< மாற்கு 7 >
1 ௧ எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
Atunci s-au adunat la el fariseii și anumiți scribi care au venit din Ierusalim.
2 ௨ அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள்.
Și când au văzut pe unii din discipolii lui mâncând pâine cu mâinile spurcate, adică nespălate, îi învinovățeau.
3 ௩ ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்;
Fiindcă fariseii și toți iudeii, dacă nu se spală des pe mâini, nu mănâncă, ținând tradiția bătrânilor.
4 ௪ கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
Și când vin de la piață, dacă nu se îmbăiază, nu mănâncă. Și sunt multe alte lucruri, pe care le-au primit să le țină, precum este: îmbăierea paharelor și a oalelor și a vaselor de aramă și a meselor.
5 ௫ அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
Atunci fariseii și scribii l-au întrebat: De ce nu umblă discipolii tăi conform tradiției bătrânilor, ci mănâncă pâine cu mâinile nespălate?
6 ௬ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,
El a răspuns și le-a zis: Bine a profețit Isaia despre voi, fățarnicilor, așa cum este scris: Acest popor mă onorează cu buzele lor, dar inima lor este departe de mine.
7 ௭ மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
Dar în zadar mi se închină, învățându-[i] pe oameni ca doctrine poruncile oamenilor.
8 ௮ நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார்.
Fiindcă lăsând deoparte porunca lui Dumnezeu, țineți tradiția oamenilor, precum îmbăierea oalelor și a paharelor; și faceți multe alte lucruri asemănătoare.
9 ௯ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.
Și le-a spus: Prea bine respingeți porunca lui Dumnezeu, ca să țineți propria voastră tradiție.
10 ௧0 எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
Fiindcă Moise a spus: Onorează pe tatăl tău și pe mama ta; și: Cel ce blestemă pe tată sau mamă, de moarte să moară;
11 ௧௧ நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி,
Dar voi spuneți: Dacă un om va spune tatălui sau mamei sale: Este corban, altfel spus, orice ți-ar fi de folos de la mine este un dar; va fi liber,
12 ௧௨ அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
Și nu îl mai lăsați să facă ceva pentru tatăl său sau mama sa;
13 ௧௩ நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
Făcând fără efect cuvântul lui Dumnezeu prin tradiția voastră, pe care ați dat-o; și faceți multe alte lucruri asemănătoare.
14 ௧௪ பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
Și după ce a chemat pe toți oamenii, le-a spus: Dați-mi fiecare ascultare și înțelegeți;
15 ௧௫ மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
Nu este nimic din afara unui om, care intrând în el îl poate spurca, ci lucrurile care ies din el, acelea sunt cele ce spurcă pe om.
16 ௧௬ கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
Dacă are cineva urechi de auzit, să audă.
17 ௧௭ அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
Și când a intrat în casă, ieșind din mulțime, discipolii săi l-au întrebat despre parabolă.
18 ௧௮ அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
Iar el le-a spus: Așa de nepricepuți sunteți și voi? Nu pricepeți că orice intră în om din afară, nu îl poate spurca;
19 ௧௯ அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும்.
Pentru că nu intră în inima lui, ci în pântece și iese în hazna, curățind toate mâncărurile?
20 ௨0 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
Și a spus: Ce iese din om, aceea spurcă pe om.
21 ௨௧ எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
Fiindcă dinăuntru, din inima oamenilor, ies gânduri rele, adultere, curvii, ucideri,
22 ௨௨ திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
Hoții, lăcomii, stricăciuni, înșelăciune, desfrânare, un ochi rău, blasfemie, mândrie, nebunie;
23 ௨௩ பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
Toate aceste rele ies dinăuntru și îl spurcă pe om.
24 ௨௪ பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது.
Și de acolo s-a sculat și s-a dus între ținuturile Tirului și ale Sidonului și a intrat într-o casă și dorea ca nimeni să nu știe; dar nu a putut fi ascuns.
25 ௨௫ அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
Fiindcă o femeie, a cărei fetiță avea un duh necurat, a auzit despre el și a venit și a căzut la picioarele lui;
26 ௨௬ அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
Femeia era grecoaică, de națiune siro-feniciană; și l-a implorat să scoată dracul din fiica ei.
27 ௨௭ இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார்.
Dar Isus i-a spus: Lasă întâi copiii să se sature; fiindcă nu este potrivit să iei pâinea copiilor și să o arunci la căței.
28 ௨௮ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
Iar ea a răspuns și i-a zis: Da, Doamne, totuși și cățeii de sub masă mănâncă din firimiturile copiilor.
29 ௨௯ அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார்.
Și el i-a spus: Pentru acest cuvânt, du-te; dracul a ieșit din fiica ta.
30 ௩0 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
Și când a ajuns acasă, a găsit dracul plecat și pe fiica ei întinsă pe pat.
31 ௩௧ மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார்.
Și din nou, plecând din ținuturile Tirului și Sidonului, a venit la marea Galileii, prin mijlocul ținuturilor Decapolei.
32 ௩௨ அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
Și ei i-au adus pe unul care era surd și avea un impediment în vorbire; și l-au implorat să își pună mâna pe el.
33 ௩௩ அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு;
Și l-a luat deoparte afară din mulțime și și-a pus degetele în urechile lui și a scuipat și i-a atins limba,
34 ௩௪ வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம்.
Și privind în sus spre cer, a oftat și i-a spus: Effata, care înseamnă, Deschide-te.
35 ௩௫ உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான்.
Și îndată urechile i-au fost deschise și frâul limbii sale a fost dezlegat și vorbea clar.
36 ௩௬ அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி,
Și le-a poruncit să nu spună nimănui; dar cu cât le poruncea mai mult, cu atât mai mult proclamau aceasta.
37 ௩௭ எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
Și erau peste măsură de înmărmuriți, spunând: Toate le-a făcut bine; face deopotrivă pe surzi să audă și pe muți să vorbească.