< மத்தேயு 24 >

1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
כשיצא ישוע מבית־המקדש, באו אליו תלמידיו להראות לו את מבני המקדש.
2 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
אולם ישוע אמר להם:”כל המבנים האלה ייהרסו ואף אבן לא תישאר במקומה.“
3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
מאוחר יותר, כשישב ישוע על מדרון הר הזיתים, שאלו אותו התלמידים:”מתי יקרה הדבר הזה? אילו מאורעות יסמנו את שובך ואת סוף העולם?“ (aiōn g165)
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
”אל תניחו לאיש לרמות אתכם“, השיב להם ישוע,
5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
”כי אנשים רבים יבואו ויטענו כל אחד’אני המשיח‘, ויטעו אנשים רבים.
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
כאשר תשמעו על מהומות ומלחמות – אל תיבהלו. אמנם תפרוצנה מלחמות ותתחוללנה מהומות, אבל הקץ לא יבוא מיד.
7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
מדינות וממלכות תילחמנה זו בזו, ובמקומות רבים יהיו רעידות אדמה ורעב.
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
אולם כל אלה יציינו רק את ראשית הצרות והסבל העתידים לבוא.
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
”לאחר מכן יענו אתכם, יהרגו אתכם והעולם כולו ישנא אתכם, משום שאתם שייכים לי.
10 ௧0 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
רבים ישובו לחטוא, יבגדו זה בזה וישנאו איש את אחיו.
11 ௧௧ அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
נביאי שקר רבים יופיעו ויוליכו שולל אנשים רבים.
12 ௧௨ அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
החטא והרשע יתפשטו בכל מקום וידכאו את אהבתם של רבים.
13 ௧௩ இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
אולם אלה שיחזיקו מעמד עד הסוף יינצלו.
14 ௧௪ ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
”הבשורה הטובה על דבר המלכות תתפשט בעולם כולו – כך שכל האומות תשמענה אותה – ולבסוף יגיע הקץ.
15 ௧௫ மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
”לכן, כאשר תראו בבית־המקדש את חילול הקודש, שעליו דיבר דניאל הנביא (הקורא – שים לב!)
16 ௧௬ யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
על כל תושבי יהודה לברוח להרים.
17 ௧௭ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
אלה שעל הגגות – שלא ייכנסו הביתה לארוז את חפציהם.
18 ௧௮ வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
אלה שבשדה – שלא יחזרו הביתה לקחת את בגדיהם.
19 ௧௯ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
”אוי לנשים ההרות ולמניקות באותם ימים!
20 ௨0 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
התפללו שבריחתכם לא תהיה בחורף ולא בשבת.
21 ௨௧ ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
כי תהיה צרה שכמוה טרם הייתה בתולדות העולם, וכמוה לא תהיה עוד!
22 ௨௨ அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
”למעשה אם אלוהים לא יקצר את הימים הנוראים האלה, כולם יאבדו. אולם אלוהים יקצר ימים אלה למען עמו הנבחר.
23 ௨௩ அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
”אם מישהו יאמר לכם באותם ימים:’ראיתי את המשיח במקום פלוני!‘או’המשיח נמצא בכפר הסמוך!‘אל תאמינו לו.
24 ௨௪ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
כי משיחי־שקר ונביאי־שקר יקומו ויחוללו נסים ונפלאות אשר יתעו את האנשים, ואם יוכלו, הם יתעו אפילו את הנבחרים.
25 ௨௫ இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
זיכרו, הזהרתי אתכם!
26 ௨௬ ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
”על כן, אם יאמרו לכם שהמשיח אי־שם במדבר – אל תטריחו את עצמכם ללכת ולראות, ואם יאמרו לכם שהמשיח מסתתר במקום כלשהו – אל תאמינו.
27 ௨௭ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
כי כשם שהברק במזרח מאיר למערב, כך יהיה גם שובו של בן־האדם.
28 ௨௮ பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
במקום שבו נמצא הפגר, שם יתאספו הנשרים.
29 ௨௯ அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
”מיד לאחר הצרות של אותם ימים תחשך השמש, הירח ישחיר, הכוכבים יפלו מהשמים וכוחות השמים יתמוטטו.
30 ௩0 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
”לבסוף ייראה בשמים אות בן־האדם ואבל כבד ירד על העולם כולו. כל אומות העולם יראו את בן־האדם בא על ענני השמים, בגבורה ובכבוד רב.
31 ௩௧ வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
ואז הוא ישלח את מלאכיו בקול תרועת השופר, והם יאספו את בחיריו מכל קצוות תבל.
32 ௩௨ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
”עץ התאנה ישמש לכם כדוגמה: כאשר הענפים מלבלבים והעלים ירוקים, אתם יודעים שהקיץ קרב.
33 ௩௩ அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
כאשר כל מה שסיפרתי לכם יתחיל להתרחש, דעו לכם שזה קרוב, שאני עומד בפתח.
34 ௩௪ இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
אני אומר לכם: כל הדברים האלה יתרחשו לפני שיחלוף הדור הזה.
35 ௩௫ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
השמים והארץ יחלפו, אבל דברי לא יחלפו.
36 ௩௬ அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
”איש אינו יודע את היום והשעה של התרחשויות אלה; המלאכים בשמים אינם יודעים זאת, ואפילו אני עצמי איני יודע את המועד המדויק. רק אבי שבשמים יודע זאת.
37 ௩௭ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
”כימי נוח כן יהיה באו של בן־האדם.
38 ௩௮ எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
בני־האדם חיו בשלווה; הם אכלו, שתו והתחתנו לפני שפתאום בא המבול.
39 ௩௯ பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
בני־האדם סרבו להאמין לשמע מה שעמד לקרות, עד שהמבול אכן בא והטביע את כולם. כך יהיה בואי.
40 ௪0 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
”באותה עת שני גברים יעבדו יחד בשדה – האחד יילקח והשני יישאר.
41 ௪௧ இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
שתי נשים יטחנו בָּרֵחָיִם – אחת תילקח והשנייה תישאר.
42 ௪௨ உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
”לכן היו מוכנים, כי אינכם יודעים באיזה יום יבוא אדונכם.
43 ௪௩ திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
”אילו ידעו את השעה, היו כולם מתכוננים לבואו, כשם שהיו מתכוננים לבואו של גנב אילו ידעו מתי יבוא.
44 ௪௪ நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
כך גם אתם היו מוכנים תמיד, כי בן־האדם יבוא בשעה בלתי צפויה.
45 ௪௫ ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
מי מכם משרת נבון ונאמן לאדונכם, שיפקח על משק ביתו ויקבל את שכרו בעתו?
46 ௪௬ எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
ברוך תהיה אם בשובי אמצא אותך ממלא את תפקידך בנאמנות.
47 ௪௭ தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
אנשים נאמנים כאלה אני אפקיד על כל רכושי.
48 ௪௮ அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
”אולם אם אתה רשע ותאמר לעצמך:’אה, האדון לא ישוב כל כך מהר‘, –
49 ௪௯ தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
ותתאכזר ליתר העבדים ותבלה את זמנך במסיבות, בזלילה ובשתייה –
50 ௫0 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
אדונך יופיע בשעה בלתי צפויה,
51 ௫௧ அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
ואז הוא יכה אותך קשות ויקבע את מקומך עם הצבועים; שם יהיה בכי וחריקת שיניים.“

< மத்தேயு 24 >