< மத்தேயு 14 >
1 ௧ அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு,
ⲁ̅ϩⲙ ⲡⲉⲩⲟⲉⲓϣ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲥⲱⲧⲙ ⲛϭⲓ ϩⲏⲣⲱⲇⲏⲥ ⲡⲧⲉⲧⲣⲁⲁⲣⲭⲏⲥ ⲉⲡⲥⲟⲉⲓⲧ ⲛⲓⲏⲥ
2 ௨ தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
ⲃ̅ⲡⲉϫⲁϥ ⲛⲛⲉϥϩⲙϩⲁⲗ ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲡⲃⲁⲡⲧⲓⲥⲧⲏⲥ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉⲛⲧⲁϥⲧⲱⲟⲩⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲛⲉⲓϭⲟⲙ ⲉⲛⲉⲣⲅⲉⲓ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ
3 ௩ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.
ⲅ̅ϩⲏⲣⲱⲇⲏⲥ ⲅⲁⲣ ϩⲙ ⲡⲉⲩⲟⲉⲓϣ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲁⲙⲁϩⲧⲉ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲁϥⲙⲟⲣϥ ⲁϥⲕⲱ ⲙⲙⲟϥ ϩⲙ ⲡⲉϣⲧⲉⲕⲟ ⲉⲧⲃⲉ ϩⲏⲣⲱⲇⲓⲁⲥ ⲑⲓⲙⲉ ⲙⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲡⲉϥⲥⲟⲛ
4 ௪ ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
ⲇ̅ⲛⲉⲣⲉⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲅⲁⲣ ϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩⲕ ⲉⲝⲉⲥⲧⲉⲓ ⲛⲁⲕ ⲉϫⲓ ⲙⲙⲟⲥ
5 ௫ ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
ⲉ̅ⲁⲩⲱ ⲛⲉϥⲟⲩⲱϣ ⲉⲙⲟⲟⲩⲧϥ ⲁϥⲣ ϩⲟⲧⲉ ϩⲏⲧϥ ⲙⲡⲙⲏⲏϣⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲉⲛⲉⲩϫⲓ ⲙⲙⲟϥ ⲡⲉ ϩⲱⲥ ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ
6 ௬ அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
ⲋ̅ⲛⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ⲇⲉ ⲛϭⲓ ⲡϩⲟⲩⲙⲓⲥⲉ ⲛϩⲏⲣⲱⲇⲏⲥ ⲁⲥϭⲟⲥϭⲥ ⲛϭⲓ ⲧϣⲉⲉⲣⲉ ⲛϩⲏⲣⲱⲇⲓⲁⲥ ⲛⲧⲙⲏⲧⲉ ⲁⲥⲣⲁⲛⲁϥ ⲛϩⲏⲣⲱⲇⲏⲥ
7 ௭ அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
ⲍ̅ⲁⲩⲱ ϩⲛ ⲟⲩⲁⲛⲁϣ ⲁϥϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ⲉϯ ⲛⲁⲥ ⲙⲡⲉⲧⲥⲛⲁⲁⲓⲧⲉⲓ ⲙⲙⲟϥ
8 ௮ அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
ⲏ̅ⲛⲧⲟⲥ ⲇⲉ ⲁⲩⲧⲟⲩⲛⲉⲓⲁⲧⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ ⲧⲉⲥⲙⲁⲁⲩ ⲡⲉϫⲁⲥ ϫⲉ ⲙⲁ ⲛⲁⲓ ϩⲙ ⲡⲉⲓⲙⲁ ⲛⲧⲁⲡⲉ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲡⲃⲁⲡⲧⲓⲥⲧⲏⲥ ϩⲓϫⲛ ⲟⲩⲡⲓⲛⲁⲝ
9 ௯ ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,
ⲑ̅ⲁϥⲗⲩⲡⲉⲓ ⲛϭⲓ ⲡⲣⲣⲟ ⲉⲙⲁⲧⲉ ⲉⲧⲃⲉ ⲛⲁⲛⲁⲩϣ ⲇⲉ ⲙⲛ ⲛⲉⲧⲛⲏϫ ⲛⲙⲙⲁϥ ⲁϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲉϯ ⲙⲙⲟⲥ ⲛⲁⲥ
10 ௧0 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான்.
