< மத்தேயு 24 >
1 ௧ இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
Isus a ieșit din templu și mergea pe drumul Său. Discipolii săi au venit la el ca să-i arate clădirile templului.
2 ௨ இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Dar el le-a răspuns: “Voi vedeți toate aceste lucruri, nu-i așa? Cu siguranță vă spun că nu va rămâne aici piatră peste piatră care să nu fie dărâmată.”
3 ௩ பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn )
Pe când ședea El pe Muntele Măslinilor, ucenicii au venit la El în particular și I-au zis: “Spune-ne, când se vor întâmpla aceste lucruri? Care este semnul venirii Tale și al sfârșitului veacului?” (aiōn )
4 ௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
Isus le-a răspuns: “Luați seama ca nimeni să nu vă rătăcească.
5 ௫ ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
Căci mulți vor veni în numele Meu, zicând: “Eu sunt Hristosul”, și vor duce pe mulți în rătăcire.
6 ௬ யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
Veți auzi de războaie și de zvonuri de războaie. Aveți grijă să nu vă tulburați, căci toate acestea trebuie să se întâmple, dar sfârșitul nu este încă.
7 ௭ மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
Căci se va ridica națiune împotriva națiunii și regat împotriva regatului, și vor fi foamete, ciumă și cutremure în diferite locuri.
8 ௮ இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
Dar toate aceste lucruri sunt începutul durerilor nașterii.
9 ௯ அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
“Atunci vă vor da pe voi la asuprire și vă vor ucide. Veți fi urâți de toate neamurile din cauza numelui Meu.
10 ௧0 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
Atunci mulți se vor poticni, se vor preda unii pe alții și se vor urî unii pe alții.
11 ௧௧ அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
Se vor ridica mulți profeți falși și vor duce pe mulți în rătăcire.
12 ௧௨ அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Pentru că se va înmulți nelegiuirea, dragostea multora se va răci.
13 ௧௩ இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
Dar cel care va răbda până la sfârșit va fi mântuit.
14 ௧௪ ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
Această Veste Bună a Împărăției va fi propovăduită în toată lumea, ca mărturie pentru toate națiunile, și atunci va veni sfârșitul.
15 ௧௫ மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
“Când veți vedea urâciunea pustiirii, despre care s-a vorbit prin proorocul Daniel, stând în sfântul locaș (să înțeleagă cititorul),
16 ௧௬ யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
atunci cei ce sunt în Iudeea să fugă în munți.
17 ௧௭ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
Cel care este pe acoperișul casei să nu se coboare să scoată lucrurile care sunt în casa lui.
18 ௧௮ வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
Cel care este pe câmp să nu se întoarcă să își ia hainele.
19 ௧௯ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
Dar vai de cele însărcinate și de mamele care alăptează în acele zile!
20 ௨0 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Rugați-vă ca fuga voastră să nu fie în timpul iernii și nici într-un Sabat,
21 ௨௧ ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
pentru că atunci va fi o mare suferință, așa cum nu a fost de la începutul lumii până acum, nu, și nici nu va fi vreodată.
22 ௨௨ அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
Dacă acele zile nu ar fi fost scurtate, nicio făptură nu ar fi fost salvată. Dar, de dragul celor aleși, acele zile vor fi scurtate.
23 ௨௩ அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
Dacă vă va spune cineva: “Iată, aici este Hristosul!” sau: “Iată!”, nu-l credeți.
24 ௨௪ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
Căci se vor ridica falși hristoși și falși profeți, care vor face semne și minuni mari, ca să ducă în rătăcire, dacă este posibil, chiar și pe cei aleși.
25 ௨௫ இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
“Iată, v-am spus mai dinainte.
26 ௨௬ ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
De aceea, dacă vă vor spune: “Iată-l în pustie”, nu ieșiți; sau “Iată-l în lăcașuri”, nu credeți.
27 ௨௭ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
Căci, după cum fulgerul fulgeră de la răsărit și se vede până la apus, așa va fi și venirea Fiului Omului.
28 ௨௮ பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
Căci oriunde este cadavrul, acolo se adună vulturii.
29 ௨௯ அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
“Dar îndată după suferința acelor zile, soarele se va întuneca, luna nu va mai lumina, stelele vor cădea din cer și puterile cerurilor se vor clătina;
30 ௩0 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
și atunci va apărea pe cer semnul Fiului Omului. Atunci toate semințiile pământului vor plânge și vor vedea pe Fiul Omului venind pe norii cerului cu putere și cu mare slavă.
31 ௩௧ வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
El va trimite pe îngerii Săi cu un sunet mare de trâmbiță și vor aduna pe cei aleși ai Săi din cele patru vânturi, de la un capăt la altul al cerului.
32 ௩௨ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
“Învățați acum de la smochin pilda aceasta: Când ramura lui s-a înmuiat și produce frunze, știți că vara este aproape.
33 ௩௩ அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Tot așa și voi, când vedeți toate aceste lucruri, știți că El este aproape, chiar la uși.
34 ௩௪ இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Adevărat vă spun că generația aceasta nu va trece până când nu se vor împlini toate aceste lucruri.
35 ௩௫ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Cerul și pământul vor trece, dar cuvintele Mele nu vor trece.
36 ௩௬ அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
Dar nimeni nu știe ziua și ceasul acela, nici îngerii din ceruri, ci numai Tatăl Meu.
37 ௩௭ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
Cum au fost zilele lui Noe, așa va fi și venirea Fiului Omului.
38 ௩௮ எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
Căci, după cum în zilele de dinaintea potopului mâncau și beau, se căsătoreau și se dădeau în căsătorie, până în ziua în care Noe a intrat în corabie,
39 ௩௯ பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
și nu au știut până când a venit potopul și i-a luat pe toți, așa va fi și venirea Fiului Omului.
40 ௪0 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
Atunci doi oameni vor fi pe câmp: unul va fi luat și unul va rămâne.
41 ௪௧ இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
Două femei vor fi măcinând la moară: una va fi luată și una va fi lăsată.
42 ௪௨ உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
Vegheați deci, căci nu știți în ce ceas vine Domnul vostru.
43 ௪௩ திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
Dar să știți că, dacă stăpânul casei ar fi știut în ce ceas al nopții va veni hoțul, ar fi vegheat și nu ar fi îngăduit să i se spargă casa.
44 ௪௪ நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
De aceea și voi fiți gata, căci în ceasul la care nu vă așteptați, Fiul Omului va veni.
45 ௪௫ ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
Cine este robul credincios și înțelept, pe care l-a pus stăpânul său peste casa sa, ca să le dea hrana la vremea potrivită?
46 ௪௬ எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
Ferice de robul acela pe care îl găsește făcând așa când vine stăpânul său!
47 ௪௭ தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Cu siguranță vă spun că îl va pune peste tot ce are.
48 ௪௮ அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
Dar dacă robul acela rău va zice în inima lui: “Stăpânul meu întârzie să vină”,
49 ௪௯ தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
și va începe să-și bată tovarășii de slujbă, să mănânce și să bea cu bețivii,
50 ௫0 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
stăpânul acelui rob va veni într-o zi când nu se va aștepta și într-un ceas când nu va ști,
51 ௫௧ அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
și-l va tăia în bucăți și-i va rândui partea lui cu ipocriții. Acolo va fi plânsul și scrâșnitul dinților.