< மாற்கு 5 >

1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.
І на другий бік моря вони прибули́, до землі Гадари́нської.
2 அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான்.
І як вийшов Він із чо́вна, то зараз Його перестрів чоловік із могильних пече́р, що мав духа нечистого.
3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை.
Він ме́шкання мав у гроба́х, і ніхто й ланцюга́ми зв'язати не міг його,
4 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை.
бо часто кайда́нами та ланцюга́ми в'язали його, але він розривав ланцюги́ та кайда́ни торо́щив, — і ніхто не міг угамува́ти його.
5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
І він повсякча́с перебува́в день і ніч у гроба́х та в гора́х, — і кричав, і бився об камі́ння.
6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
А коли він Ісуса побачив здале́ка, то прибіг, і вклонився Йому,
7 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
і закричав гучни́м голосом, кажучи: „Що до мене Тобі, Ісусе, Сину Бога Всеви́шнього? Богом Тебе заклинаю, — не муч Ти мене!“
8 ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.
Бо сказав Він йому: „Вийди, ду́ше нечистий, із люди́ни!“
9 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி,
І запитав Він його: „Як тобі на ім'я́?“А той відповів: „Леґіо́н мені йме́ння — багато бо нас“.
10 ௧0 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
І він Його ду́же просив, щоб їх не висилав із тієї землі.
11 ௧௧ அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
Пасся ж там на горі гурт великий свине́й.
12 ௧௨ அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
І просилися де́мони, кажучи: „Пошли нас у свине́й, щоб у них ми ввійшли“.
13 ௧௩ இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது.
І дозволив Він їм. І повихо́дили духи нечисті, і в свиней увійшли́. І гурт кинувся з кручі до моря, — а було зо дві тисячі їх — і вони потопилися в морі.
14 ௧௪ பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;
А їхні пастухи повтікали та в місті й по селах звістили. І повихо́дили люди побачити, що́ сталось.
15 ௧௫ இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள்.
І прийшли до Ісуса й побачили, що той біснуватий, що мав леґіо́на, убра́ний сидів, і при умі, — і полякались вони.
16 ௧௬ பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள்.
Самови́дці ж їм розповіли́, що́ сталося з тим біснуватим, також про свиней.
17 ௧௭ அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
І вони стали благати Його, щоб пішов Собі з їхнього кра́ю.
18 ௧௮ அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
А як Він сів до чо́вна, то біснуватий став просити Його, щоб залиши́тися з Ним.
19 ௧௯ இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார்.
Ісус же йому не дозволив, а промовив до нього: „Іди до дому свого, до своїх, і їм розпові́ж, які речі великі Госпо́дь учинив тобі, і як змилувався над тобою!“
20 ௨0 அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
І пішов він та в Десятимісті зачав пропові́дувати, які речі великі Ісус учинив йому. І всі дивувались!
21 ௨௧ இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
І коли переплив Ісус чо́вном на то́й бік ізнов, то до Нього зібралось багато наро́ду. І був Він над морем.
22 ௨௨ அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:
І приходить один із старши́х синагоги, на ймення Яі́р, і, як побачив Його, припадає до ніг Йому,
23 ௨௩ என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
і ду́же благає Його та говорить: „Моя дочка́ кінча́ється. Прийди ж, поклади Свої руки на неї, щоб видужала та жила́!“
24 ௨௪ அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள்.
І пішов Він із ним. За Ним на́товп великий ішов, і тиснувсь до Нього.
25 ௨௫ அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண்,
А жінка одна, що дванадцять ро́ків хворою на кровоте́чу була́,
26 ௨௬ அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,
що чимало нате́рпілася від багатьох лікарів, і витратила все добро своє, та ніякої помочі з того не мала, а прийшла ще до гіршого,
27 ௨௭ இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி;
як зачула вона про Ісуса, підійшла через на́товп ізза́ду, і доторкну́лась до одежі Його.
28 ௨௮ மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள்.
Бо вона говорила про себе: „Коли хоч доторкнусь до одежі Його, то оду́жаю“.
29 ௨௯ உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
І висохло хвилі тієї джерело́ кровотечі її, і тілом відчула вона, що видужала від неду́ги!
30 ௩0 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.
І в ту мить Ісус вичув у Собі, що вийшла з Нього сила. І Він до наро́ду звернувся й спитав: „Хто́ доторкнувсь до Моєї одежі?“
31 ௩௧ அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
І відказали Йому Його учні: „Ти бачиш, що тисне на Тебе наро́д, а питаєшся: Хто́ доторкнувся до Мене?“
32 ௩௨ இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
А Він навкруги́ поглядав, щоб побачити ту, що зробила оце.
33 ௩௩ தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
І жінка злякалась та затрусилась, бо знала, що сталося їй. І вона підійшла, і впала ницьма перед Ним, — і всю правду Йому розпові́ла.
34 ௩௪ அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
А Він їй сказав: „Твоя віра, о до́чко, спасла тебе; іди з ми́ром, і здоровою будь від своєї неду́ги!“
35 ௩௫ அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள்.
Як Він ще говорив, приходять ось від старшини́ синагоги та й кажуть: „Дочка́ твоя вмерла; чого ще турбуєш Учителя?“
36 ௩௬ அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி;
А Ісус, як почув слово сказане, промовляє до старшини́ синагоги: „Не лякайсь, — тільки віруй!
37 ௩௭ வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்;
І Він не дозволив іти за Собою ніко́му, тільки Петрові та Якову, та Іванові, братові Якова.
38 ௩௮ ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
І приходять у дім старшини́ синаго́ги, і Він бачить метушню́ та людей, що плакали та голоси́ли.
39 ௩௯ உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார்.
А ввійшовши, сказав Він до них: „Чого ви мету́шитеся та плачете? Не вмерло дівча́, але спить!“
40 ௪0 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று,
І вони насміхалися з Нього. А Він усіх ви́провадив, узяв батька дівчати та матір, та тих, хто був із Ним, і ввійшов, де лежало дівча.
41 ௪௧ பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
І взяв Він за руку дівча та й промовив до нього: „Таліта́, ку́мі“що значить: „Дівча́тко, кажу́ тобі — встань!“
42 ௪௨ உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
І в ту мить підвелося й ходило дівча́; а ро́ків мало з дванадцять. І всі зараз жахнулися з дива великого!
43 ௪௩ அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.
А Він наказав їм суво́ро, щоб ніхто не довідавсь про це. І дати їй їсти звелів.

< மாற்கு 5 >