< மத்தேயு 12 >
1 ௧ அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.
त्या येळले येशु शब्बाथ दिनले शेतमाईन गया; तवय त्याना शिष्यसले भूक लागेल व्हती म्हणीन त्या ओंब्या तोडीन खाऊ लागनात.
2 ௨ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
हाई दखीसन परूशी त्यासले बोलनात, दखा, शब्बाथ दिनले जे योग्य नही ते तुना शिष्य करी राहिनात.
3 ௩ அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
त्यावर येशुनी त्यासले उत्तर दिधं, दावीद अनं त्यानाबरोबरना यासले जवय भूक लागनी तवय त्यानी काय करं? हाई तुम्हीन वाचं नही का.
4 ௪ அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.
तो देवना मंदिरमा कसा गया अनी नियमाप्रमाणं फक्त याजकनी खावानी समर्पित भाकर, त्यानी अनं त्याना सोबतीसनी कश खादं;
5 ௫ அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
तसच शब्बाथ दिनले याजक मंदिरमा शब्बाथना नियम तोडतस तरी पण निर्दोष राहतस हाई तुम्हीन मोशेना नियमशास्त्रमा वाचात नही का?
6 ௬ தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
पण मी तुमले सांगस, की, मंदिरपेक्षा बी मोठा असा कोणतरी तुमनामा आठे शे.
7 ௭ பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
जर तुमले याना अर्थ समजता, की, माले दया पाहिजे अर्पण नही, तर तुम्हीन निर्दोषीसले दोषी नही ठरावतात.
8 ௮ மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
कारण मनुष्यना पोऱ्या शब्बाथ दिनना धनी शे.
9 ௯ அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
मंग येशु तठेन निंघीसन त्यासना सभास्थानमा गया;
10 ௧0 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
अनी दखा, तठे वाळेल हातना एक माणुस व्हता; तवय त्यासनी त्याले दोष लागाले पाहिजे म्हणीसन परूशीसनी त्याले ईचारं, शब्बाथ दिनले रोग बरं करनं योग्य शे का?
11 ௧௧ அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
येशुनी त्यासले सांगं, तुमनामा असा कोण माणुस शे की, ज्यानं एकच मेंढरू राहिसन ते शब्बाथ दिनले खड्डामा पडनं तर त्याले उचलीन बाहेर काढावु नही का?
12 ௧௨ ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார்.
तर मेंढरसपेक्षा माणुसनं मोल कितलं तरी बरच मोठं शे! यामुये शब्बाथ दिनले एखादाले मदत करनं योग्य शे.
13 ௧௩ பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
मंग त्यानी त्या वाळेल हातना माणुसले सांगं, तुना हात सरळ कर, तवय त्यानी हात सरळ करा अनी तो बरा व्हईन दुसरा हातना मायक व्हयना.
14 ௧௪ அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
त्यानंतर परूशीसनी बाहेर जाईसन त्याना विरोधमा योजना आखी की, त्याना घात कशा कराना.
15 ௧௫ இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
पण हाई वळखीन येशु तठेन निंघी गया, तवय बराच लोके त्यानामांगे गयात अनं त्यानी त्या सर्वासले बरं करं;
16 ௧௬ தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
अनी त्यासले बजाईन सांगं, की, माले प्रकट करू नका;
17 ௧௭ ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
याकरता की, यशया संदेष्टानाद्वारा जे सांगामा येल व्हतं ते पुरं व्हई; ते असं की,
18 ௧௮ “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
दखा, हाऊ मना सेवक याले मी निवाडेल शे, तो माले परमप्रिय शे; त्यानावर मी संतुष्ट शे; त्यानावर मी आपला आत्मा घालसु, अनं तो गैरयहूदीसना न्याय करी.
19 ௧௯ வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
तो भांडावु नही अनं वरडावु नही, अनी कोणलेच त्याना आवाज रस्तामा ऐकु येवाव नही.
20 ௨0 அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
तो अशक्तसले मोडावु नही, अनं धाकला मधला दिवाले तो वलाडावु नही, जोपावत तो न्यायले विजयी करस नही.
21 ௨௧ அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
अनी गैरयहूदीमाधला सर्वा लोके त्याना नावनी आशा धरतीन
22 ௨௨ அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.
मंग त्यासनी एक भूत लागेल माणुसले येशुकडे आनं, हाऊ माणुस आंधया अनं मुका व्हता अनी त्यानी त्याले बरं करं, अनी तो मुका बोलाले अनी दखाले लागना.
23 ௨௩ மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
तवय सर्वा लोके नवल करीसन सांगु लागनात, की, हाऊ दावीदना पोऱ्या व्हई का?
24 ௨௪ பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
पण परूशी हाई ऐकीसन सांगु लागनात, हाऊ ते भूतसना राजा बालजबूल यानी मदत लिसन भूत काढस.
25 ௨௫ இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
येशुनी त्यासना मनमधला ईचार वळखीन त्यासले सांगं, आपसमा फुट पडेल प्रत्येक राज्य नष्ट व्हई जास, अनी ज्या शहरमा अनी घरना लोकसमा आपसमा फुट पडनी तर ते शहर अनी घर टिकु शकस नही.
26 ௨௬ சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
सैतानच जर सैतानले काढाले लागना तर त्यासनामा फुट पडी जाई मंग त्यानं राज्य कसं टिकी.
27 ௨௭ நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
जर मी भूतसना राजा बालजबूल यानी मदत लिसन भूत काढत व्हसू तर तुमना लोके कोणी मदत लिसन काढतस? म्हणीन त्याच तुमना न्याय करतीन;
28 ௨௮ நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
पण, मी जर देवना आत्माघाई, भूत काढी ऱ्हायनु तर देवनं राज्य तुमनावर येल शे.
