< மத்தேயு 16 >

1 பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
روزی فریسی‌ها و صدوقی‌ها که سران مذهبی و سیاسی قوم بودند، آمدند تا عیسی را بیازمایند. به این منظور از او خواستند آیتی آسمانی به ایشان نشان دهد تا اقتدار خود را ثابت کند.
2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
او جواب داد: «شما خوب می‌توانید وضع هوا را پیش‌بینی کنید. اگر عصر، آسمان سرخ باشد، می‌گویید فردا هوا خوب خواهد بود؛
3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
و اگر صبح، آسمان سرخ باشد، می‌گویید که باران خواهد بارید. شما که نشانه‌های آسمان را تعبیر می‌کنید، چطور نمی‌توانید نشانه‌های زمانها را تعبیر نمایید!
4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
نسل شریر و زناکار آیتی می‌طلب! اما تنها آیتی که به ایشان می‌دهم، آیت یونس نبی است.» این را گفت و از ایشان جدا شد.
5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
وقتی به آن سوی دریا رسیدند، شاگردان متوجه شدند که فراموش کرده‌اند با خود نان بردارند.
6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
عیسی به ایشان فرمود: «مواظب باشید و از خمیرمایۀ فریسی‌ها و صدوقی‌ها خود را دور نگه دارید.»
7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
پس شاگردان با یکدیگر به بحث پرداختند که چطور فراموش کردند نان بردارند.
8 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
عیسی پی برد که با یکدیگر دربارهٔ چه گفتگو می‌کنند. پس گفت: «ای کم‌ایمانان، چرا در این باره بحث می‌کنید که نان ندارید؟
9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
آیا هنوز هم نمی‌فهمید؟ آیا به یاد ندارید آن پنج نان و پنج هزار نفر و چند سبد را که برداشتید؟
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
یا از یاد برده‌اید که یکبار دیگر با هفت نان، چهار هزار نفر را سیر کردم؟ چند زنبیل از خُرده‌ها جمع کردید؟
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
پس چرا درک نمی‌کنید که من دربارهٔ نان سخن نمی‌گویم؟ باز هم می‌گویم: از خمیرمایهٔ فریسی‌ها و صدوقی‌ها خود را دور نگاه دارید.»
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
بالاخره شاگردان فهمیدند که منظور عیسی از «خمیرمایه»، همانا تعلیمات فریسی‌ها و صدوقی‌ها است.
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
وقتی عیسی به قیصریهٔ فیلیپی رسید، از شاگردانش پرسید: «مردم پسر انسان را که می‌دانند؟»
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
جواب دادند: «بعضی‌ها می‌گویند که یحیای تعمید‌دهنده است؛ عده‌ای نیز می‌گویند ایلیا، یا ارمیا و یا یکی دیگر از پیامبران است که دوباره ظهور کرده است.»
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
سپس پرسید: «شما چه می‌گویید؟ به نظر شما من که هستم؟»
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
شمعون پطرس جواب داد: «تویی مسیح، پسر خدای زنده!»
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
عیسی فرمود: «ای شمعون، پسر یونا، خوشا به حال تو! زیرا تو این حقیقت را از انسان نیاموختی، بلکه پدر آسمانی من این را بر تو آشکار ساخته است.
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
و من نیز می‌گویم که تویی پطرس، یعنی”صخره“، و من بر روی این صخره، کلیسای خود را بنا می‌کنم، و قدرتهای جهنم هرگز قادر به نابودی آن نخواهند بود. (Hadēs g86)
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
من کلیدهای ملکوت آسمان را به تو می‌دهم. آنچه بر زمین ببندی، در آسمان نیز بسته خواهد شد، و آنچه بر زمین بگشایی، در آسمان نیز گشوده خواهد شد.»
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
آنگاه به شاگردانش دستور اکید داد که به کسی نگویند که او مسیح است.
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
از آن پس، عیسی آشکارا به شاگردانش می‌گفت که لازم است به اورشلیم برود و اینکه در آنجا مشایخ و کاهنان اعظم و علمای دین او را آزار داده، خواهند کشت، اما در روز سوم زنده خواهد شد.
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
پطرس او را به کناری کشیده، با مخالفت به او گفت: «سَروَر من، خدا نکند که چنین اتفاقی برای شما بیفتد.»
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
عیسی برگشت و به پطرس فرمود: «دور شو از من ای شیطان! تو دام خطرناکی برای من هستی! تو با دید انسانی به این موضوع نگاه می‌کنی، نه با دید خدایی.»
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
آنگاه عیسی به شاگردانش گفت: «اگر کسی از شما بخواهد پیرو من باشد باید از خودخواهی دست بردارد و صلیب خود را بر دوش گیرد و مرا پیروی کند.
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
هر که بخواهد جان خود را نجات دهد، آن را از دست خواهد داد؛ اما هر که جانش را به خاطر من از دست بدهد، آن را نجات خواهد داد.
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
چه فایده که انسان تمام دنیا را ببرد، اما جانش را از دست بدهد؟ مگر چیزی با ارزشتر از جان او پیدا می‌شود؟
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
زیرا پسر انسان با فرشتگان خود در شکوه و جلال پدر خود خواهد آمد و هر کس را از روی اعمالش داوری خواهد کرد.
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
یقین بدانید که در اینجا کسانی ایستاده‌اند که تا پسر انسان را نبینند که در ملکوتِ خود می‌آید، نخواهند مرد.»

< மத்தேயு 16 >