< மாற்கு 15 >
1 ௧ அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
И абие наутрие совет сотвориша архиерее со старцы и книжники, и весь сонм, связавше Иисуса ведоша и предаша (Его) Пилату.
2 ௨ பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
И вопроси Его Пилат: Ты ли еси Царь Иудейский? Он же отвещав рече ему: ты глаголеши.
3 ௩ பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
И глаголаху на Него архиерее много.
4 ௪ அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
Пилат же паки вопроси Его, глаголя: не отвещаваеши ли ничтоже? Виждь, колика на Тя свидетелствуют.
5 ௫ இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
Иисус же ктому ничтоже отвеща, яко дивитися Пилату.
6 ௬ பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
На (всяк) же праздник отпущаше им единаго связня, егоже прошаху.
7 ௭ கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
Бе же нарицаемый Варавва со сковники своими связан, иже в кове убийство сотвориша.
8 ௮ மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
И возопив народ нача просити, якоже всегда творяше им.
9 ௯ பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
Пилат же отвеща им, глаголя: хощете ли, пущу вам Царя Иудейска?
10 ௧0 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
Ведяше бо, яко зависти ради предаша Его архиерее.
11 ௧௧ பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
Архиерее же помануша народу, да паче Варавву пустит им.
12 ௧௨ பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
Пилат же отвещав паки рече им: что убо хощете сотворю, Егоже глаголете Царя Иудейска?
13 ௧௩ அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
Они же паки возопиша (глаголюще): пропни Его.
14 ௧௪ அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
Пилат же глаголаше им: что бо зло сотвори? Они же излиха вопияху: пропни Его.
15 ௧௫ அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
Пилат же хотя народу хотение сотворити, пусти им Варавву: и предаде Иисуса, бив, да пропнут Его.
16 ௧௬ அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
Воини же ведоша Его внутрь двора, еже есть претор: и созваша всю спиру,
17 ௧௭ சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
и облекоша Его в препряду, и возложиша на Него сплетше тернов венец,
18 ௧௮ யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
и начаша целовати Его (и глаголати): радуйся, Царю Иудейский.
19 ௧௯ அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
И бияху Его по главе тростию, и плюваху на Него, и прегибающе колена покланяхуся Ему.
20 ௨0 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
И егда поругашася Ему, совлекоша с Него препряду и облекоша Его в ризы Своя: и изведоша Его, да пропнут Его.
21 ௨௧ சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
И задеша мимоходящу некоему Симону Киринею, грядущу с села, отцу Александрову и Руфову, да возмет крест Его.
22 ௨௨ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
И приведоша Его на Голгофу место, еже есть сказаемо Лобное место.
23 ௨௩ வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
И даяху Ему пити есмирнисмено вино: Он же не прият.
24 ௨௪ அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
И распеншии Его разделиша ризы Его, метающе жребий о них, кто что возмет.
25 ௨௫ அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
Бе же час третий, и распяша Его.
26 ௨௬ அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
И бе написание вины Его написано: Царь Иудейск.
27 ௨௭ இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
И с Ним распяша два разбойника, единаго о десную и единаго о шуюю Его.
28 ௨௮ அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
И сбыстся Писание, еже глаголет: и со беззаконными вменися.
29 ௨௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
И мимоходящии хуляху Его, покивающе главами своими и глаголюще: уа, разоряяй церковь и треми денми созидаяй,
30 ௩0 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
спасися Сам и сниди со креста.
31 ௩௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
Такожде и архиерее ругающеся, друг ко другу с книжники глаголаху: ины спасе, Себе ли не может спасти?
32 ௩௨ நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
Христос, Царь Израилев, да снидет ныне со креста, да видим и веру имем Ему. И распятая с Ним поношаста Ему.
33 ௩௩ நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
Бывшу же часу шестому, тма бысть по всей земли до часа девятаго.
34 ௩௪ மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
И в час девятый возопи Иисус гласом велиим, глаголя: Елои, Елои, лама савахфани? Еже есть сказаемо: Боже Мой, Боже Мой, почто Мя оставил еси?
35 ௩௫ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
И нецыи от предстоящих слышавше, глаголаху: се, Илию гласит.
36 ௩௬ ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
Тек же един, и наполнив губу оцта, и возложь на трость, напаяше Его, глаголя: оставите, да видим, аще приидет Илиа сняти Его.
37 ௩௭ இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Иисус же пущь глас велий, издше.
38 ௩௮ அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
И завеса церковная раздрася на двое, свыше до низу.
39 ௩௯ அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
Видев же сотник стояй прямо Ему, яко тако возопив издше, рече: воистинну Человек Сей Сын бе Божий.
40 ௪0 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
Бяху же и жены издалеча зрящя, в нихже бе Мариа Магдалина, и Мариа Иакова малаго и Иосии мати, и Саломиа,
41 ௪௧ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
яже, и егда бе в Галилеи, хождаху по Нем и служаху Ему: и ины многия, яже взыдоша с Ним во Иерусалим.
42 ௪௨ ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
И уже позде бывшу, понеже бе пяток, еже есть к субботе,
43 ௪௩ மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
прииде Иосиф, иже от Аримафеа, благообразен советник, иже и той бе чая Царствия Божия, дерзнув вниде к Пилату, и проси телесе Иисусова.
44 ௪௪ அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
Пилат же дивися, аще уже умре: и призвав сотника, вопроси его: аще уже умре?
45 ௪௫ நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
И уведев от сотника, даде тело Иосифови.
46 ௪௬ அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
И купив плащаницу и снемь Его, обвит плащаницею: и положи Его во гроб, иже бе изсечен от камене: и привали камень над двери гроба.
47 ௪௭ அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
Мариа же Магдалина и Мариа Иосиева зрясте, где Его полагаху.