< மாற்கு 6 >

1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲒ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲀϤⲒ ⲈϦⲞⲨⲚ ⲈⲦⲈϤⲂⲀⲔⲒ ⲞⲨⲞϨ ⲀⲨⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ ⲚϪⲈⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ
2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤϢⲰⲠⲒ ⲚϪⲈⲞⲨⲤⲀⲂⲂⲀⲦⲞⲚ ⲀϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϮⲤⲂⲰ ϦⲈⲚϮⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲞⲨⲞϨ ⲞⲨⲘⲎϢ ⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲚⲀⲨⲈⲢϢⲪⲎⲢⲒ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲈⲦⲀ ⲪⲀⲒ ϪⲈⲘ ⲚⲀⲒ ⲐⲰⲚ ⲞⲨⲞϨ ⲞⲨ ⲦⲈ ⲦⲀⲒⲤⲞⲪⲒⲀ ⲈⲦⲀⲨⲦⲎⲒⲤ ⲘⲪⲀⲒ ⲚⲈⲘ ⲚⲀⲒⲔⲈϪⲞⲘ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲈⲦϢⲞⲠ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲚⲈϤϪⲒϪ
3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
ⲅ̅ⲘⲎ ⲪⲀⲒ ⲀⲚ ⲠⲈ ⲠⲒⲀⲘϢⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲘⲀⲢⲒⲀ ⲞⲨⲞϨ ⲠⲤⲞⲚ ⲚⲒⲀⲔⲰⲂⲞⲤ ⲚⲈⲘ ⲒⲰⲤⲎⲦⲞⲤ ⲚⲈⲘ ⲒⲞⲨⲆⲀⲤ ⲚⲈⲘ ⲤⲒⲘⲰⲚ ⲞⲨⲞϨ ⲚⲈϤⲤⲰⲚⲒ ⲚⲤϨⲒⲘⲒ ⲚⲀⲨϨⲀⲘⲚⲀⲒ ϨⲀⲢⲞⲚ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲢⲤⲔⲀⲚⲆⲀⲖⲒⲌⲈⲤⲐⲈ ⲚϦⲎⲦϤ.
4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
ⲇ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲘⲘⲞⲚ ⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈϤϢⲎϢ ⲈⲂⲎⲖ ϦⲈⲚⲦⲈϤⲂⲀⲔⲒ ⲚⲈⲘ ⲦⲈϤⲤⲨⲄⲄⲈⲚⲒⲀ ⲚⲈⲘ ⲠⲈϤⲎⲒ.
5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
ⲉ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈϤϢϪⲈⲘϪⲞⲘ ⲘⲘⲀⲨ ⲈⲒⲢⲒ ⲞⲨⲆⲈ ⲞⲨⲒ ⲚϪⲞⲘ ⲈⲂⲎⲖ ⲈⲞⲨⲘⲎϢ ⲚⲢⲈϤϢⲰⲚⲒ ⲈⲀϤⲬⲀ ϪⲒϪ ⲈϪⲰⲞⲨ ⲀϤⲈⲢⲪⲀϦⲢⲒ ⲈⲢⲰⲞⲨ.
