< மத்தேயு 15 >
1 ௧ அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
Тогава дойдоха при Исуса фарисеи и книжници от Ерусалим и казаха:
2 ௨ உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
Защо Твоите ученици престъпват преданието на старейшините? Понеже не си мият ръцете, когато ядат хляб.
3 ௩ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
А Той в отговор им каза: Защо и вие заради вашето предание престъпвате Божията заповед?
4 ௪ உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
Защото Бог каза: “Почитай баща си и майка си”; и
5 ௫ நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
Но вие казвате: Който рече на баща си или майка си: Това мое имане, с което би могъл да си помогнеш, е подарено Богу,
6 ௬ உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
- той да не почита баща си, [или майка си]. Така, заради вашето предание, осуетихте Божията дума.
7 ௭ மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Лицемери! Добре е пророкувал Исаия за вас, като е казал:
8 ௮ இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
“Тия люде [се приближават при Мене с устата си, и] Ме почитат с устните си; Но сърцето им далеч отстои от Мене.
9 ௯ மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
Обаче напразно Ми се кланят, като преподават за поучения човешки заповеди”.
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
И като повика народа, рече им: Слушайте и разбирайте!
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
Това, което влиза в устата, не осквернява човека; но това, което излиза от устата, то осквернява човека.
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
Тогава се приближиха учениците Му и рекоха: Знаеш ли, че фарисеите се съблазниха като чуха тая дума?
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
А Той в отговор рече: Всяко растение, което Моят небесен Отец не е насадил, ще се изкорени.
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Оставете ги; те са слепи водачи; а слепец слепеца ако води, и двамата ще паднат в ямата.
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
Петър в отговор Му рече: Обясни ни тая притча.
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
А Той каза: И вие ли сте още без разумление.
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Не разбирате ли, че всичко що влиза в устата, минава в корема, и се изхвърля в захода?
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
А онова, което излиза из устата, произхожда от сърцето, и то осквернява човека.
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
Защото от сърцето произлизат зли помисли, убийства, прелюбодейства, блудства, кражби, лъжесвидетелства, хули.
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
Тия са нещата, които оскверняват човека; а да яде с немити ръце, това не го осквернява.
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
И, като излезе оттам, Исус се оттегли в тирските и сидонските страни.
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
И, ето, една ханаанка излезе от ония места и извика, казвайки: Смили се за мене Господи, Сине Давидов; дъщеря ми зле се мъчи от бяс.
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Но Той не й отговори ни дума. Учениците дойдоха и Му се молеха, като рекоха: Отпрати я, защото вика подире ни.
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
А Той в отговор каза: Аз не съм пратен, освен до загубените овце от Израилевия дом.
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
А тя дойде, кланяше Му се и казваше: Господи помогни ми.
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
Той в отговор рече: Не е прилично да се вземе хляба на децата и да се хвърли на кученцата.
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
А тя рече: Така, Господи; ни и кученцата ядат от трохите, които падат от трапезата на господарите им.
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
Тогава Исус в отговор й рече: О жено, голяма е твоята вяра; нека ти бъде според желанието. И дъщеря й оздравя в същия час.
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
И като замина оттам, Исус дойде при галилейското езеро; и качи се на бърдото и седеше там.
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
И дойдоха при Него големи множества, които имаха със себе си куци, слепи, неми, недъгави и много други, и сложиха ги пред нозете Му; и Той ги изцели;
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Така щото народът се чудеше, като гледаше неми да говорят, недъгави оздравели, куци да ходят, и слепи да гледат. И прославиха Израилевия Бог.
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
А Исус повика учениците Си и рече: Жално Ми е за народа, защото три дни вече седят при Мене и нямат що да ядат; а не искам да ги разпусна гладни, да не би да им премалее по пътя.
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
Учениците Му казаха: Отгде да имаме в уединено място толкова хляб, че да нахраним такова голямо множество?
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Исус им каза: Колко хляба имате? А те рекоха: Седем и малко рибки.
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Тогава заповяда на народа да насядат на земята.
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
И като взе седемте хляба и рибите, благодари и разчупи; и даде на учениците, а учениците на народа.
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
И ядоха всички и наситиха се, и дигнаха останалите къшеи, седем кошници пълни.
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
А ония, които ядоха, бяха четири хиляди мъже, освен жени и деца.
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
И като разпусна народа, влезе в ладията, и дойде в магаданските предели.