< மத்தேயு 15 >

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
Kangeb nob dinglib kange nob mulanka ci bou fiye Yesu wiye, fire Ursalima ci yi ki.
2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
Ye bwi bi bei tomange mue kim diye nobo dur biro matiye? mani ci nir kanci nime ci ca cari.
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
Yesu kari me ci, kume ye bwi kom kim werfuner kwamare ki dike kom bwangten tiye?
4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
Kwama tok ki Nee tee mwe dur kange ne mwe. Nawo tok kro bwir dor tecer. kaka nece ri, tam ca bwiya.
5 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
Di la kom ki gwam wo yi Tece kak Nece ki, tikali mo fiyati minen naweu luma kwama nen.
6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
Ni wo cwi bo co ne tece dur nure kom tu ker kwama yilam manki nage ker dike kom bwantentiye.
7 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Kom kulendo bwir, dong dong Ishaya tok ker dor kumer.
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
Yi ki nubo wure ki niye dur fo tol niyeyer, ner ciyero kutan kange mo.
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
Ciki wabye kone, wori ci merang werfuner nober, yi dige a bwanten tiki ciye.
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
La co merkangka nobek fiye co wiye con yi ci kom ta cini kom nyomom.
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
Kebo dige doti nyi nii yilati ki duyie dige ceruri nyi nii, co no yilanti dutiye.
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
Bibei tomange ceu bo co mo nyomom nob dinglibo nuwabo luma ci nuwa kero wa?
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
Yesu kari yi ci fikko wo kebo Temi diye fiye, an kwom co.
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Kom dobti nyo cin fukma ti kabo tiye. tana fukma ta kece fukma nin cweri, gwam ciye ciyan yarken buwak.
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
Bitrus kari yi Yesu, fwetang nyinen dang kewo.
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
Yesu tok ki kom ken kom yomba?
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Kom toba dige doti nyi gwam yakenti fureu, nyo a erti yaken tek bunak.
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
Dike ceruti nyi ki ceru mor nere, co dige nii yilati ki dutiye.
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
mor nee kwabanka digero bwir cirutiye, twal ka duwe, kayaka, Bwirangtum, kwii warkere cwerke kange tor kanganka.
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
Kangem bo co diger kang nii tiye ca ka kange buni nerka kange mni kang nii.
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
Yesu cokbon wi yaken yare cinan lor taya kange Sidon.
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
Knage nawiya kan aiya bo wi fiye cuwo, kun diro kibi kwan ki nuwa cire duwe mi teluwe bi bwe Dauda, bwe bubya mi ki ni mor dotange fir kange bwekelkle.
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Yesu kar cienbo ker, bibi tomange ce bo kenan co ciki yoken co bwang binen ti ki kiyange.
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
Yesu kari tok ki ci tomyebo fiye kange wiye, ci tom ye kwamae lemle wo lo Israila.
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
Con bo con cunge kanbom cem, co tok ki ki Teuwe tekang ye, kari tok ki daten a tu tii bibeiye a ne birin bi cuwe.
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
co ki nyo Teluwe birin bicuwe ki cam fitiwo curu kan nii luwe.
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
Yesu kari, yico nawiye bilenke mwe tenangi kabo. na yilamwen kambo mo cwitiye. Bubya ce fiya luma dang cang.
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Yesu dobom fiye cuwo yaken bi dom kange wima Galili, co kwiken diale la yikenwi.
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
Mwerkankako dutce bo cinen bo cinen ki, nobo mani nuwatu tiye, fukma, kilen kange nobo nyiyo tamtabe, nubo dutce. Kange nuo nuwa bo luma cin bo ki ki kabum yesu co ci twam twirak ciyeko.
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Nyo nubo kila yimati ki wo ci to nu o nyi tamtabe tok ket tiye. kilendo la yayamti kungando fiya luma fukma ti toi co ci dukton kwama
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
Yesu c bibei tomange ce cinen la tok ki ma ci noboti ci wari kange mo kume taar, ci manki diye ci a catiye, ma cwibo nyo ci cabo cari kari ci fumom nure.
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
abibei tomange ce kar cinen ba fiya carito fe, wo alam na bom nubo wo tiye.
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Yesu ki cirito kwem to nyi kom cike ciki niber kange jinge kilabo.
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Co Yesu ii nubo a yiken bitine.
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
Tu carito wo niber kange jinge, bwi koko coma buka kange, con wuangum curito co, ci ne bibei tomange ce, bibei tmnge ne nobe.
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
Nubo gwam ca cin bwam, ci mweran fiti cai bulendo niber dim.
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
Nubo ca ci bi kate naw ka nabarub, kiyebo natib kange bibei.
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
Yesu yo nubo doken nabire mwenge taken yare magadan

< மத்தேயு 15 >