6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
ⲋ̅ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢϢⲪⲎⲢⲒ ⲈⲐⲂⲈ ⲦⲞⲨⲘⲈⲦⲀⲐⲚⲀϨϮ ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞⲨϢϮ ⲚⲚⲒϮⲘⲒ ⲈⲦⲈⲘⲠⲔⲰϮ ⲈϤϮⲤⲂⲰ
7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
ⲍ̅ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞⲨϮ ⲈⲠⲒⲒⲂ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢϨⲎ ⲦⲤ ⲚⲞⲨⲞⲢⲠⲞⲨ ⲚⲂ ⲂⲞⲨⲞϨ ⲀϤϮⲈⲢϢⲒϢⲒ ⲚⲰⲞⲨ ⲈϪⲈⲚ ⲚⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲀⲔⲀⲐⲀⲢⲦⲞⲚ
8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
ⲏ̅ⲞⲨⲞϨ ⲀϤϨⲞⲚϨⲈⲚ ⲚⲰⲞⲨ ⲈϢⲦⲈⲘⲈⲖ ϨⲖⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ϨⲒ ⲪⲘⲰⲒⲦ ⲈⲂⲎⲖ ⲈⲞⲨϢⲂⲰⲦ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲞⲨⲆⲈ ⲰⲒⲔ ⲞⲨⲆⲈ ⲠⲎⲢⲀ ⲞⲨⲆⲈ ϨⲞⲘⲦ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲘⲞϪϦ
9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
ⲑ̅ⲀⲖⲖⲀ ⲈⲢⲈ ϨⲀⲚⲤⲀⲚⲆⲀⲖⲒⲞⲚ ⲦⲞⲒ ⲈⲢⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢϮ ϢⲐⲎⲚ ⲤⲚⲞⲨϮ ϨⲒ ⲐⲎⲚⲞⲨ
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
ⲓ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲠⲒⲘⲀ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀϢⲈ ⲈϦⲞⲨⲚ ⲈⲞⲨⲎⲒ ⲘⲘⲞϤ ϢⲰⲠⲒ ⲘⲘⲀⲨ ϢⲀⲦⲈⲦⲈⲚⲒ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
ⲓ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲘⲀ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈⲚϤⲚⲀϢⲈⲠ ⲐⲎⲚⲞⲨ ⲈⲢⲞϤ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲚⲦⲞⲨϢⲦⲈⲘⲤⲰⲦⲈⲘ ⲈⲢⲰⲦⲈⲚ ⲀⲚ ⲈⲢⲈⲦⲈⲚⲚⲎⲞⲨ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲚⲈϨ ⲠϢⲰⲒϢ ⲈⲦⲤⲀⲈϦⲢⲎⲒ ⲚⲚⲈⲦⲈⲚϬⲀⲖⲀⲨϪ ⲈⲂⲞⲖ ⲈⲨⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ⲚⲰⲞⲨ.
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
ⲓ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲒ ⲈⲂⲞⲖ ⲀⲨϨⲒⲰⲒϢ ϨⲒⲚⲀ ⲚⲤⲈⲈⲢⲘⲈⲦⲀⲚⲞⲒⲚ
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨϨⲒ ⲞⲨⲘⲎϢ ⲚⲆⲈⲘⲰⲚ ⲈⲂⲞⲖ ⲞⲨⲘⲎϢ ⲚⲢⲈϤϢⲰⲚⲒ ⲚⲀⲨⲐⲰϨⲤ ⲘⲘⲰⲞⲨ ⲚⲚⲈϨ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲢⲪⲀϦⲢⲒ ⲈⲢⲰⲞⲨ.
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
ⲓ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲀϤⲤⲰⲦⲈⲘ ⲚϪⲈⲠⲞⲨⲢⲞ ⲎⲢⲰⲆⲎ ⲤⲠⲈϤⲢⲀⲚ ⲄⲀⲢ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲚⲀϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲒⲢⲈϤϮⲰⲘⲤ ⲀϤⲦⲰⲚϤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲚⲒϪⲞⲘ ⲤⲈⲈⲢϨⲰⲂ ⲚϦⲎⲦϤ.
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
ⲓ̅ⲉ̅ϨⲀⲚⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲆⲈ ⲚⲀⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲎⲖⲒⲀⲤ ⲠⲈ ϨⲀⲚⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲆⲈ ⲚⲀⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲀⲒ ⲚⲚⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ⲚⲀⲢⲬⲈⲞⲤ
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
ⲓ̅ⲋ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲚϪⲈⲎⲢⲰⲆⲎⲤ ⲚⲀϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲪⲎ ⲀⲚⲞⲔ ⲈⲦⲀⲒⲈⲖ ⲦⲈϤⲚⲀϨⲂⲒ ⲚⲐⲞϤ ⲠⲈⲦⲀϤⲦⲰⲚϤ.
