< மத்தேயு 16 >
1 ௧ பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
ⲁ̅ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲛϭⲓⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲙⲛⲛⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ ⲉⲩⲡⲓⲣⲁⲍⲉ ⲙⲙⲟϥ ⲉⲩϫⲛⲟⲩ ⲙⲙⲟϥ ⲉⲧⲟⲩⲟⲟⲩ ⲉⲩⲙⲁⲉⲓⲛ ⲉⲃⲟⲗ ϩⲛⲧⲡⲉ.
2 ௨ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
ⲃ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ.
3 ௩ உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
ⲅ̅
4 ௪ இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
ⲇ̅ϫⲉ ⲧⲅⲉⲛⲉⲁ ⲙⲡⲟⲛⲏⲣⲟⲛ ⲁⲩⲱ ⲛⲛⲟⲉⲓⲕ. ⲥϣⲓⲛⲉ ⲛⲥⲁⲟⲩⲙⲁⲉⲓⲛ. ⲁⲩⲱ ⲛⲛⲉⲩϯⲙⲁⲉⲓⲛ ⲛⲁⲥ ⲛⲥⲁⲡⲙⲁⲉⲓⲛ ⲛⲓⲱⲛⲁⲥ. ⲁϥⲕⲁⲁⲩ ⲇⲉ ⲛⲥⲱϥ ⲁϥⲃⲱⲕ.
5 ௫ அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
ⲉ̅ⲁⲩⲉⲓ ⲇⲉ ⲛϭⲓⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲡⲉⲕⲣⲟ ⲁⲩⲣⲡⲱⲃϣ ⲛϫⲓⲟⲉⲓⲕ ⲛⲙⲙⲁⲩ.
6 ௬ இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
ⲋ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ⲛϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ϭⲱϣⲧ ⲛⲧⲉⲧⲛϯϩⲧⲏⲧⲛ ⲉⲃⲟⲗ ϩⲙⲡⲉⲑⲁⲃ ⲛⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲙⲛⲛⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ.
7 ௭ நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
ⲍ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛⲉⲩⲙⲉⲉⲩⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲙⲡⲉⲛϫⲓⲟⲉⲓⲕ ⲛⲙⲙⲁⲛ.
8 ௮ இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
ⲏ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥⲉⲓⲙⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ. ϫⲉ ⲁϩⲣⲱⲧⲛ ⲧⲉⲧⲛⲙⲉⲉⲩⲉ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ ⲛⲁⲧⲕⲟⲩⲓ ⲙⲡⲓⲥⲧⲓⲥ ϫⲉ ⲙⲡⲉⲧⲛϫⲓⲟⲉⲓⲕ ⲛⲙⲙⲏⲧⲛ.
9 ௯ இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
ⲑ̅ⲉⲓⲉ ⲙⲡⲁⲧⲉⲧⲛⲛⲟⲓ̈ⲟⲩⲧⲉ ⲛⲧⲉⲧⲛⲣⲡⲙⲉⲉⲩⲉ ⲁⲛ ⲙⲡϯⲟⲩ ⲛⲟⲉⲓⲕ ⲙⲡϯⲟⲩ ⲛϣⲟ ⲛⲣⲱⲙⲉ. ⲁⲩⲱ ϫⲉ ⲁⲧⲉⲧⲛϫⲓⲟⲩⲏⲣ ⲛⲕⲟⲧ.
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
ⲓ̅ⲟⲩⲇⲉ ⲙⲡⲥⲁϣϥ ⲛⲟⲉⲓⲕ ⲙⲡⲉϥⲧⲟⲟⲩ ⲛϣⲟ. ⲁⲩⲱ ϫⲉ ⲁⲧⲉⲧⲛϫⲓⲟⲩⲏⲣ ⲛⲃⲓⲣ.
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
ⲓ̅ⲁ̅ⲛⲁϣ ⲛϩⲉ ⲧⲉⲧⲛⲛⲟⲓ̈ⲁⲛ ϫⲉ ⲛⲧⲁⲓϫⲟⲟⲥ ⲁⲛ ⲛⲏⲧⲛ ⲉⲧⲃⲉⲟⲉⲓⲕ. ϯϩⲧⲏⲧⲛ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲙⲡⲉⲑⲁⲃ ⲛⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲙⲛⲛⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ.
