< மாற்கு 14 >

1 இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.
ⲁ̅ⲛⲉⲣⲉⲡⲡⲁⲥⲭⲁ ⲇⲉ ⲁⲩⲱ ⲡⲉϩⲟⲟⲩ ⲛⲛⲁⲑⲁⲃ ⲛⲁϣⲱⲡⲉ ⲙⲙⲛⲛⲥⲁ ϩⲟⲟⲩ ⲥⲛⲁⲩ ⲁⲩⲱ ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲛⲉⲩⲕⲱⲧⲉ ⲛⲥⲁⲑⲉ ⲛϭⲟⲡϥ ϩⲛ ⲟⲩⲕⲣⲟϥ ⲛⲥⲉⲙⲟⲟⲩⲧϥ
2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
ⲃ̅ⲁⲩϫⲟⲟⲥ ⲇⲉ ϫⲉ ϩⲙ ⲡϣⲁ ⲁⲛ ϫⲉ ⲛⲛⲉⲩϣⲧⲟⲣⲧⲣ ϣⲱⲡⲉ ϩⲙ ⲡⲗⲁⲟⲥ
3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
ⲅ̅ⲁⲩⲱ ⲉⲣⲉⲓⲏⲥ ϩⲛ ⲃⲏⲑⲁⲛⲓⲁ ⲉϥⲛⲏϫ ϩⲙ ⲡⲏⲓ ⲛⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲥⲟⲃϩ ⲁⲥⲉⲓ ⲛϭⲓ ⲟⲩⲥϩⲓⲙⲉ ⲉⲣⲉⲟⲩⲁⲗⲁⲃⲁⲥⲧⲣⲟⲛ ⲛⲥⲟϭⲛ ⲛⲧⲟⲟⲧⲥ ⲛⲛⲁⲣⲇⲟⲥ ⲉϥⲥⲟⲧⲡ ⲉⲛⲁϣⲉⲥⲟⲩⲛⲧⲥ ⲁⲥⲧⲁϩ ⲧⲁⲗⲁⲃⲁⲥⲧⲣⲟⲛ ⲇⲉ ⲁⲥⲡⲁϩⲧⲥ ⲉϫⲛ ⲧⲉϥⲁⲡⲉ
4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?
ⲇ̅ⲁϩⲟⲓⲛⲉ ⲇⲉ ϭⲛⲁⲧ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲛⲉⲩⲉⲣⲏⲩ ϫⲉ ⲉⲧⲃⲉ ⲟⲩ ⲡⲉⲓⲥⲟϭⲛ ⲁⲩⲧⲁⲕⲟϥ
5 இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள்.
ⲉ̅ⲛⲉⲩⲉϣⲧⲁⲁϥ ⲅⲁⲣ ⲉⲃⲟⲗ ϩⲁϩⲟⲩⲟ ⲉϣⲙⲧϣⲉ ⲛⲥⲁⲧⲉⲉⲣⲉ ⲛⲥⲉⲧⲁⲁⲩ ⲛⲛϩⲏⲕⲉ ⲁⲩⲱ ⲛⲉⲩϭⲟⲛⲧ ⲉⲣⲟⲥ
6 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
ⲋ̅ⲓⲏⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲗⲱⲧⲛ ϩⲁⲣⲟⲥ ⲉⲧⲃⲉ ⲟⲩ ⲧⲉⲧⲛⲟⲩⲉϩϩⲓⲥⲉ ⲉⲣⲟⲥ ⲟⲩϩⲱⲃ ⲉⲛⲁⲛⲟⲩϥ ⲡⲉ ⲛⲧⲁⲥⲁⲁϥ ⲛⲁⲓ
7 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
ⲍ̅ⲛϩⲏⲕⲉ ⲅⲁⲣ ⲛⲙⲙⲏⲧⲛ ⲟⲩⲟⲓϣ ⲛⲓⲙ ⲁⲩⲱ ⲉⲧⲉⲧⲛϣⲁⲛⲣ ϩⲛⲏⲧⲛ ⲉⲧⲉⲧⲛⲉϣ ⲣⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛⲁⲩ ⲟⲩⲟⲓϣ ⲛⲓⲙ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛⲉⲓⲛⲁϭⲱ ⲁⲛ ⲛⲙⲙⲏⲧⲛ ⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ
8 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.
