< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
Племе Исуса Христа, сина Давида Аврамовог сина.
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
Авраам роди Исака. А Исак роди Јакова. А Јаков роди Јуду и браћу његову.
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
А Јуда роди Фареса и Зару с Тамаром. А Фарес роди Есрома. А Есром роди Арама.
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
А Арам роди Аминадава. А Аминадав роди Наасона. А Наасон роди Салмона.
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
А Салмон роди Вооза с Рахавом. А Вооз роди Овида с Рутом. А Овид роди Јесеја.
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
А Јесеј роди Давида цара. А Давид цар роди Соломуна с Уријиницом.
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
А Соломун роди Ровоама. А Ровоам роди Авију. А Авија роди Асу.
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
А Аса роди Јосафата. А Јосафат роди Јорама. А Јорам роди Озију.
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
А Озија роди Јоатама. А Јоатам роди Ахаза. А Ахаз роди Езекију.
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
А Езекија роди Манасију, а Манасија роди Амона. А Амон роди Јосију.
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
А Јосија роди Јехонију и браћу његову, у сеоби вавилонској.
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
А по сеоби вавилонској, Јехонија роди Салатиила. А Салатиило роди Зоровавела.
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
А Зоровавел роди Авиуда. А Авиуд роди Елијакима. А Елијаким роди Азора.
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
А Азор роди Садока. А Садок роди Ахима. А Ахим роди Елиуда.
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
А Елиуд роди Елеазара, а Елеазар роди Матана. А Матан роди Јакова.
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
А Јаков роди Јосифа, мужа Марије, која роди Исуса прозваног Христа.
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
Свега дакле колена од Аврама до Давида, колена четрнаест, а од Давида до сеобе вавилонске, колена четрнаест, а од сеобе вавилонске до Христа, колена четрнаест.
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
А рођење Исуса Христа било је овако: кад је Марија, мати Његова, била испрошена за Јосифа, а још док се нису били састали, нађе се да је она трудна од Духа Светог.
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
А Јосиф муж њен, будући побожан и не хтевши је јавно срамотити, намисли је тајно пустити.
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
Но кад он тако помисли, а то му се јави у сну анђео Господњи говорећи: Јосифе, сине Давидов! Не бој се узети Марије жене своје; јер оно што се у њој зачело од Духа је Светог.
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
Па ће родити Сина, и надени Му име Исус; јер ће Он избавити свој народ од греха њихових.
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
А ово је све било да се изврши шта је Господ казао преко пророка који говори:
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
Ето, девојка ће затруднети, и родиће Сина, и наденуће Му име Емануило, које ће рећи: С нама Бог.
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
Кад се Јосиф пробуди од сна, учини како му је заповедио анђео Господњи, и узме жену своју.
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
И не знаше за њу док не роди Сина свог првенца, и надеде Му име Исус.

< மத்தேயு 1 >