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
ⲓ̅ⲍ̅ⲎⲢⲰⲆⲎⲤ ⲄⲀⲢ ⲚⲈⲀϤⲀⲘⲞⲚⲒ ⲚⲒⲰⲀⲚⲚⲎ ⲤⲞⲨⲞϨ ⲀϤⲤⲞⲚϨϤ ϦⲈⲚⲠⲒϢⲦⲈⲔⲞ ⲈⲐⲂⲈ ⲎⲢⲰⲆⲒⲀⲤ ⲦⲤϨⲒⲘⲒ ⲘⲪⲒⲖⲒⲠⲠⲞⲤ ⲠⲈϤⲤⲞⲚ ϪⲈⲞⲨⲎ ⲒⲄⲀⲢ ⲚⲈⲀϤϬⲒⲦⲤ ⲠⲈ
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
ⲓ̅ⲏ̅ⲚⲀϤϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲠⲈ ⲚϪⲈⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲚⲎⲢⲰⲆⲎⲤ ϪⲈ ⲤϢⲈ ⲚⲀⲔ ⲀⲚ ⲈϬⲒ ⲦⲤϨⲒⲘⲒ ⲘⲠⲈⲔⲤⲞⲚ.
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
ⲓ̅ⲑ̅ⲎⲢⲰⲆⲒⲀⲤ ⲆⲈ ⲚⲀⲤⲘⲂⲞⲚ ⲈⲢⲞϤ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲚⲀⲤⲞⲨⲰϢ ⲈϦⲞⲐⲂⲈϤ ⲞⲨⲞϨ ⲚⲀⲤϢϪⲈⲘϪⲞⲘ ⲀⲚ ⲠⲈ.
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
ⲕ̅ⲎⲢⲰⲆⲎⲤ ⲄⲀⲢ ⲀϤⲈⲢϨⲞϮ ϦⲀⲦϨⲎ ⲚⲒⲰⲀⲚⲚⲎ ⲤⲈϤⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞϤ ϪⲈ ⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲆⲒⲔⲈⲞⲤ ⲠⲈ ⲞⲨⲞϨ ϤⲞⲨⲀⲂ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲀⲢⲈϨ ⲈⲢⲞϤ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲤⲰⲦⲈⲘ ⲈϨⲀⲚⲘⲎϢ ⲚⲦⲞⲦϤ ⲞⲨⲞϨ ⲚⲀϤϢⲞⲖϨ ⲚϨⲎⲦ ⲠⲈ ⲞⲨⲞϨ ϨⲎⲆⲈⲰⲤ ⲚⲀϤⲤⲰⲦⲈⲘ ⲈⲢⲞϤ.
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
ⲕ̅ⲁ̅ⲈⲦⲀ ⲞⲨⲈϨⲞⲞⲨ ⲆⲈ ϢⲰⲠⲒ ⲚⲈⲨⲔⲈⲢⲒⲀ ϨⲞⲦⲈ ⲈⲦⲀ ⲎⲢⲰⲆⲎⲤ ϦⲈⲚⲠⲈϤⲈϨⲞⲞⲨ ⲘⲘⲒⲤⲒ ⲐⲀⲘⲒⲈ ⲞⲨⲆⲒⲠⲚⲞⲚ ⲚⲚⲈϤⲚⲒϢϮ ⲚⲈⲘ ⲚⲒⲬⲒⲖⲒⲀⲢⲬ ⲞⲤ ⲚⲈⲘ ⲚⲒϨⲞⲨⲀϮ ⲚⲦⲈϮⲄⲀⲖⲒⲖⲈⲀ.
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
ⲕ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲤⲒ ⲈϦⲞⲨⲚ ⲚϪⲈⲦϢⲈⲢⲒ ⲚⲎⲢⲰⲆⲒⲀⲤ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲤϬⲞⲤϪⲈⲤ ⲀⲤⲢⲀⲚⲀϤ ⲚⲎⲢⲰⲆⲎⲤ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲐⲢⲞⲦⲈⲂ ⲚⲈⲘⲀϤ ⲠⲈϪⲈ ⲠⲞⲨⲢⲞ ⲆⲈ ⲚϮⲀⲖⲞⲨ ϪⲈ ⲀⲢⲒⲈⲦⲒⲚ ⲘⲘⲞⲒ ⲘⲠⲈⲦⲈⲞⲨⲀϢϤ ⲚⲦⲀⲦⲎⲒϤ ⲚⲈ.