ⲏ̅ⲡⲉⲛⲧⲁϥⲣ ⲁⲧⲟⲟⲧⲥ ⲁⲥⲁⲁϥ ⲁⲥⲣϣⲟⲣⲡ ⲉⲧⲉϩⲥⲡⲁⲥⲱⲙⲁ ⲛⲥⲟϭⲛ ⲉⲡⲕⲟⲟⲥⲧ
9 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲑ̅ϩⲁⲙⲏⲛ ⲇⲉ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲡⲙⲁ ⲉⲧⲟⲩⲛⲁⲧⲁϣⲉⲟⲓϣ ⲙⲡⲉⲓⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲛϩⲏⲧϥ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲧⲏⲣϥ ⲥⲉⲛⲁϣⲁϫⲉ ⲉⲡⲉⲛⲧⲁⲧⲁⲓ ⲁⲁϥ ⲉⲩⲣⲡⲙⲉⲉⲩⲉ ⲛⲁⲥ
10 ௧0 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான்.
ⲓ̅ⲁⲩⲱ ⲓⲟⲩⲇⲁⲥ ⲡⲓⲥⲕⲁⲣⲓⲱⲧⲏⲥ ⲟⲩⲁ ϩⲙ ⲡⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲁϥⲃⲱⲕ ⲉⲣⲁⲧⲟⲩ ⲛⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ϫⲉ ⲉϥⲉⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟϥ ⲛⲁⲩ
11 ௧௧ அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ⲓ̅ⲁ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ ⲁⲩⲣⲁϣⲉ ⲁⲩⲱ ⲁⲩⲉⲣⲏⲧ ⲛϩⲉⲛϩⲟⲙⲛⲧ ⲉⲧⲁⲁⲩ ⲛⲁϥ ⲁⲩⲱ ⲁϥⲕⲱⲧⲉ ⲛⲥⲁⲟⲩⲉⲩⲕⲁⲓⲣⲓⲁ ⲉⲧⲃⲉ ⲑⲉ ⲛⲧⲁⲁϥ ⲉⲧⲟⲟⲧⲟⲩ
12 ௧௨ பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
ⲓ̅ⲃ̅ⲁⲩⲱ ϩⲙ ⲡϣⲟⲣⲡ ⲛϩⲟⲟⲩ ⲛⲁⲧⲑⲁⲃ ⲛⲧⲉⲣⲟⲩϣⲁⲁⲧ ⲡⲡⲁⲥⲭⲁ ⲡⲉϫⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛⲁϥ ϫⲉ ⲉⲕⲟⲩⲉϣⲧⲉⲛⲃⲱⲕ ⲉⲧⲱⲛ ⲉⲥⲃⲧⲉ ⲡⲡⲁⲥⲭⲁ ⲛⲁⲕ ϫⲉ ⲉⲕⲉⲟⲩⲟⲙϥ
13 ௧௩ அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்;
ⲓ̅ⲅ̅ⲁϥϫⲉⲩ ⲥⲛⲁⲩ ⲇⲉ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲁⲩⲱ ϥⲛⲁⲧⲱⲙⲛⲧ ⲉⲣⲱⲧⲛ ⲛϭⲓ ⲟⲩⲣⲱⲙⲉ ⲉⲣⲉⲟⲩϣⲟϣⲟⲩ ⲙⲙⲟⲟⲩ ϩⲓϫⲱϥ ⲟⲩⲁϩⲧⲏⲩⲛ ⲛⲥⲱϥ
14 ௧௪ அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