ⲓ̅ⲁϥϫⲟⲟⲩ ⲁϥϥⲓ ⲛⲧⲁⲡⲉ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ϩⲙ ⲡⲉϣⲧⲉⲕⲟ
11 ௧௧ அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
ⲓ̅ⲁ̅ⲁⲩⲉⲓⲛⲉ ⲙⲙⲟⲥ ϩⲓϫⲙ ⲡⲡⲓⲛⲁⲝ ⲁⲩⲧⲁⲁⲥ ⲛⲧϣⲉⲉⲣⲉ ϣⲏⲙ ⲁⲥⲉⲓⲛⲉ ⲙⲙⲟⲥ ⲛⲧⲉⲥⲙⲁⲁⲩ
12 ௧௨ அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
ⲓ̅ⲃ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲇⲉ ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ ⲁⲩϥⲓ ⲙⲡⲉϥⲥⲱⲙⲁ ⲁⲩⲧⲟⲙⲥϥ ⲁⲩⲉⲓ ⲁⲩϫⲓⲡⲟⲩⲱ ⲛⲓⲏⲥ
13 ௧௩ இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.
ⲓ̅ⲅ̅ⲁϥⲥⲱⲧⲙ ⲇⲉ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲁϥⲁⲛⲁⲭⲱⲣⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ϩⲓⲟⲩϫⲟⲓ ⲉⲩⲙⲁ ⲛϫⲁⲓⲉ ⲙⲁⲩⲁⲁϥ ⲁⲩⲥⲱⲧⲙ ⲇⲉ ⲛϭⲓ ⲙⲙⲏⲏϣⲉ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ ⲡⲉⲍⲏ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲙⲡⲟⲗⲓⲥ
14 ௧௪ இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார்.
ⲓ̅ⲇ̅ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲁϥⲛⲁⲩ ⲉⲩⲛⲟϭ ⲙⲙⲏⲏϣⲉ ⲁϥϣⲛϩⲧⲏϥ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱⲟⲩ ⲁⲩⲱ ⲁϥⲣⲡⲁϩⲣⲉ ⲉⲛⲉⲧϣⲱⲛⲉ ⲛϩⲏⲧⲟⲩ
15 ௧௫ மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ⲓ̅ⲉ̅ⲣⲟⲩϩⲉ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲛϭⲓ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲙⲁ ⲟⲩϫⲁⲓⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲁⲡⲛⲁⲩ ⲟⲩⲉⲓⲛⲉ ⲕⲁⲙⲙⲏⲏϣⲉ ⲉⲃⲟⲗ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲃⲱⲕ ⲉⲛⲉⲧⲙⲉ ⲉⲧⲙⲡⲉⲩⲕⲱⲧⲉ ⲛⲥⲉϣⲱⲡ ⲛⲁⲩ ⲙⲡⲉⲧⲟⲩⲛⲁⲟⲩⲟⲙϥ
16 ௧௬ இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.