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀϤⲰⲢⲔ ⲚⲀⲤ ϪⲈ ⲪⲎ ⲈⲦⲈⲢⲀⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞϤ ϮⲚⲀϮ ⲚⲈϢⲀ ⲦⲪⲀϢⲒ ⲚⲦⲀⲘⲈⲦⲞⲨⲢⲞ.
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
ⲕ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲤⲒ ⲈⲂⲞⲖ ⲠⲈϪⲀⲤ ⲚⲦⲈⲤⲘⲀⲨ ϪⲈ ⲞⲨ ⲠⲈϮⲚⲀⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞϤ ⲚⲐⲞⲤ ⲆⲈ ⲠⲈϪⲀⲤ ϪⲈ ⲦⲀⲪⲈ ⲚⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲒⲢⲈϤϮⲰⲘⲤ
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
ⲕ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲤⲒ ⲈϦⲞⲨⲚ ϦⲈⲚⲞⲨⲤⲠⲞⲨⲆⲎ ϨⲀ ⲠⲞⲨⲢⲞ ⲀⲤⲈⲢⲈⲦⲒⲚ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ϮⲞⲨⲰϢ ϨⲒⲚⲀ ϮⲚⲞⲨ ⲚⲦⲈⲔϮ ⲚⲎⲒ ⲚⲦⲀⲪⲈ ⲚⲒⲰⲀⲚⲚⲎ ⲤⲠⲒⲢⲈϤϮⲰⲘⲤ ϨⲒ ⲞⲨⲂⲒⲚⲀϪ.
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
ⲕ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀ ⲠϨⲎⲦ ⲘⲠⲞⲨⲢⲞ ⲘⲔⲀϨ ⲈⲐⲂⲈ ⲚⲒⲀⲚⲀⲨϢ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲐⲢⲞⲦⲈⲂ ⲚⲈⲘⲀϤ ⲘⲠⲈϤⲞⲨⲰϢ ⲈϤⲞϪⲤ.
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
ⲕ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲤⲀⲦⲞⲦϤ ⲀϤⲞⲨⲰⲢⲠ ⲚϪⲈⲠⲞⲨⲢⲞ ⲚⲞⲨⲤⲔⲈⲠⲰⲖⲀⲦⲞⲢ ⲀϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲚⲦⲈϤⲒⲚⲒ ⲚⲦⲈϤⲀⲪⲈ ϨⲒ ⲠⲒⲂⲒⲚⲀϪ.
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
ⲕ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲀϤⲦⲎⲒⲤ ⲚϮⲀⲖⲞⲨ ⲞⲨⲞϨ ⲀϮⲀⲖⲞⲨ ⲦⲎⲒⲤ ⲚⲦⲈⲤⲘⲀⲨ.
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ⲕ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲚϪⲈⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲀⲨⲒ ⲀⲨⲰⲖⲒ ⲘⲠⲒⲤⲰⲘⲀ ⲞⲨⲞϨ ⲀⲨⲬⲀϤ ⲚϦⲞⲨⲚ ϦⲈⲚⲞⲨⲘϨⲀⲨ.
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
ⲗ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲐⲰⲞⲨϮ ⲚϪⲈⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ϨⲀ ⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ⲀⲨⲦⲀⲘⲞϤ ⲈϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲀⲨⲀⲒϤ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦⲀⲨϮⲤⲂⲰ ⲘⲘⲞϤ
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
ⲗ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲘⲰⲒⲚⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲤⲀⲠⲤⲀ ⲈⲞⲨⲘⲀⲚϢⲀϤⲈ ⲞⲨⲞϨ ⲘⲦⲞⲚ ⲘⲘⲰⲦⲈⲚ ⲚⲞⲨⲔⲞⲨϪⲒ ⲚⲎ ⲄⲀⲢ ⲈⲐⲚⲎⲞⲨ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲐⲚⲀⲚⲀⲨⲞϢ ⲠⲈ. ⲞⲨⲞϨ ⲚⲀⲨϪⲈⲘ ⲈⲨⲔⲈⲢⲒⲀ ⲀⲚ ⲠⲈ ⲈⲈⲢ ⲠⲔⲈⲞⲨⲰⲘ
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
ⲗ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲀⲨϢⲈ ⲚⲰⲞⲨ ϨⲒ ⲠⲒϪⲞⲒ ⲈⲞⲨⲘⲀⲚϢⲀϤⲈ ⲤⲀⲠⲤⲀ.
