.
29 ௨௯ உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Car à tout homme qui a il sera donné, et il sera dans l'abondance; mais à celui qui n'a pas, même ce qu'il a lui sera ôté.
30 ௩0 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
Quant au serviteur inutile, jetez-le dehors, dans les ténèbres, — là seront les pleurs et le grincement des dents.
31 ௩௧ அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Lorsque le Fils de l'homme viendra dans sa gloire, et, avec lui, tous les anges, il s'assiéra sur son trône de gloire.
32 ௩௨ அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Devant lui seront rassemblées toutes les nations; et il séparera les uns d'avec les autres, comme le berger sépare les brebis d'avec les boucs;
33 ௩௩ செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
il placera les brebis à sa droite, les boucs à sa gauche.
34 ௩௪ அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Après quoi, le Roi dira à ceux qui seront à sa droite: «Venez, les bénis de mon Père! entrez en possession du Royaume qui vous a été préparé depuis la création du monde;
35 ௩௫ பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
car j'ai eu faim, et vous m'avez donné à manger; j'ai eu soif, et vous m'avez donné à boire; j'étais étranger, et vous m'avez recueilli;
36 ௩௬ ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
nu, et vous m'avez vêtu; malade, et vous m'avez visité; en prison, et vous êtes venus près de moi.»
37 ௩௭ அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?
Les justes alors lui répondront par ces paroles: «Seigneur, quand est-ce que nous t'avons vu avoir faim et que nous t'avons nourri? Avoir soif et que nous t'avons donné à boire?
38 ௩௮ எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
Quand est-ce que, te voyant étranger, nous t'avons recueilli; que, te voyant dans la nudité, nous t'avons vêtu?
39 ௩௯ எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
Quand est-ce que nous t'avons vu malade ou en prison et que nous sommes venus près de toi?»
40 ௪0 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Et le Roi leur fera cette réponse: «En vérité, je vous le dis, toutes les fois que vous avez fait cela à un seul des plus petits parmi mes frères que voici, c'est à moi que vous l'avez fait.»
41 ௪௧ அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
Puis il dira à ceux qui seront à sa gauche: «Allez loin de moi, maudits, dans le feu éternel préparé pour le diable et ses anges. (aiōnios )
42 ௪௨ பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
Car j'ai eu faim et vous ne m'avez pas donné à manger; j’ai eu soif et vous ne m'avez pas donné à boire;
43 ௪௩ அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
j'étais étranger et vous ne m'avez pas recueilli; nu et vous ne m'avez pas vêtu; malade et en prison et vous ne m'avez pas visité.»
44 ௪௪ அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
Alors ils répondront, eux aussi, par ces paroles: «Seigneur, quand est-ce que nous t'avons vu avoir faim, avoir soif, être étranger ou nu, ou malade, ou en prison, et que nous ne t'avons pas assisté?»
45 ௪௫ அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Mais il leur fera cette réponse: «En vérité, je vous le dis, toutes les fois que vous n'avez pas fait cela à un seul de ces plus petits, que voici, c'est à moi que vous ne l'avez pas fait.
46 ௪௬ அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
Et ceux-là s'en iront à un châtiment éternel et les justes à une vie éternelle.» (aiōnios )