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
ⲓ̅ⲃ̅ⲧⲟⲧⲉ ⲁⲩⲉⲓⲙⲉ ϫⲉ ⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲁⲛ ⲛⲁⲩ ⲉⲧⲃⲉⲡⲉⲑⲁⲃ ⲛⲛⲟⲉⲓⲕ. ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉⲧⲉⲥⲃⲱ ⲛⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲙⲛⲛⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ.
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
ⲓ̅ⲅ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉⲙⲙⲟⲟϣⲉ ⲛⲧⲕⲁⲓⲥⲁⲣⲓⲁ ⲙⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ. ⲁϥϫⲛⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉⲣⲉⲛⲣⲱⲙⲉ ϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ.
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
ⲓ̅ⲇ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ϫⲉ ϩⲟⲓⲛⲉ ⲙⲉⲛ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲡⲃⲁⲡⲧⲓⲥⲧⲏⲥ ⲡⲉ. ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ϫⲉ ϩⲏⲗⲓⲁⲥ ⲡⲉ. ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ϫⲉ ⲓⲉⲣⲏⲙⲓⲁⲥ ⲡⲉ ⲏ ⲟⲩⲁ ⲛⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲡⲉ.
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
ⲓ̅ⲉ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ. ϫⲉ ⲛⲧⲱⲧⲛ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ ⲉⲧⲉⲧⲛϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲅⲛⲓⲙ.
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
ⲓ̅ⲋ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛϭⲓⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲛϩ.
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
ⲓ̅ⲍ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲛⲁⲓⲁⲧⲕ ⲥⲓⲙⲱⲛ ⲃⲁⲣⲓⲱⲛⲁ ϫⲉ ⲛⲥⲁⲣⲝ ⲁⲛ ϩⲓⲥⲛⲟϥ ⲡⲉⲛⲧⲁϥϭⲉⲗⲡⲡⲁⲓ ⲛⲁⲕ ⲉⲃⲟⲗ. ⲁⲗⲗⲁ ⲡⲁⲉⲓⲱⲧ ⲡⲉ ⲉⲧϩⲛⲙⲡⲏⲩⲉ.
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
ⲓ̅ⲏ̅ⲁⲛⲟⲕ ⲇⲉ ϩⲱ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲕ. ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲉⲧⲣⲟⲥ ⲁⲩⲱ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛⲧⲉⲓⲡⲉⲧⲣⲁ ϯⲛⲁⲕⲱⲧ ⲛⲧⲁⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲁⲩⲱ ⲙⲡⲩⲗⲏ ⲛⲁⲙⲛⲧⲉ ⲛⲁⲉϣϭⲙϭⲟⲙ ⲉⲣⲟⲥ ⲁⲛ. (Hadēs )
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
ⲓ̅ⲑ̅ϯⲛⲁϯ ⲇⲉ ⲛⲁⲕ ⲛⲛϣⲟϣⲧ ⲛⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲛⲙⲡⲏⲩⲉ ⲁⲩⲱ ⲡⲉⲧⲕⲛⲁⲙⲟⲣϥ ϩⲓϫⲙⲡⲕⲁϩ ϥⲛⲁϣⲱⲡⲉ ⲉϥⲙⲏⲣ ϩⲛⲙⲡⲏⲩⲉ. ⲁⲩⲱ ⲡⲉⲧⲕⲛⲁⲃⲟⲗϥ ϩⲓϫⲙⲡⲕⲁϩ ϥⲛⲁϣⲱⲡⲉ ⲉϥⲃⲏⲗ ϩⲛⲙⲡⲏⲩⲉ.
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
ⲕ̅ⲧⲟⲧⲉ ⲁϥϩⲱⲛ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉⲕⲁⲥ ⲛⲛⲉⲩϫⲟⲟⲥ ⲉⲗⲁⲁⲩ ϫⲉ ⲛⲧⲟϥ ⲡⲉ ⲡⲉⲭ̅ⲥ̅.