29 ௨௯ அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
तसच पहीलवान माणुसले अगोदर बांधाशिवाय त्याना घरमा घुशीसन त्याना वस्तु लुटीसन कोणले नेता ई का? त्याले बांध तरच तो त्यानं घर लुटू शकस.
30 ௩0 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
जो मनासंगे नही तो मनाविरूध्द शे, अनी जो मनाबरोबर गोया करस नही तर तो उधळी टाकस.
31 ௩௧ ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
यामूये मी तूमले सांगस, की माणुसना प्रत्येक पाप अनी निंदानी क्षमा व्हई. पण जो कोणी पवित्र आत्मानी निंदा करी त्यानी क्षमा व्हवाव नही.
32 ௩௨ எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
अनी जो कोणी मनुष्यना पोऱ्याविरूध्द काही बोली तर त्याना अपराधनी क्षमा व्हई जाई, पण जो कोणी पवित्र आत्माना विरोधमा बोली त्याले त्याना अपराधसनी क्षमा ह्या युगमा बी नही. अनी येनारा युगमा बी व्हवाव नही. (aiōn )
33 ௩௩ மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
यामुये झाड बी चांगलं अनी त्यानं फळ बी चांगलं शे असा म्हणा; नहीतर झाड वाईट शे अनी त्याना फळ बी वाईट; कारण झाड आपले फळवरतीन वळखाई जास.
34 ௩௪ விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
अहो सापना पिल्लासवन, तुम्हीन वाईट ऱ्हाईसन तुमले चांगल्या गोष्टी कशा बोलता येतीन? कारण जे मनमा भरेल शे तेच तोंडमाईन निंघी.
35 ௩௫ நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
चांगला माणुस आपला भांडामाईन चांगल्या गोष्टी काढस, अनी वाईट माणुस आपले भांडामाईन वाईट गोष्टी काढस.
36 ௩௬ மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
मी तुमले सांगस की, ज्या बी व्यर्थ गोष्टी माणुस सांगी न्यायना दिनले त्याले त्याना हिशोब देनाच पडी.
37 ௩௭ ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
कारण आपला बोलनावर तु निर्दोष ठरशी अनी आपलाच बोलनावर तु दोषी ठरशी.
38 ௩௮ அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
तवय शास्त्री अनं परूशी यासनापाईन काहीजण त्याले बोलनात, गुरजी, तुमना हातघाई काही चिन्ह दखानी आमनी ईच्छा शे.
39 ௩௯ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
पण त्यानी त्यासले उत्तर दिधं, हाई दुष्ट अनी व्यभिचारी पिढी चिन्ह मांगस, पण योना संदेष्टाना चिन्हशिवाय तिले दुसरं कोणतच चिन्ह देवामा येवाव नही.
40 ௪0 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
कारण जस योना तीन दिन अनं तीन रात मासाना पोटमा व्हता, तसाच मनुष्यना पोऱ्या बी तीन दिन तीन रात पृथ्वीना पोटमा ऱ्हाई.
41 ௪௧ யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
न्यायना दिनले निनवेना लोके हाई पिढीना लोकससंगे उभा ऱ्हाईसन हिले दोषी ठरावतीन, कारण त्यासनी योनाना संदेश ऐकीसन पश्चाताप करा; अनी दखा, आठे जो शे तो योनापेक्षा श्रेष्ठ शे.
42 ௪௨ தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
न्यायना दिनले दक्षिणकडनी राणी, हाई पिढीना लोकेसंगे उभी ऱ्हाईन हिले दोषी ठराई, कारण ती शलमोन राजानं ज्ञान ऐकाकरता पृथ्वीना सीमापाईन वनी; अनी दखा, शलमोनपेक्षा श्रेष्ठ आठे शे.
43 ௪௩ அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
जवय दुष्ट आत्मा कोणा माणुस माईन निंघस, तवय तो आराम कराकरता ओसाड जागामा भटकत फिरस, पण त्याले जागा मिळस नही,
44 ௪௪ நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,
तवय तो सांगस, ज्या घरमाईन मी येल व्हतु त्यामा परत जासु; अनी जवय तो तठे वापस जास, तवय त्याले ते घर रिकामं साफसफाई करेल, सजाडेल अस दखास.
45 ௪௫ திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.
मंग तो जाईसन आपलापेक्षा दुष्ट, असा दुसरा सात आत्मा आपलासंगे लई येस, अनी त्या मजार जाईन तठे ऱ्हातस; मंग त्या माणुसनी शेवटनी अवस्था पहिलापेक्षा जास्त वाईट व्हस; तसच हाई पिढीनं बी व्हई.
46 ௪௬ இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
मंग येशु लोकसनी गर्दीसंगे बोली ऱ्हाईंता, दखा, त्यानी माय अनं त्याना भाऊ त्यानासंगे बोलाकरता बाहेर उभा ऱ्हायेल व्हतात.
47 ௪௭ அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
तवय कोणी तरी येशुले सांगं, दख, तुनी माय अनं तुना भाऊ तुनासंगे बोलाकरता बाहेर उभा ऱ्हायेल शेतस.
48 ௪௮ தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,
पण येशुनी त्या सांगणाराले उत्तर दिधं, कोण मनी माय अनं कोण मना भाऊ?
49 ௪௯ தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
अनी येशु आपला शिष्यसकडे हात दखाडीन बोलना, “दखा, मनी माय अनं मना भाऊ!
50 ௫0 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.
कारण जो कोणी मना स्वर्गना बापना ईच्छाप्रमाणे करस तोच मना भाऊ, बहिण, अनं माय शे.”