< மத்தேயு 20 >
1 ௧ பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
સ્વર્ગરાજ્યમ્ એતાદૃશા કેનચિદ્ ગૃહસ્યેન સમં, યોઽતિપ્રભાતે નિજદ્રાક્ષાક્ષેત્રે કૃષકાન્ નિયોક્તું ગતવાન્|
2 ௨ வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
પશ્ચાત્ તૈઃ સાકં દિનૈકભૃતિં મુદ્રાચતુર્થાંશં નિરૂપ્ય તાન્ દ્રાક્ષાક્ષેત્રં પ્રેરયામાસ|
3 ௩ காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
અનન્તરં પ્રહરૈકવેલાયાં ગત્વા હટ્ટે કતિપયાન્ નિષ્કર્મ્મકાન્ વિલોક્ય તાનવદત્,
4 ௪ நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
યૂયમપિ મમ દ્રાક્ષાક્ષેત્રં યાત, યુષ્મભ્યમહં યોગ્યભૃતિં દાસ્યામિ, તતસ્તે વવ્રજુઃ|
5 ௫ மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
પુનશ્ચ સ દ્વિતીયતૃતીયયોઃ પ્રહરયો ર્બહિ ર્ગત્વા તથૈવ કૃતવાન્|
6 ௬ ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
તતો દણ્ડદ્વયાવશિષ્ટાયાં વેલાયાં બહિ ર્ગત્વાપરાન્ કતિપયજનાન્ નિષ્કર્મ્મકાન્ વિલોક્ય પૃષ્ટવાન્, યૂયં કિમર્થમ્ અત્ર સર્વ્વં દિનં નિષ્કર્મ્માણસ્તિષ્ઠથ?
7 ௭ அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
તે પ્રત્યવદન્, અસ્માન્ ન કોપિ કર્મમણિ નિયુંક્તે| તદાનીં સ કથિતવાન્, યૂયમપિ મમ દ્રાક્ષાક્ષેત્રં યાત, તેન યોગ્યાં ભૃતિં લપ્સ્યથ|
8 ௮ மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
તદનન્તરં સન્ધ્યાયાં સત્યાં સએવ દ્રાક્ષાક્ષેત્રપતિરધ્યક્ષં ગદિવાન્, કૃષકાન્ આહૂય શેષજનમારભ્ય પ્રથમં યાવત્ તેભ્યો ભૃતિં દેહિ|
9 ௯ அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
તેન યે દણ્ડદ્વયાવસ્થિતે સમાયાતાસ્તેષામ્ એકૈકો જનો મુદ્રાચતુર્થાંશં પ્રાપ્નોત્|
10 ௧0 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
તદાનીં પ્રથમનિયુક્તા જના આગત્યાનુમિતવન્તો વયમધિકં પ્રપ્સ્યામઃ, કિન્તુ તૈરપિ મુદ્રાચતુર્થાંશોઽલાભિ|
11 ௧௧ வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
તતસ્તે તં ગૃહીત્વા તેન ક્ષેત્રપતિના સાકં વાગ્યુદ્ધં કુર્વ્વન્તઃ કથયામાસુઃ,
12 ௧௨ பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
વયં કૃત્સ્નં દિનં તાપક્લેશૌ સોઢવન્તઃ, કિન્તુ પશ્ચાતાયા સે જના દણ્ડદ્વયમાત્રં પરિશ્રાન્તવન્તસ્તેઽસ્માભિઃ સમાનાંશાઃ કૃતાઃ|
13 ௧௩ அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
તતઃ સ તેષામેકં પ્રત્યુવાચ, હે વત્સ, મયા ત્વાં પ્રતિ કોપ્યન્યાયો ન કૃતઃ કિં ત્વયા મત્સમક્ષં મુદ્રાચતુર્થાંશો નાઙ્ગીકૃતઃ?
14 ௧௪ உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
તસ્માત્ તવ યત્ પ્રાપ્યં તદાદાય યાહિ, તુભ્યં યતિ, પશ્ચાતીયનિયુક્તલોકાયાપિ તતિ દાતુમિચ્છામિ|
15 ௧௫ என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
સ્વેચ્છયા નિજદ્રવ્યવ્યવહરણં કિં મયા ન કર્ત્તવ્યં? મમ દાતૃત્વાત્ ત્વયા કિમ્ ઈર્ષ્યાદૃષ્ટિઃ ક્રિયતે?