ⲓ̅ⲇ̅ⲁⲩⲱ ⲡⲙⲁ ⲉⲧϥⲛⲁⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ ⲁϫⲓⲥ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲙⲡⲏⲉⲓ ϫⲉ ⲡⲥⲁϩ ⲡⲉ ⲉⲧϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉⲣⲉⲡⲁⲙⲁ ⲛϭⲟⲓⲗⲉ ⲧⲱⲛ ⲡⲙⲁ ⲉϯⲛⲁⲟⲩⲱⲙ ⲡⲡⲁⲥⲭⲁ ⲙⲛⲛⲁⲙⲁⲑⲏⲧⲏⲥ
15 ௧௫ அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
ⲓ̅ⲉ̅ⲁⲩⲱ ⲛⲧⲟϥ ϥⲛⲁⲧⲥⲁⲃⲱⲧⲛ ⲉⲩⲛⲟϭ ⲙⲙⲁ ⲛⲧⲡⲉ ⲉϥⲡⲟⲣϣ ⲉϥⲥⲃⲧⲱⲧ ⲉⲧⲉⲧⲛⲛⲁⲥⲟⲃⲧⲉ ⲛⲁⲛ ⲙⲙⲁⲩ
16 ௧௬ அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
ⲓ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁⲩⲙⲟⲟϣⲉ ⲛϭⲓ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲃⲱⲕ ⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲁⲩϩⲉ ⲉⲡⲙⲁ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲛⲁⲩ ⲁⲩⲱ ⲁⲩⲥⲟⲃⲧⲉ ⲙⲡⲡⲁⲥⲭⲁ
17 ௧௭ மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
ⲓ̅ⲍ̅ⲛⲧⲉⲣⲉⲣⲟⲩϩⲉ ⲇⲉ ϣⲱⲡⲉ ⲁϥⲉⲓ ⲙⲛ ⲡⲉϥⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ
18 ௧௮ அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲓ̅ⲏ̅ⲁⲩⲱ ⲉⲩⲛⲏϫ ⲉⲩⲟⲩⲱⲙ ⲡⲉϫⲉ ⲓⲏⲥ ⲛⲁⲩ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲟⲩⲛⲟⲩⲁ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ ⲛⲉⲧⲟⲩⲱⲙ ⲛⲙⲙⲁⲓ ⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟⲓ
19 ௧௯ அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ⲁⲩⲁⲣⲭⲓ ⲛⲙⲕⲁϩ ⲛϩⲏⲧ ⲁⲩⲱ ⲉϫⲟⲟⲥ ⲛⲁϥ ⲟⲩⲁ ⲟⲩⲁ ϫⲉ ⲙⲏ ⲁⲛⲟⲕ ⲡⲉ
20 ௨0 அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி;
ⲕ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲟⲩⲁ ⲡⲉ ⲙⲡⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲡⲉⲧⲛⲁⲥⲡ ⲧⲟⲟⲧϥ ⲛⲙⲙⲁⲓ ϩⲛ ⲧϫⲏⲏⲥ
21 ௨௧ மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார்.