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
ⲕ̅ⲁ̅ϫⲓⲛⲡⲉⲩⲟⲉⲓϣ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲁⲣⲭⲉⲓ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲉⲧⲁⲙⲙⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ. ϫⲉ ϩⲁⲡⲥ ⲉⲧⲣⲉϥⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲙⲁ ⲛϥϣⲡϩⲁϩ ⲛϩⲓⲥⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ. ⲙⲛⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ. ⲙⲛⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ. ⲛⲥⲉⲙⲟⲩⲟⲩⲧ ⲙⲙⲟϥ. ⲛϥⲧⲱⲟⲩⲛ ϩⲙⲡⲙⲉϩϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ.
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
ⲕ̅ⲃ̅ⲁϥϣⲟⲡⲥ ⲛⲧⲟⲟⲧϥ ⲛϭⲓⲡⲉⲧⲣⲟⲥ ⲁϥⲁⲣⲭⲉⲓ ⲛⲉⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲕⲟⲩⲟϫ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲛⲉⲡⲁⲓ ϣⲱⲡⲉ ⲙⲙⲟⲕ.
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
ⲕ̅ⲅ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲕⲟⲧϥ ⲡⲉϫⲁϥ ⲙⲡⲉⲧⲣⲟⲥ. ϫⲉ ⲃⲱⲕ ⲉⲡⲁϩⲟⲩ ⲙⲙⲟⲓ ⲡⲥⲁⲇⲁⲛⲁⲥ. ⲛⲧⲕⲟⲩⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⲛⲁⲓ. ϫⲉ ⲛⲉⲕⲙⲉⲉⲩⲉ ⲁⲛ ⲉⲛⲁⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲗⲗⲁ ⲉⲛⲁⲛⲣⲱⲙⲉ.
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
ⲕ̅ⲇ̅ⲧⲟⲧⲉ ⲓ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲡⲉⲧⲟⲩⲱϣ ⲉⲉⲓ ⲉⲡⲁϩⲟⲩ ⲙⲙⲟⲓ ⲙⲁⲣⲉϥⲁⲡⲁⲣⲛⲁ ⲙⲙⲟϥ ⲛϥϥⲓ ⲙⲡⲉϥⲥxⲟ̅ⲥ̅.
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
ⲕ̅ⲉ̅ⲡⲉⲧⲛⲁⲟⲩⲱϣ ⲅⲁⲣ ⲉⲧⲟⲩϫⲟ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ϥⲛⲁⲥⲟⲣⲙⲉⲥ. ⲡⲉⲧⲛⲁⲥⲱⲣⲙ ⲇⲉ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ⲉⲧⲃⲏⲏⲧ ϥⲛⲁϩⲉ ⲉⲣⲟⲥ.
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
ⲕ̅ⲋ̅ⲉⲣⲉⲡⲣⲱⲙⲉ ⲅⲁⲣ ⲛⲁϯϩⲏⲩ ⲛⲟⲩ. ⲉϥϣⲁⲛϯϩⲏⲩ ⲇⲉ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲧⲏⲣϥ. ⲛϥϯⲟⲥⲉ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ. ⲏ ⲟⲩ ⲡⲉⲧⲉⲣⲉⲡⲣⲱⲙⲉ ⲛⲁⲧⲁⲁϥ ⲛϣⲃⲃⲓⲱ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ.
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
ⲕ̅ⲍ̅ⲡϣⲏⲣⲉ ⲅⲁⲣ ⲙⲡⲣⲱⲙⲉ ⲛⲏⲩ ϩⲙⲡⲉⲟⲟⲩ ⲙⲡⲉϥⲉⲓⲱⲧ ⲙⲛⲛⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛϥⲧⲱⲱⲃⲉ ⲙⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲕⲁⲧⲁⲛⲉϥϩⲃⲏⲩⲉ.
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲕ̅ⲏ̅ϩⲁⲙⲏⲛ ⲅⲁⲣ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲟⲩⲛϩⲟⲓⲛⲉ ⲛⲛⲉⲧⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲙⲡⲉⲓⲙⲁ. ⲛⲁⲓ ⲛⲥⲉⲛⲁϫⲓϯⲡⲉ ⲁⲛ ⲙⲡⲙⲟⲩ ϣⲁⲛⲧⲟⲩⲛⲁⲩ ⲉⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉϥⲛⲏⲩ ϩⲛⲧⲉϥⲙⲛⲧⲣⲣⲟ.