< மாற்கு 15 >

1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
第二天清晨,祭司长和长老、宗教老师以及公议会全体做出决定。他们把耶稣捆绑起来,送到彼拉多处。
2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
彼拉多问他:“你是犹太人之王?”耶稣回答:“这是你说的。”
3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
祭司长对耶稣提起很多控告。
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
彼拉多又问他:“你看,他们对你提出这么多控告,你不想为自己辩护吗?”
5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
但耶稣仍一言不发,彼拉多很惊讶。
6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
每年这个时候,彼拉多都会照例按着众人的要求,特赦一名囚犯。
7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
有一名叫做巴拉巴的罪犯,是一个反叛组织的成员,曾杀过人。
8 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
民众来到彼拉多处,请他大赦巴拉巴。
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
彼拉多回答他们:“那你们想不想让我释放这犹太人之王?”
10 ௧0 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
他其实知道,祭司长是因为嫉妒才把耶稣交上来。
11 ௧௧ பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
祭司长却煽动民众,一定要总督赦免巴拉巴而非耶稣。
12 ௧௨ பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
彼拉多又问他们:“那么,对于这个被称为犹太人之王的人,你们想让我怎样处置?”
13 ௧௩ அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
众人喊到:“把他钉上十字架!”
14 ௧௪ அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
彼拉多说:“为什么呢?他做了什么恶事呢?”众人更大声地喊叫:“把他钉上十字架!”
15 ௧௫ அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
彼拉多只想安抚愤怒的民众,于是释放了巴拉巴,但对耶稣进行了鞭打处罚,然后将他送走,准备钉上十字架。
16 ௧௬ அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
士兵把耶稣带进总督府的院子里,召集整个军队的士兵都在那里集合。
17 ௧௭ சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
他们给耶稣穿上紫色长袍,用荆棘编成冠冕戴在他头上。
18 ௧௮ யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
然后向他敬礼,说:“犹太人之王万岁!”
19 ௧௯ அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
接着就用芦苇反复打他的头,朝他吐唾沫还跪下来,仿佛膜拜他一般。
20 ௨0 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
嘲笑完后,士兵把他的紫色外袍脱下,让他穿回自己的衣服,然后准备将他送上十字架。
21 ௨௧ சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
有一个名叫西门的古利奈人从乡下来到城里,他是亚历山大和鲁孚的父亲。原本只是经过此地,士兵却强迫他背上耶稣的十字架。
22 ௨௨ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
他们把耶稣带到一个名叫各各他的地方,意为髑髅地,
23 ௨௩ வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
士兵拿出没药调配的酒给他喝,但耶稣没有喝。
24 ௨௪ அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
他们把耶稣钉上十字架,抽签分他的衣服,看谁能分到什么。
25 ௨௫ அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
他们钉他上十字架之时,是上午九点钟。
26 ௨௬ அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
耶稣的罪状牌上写着“犹太人之王。”
27 ௨௭ இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
同时钉上十字架的还有两个强盗,一个在耶稣右侧,一个在左侧。
28 ௨௮ அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
29 ௨௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
路人讥笑他,摇着头说:“哼,就是你说要拆毁神庙,然后在三日内再次建造它的吧?
30 ௩0 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
现在把自己从十字架上救下来吧!”
31 ௩௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
祭司长和宗教老师也同样讥笑他,彼此说:“他救得了别人,却不能救自己,
32 ௩௨ நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
如果他真是基督,是以色列的王,现在就从十字架走下来,我们看见就会信你。”甚至连其他被钉上十字架的人都在侮辱他。
33 ௩௩ நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
正午时分,整个地区都陷入黑暗,直到下午三点钟。
34 ௩௪ மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
下午三点,耶稣大声呼叫:“以利,以利,拉马撒巴各大尼。”意思为:“我的上帝,我的上帝,你为什么抛弃我?”
35 ௩௫ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
站在旁边的几个人听见了就说:“看,他呼叫以利亚呢。”
36 ௩௬ ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
有一个人跑去拿海绵浸满了酸酒,绑在芦苇上,递给耶稣喝,说:“等着瞧吧,看看以利亚来不来救他。”
37 ௩௭ இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
耶稣痛苦地大叫一声死去。
38 ௩௮ அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
圣殿里的垂帘从上到下裂成两半。
39 ௩௯ அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
看见他这样死去,站在他对面的百夫长说:“这人真是上帝之子!”
40 ௪0 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
有一些妇女在远处观看,她们中有抹大拉的玛利亚、小雅各和约西的母亲玛利亚以及撒罗米。
41 ௪௧ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
耶稣在加利利期间,这些女人就一直跟随他、服侍他。此外,还有许多和他一同去过耶路撒冷的女人。
42 ௪௨ ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
这天是星期五,也是安息日的前一日,夜幕降临,
43 ௪௩ மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
亚利马太的约瑟来了,他是公议会的成员,他在等待着神的国度的到来。他斗胆去见彼拉多,请求带回耶稣的身体。
44 ௪௪ அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
彼拉多惊讶耶稣已死,就把百夫长叫来,问耶稣是否已死。
45 ௪௫ நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
从百夫长那里确认后,彼拉多就把遗体交给约瑟。
46 ௪௬ அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
约瑟买了细麻布,把耶稣的躯体从十字架上取下,用细麻布裹好后,葬于一个他在岩石中凿出来的坟墓内,又用一块大石头挡住墓门。
47 ௪௭ அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
抹大拉的玛利亚和约西的母亲玛利亚亲眼看到安放他的地方。

< மாற்கு 15 >