ⲕ̅ⲁ̅ϫⲉ ⲡϣⲏⲣⲉ ⲙⲉⲛ ⲙⲡⲣⲱⲙⲉ ⲛⲁⲃⲱⲕ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲛⲧⲁⲩⲥϩⲁⲓ ⲉⲧⲃⲏⲏⲧϥ ⲟⲩⲟⲓ ⲇⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉⲧⲙⲙⲁⲩ ⲡⲉⲧⲟⲩⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲛⲉⲛⲁⲛⲟⲩⲥ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉⲧⲙⲙⲁⲩ ⲉⲙⲡⲟⲩϫⲡⲟϥ
22 ௨௨ அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
ⲕ̅ⲃ̅ⲁⲩⲱ ⲉⲩⲟⲩⲱⲙ ⲁϥϫⲓ ⲛⲟⲩⲟⲓⲕ ⲁϥⲥⲙⲟⲩ ⲉⲣⲟϥ ⲁϥⲡⲟϣϥ ⲁⲩⲱ ⲁϥⲧⲁⲁϥ ⲛⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϫⲓⲧϥ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲁⲥⲱⲙⲁ
23 ௨௩ பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
ⲕ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥϫⲓ ⲛⲟⲩⲁⲡⲟⲧ ⲁϥϣⲡϩⲙⲟⲧ ⲉϫⲱϥ ⲁϥⲧⲁⲁϥ ⲛⲁⲩ ⲁⲩⲱ ⲁⲩⲥⲱ ⲧⲏⲣⲟⲩ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧϥ
24 ௨௪ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲁⲥⲛⲟϥ ⲛⲧⲇⲓⲁⲑⲏⲕⲏ ⲉⲧⲟⲩⲛⲁⲡⲟⲛϥ ⲉⲃⲟⲗ ⲉϫⲛ ϩⲁϩ
25 ௨௫ நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲕ̅ⲉ̅ϩⲁⲙⲏⲛ ⲇⲉ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲛⲛⲁⲥⲱ ϫⲓⲛ ⲙⲡⲉⲓⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲅⲉⲛⲏⲙⲁ ⲛⲧⲃⲱ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ϣⲁⲡⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ϩⲟⲧⲁⲛ ⲉⲓϣⲁⲛⲥⲟⲟϥ ⲉϥⲟ ⲃⲃⲣⲣⲉ ϩⲛ ⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
26 ௨௬ அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
ⲕ̅ⲋ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲟⲩⲥⲙⲟⲩ ⲁⲩⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲡⲧⲟⲟⲩ ⲛⲛϫⲟⲉⲓⲧ
27 ௨௭ அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.
ⲕ̅ⲍ̅ⲁⲩⲱ ⲡⲉϫⲉ ⲓⲏⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲛⲧⲱⲧⲛ ⲧⲏⲣⲧⲛ ⲧⲉⲧⲛⲛⲁⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉ ϫⲉ ϥⲥⲏϩ ϫⲉ ϯⲛⲁⲡⲁⲧⲁⲥⲥⲉ ⲙⲡϣⲱⲥ ⲁⲩⲱ ⲛⲉⲥⲟⲟⲩ ⲥⲉⲛⲁϫⲱⲱⲣⲉ ⲉⲃⲟⲗ
28 ௨௮ ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
ⲕ̅ⲏ̅ⲙⲛⲛⲥⲁ ⲧⲣⲁⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ϯⲛⲁⲣ ϣⲟⲣⲡ ⲉⲣⲱⲧⲛ ⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ
29 ௨௯ அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான்.