ⲓ̅ⲋ̅ⲓⲏⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲛⲥⲉⲣⲭⲣⲓⲁ ⲁⲛ ⲉⲧⲣⲉⲩⲃⲱⲕ ⲛⲧⲱⲧⲛ ϯⲛⲁⲩ ⲉⲧⲣⲉⲩⲟⲩⲱⲙ
17 ௧௭ அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
ⲓ̅ⲍ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲙⲛ ⲧⲁⲛⲗⲁⲁⲩ ⲙⲡⲉⲓⲙⲁ ⲛⲥⲁϯⲟⲩ ⲛⲟⲉⲓⲕ ⲙⲛ ⲧⲏⲃⲧ ⲥⲛⲁⲩ
18 ௧௮ அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
ⲓ̅ⲏ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲩⲉⲓⲥⲟⲩ ⲛⲁⲓ ⲉⲡⲉⲓⲙⲁ
19 ௧௯ அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
ⲓ̅ⲑ̅ⲁϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲉⲧⲣⲉⲛⲙⲏⲏϣⲉ ⲛⲟϫⲟⲩ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲙ ⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ ⲁϥϫⲓ ⲙⲡϯⲟⲩ ⲛⲟⲉⲓⲕ ⲙⲛ ⲡⲧⲏⲃⲧ ⲥⲛⲁⲩ ⲁϥϥⲓⲉⲓⲁⲧϥ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲉ ⲁϥⲥⲙⲟⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁϥⲡⲟϣⲟⲩ ⲁϥϯ ⲛⲛⲟⲉⲓⲕ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲇⲉ ⲛⲙⲙⲏⲏϣⲉ
20 ௨0 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
ⲕ̅ⲁⲩⲟⲩⲱⲙ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲱ ⲁⲩⲥⲉⲓ ⲁⲩϥⲓ ⲛⲛⲗⲁⲕⲙ ⲛⲧⲁⲩⲥⲉⲉⲡⲉ ⲙⲛ ⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲛⲕⲟⲧ ⲉⲩⲙⲉϩ
21 ௨௧ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
ⲕ̅ⲁ̅ⲛⲉⲧⲟⲩⲱⲙ ⲇⲉ ⲛⲉⲩⲛⲁⲣⲁϯⲟⲩ ⲛϣⲟ ⲛⲣⲱⲙⲉ ⲭⲱⲣⲓⲥ ϣⲏⲣⲉ ϣⲏⲙ ϩⲓⲥϩⲓⲙⲉ
22 ௨௨ இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
ⲕ̅ⲃ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁϥⲁⲛⲁⲅⲕⲁⲍⲉ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲧⲁⲗⲉ ⲉⲡϫⲟⲓ ⲁⲩⲱ ⲉⲣϣⲟⲣⲡ ⲉⲣⲟϥ ⲉⲡⲉⲕⲣⲟ ϣⲁⲛⲧⲉϥⲕⲱ ⲉⲃⲟⲗ ⲛⲙⲙⲏⲏϣⲉ
23 ௨௩ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.
ⲕ̅ⲅ̅ⲛⲧⲉⲣⲉϥⲕⲱ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲛⲙⲙⲏⲏϣⲉ ⲁϥⲁⲗⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲙ ⲡⲧⲟⲟⲩ ⲙⲁⲩⲁⲁϥ ⲁϥϣⲗⲏⲗ ⲣⲟⲩϩⲉ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ⲛⲉϥ ϩⲙ ⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲙⲁⲩⲁⲁϥ
24 ௨௪ அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.
ⲕ̅ⲇ̅ⲡϫⲟⲓ ⲇⲉ ⲛⲉϥⲟⲩⲏⲩ ⲉⲃⲟⲗ ⲙⲡⲉⲕⲣⲟ ⲛⲟⲩⲙⲏⲏϣⲉ ⲛⲥⲧⲁⲇⲓⲟⲛ ⲉⲩⲙⲟⲩⲕϩ ⲙⲙⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛϩⲓⲙⲏ ⲡⲧⲏⲩ ⲅⲁⲣ ⲛⲉϥϯ ⲟⲩⲃⲏⲩ ⲡⲉ
25 ௨௫ அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
ⲕ̅ⲉ̅ϩⲛ ⲧⲙⲉϩϥⲧⲟ ⲇⲉ ⲛⲟⲩⲏⲣϣⲉ ⲛⲧⲉⲩϣⲏ ⲁϥⲉⲓ ϣⲁⲣⲟⲟⲩ ⲉϥⲙⲟⲟϣⲉ ϩⲓϫⲛ ⲑⲁⲗⲁⲥⲥⲁ
26 ௨௬ அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
ⲕ̅ⲋ̅ⲛⲧⲉⲣⲟⲩⲛⲁⲩ ⲇⲉ ⲉⲣⲟϥ ⲉϥⲙⲟⲟϣⲉ ϩⲓϫⲛ ⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲁⲩϣⲧⲟⲣⲧⲣ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩⲫⲁⲛⲧⲁⲥⲙⲁ ⲡⲉ ⲁⲩⲱ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲑⲟⲧⲉ ⲁⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ
27 ௨௭ உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
ⲕ̅ⲍ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁϥϣⲁϫⲉ ⲛⲙⲙⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲧⲱⲕ ⲛϩⲏⲧ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲙⲡⲣⲣϩⲟⲧⲉ
28 ௨௮ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
ⲕ̅ⲏ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛⲁϥ ⲛϭⲓ ⲡⲉⲧⲣⲟⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲉϣϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲛⲁⲓ ⲉⲧⲣⲁⲉⲓ ϣⲁⲣⲟⲕ ϩⲓϫⲛ ⲙⲙⲟⲟⲩ
29 ௨௯ அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.
