< மத்தேயு 21 >
1 ௧ அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
NI arail koren iong Ierusalem o lel ong Petpake impan dol Oliwe, Iesus ap kotin poronela tounpadak riamen.
2 ௨ உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
Masani ong ira: Koma ko ong nan kanim monen, a madang koma pan diar esel amen, me salidi, o na pul mi imp a, lapwa ira da, ap kare dong ia!
3 ௩ ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
A ma meamen pan indang koma meakot, koma pan indada: Kaun o men dake, i ari pan madang kadar ira do.
4 ௪ இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
A mepukat karos wiauier, pwen pwaida, me lokido ren saukop o me masani:
5 ௫ தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
Kaireki nain Sion seripein: Kilang, om Nanmarki kotido re om. A kotin opampap o kaipokedi pon esel li amen.
6 ௬ சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
A tounpadak ko lao kolar, o wiadar duen Iesus kotin masani ong ira,
7 ௭ கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
Ira ap wado esel o na, ap irepadi po’ra arail likau kan a ap kotin kaipokedi poa.
8 ௮ திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
O pokon kalaimunia irepadi arail likau kan nani al o, a akai paledier ran tuka kan irepadi nani al o.
9 ௯ முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
A pokon o, me tiong moa, o me idauen, ngisingis indada: Osiana ong sapwilim en Dawid! Meid iasanai me kotido ni mar en Kaun, osiana nanlang.
10 ௧0 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
A lao kotilong ong nan Ierusalem, toun kanim ap mokimokid indada: Is i?
11 ௧௧ அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
Pokon o katitiki: Nan i Iesus, saukop en Nasaret en Kaliläa.
12 ௧௨ இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
Iesus ap kotilong ong nan im en kaudok en Kot, ap kotin kase sang karos, me kin netinet nan im en kaudok, o kotin wukededi tepel en saunkawilian moni ko, o deun men netin muroi.
13 ௧௩ என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
O kotin masani ong irail: A intingidi: Im ai pan adaneki im en kapakap, a komail wia kilar deu en lipirap.
14 ௧௪ அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
A me maskun o me sikil akan poto dong i nan im en kaudok o; i ari kotin kakel irail adar.
15 ௧௫ அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
A samero lapalap o saunkawewe kan lao kilanger manaman akan, me a kotin wiadar, o seri kan nan im en kaudok, me ngisingis indada: Osiana ong sapwilim en Dawid! Irail ap makara kidar,
16 ௧௬ அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
Indai ong i: Kom sota mangi, me mepukat katitiki? A Iesus kotin masani ong irail: Ei, komail saikenta doropwe: Sang nan au en seri o me kin kang didi, ir me kotin kapwaiadar kaping eu?
17 ௧௭ அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
I ari kotin muei sang irail, kotila sang nan kanim o, koti dong Petanien o pweiokidi wasa o.
18 ௧௮ காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
A ni mansang ni a kotin purlang kanim o, ap men konotedar:
19 ௧௯ அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
A kotin masani tuka pik pot ni kailan al o, ap kotilang i. A sota, me a kotin diaradar, pwe ta eta, ap kotin masani ong i: Koe solar pan wa kokolata! A tuka pik ap madang mongedier. (aiōn )
20 ௨0 சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
Tounpadak kan lao kilanger, irail ap puriamui kidar indada: Daduen tuka pik o madang mongelar.
21 ௨௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
A Iesus kotin sapeng masani ong irail: Melel I indai ong komail, ma komail poson, ap sota peikasal, kaidin met eta, me wiaui ong tuka pik en, me komail pan kak wiada, pwe ma komail pan indang nana wet: Mokid wei lokidokila nan madau, nan a pan pwaida.
22 ௨௨ மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
O meakaros komail pan poeki ni omail kapakap, ap poson komail pan ale.
23 ௨௩ அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
A lao kotilong ong nan im en kaudok o, samero lapalap akan o saumas en toun sap o ap ko dong i ni a kotin kaukawewe indada: Manaman en is, me komui wiaki mepukat? O is me ki ong komui manaman wet?