ⲕ̅ⲑ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲉϣϫⲉ ⲥⲉⲛⲁⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲗⲗⲁ ⲁⲛⲟⲕ ⲙⲙⲟⲛ
30 ௩0 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲗ̅ⲡⲉϫⲉ ⲓⲏⲥ ⲛⲁⲩ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲙⲡⲟⲟⲩ ϩⲛ ⲧⲉⲓⲟⲩϣⲏ ⲉⲙⲡⲁⲧⲉ ⲟⲩⲁⲗⲉⲕⲧⲱⲣ ⲙⲟⲩⲧⲉ ⲛⲥⲉⲡⲥⲛⲁⲩ ⲕⲛⲁⲁⲡⲁⲣⲛⲁ ⲙⲙⲟⲓ ⲛϣⲙⲛⲧⲥⲱⲱⲡ
31 ௩௧ அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
ⲗ̅ⲁ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲣϩⲁϩ ⲛϣⲁϫⲉ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉⲥⲉⲓ ⲉⲧⲣⲁⲙⲟⲩ ⲛⲙⲙⲁⲕ ⲛϯⲛⲁⲁⲣⲛⲁ ⲙⲙⲟⲕ ⲁⲛ ϩⲟⲙⲟⲓⲱⲥ ⲇⲉ ⲛⲕⲉⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩϫⲟⲟⲥ
32 ௩௨ பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
ⲗ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁⲩⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉⲩϭⲱⲙ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲅⲉⲑⲥⲏⲙⲁⲛⲉⲓ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ϩⲙⲟⲟⲥ ⲛⲏⲧⲛ ⲙⲡⲉⲓⲙⲁ ϣⲁⲛϯϣⲗⲏⲗ
33 ௩௩ பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁϥϫⲓ ⲙⲡⲉⲧⲣⲟⲥ ⲙⲛⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲙⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛⲙⲙⲁϥ ⲁⲩⲱ ⲁϥⲁⲣⲭⲓ ⲛϣⲧⲟⲣⲧⲣ ⲁⲩⲱ ⲉⲧⲱⲕⲙ ⲛϩⲏⲧ
34 ௩௪ அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
ⲗ̅ⲇ̅ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲧⲁⲯⲩⲭⲏ ⲗⲩⲡⲓ ϣⲁϩⲣⲁⲓ ⲉⲡⲙⲟⲩ ϭⲱ ⲛⲏⲧⲛ ⲙⲡⲉⲓⲙⲁ ⲛⲧⲉⲧⲛⲣⲟⲉⲓⲥ
35 ௩௫ சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு:
ⲗ̅ⲉ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲉⲑⲏ ⲛⲟⲩⲕⲟⲩⲉⲓ ⲁϥⲡⲁϩⲧϥ ⲉϫⲙⲡⲕⲁϩ ⲁϥϣⲗⲏⲗ ϫⲉⲕⲁⲥ ⲉϣⲱⲡⲉ ⲟⲩⲛϭⲟⲙ ⲛⲧⲉⲧⲉⲓⲟⲩⲛⲟⲩ ⲥⲁⲁⲧϥ
36 ௩௬ அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார்.
ⲗ̅ⲋ̅ⲁⲩⲱ ⲛⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲃⲃⲁ ⲡⲓⲱⲧ ⲟⲩⲛϭⲟⲙ ⲙⲙⲟⲕ ⲉϩⲱⲃ ⲛⲓⲙ ⲙⲁⲣⲉⲡⲉⲓⲁⲡⲟⲧ ⲥⲁⲁⲧ ⲁⲗⲗⲁ ⲛⲑⲉ ⲁⲛ ⲁⲛⲟⲕ ⲉϯⲟⲩⲁϣⲥ
37 ௩௭ பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
ⲗ̅ⲍ̅ⲁⲩⲱ ⲁϥⲉⲓ ⲁϥϩⲉ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲟⲃϣ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲙⲡⲉⲧⲣⲟⲥ ϫⲉ ⲥⲓⲙⲱⲛ ⲉⲕⲛⲕⲟⲧⲕ ⲙⲡⲉⲕⲉϣⲣⲟⲉⲓⲥ ⲛⲟⲩⲟⲩⲛⲟⲩ ⲛⲟⲩⲱⲧ
38 ௩௮ நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார்.