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
ⲗ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲈⲨϨⲎⲖ ⲞⲨⲞϨ ⲀⲨⲤⲰⲞⲨⲚⲞⲨ ⲚϪⲈⲞⲨⲘⲎϢ ⲞⲨⲞϨ ⲀⲨϬⲞϪⲒ ⲘⲘⲀⲨ ⲚⲢⲀⲦⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲂⲀⲔⲒ ⲚⲒⲂⲈⲚ ⲞⲨⲞϨ ⲀⲨⲈⲢϢⲞⲢⲠ ⲈⲢⲰⲞⲨ.
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
ⲗ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲒ ⲈⲂⲞⲖ ⲀϤⲚⲀⲨ ⲈⲞⲨⲘⲎϢ ⲈϤⲞϢ ⲞⲨⲞϨ ⲀϤϢⲈⲚϨⲎⲦ ϦⲀⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲀⲨⲞⲒ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲈⲤⲰⲞⲨ ⲘⲘⲞⲚⲦⲞⲨ ⲘⲀⲚⲈⲤⲰⲞⲨ ⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϮⲤⲂⲰ ⲚⲰⲞⲨ ⲚϨⲀⲚⲘⲎ Ϣ
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
ⲗ̅ⲉ̅ⲞⲨⲞϨ ϨⲎⲆⲎ ⲈⲦⲀ ⲞⲨⲚⲒϢϮ ⲚⲞⲨⲚⲞⲨ ϢⲰⲠⲒ ⲈⲦⲀⲨⲒ ϨⲀⲢⲞϤ ⲚϪⲈⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲚⲀⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲠⲒⲘⲀ ⲞⲨϢⲀϤⲈ ⲠⲈ ⲞⲨⲞϨ ϨⲎⲆⲎ ϮⲞⲨⲚⲞⲨ ⲀⲤⲤⲒⲚⲒ.
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ⲗ̅ⲋ̅ⲬⲀⲨ ⲈⲂⲞⲖ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨϢⲈ ⲚⲰⲞⲨ ⲈⲚⲒⲒⲞϨⲒ ⲈⲦⲔⲰϮ ⲚⲈⲘ ⲚⲒϮⲘⲒ ⲚⲦⲞⲨϢⲰⲠ ⲚⲰⲞⲨ ⲘⲠⲈⲦⲞⲨⲚⲀⲞⲨⲞⲘϤ.
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
ⲗ̅ⲍ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲘⲞⲒ ⲚⲰⲞⲨ ⲚⲐⲰⲦⲈⲚ ⲘⲀⲢⲞⲨⲞⲨⲰⲘ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲦⲈⲚⲚⲀϢⲈ ⲚⲀⲚ ⲚⲦⲈⲚϢⲈⲠ ⲤⲚⲤⲀⲐⲈⲢⲒ ⲚⲰⲒⲔ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲚϮ ⲚⲰⲞⲨ ⲈⲞⲨⲰⲘ.
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
ⲗ̅ⲏ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲎⲢ ⲚⲰⲒⲔ ⲚⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲘⲀϢⲈ ⲚⲰⲦⲈⲚ ⲀⲚⲀⲨ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲈⲘⲒ ⲠⲈϪⲰⲞⲨ ϪⲈ ⲈⲚⲰⲒⲔ ⲚⲈⲘ ⲦⲈⲂⲦ Ⲃ-.