24 ௨௪ இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
A Iesus kotin sapeng masani ong irail: I pan pil kalelapok meakot re omail, ma komail pan sapeng ia, I pil pan indang komail manaman en is, me I wiaki mepukat.
25 ௨௫ யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
En Ioanes a paptais a tapi sang ia? Men nanlang de me ren aramas? Irail ap lamelame nan pung arail katiti, ma kitail pan inda men nanlang, a pan masani ong kitail: Da me komail so posonki i?
26 ௨௬ மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
A ma kitail inda, me ren aramas, kitail masak pokon o, pwe karos kin wia saukopki Ioanes,
27 ௨௭ இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
Irail ari sapeng Iesus potoan ong: Kit sota potoan. I ari pil masani ong irail: I sota pil pan indai ong komail, manaman en is, me I wiaki mepukat.
28 ௨௮ ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
A iaduen omail lamelam? Aramas amen naineki ol riamen. A kola ren amen indang i: Lao, kola ran wet dodok nan ai mat en wain.
29 ௨௯ அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
A sapeng indada: I sota mauki; a mur ekis a kalukila, ap koieila.
30 ௩0 இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
O a kola ren me teio indai ong pil dueta. I me sapeng indada: Ei maing; ap sota kola.
31 ௩௧ இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ari, is re’ra, me wiadar insen en sam a? Irail potoan ong i: Men mas o. Iesus kotin masani ong irail: Melel I indai ong komail, saunopwei o me nenek kan pan mo’mail pedelong ong nan wein Kot.
32 ௩௨ ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
Pwe Ioanes pwara dong komail, padapadak ong komail duen al pung, a komail sota kamelele i; a saunopwei o me nenek kan kamelele i. A komail lao kilanger, komail sota kalukila, pwen kamele i.
33 ௩௩ வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
Komail rong pil apot karaseras! Kaun pan im amen padukedier mat en wain eu o kele pene, ap weiradar deun men wungid wan wain, o kauada im en daulik eu, ap kasile kin i ong saumat akai, o momaitelar nan wai.
34 ௩௪ அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
A lao ansau en rak, a kadaralang saumat akan a ladu kai, pwen ale a wan wain.
35 ௩௫ தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
Saumat akan ap saikedi a ladu kan; re woki amen, kamela amen, a amen me re kate.
36 ௩௬ பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
A pil kadarala ladu kai, toto sang men mas, Irail ari wiai ong irail pil dueta.
37 ௩௭ அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
A ikmuri a kadara wong irail na ol masani: Nan re pan masak nai ol.
38 ௩௮ தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
A saumat akan lao kilanger ol o, irail ap kasokasoi nan pung arail: I me pan ale soso, ukodo kitail en kamela i, a kitail pan id ale a soso.
39 ௩௯ அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
Irail ari saikedi i o kasapoke sang i nan mat en wain o, o kamela i.
40 ௪0 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
Ari, monsap en mat en wain lao pwarado, da me a pan wiai ong saumat pukat?
41 ௪௧ அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
Irail potoan ong i: A pan kamela aramas sued pukat, ap pan neki ong akai saumat a mat en wain o, me pan ki ong i wan wain ni ansau me kon ong.
42 ௪௨ இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
Iesus ap kotin masani ong irail: Komail saikenta doropwer nan kisin likau kan: Takai o, me sause kan kasapokelar, ap id wialar takai en pukakaim. Mepukat wiauier ren Kaun o, men kapuriamui patail?
43 ௪௩ ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
I me I indai ong komail, wein Kot pan sapadoke sang komail, ap ko ong eu kainok, me pan kida wa.
44 ௪௪ இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
O meamen pupedi ong pon takai wet, pan ola, a meamen me a pan pupedi ong poa, a pan pitaki pasang i.
45 ௪௫ பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
A samero lapalap o Parisär akan lao rongadar a karaseras akan, re mulikiadar, me a kotin karaserase kin irail.
46 ௪௬ அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
Irail ari masamasan sili en saikidi i, a re masak aramas akan, pwe re wia kin i saukop amen.