ⲗ̅ⲏ̅ⲣⲟⲉⲓⲥ ⲛⲧⲉⲧⲛϣⲗⲏⲗ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲉⲧⲛⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲉⲓⲣⲁⲥⲙⲟⲥ ⲡⲉⲡⲛⲁ ⲙⲉⲛ ⲣⲟⲟⲩⲧ ⲧⲥⲁⲣⲝ ⲟⲩⲁⲥⲑⲉⲛⲏⲥ ⲧⲉ
39 ௩௯ அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
ⲗ̅ⲑ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲟⲛ ⲁϥϣⲗⲏⲗ ⲉϥⲧⲁⲩⲟ ⲙⲡⲓϣⲁϫⲉ ⲛⲟⲩⲱⲧ
40 ௪0 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
ⲙ̅ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲟⲛ ϣⲁⲣⲟⲟⲩ ⲁϥϩⲉ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲟⲃϣ ⲛⲉⲣⲉⲛⲉⲩⲃⲁⲗ ⲅⲁⲣ ϩⲟⲣϣ ⲁⲩⲱ ⲛⲉⲩⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲉⲩⲛⲁϫⲟⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩ
41 ௪௧ அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
ⲙ̅ⲁ̅ⲁϥⲉⲓ ⲟⲛ ⲙⲡⲙⲉϩϣⲙⲧⲥⲱⲱⲡ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲛⲕⲟⲧⲕ ⲧⲉⲛⲟⲩ ⲛⲧⲉⲧⲛⲙⲧⲟⲛ ⲙⲙⲱⲧⲛ ⲁⲡϩⲱⲃ ⲉⲓ ⲉⲃⲟⲗ ⲁⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲓ ⲉⲓⲥ ϩⲏⲏⲧⲉ ⲥⲉⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲣⲣⲉϥⲣⲛⲟⲃⲉ
42 ௪௨ என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
ⲙ̅ⲃ̅ⲧⲟⲩⲛⲧⲏⲩⲧⲛ ⲙⲁⲣⲟⲛ ⲉⲓⲥ ϩⲏⲏⲧⲉ ⲁϥϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲛϭⲓ ⲡⲉⲧⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟⲓ
43 ௪௩ உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
ⲙ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲓ ⲉϥϣⲁϫⲉ ⲁϥⲉⲓ ⲛϭⲓ ⲓⲟⲩⲇⲁⲥ ⲟⲩⲁ ϩⲙ ⲡⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲉⲣⲉⲟⲩⲙⲏⲏϣⲉ ⲛⲙⲙⲁϥ ⲛⲙϩⲉⲛⲥⲏϥⲉ ⲁⲩⲱ ϩⲉⲛϭⲉⲣⲱⲃ ⲛⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲙⲛ ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ
44 ௪௪ அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
ⲙ̅ⲇ̅ⲡⲉⲛⲧⲁϥⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲇⲉ ⲙⲙⲟϥ ⲁϥϯ ⲛⲁⲩ ⲛⲟⲩⲙⲁⲓⲛ ϫⲉ ⲡⲉϯⲛⲁϯⲡⲓ ⲉⲣⲱϥ ⲛⲧⲟϥ ⲡⲉ ⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ ⲛⲧⲉⲧⲛϫⲓⲧϥ ϩⲛ ⲟⲩⲱⲣϫ
45 ௪௫ அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
ⲙ̅ⲉ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁϥϯ ⲡⲉϥⲟⲩⲟⲓ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲭⲁⲓⲣⲉ ϩⲣⲁⲃⲃⲉⲓ ⲁⲩⲱ ⲁϥϯⲡⲓ ⲉⲣⲱϥ
46 ௪௬ அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
ⲙ̅ⲋ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲛⲧⲟⲟⲧⲟⲩ ⲉϫⲱϥ ⲁⲩⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ
47 ௪௭ அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான்.
ⲙ̅ⲍ̅ⲟⲩⲁ ⲇⲉ ⲛⲛⲉⲧⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲁϥⲧⲉⲕⲙⲧⲉϥⲥⲏϥⲉ ⲁϥⲣⲉϩⲧⲡϩⲙϩⲁⲗ ⲙⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲁϥⲥⲗⲡⲡⲉϥⲙⲁⲁϫⲉ
48 ௪௮ இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
ⲙ̅ⲏ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲛⲧⲁⲧⲉⲧⲛⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉϭⲟⲡⲧ ⲛⲑⲉ ⲛⲟⲩⲥⲟⲟⲛⲉ ⲙⲛϩⲉⲛⲥⲏϥⲉ ⲁⲩⲱ ϩⲉⲛϭⲉⲣⲟⲟⲃ
49 ௪௯ நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார்.