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ⲗ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲀϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲚⲰⲞⲨ ⲚⲦⲞⲨⲢⲰⲦⲈⲂ ⲚⲤⲒⲘⲠⲞⲤⲒⲞⲚ ⲤⲒⲘⲠⲞⲤⲒⲞⲚ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲤⲒⲘ ⲈⲐⲞⲨⲈⲦⲞⲨⲰⲦ
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
ⲙ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲢⲰⲦⲈⲂ ⲦⲎⲢⲞⲨ ⲘⲘⲀ ⲘⲀ ⲔⲀⲦⲀ ⲢⲢ ⲚⲈⲘ ⲔⲀⲦⲀ ⲚⲚ.
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
ⲙ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤϬⲒ ⲘⲠⲒⲈ ⲚⲰⲒⲔ ⲚⲈⲘ ⲚⲒⲦⲈⲂⲦ ⲂⲀϤϪⲞⲨϢⲦ ⲈⲦⲪⲈ ⲞⲨⲞϨ ⲀϤⲤⲘⲞⲨ ⲞⲨⲞϨ ⲀϤⲪⲰϢ ⲚⲚⲒⲰⲒⲔ ⲞⲨⲞϨ ⲀϤϮ ⲚⲚⲒⲘⲀⲐⲎ ⲦⲎⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨⲬⲰ ⲚⲀϨⲢⲀⲨ ⲚⲈⲘ ⲚⲒⲔⲈⲦⲈⲂⲦ ⲂⲀϤⲪⲀϢⲞⲨ ⲈϨⲢⲀⲨ ⲦⲎⲢⲞⲨ
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
ⲙ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲞⲨⲰⲘ ⲦⲎⲢⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲨⲤⲒ.
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
ⲙ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲰⲖⲒ ⲘⲒⲂ ⲚⲔⲞⲦ ⲚⲖⲀⲔϨ ⲈⲨⲘⲈϨ ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲔⲈⲦⲈⲂⲦ.
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
ⲙ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲚⲎ ⲈⲚⲀⲨⲞⲨⲰⲘ ⲚⲚⲒⲰⲒⲔ ⲚⲀⲨⲈⲢ ⲈⲚϢⲞ ⲚⲢⲰⲘⲒ.
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
ⲙ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲤⲀⲦⲞⲦϤ ⲀϤⲈⲢⲀⲚⲀⲄⲔⲀⲌⲒⲚ ⲚⲚⲈϤⲘⲀⲐⲎ ⲦⲎⲤ ⲈⲀⲖⲎⲒ ⲈⲠⲒϪⲞⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲞⲨⲤⲰⲔ ϦⲀϪⲰϤ ⲈⲘⲎⲢ ⲈⲂⲎⲐⲤⲀⲒⲆⲀ ϢⲀⲦⲈϤⲬⲀ ⲠⲒⲘⲎ ϢⲈⲂⲞⲖ.
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
ⲙ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲈⲢⲀⲠⲞⲦⲀⲌⲈⲤⲐⲈ ⲚⲰⲞⲨ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲠⲒⲦⲰⲞⲨ ⲈⲈⲢⲠⲢⲞⲤⲈⲨⲬⲈⲤⲐⲈ.
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
ⲙ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀ ⲢⲞⲨϨⲒ ϢⲰⲠⲒ ⲚⲀⲢⲈ ⲠⲒϪⲞⲒ ϦⲈⲚⲐⲘⲎϮ ⲘⲪⲒⲞⲘ ⲞⲨⲞϨ ⲚⲐⲞϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲚⲀϤⲬⲎ ϨⲒ ⲠⲒⲬⲢⲞ.
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
ⲙ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲈⲨⲦϨⲈⲘⲔⲎ ⲞⲨⲦ ϦⲈⲚⲠⲒϪⲒⲚⲤⲰⲔ ⲚⲀⲢⲈ ⲠⲒⲐⲎⲞⲨ ⲄⲀⲢ ]- ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲀⲨ ⲠⲈ ⲚϨⲢⲎⲒ ⲆⲈ ϦⲈⲚϮⲘⲀϨⲆ ⲚⲞⲨⲈⲢϢⲒ ⲚⲦⲈⲠⲒⲈϪⲰⲢϨ ⲀϤⲒ ϨⲀⲢⲰⲞⲨ ⲈϤⲘⲞϢⲒ ϨⲒϪⲈⲚ ⲪⲒⲞⲘ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲞⲨⲰϢ ⲈⲤⲈⲚⲞⲨ ⲠⲈ.