16 ௧௬ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
ઇત્થમ્ અગ્રીયલોકાઃ પશ્ચતીયા ભવિષ્યન્તિ, પશ્ચાતીયજનાશ્ચગ્રીયા ભવિષ્યન્તિ, અહૂતા બહવઃ કિન્ત્વલ્પે મનોભિલષિતાઃ|
17 ௧௭ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
તદનન્તરં યીશુ ર્યિરૂશાલમ્નગરં ગચ્છન્ માર્ગમધ્યે શિષ્યાન્ એકાન્તે વભાષે,
18 ௧௮ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
પશ્ય વયં યિરૂશાલમ્નગરં યામઃ, તત્ર પ્રધાનયાજકાધ્યાપકાનાં કરેષુ મનુષ્યપુત્રઃ સમર્પિષ્યતે;
19 ௧௯ அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
તે ચ તં હન્તુમાજ્ઞાપ્ય તિરસ્કૃત્ય વેત્રેણ પ્રહર્ત્તું ક્રુશે ધાતયિતુઞ્ચાન્યદેશીયાનાં કરેષુ સમર્પયિષ્યન્તિ, કિન્તુ સ તૃતીયદિવસે શ્મશાનાદ્ ઉત્થાપિષ્યતે|
20 ௨0 அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
તદાનીં સિવદીયસ્ય નારી સ્વપુત્રાવાદાય યીશોઃ સમીપમ્ એત્ય પ્રણમ્ય કઞ્ચનાનુગ્રહં તં યયાચે|
21 ௨௧ அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
તદા યીશુસ્તાં પ્રોક્તવાન્, ત્વં કિં યાચસે? તતઃ સા બભાષે, ભવતો રાજત્વે મમાનયોઃ સુતયોરેકં ભવદ્દક્ષિણપાર્શ્વે દ્વિતીયં વામપાર્શ્વ ઉપવેષ્ટુમ્ આજ્ઞાપયતુ|
22 ௨௨ இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
યીશુઃ પ્રત્યુવાચ, યુવાભ્યાં યદ્ યાચ્યતે, તન્ન બુધ્યતે, અહં યેન કંસેન પાસ્યામિ યુવાભ્યાં કિં તેન પાતું શક્યતે? અહઞ્ચ યેન મજ્જેનેન મજ્જિષ્યે, યુવાભ્યાં કિં તેન મજ્જયિતું શક્યતે? તે જગદુઃ શક્યતે|
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
તદા સ ઉક્તવાન્, યુવાં મમ કંસેનાવશ્યં પાસ્યથઃ, મમ મજ્જનેન ચ યુવામપિ મજ્જિષ્યેથે, કિન્તુ યેષાં કૃતે મત્તાતેન નિરૂપિતમ્ ઇદં તાન્ વિહાયાન્યં કમપિ મદ્દક્ષિણપાર્શ્વે વામપાર્શ્વે ચ સમુપવેશયિતું મમાધિકારો નાસ્તિ|
24 ௨௪ மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
એતાં કથાં શ્રુત્વાન્યે દશશિષ્યાસ્તૌ ભ્રાતરૌ પ્રતિ ચુકુપુઃ|
25 ௨௫ அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
કિન્તુ યીશુઃ સ્વસમીપં તાનાહૂય જગાદ, અન્યદેશીયલોકાનાં નરપતયસ્તાન્ અધિકુર્વ્વન્તિ, યે તુ મહાન્તસ્તે તાન્ શાસતિ, ઇતિ યૂયં જાનીથ|
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
કિન્તુ યુષ્માકં મધ્યે ન તથા ભવેત્, યુષ્માકં યઃ કશ્ચિત્ મહાન્ બુભૂષતિ, સ યુષ્માન્ સેવેત;
27 ௨௭ உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
યશ્ચ યુષ્માકં મધ્યે મુખ્યો બુભૂષતિ, સ યુષ્માકં દાસો ભવેત્|
28 ௨௮ அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
ઇત્થં મનુજપુત્રઃ સેવ્યો ભવિતું નહિ, કિન્તુ સેવિતું બહૂનાં પરિત્રાણમૂલ્યાર્થં સ્વપ્રાણાન્ દાતુઞ્ચાગતઃ|
29 ௨௯ அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
અનન્તરં યિરીહોનગરાત્ તેષાં બહિર્ગમનસમયે તસ્ય પશ્ચાદ્ બહવો લોકા વવ્રજુઃ|
30 ௩0 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
અપરં વર્ત્મપાર્શ્વ ઉપવિશન્તૌ દ્વાવન્ધૌ તેન માર્ગેણ યીશો ર્ગમનં નિશમ્ય પ્રોચ્ચૈઃ કથયામાસતુઃ, હે પ્રભો દાયૂદઃ સન્તાન, આવયો ર્દયાં વિધેહિ|
31 ௩௧ அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
તતો લોકાઃ સર્વ્વે તુષ્ણીમ્ભવતમિત્યુક્ત્વા તૌ તર્જયામાસુઃ; તથાપિ તૌ પુનરુચ્ચૈઃ કથયામાસતુઃ હે પ્રભો દાયૂદઃ સન્તાન, આવાં દયસ્વ|
32 ௩௨ இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
તદાનીં યીશુઃ સ્થગિતઃ સન્ તાવાહૂય ભાષિતવાન્, યુવયોઃ કૃતે મયા કિં કર્ત્તર્વ્યં? યુવાં કિં કામયેથે?
33 ௩௩ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
તદા તાવુક્તવન્તૌ, પ્રભો નેત્રાણિ નૌ પ્રસન્નાનિ ભવેયુઃ|
34 ௩௪ இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
તદાનીં યીશુસ્તૌ પ્રતિ પ્રમન્નઃ સન્ તયો ર્નેત્રાણિ પસ્પર્શ, તેનૈવ તૌ સુવીક્ષાઞ્ચક્રાતે તત્પશ્ચાત્ જગ્મુતુશ્ચ|