ⲙ̅ⲑ̅ⲛⲉⲓϩⲁϩⲧⲉⲧⲏⲩⲧⲛ ⲙⲙⲏⲛⲉ ϩⲙ ⲡⲉⲣⲡⲉ ⲉⲓϯ ⲥⲃⲱ ⲁⲩⲱ ⲙⲡⲉⲧⲛⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟⲓ ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲛⲉⲅⲣⲁⲫⲏ
50 ௫0 அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
ⲛ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲟⲩⲕⲁⲁϥ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲡⲱⲧ
51 ௫௧ ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள்.
ⲛ̅ⲁ̅ⲟⲩϩⲣϣⲓⲣⲉ ⲇⲉ ⲛⲉϥⲟⲩⲏϩ ⲛⲥⲱϥ ⲉϥϭⲟⲟⲗⲉ ⲛⲟⲩⲥⲓⲛⲇⲱⲛ ⲁⲩⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ
52 ௫௨ அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
ⲛ̅ⲃ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲕⲁⲧⲥⲓⲛⲇⲱⲛ ⲉⲃⲟⲗ ⲛⲥⲱⲟⲩ ⲁϥⲡⲱⲧ ⲉϥⲕⲏⲕⲁϩⲏⲩ
53 ௫௩ இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.
ⲛ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁⲩϫⲓ ⲛⲓⲏⲥ ⲉⲣⲁⲧϥ ⲙⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲁⲩⲱ ⲁⲩⲥⲱⲟⲩϩ ⲉⲣⲁⲧϥ ⲛϭⲓ ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲧⲏⲣⲟⲩ ⲙⲛ ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲙⲛ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ
54 ௫௪ பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.
ⲛ̅ⲇ̅ⲁⲩⲱ ⲡⲉⲧⲣⲟⲥ ⲛⲉϥⲟⲩⲏϩ ⲛⲥⲱϥ ⲙⲡⲟⲩⲉ ϣⲁϩⲟⲩⲛ ⲉⲧⲁⲩⲗⲏ ⲙⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲁⲩⲱ ⲛⲉϥϩⲙⲟⲟⲥ ⲉϩⲣⲁⲓ ⲙⲛⲛϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ⲉϥⲑⲙⲟ ⲙⲙⲟϥ ϩⲁϩⲧⲉⲡⲕⲱϩⲧ
55 ௫௫ அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை.
ⲛ̅ⲉ̅ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲇⲉ ⲙⲛⲡⲥⲩⲛϩⲉⲇⲣⲓⲟⲛ ⲧⲏⲣϥ ⲛⲉⲩⲕⲱⲧⲉ ⲛⲥⲁⲟⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲓⲏⲥ ⲉⲧⲣⲉⲩⲙⲟⲟⲩⲧϥ ⲁⲩⲱ ⲙⲡⲟⲩϩⲉ ⲉⲟⲩⲟⲛ
56 ௫௬ அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
ⲛ̅ⲋ̅ⲁⲩⲙⲏⲏϣⲉ ⲅⲁⲣ ⲣⲙⲛⲧⲣⲉ ⲉⲣⲟϥ ⲛⲛⲟⲩϫ ⲁⲩⲱ ⲛⲉⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲛⲉⲩϣⲏϣ ⲁⲛ ⲙⲛ ⲛⲉⲩⲉⲣⲏⲩ
57 ௫௭ அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
ⲛ̅ⲍ̅ϩⲟⲓⲛⲉ ⲇⲉ ⲁⲩⲧⲱⲟⲩⲛ ⲁⲩⲣⲙⲛⲧⲣⲉ ⲉⲣⲟϥ ⲛⲛⲟⲩϫ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ
58 ௫௮ அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.