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
ⲙ̅ⲑ̅ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲈⲢⲞϤ ⲈϤⲘⲞϢⲒ ϨⲒϪⲈⲚ ⲪⲒⲞⲘ ⲚⲀⲨⲘⲈⲨⲒ ϪⲈ ⲞⲨϨⲞⲢⲦϤ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀⲨⲰϢ ⲈⲂⲞⲖ
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
ⲛ̅ⲚⲈ ⲀⲨⲚⲀⲨ ⲄⲀⲢ ⲈⲢⲞϤ ⲦⲎⲢⲞⲨ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀⲨϢⲐⲞⲢⲦⲈⲢ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲤⲀⲦⲞⲦϤ ⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ϪⲈⲘⲚⲞⲘϮ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲘⲠⲈⲢⲈⲢϨⲞϮ
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ⲛ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲀϤⲀⲖⲎⲒ ⲈⲠⲒϪⲞⲒ ϨⲀⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲀϤϨⲈⲢⲒ ⲚϪⲈⲠⲒⲐⲎⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲦⲰⲘⲦ ⲈⲘⲀϢⲰ ⲠⲈ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
ⲛ̅ⲃ̅ⲞⲨ ⲄⲀⲢ ⲘⲠⲞⲨⲔⲀϮ ⲈϪⲈⲚ ⲚⲒⲰⲒⲔ ⲀⲖⲖⲀ ⲚⲀⲢⲈ ⲠⲞⲨϨⲎⲦ ⲐⲎⲘ ⲠⲈ
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
ⲛ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲈⲢϪⲒⲚⲒⲞⲢ ⲈⲘⲎⲢ ⲀⲨⲒ ⲈⲄⲈⲚⲚⲎ ⲤⲀⲢⲈⲐ ⲞⲨⲞϨ ⲀⲨⲘⲞⲚⲒ
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
ⲛ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲒ ⲈϨⲢⲎⲒ ⲈⲂⲞⲖ ϨⲒ ⲠⲒϪⲞⲒ ⲀⲨⲤⲞⲨⲰⲚϤ ⲤⲀⲦⲞⲦⲞⲨ
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
ⲛ̅ⲉ̅ⲀⲨϬⲞϪⲒ ϦⲈⲚϮⲬⲰⲢⲀ ⲦⲎⲢⲤ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲀⲨⲈⲢϨⲎⲦⲤ ⲘϤⲀⲒ ⲚⲚⲎ ⲈⲦⲦϨⲈⲘⲔⲎ ⲞⲨⲦ ϨⲒ ϨⲀⲚϬⲖⲞϪ ⲈⲠⲒⲘⲀ ⲈϢⲀⲨⲤⲰⲦⲈⲘ ϪⲈ ϤⲈⲘⲘⲀⲨ.
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
ⲛ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲠⲒⲘⲀ ⲈϢⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈϦⲞⲨⲚ ⲈⲢⲞϤ ⲈⲚⲒϮⲘⲒ ⲒⲈ ⲚⲒⲂⲀⲔⲒ ⲒⲈ ⲚⲒⲒⲞϨⲒ ⲚⲀⲨⲬⲰ ⲚⲚⲎ ⲈⲦϢⲰⲚⲒ ϨⲒ ⲚⲒⲀⲄⲞⲢⲀ ⲞⲨⲞϨ ⲚⲀⲨϮϨⲞ ⲈⲢⲞϤ ϨⲒⲚⲀ ⲔⲀⲚ ⲚⲦⲞⲨϬⲒ ⲚⲈⲘ ⲠⲒϢⲦⲀϮ ⲚⲦⲈⲚⲈϤϨⲂⲰⲤ ⲞⲨⲞϨ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈϢⲀⲨϬⲒ ⲚⲈⲘⲀϤ ϢⲀⲨⲞⲨϪⲀⲒ.

< மாற்கு 6 >