< மாற்கு 2 >
1 ௧ சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு;
Aabwi Kaperiniam baada ya siku nsunu, yayowine abiukaya.
2 ௨ உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
Bandu banyansima muno bakusanyike batwelile mpaka pa nlyangoPai ntopo nafasi lelo, ni Yesu kabakokeya.
3 ௩ அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;
Baadhi ya bandu baisi banletike mundu atetomboloka; bandu bane batekumpotwa.
4 ௪ மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
Wakati basindikwe kumuegelya mwalo baibandu banyansima, baboiye lipala kunani palyo aabile, baapeninye lusase ni mundu mminye agonzike mumo.
5 ௫ இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
Apo abweni Imani yabe, Yesu kambakiya ywa mundu atombolwike, “manango, sambi sako zisameiwe.”
6 ௬ அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:
Aandishi benge balyo baatami palyo kabailokiya mmiyo yabe.
7 ௭ இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
“Awesa buli mundu oyo kulongela iyeya? Andokupulu! Nyai awesa kusami sambi Mana Nnongo kwa bai yikayake?”
8 ௮ அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன?
Yesu aatangike kumoyo wake eso bawasake bembe bene. Kabaakokeya, “mwalo wakele muwasa eyo mwiuba yinu?
9 ௯ உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?
Lipi litopike muno kulongela kwa mundu atombolwike, masambi gake gasameiwe au kukoya kagatuka, tola lusase lwako ni utyange?
10 ௧0 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து:
Lakini bapate utanga kuba mwana wake Adamu abiniupwalume wa kusamii masambi pano padunia, ankokiye ywa atombolwike.
11 ௧௧ நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
“Nikukokeya wenga, yinuka tola ndanga yako, ni uyende ukasako.”
12 ௧௨ உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Kaakagatuka ni kutola ndanga yake, ni kupita panza bandu bote bapalyo kabakanganya na kabampaya Nnongo utukufu, tubi tunawai kwaa kubona kilebe kati Seno.
13 ௧௩ அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.
Ayei kumbwega ya ziwa, nibandu banyansima, boote balyo kabayegana.
14 ௧௪ அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.
Ya kaapeta kaammona lawi mwana wake Alfayo atami palyopakuya kodi na kaankoke ya “Ngota” kayinuka Ni kunkota.
15 ௧௫ அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
Palyo Yesu kalya kilalyo ukasake Lawi, Atola kodi bingi Ni bandu bene sambi bai kabalya ni Yesu ni benepunzi bake, kwa kuba bai bingi Ni bembe kabankota.
16 ௧௬ இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.
Wakati baandishi, amafarisayo, baabweni Yesu kalya ni bandu bene sambi ni atola kodi, kabaabakiya benepunzi bake”mwalo wakele alya ni atola kodi ni bene sambi?”
17 ௧௭ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
Palyo Yesu aayowine kabaabakiya”bandu bene afya mwiyega yabe bampala kwa nng'anga, bandu Abinye yika yabe ndio bapala. Niisikwa kuakema bandu bene haki, lakini bandu bene sambi.”
18 ௧௮ யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள்.
Benepunzi ba Yohana ni Amafarisayo baikabataba. Nibandu benge baisi kwake ni kunkokeya”mwalo wakile benepunzi ba Yohana ni Amafarisayo bando taba? Lakini benepunzi bako bataba kwaa?
19 ௧௯ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.
Yesu kabaakokeya “Je balyo bayei kuharusi bawesa kutaba mana ntolaji abipamwepe Ni bembe? Ntolaji mana abipamwepe ni bembe bawesa kwaa utaba.
20 ௨0 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
Lakini lisiku ya kulonge ntolaji mana aboiywe kwabe, mulisiku eyo ni bembe bataba.
21 ௨௧ ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
Ntopo Mundu wa usona kipande sa ngobo yayambe mulinzenga. eso kilaka kitama kwaa kipita bai omo mulinzenga. Ni kubeka mpapuko wa kuakala.
22 ௨௨ ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
Ntopo Mundu wa kuyeya Divai yayambe Nviriba ya samani, vinginevyo Divai ya Tula iriba Ni vyote ibele Divai ni iriba ya oba. Beka divai yayambe mu iriba yayambe.”
23 ௨௩ பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.
Mulisiku ya sabato Yesu aapite mmigonda, Ni benepunzi bake baatumbwi kutola makondi ga ngano.
24 ௨௪ பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
Ni mafarisayo bambakiye “Lola mwalo wakele batenda Kati iyeya kilebe Seno kiyendanakwaa ni sheria ya lisiku ya sabato?”
25 ௨௫ அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது,
Kabaakokeya, “msomike kwa sa atei Daudi palyo aabile Ni njara-ywembe pamwepe ni bandu bake baipamwepe ni ywembe?
26 ௨௬ அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
Yelyo ayei munymba ya Nnongo wakati Abathari aabikuhani Nkolo Ni kulya mkate wabikulonge-yabi kiogo ni sheria kwa mundu yeyote kulya isipokua kuhani-kabapaya Ni balyo aipamwepe nabo?”
27 ௨௭ பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;
Yesu akoiye”sabato batei mwalo was mundu, na mundu kwaa mwalo was sabato.
28 ௨௮ எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
Eyo mwana wa Adamu ni Bwana, eyo kwa sabato.