ⲕ̅ⲑ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲁⲙⲟⲩ ⲁϥⲉⲓ ⲉⲡⲉⲥⲏⲧ ⲛϭⲓ ⲡⲉⲧⲣⲟⲥ ϩⲙ ⲡϫⲟⲓ ⲁϥⲙⲟⲟϣⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛ ⲙⲙⲟⲟⲩ ⲁϥⲉⲓ ϣⲁ ⲓⲏⲥ
30 ௩0 காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
ⲗ̅ⲉϥⲛⲁⲩ ⲇⲉ ⲉⲡⲧⲏⲩ ⲁϥⲣ ϩⲟⲧⲉ ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲁⲣⲭⲉⲓ ⲛⲱⲙⲥ ⲁϥϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲙⲁⲧⲟⲩϫⲟⲓ
31 ௩௧ உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
ⲗ̅ⲁ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁϥⲥⲟⲟⲩⲧⲛ ⲛⲧⲉϥϭⲓϫ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲁϥⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁⲧⲕⲟⲩⲓ ⲙⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧⲃⲉ ⲟⲩ ⲁⲕⲇⲓⲥⲇⲁⲍⲉ
32 ௩௨ அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
ⲗ̅ⲃ̅ⲛⲧⲉⲣⲟⲩⲁⲗⲉ ⲇⲉ ⲉⲡϫⲟⲓ ⲁϥϭⲱ ⲛϭⲓ ⲡⲧⲏⲩ ⲛⲧⲉⲩⲛⲟⲩ
33 ௩௩ அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲟⲩⲱϣⲧ ⲛⲁϥ ⲛϭⲓ ⲛⲉⲧϣⲟⲟⲡ ϩⲙ ⲡϫⲟⲓ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲁⲙⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
34 ௩௪ பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள்.
ⲗ̅ⲇ̅ⲛⲧⲉⲣⲟⲩϫⲓⲟⲟⲣ ⲇⲉ ⲁⲩⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉⲡⲉⲕⲣⲟ ⲛⲅⲉⲛⲛⲏⲍⲁⲣⲉⲧ
35 ௩௫ அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
ⲗ̅ⲉ̅ⲁⲩⲥⲟⲩⲱⲛϥ ⲇⲉ ⲛϭⲓ ⲛⲣⲱⲙⲉ ⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲩϫⲟⲟⲩ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲉⲣⲓⲭⲱⲣⲟⲥ ⲧⲏⲣⲥ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲩⲉⲓⲛⲉ ⲛⲁϥ ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲙⲟⲕϩ
36 ௩௬ அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.
ⲗ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁⲩⲥⲡⲥⲱⲡϥ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϫⲱϩ ⲙⲙⲁⲧⲉ ⲉⲡⲧⲟⲡ ⲙⲡⲉϥϩⲟⲉⲓⲧⲉ ⲁⲩⲱ ⲛⲉⲛⲧⲁⲩϫⲱϩ ⲁⲩⲟⲩϫⲁⲓ