< மத்தேயு 2 >
1 ௧ ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
Pe când se născuse Isus în Betleemul Iudeii, în zilele împăratului Irod, iată că au venit la Ierusalim niște înțelepți de la răsărit, care ziceau:
2 ௨ “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
“Unde este Cel ce S-a născut Împărat al Iudeilor? Căci am văzut steaua Lui la răsărit și am venit să ne închinăm Lui”.
3 ௩ ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Regele Irod, când a auzit aceasta, s-a tulburat și tot Ierusalimul împreună cu el.
4 ௪ அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
Adunând pe toți preoții cei mai de seamă și pe cărturarii poporului, i-a întrebat unde se va naște Hristosul.
5 ௫ அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
Ei i-au răspuns: “În Betleemul Iudeii, căci așa este scris prin profet,
6 ௬ யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
“Tu, Betleem, țară a lui Iuda, nu sunt cu nimic mai prejos printre căpeteniile lui Iuda; pentru că din tine va ieși un guvernator care va păstori poporul Meu, Israel.””
7 ௭ அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
Irod a chemat pe ascuns pe înțelepți și a aflat de la ei la ce oră a apărut steaua.
8 ௮ நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
I-a trimis la Betleem și le-a zis: “Mergeți și căutați cu grijă pruncul. Când îl veți găsi, aduceți-mi vestea, ca să vin și eu să mă închin lui.”
9 ௯ ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
Ei, după ce au auzit pe rege, au plecat; și iată că steaua pe care o văzuseră la răsărit mergea înaintea lor, până ce a venit și s-a oprit deasupra locului unde era pruncul.
10 ௧0 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
Când au văzut steaua, s-au bucurat cu bucurie nespus de mare.
11 ௧௧ அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
Au intrat în casă și au văzut Pruncul cu Maria, mama Lui, și au căzut jos și I s-au închinat. Deschizându-și comorile, i-au oferit daruri: aur, tămâie și smirnă.
12 ௧௨ பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
Fiind avertizați în vis să nu se întoarcă la Irod, s-au întors în țara lor pe un alt drum.
13 ௧௩ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
După ce au plecat, iată că un înger al Domnului s-a arătat în vis lui Iosif și i-a zis: “Scoală-te, ia Pruncul și pe mama lui și fugi în Egipt și rămâi acolo până ce-ți voi spune, căci Irod va căuta Pruncul ca să-l nimicească.”
14 ௧௪ அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
S-a sculat, a luat noaptea pe prunc și pe mama lui și a plecat în Egipt,
15 ௧௫ ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
și a stat acolo până la moartea lui Irod, ca să se împlinească ce spusese Domnul prin proorocul care zicea: “Din Egipt am chemat pe fiul Meu”.
16 ௧௬ அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
Atunci Irod, văzând că este batjocorit de magi, s-a mâniat foarte tare și a trimis să ucidă pe toți copiii de parte bărbătească din Betleem și din toată ținutul din jur, de la doi ani în jos, după timpul exact pe care-l aflase de la magi.
17 ௧௭ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
Atunci s-a împlinit ceea ce fusese spus prin profetul Ieremia, care zicea așa
18 ௧௮ எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
“S-a auzit o voce în Rama, jale, plâns și jale mare, Rahela plângând pentru copiii ei; ea nu ar fi fost consolată, pentru că ei nu mai sunt.”
19 ௧௯ ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
După ce a murit Irod, iată că un înger al Domnului s-a arătat în vis lui Iosif în Egipt, zicând:
20 ௨0 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
“Scoală-te, ia Pruncul și pe mama lui și du-te în țara lui Israel, căci cei care căutau viața Pruncului au murit.”
21 ௨௧ அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
Și s-a sculat, a luat pruncul și pe mama lui și a venit în țara lui Israel.
22 ௨௨ ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
Dar, când a auzit că Arhelau domnea în Iudeea în locul tatălui său, Irod, s-a temut să meargă acolo. Fiind avertizat în vis, s-a retras în regiunea Galileii
23 ௨௩ நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
și a venit și a locuit într-o cetate numită Nazaret, ca să se împlinească ceea ce s-a spus prin profeți, că el va fi numit Nazarinean.