ⲛ̅ⲏ̅ϫⲉ ⲁⲛⲟⲛ ⲁⲛⲥⲱⲧⲙ ⲉⲣⲟϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲟⲕ ϯⲛⲁⲃⲱⲗ ⲉⲃⲟⲗ ⲙⲡⲉⲓⲣⲡⲉ ⲙⲙⲟⲩⲛⲅ ⲛϭⲓϫ ⲁⲩⲱ ϯⲛⲁⲕⲉⲧ ⲕⲉⲟⲩⲁ ⲛⲁⲧⲙⲟⲩⲛⲅ ⲛϭⲓϫ ϩⲛ ϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ
59 ௫௯ அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
ⲛ̅ⲑ̅ⲁⲩⲱ ϩⲓⲛⲁⲓ ⲟⲛ ⲧⲉⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲛⲉⲥⲥⲙⲟⲛⲧ ⲁⲛ
60 ௬0 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
ⲝ̅ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ⲛϭⲓ ⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ϩⲛ ⲧⲉⲩⲙⲏⲧⲉ ⲁϥϫⲛⲉ ⲓⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲛⲅⲛⲁϣⲁϫⲉ ⲁⲛ ⲗⲁⲁⲩ ⲁϩⲣⲟⲟⲩ ⲛⲁⲓ ⲥⲉⲣⲙⲛⲧⲣⲉ ⲉⲣⲟⲕ
61 ௬௧ அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
ⲝ̅ⲁ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲕⲁⲣⲱϥ ⲁⲩⲱ ⲙⲡϥϣⲁϫⲉ ⲗⲁⲁⲩ ⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲇⲉ ⲟⲛ ⲁϥϫⲛⲟⲩϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲉⲭⲥ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲉⲧⲥⲙⲁⲙⲁⲁⲧ
62 ௬௨ அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.
ⲝ̅ⲃ̅ⲓⲏⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲁⲩⲱ ⲧⲉⲧⲛⲛⲁⲛⲁⲩ ⲉⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉϥϩⲙⲟⲟⲥ ⲛⲥⲁⲟⲩⲛⲁⲙ ⲛⲧϭⲟⲙ ⲁⲩⲱ ⲉϥⲛⲏⲩ ϩⲓϫⲛ ⲛⲉⲕⲗⲟⲟⲗⲉ ⲛⲧⲡⲉ
63 ௬௩ பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா?
ⲝ̅ⲅ̅ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲇⲉ ⲁⲩⲡⲉϩⲛⲉⲩϩⲟⲓⲧⲉ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϣ ⲛⲉ ⲛⲕⲉⲙⲛⲧⲣⲉ ⲉⲧⲛⲁϩⲉ ⲛⲁⲩ
64 ௬௪ தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
ⲝ̅ⲇ̅ⲁⲧⲉⲧⲛⲥⲱⲧⲙ ⲉⲡⲟⲩⲁ ⲛⲧⲁϥϫⲟⲟϥ ⲉⲥⲇⲟⲕⲓ ⲛⲏⲧⲛ ⲉⲟⲩ ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲧϭⲁⲓⲟϥ ϫⲉ ϥⲙⲡϣⲁ ⲙⲡⲙⲟⲩ
65 ௬௫ அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
ⲝ̅ⲉ̅ⲁⲩⲱ ⲁⲩⲁⲣⲭⲓ ⲛϭⲓ ϩⲟⲓⲛⲉ ⲉⲛⲉϫⲧⲁϥ ⲉϩⲟⲩⲛ ⲉϩⲣⲁϥ ⲁⲩⲱ ⲉϩⲃⲥⲡⲉϥϩⲟ ⲁⲩⲱ ⲉⲩϯⲕⲗⲯ ⲉϫⲱϥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲣⲟⲫⲏⲧⲉⲩⲉ ⲛⲁⲛ ⲁⲩⲱ ⲛϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ⲁⲩϯⲁⲁⲥ ⲉϩⲟⲩⲛ ϩⲙ ⲡⲉϥϩⲟ
66 ௬௬ அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,
ⲝ̅ⲋ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲉϥϩⲣⲁⲓ ϩⲛ ⲧⲁⲩⲗⲏ ⲁⲥⲉⲓ ⲛϭⲓ ⲟⲩⲉⲓ ⲛⲛϩⲙϩⲁⲗ ⲙⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ
67 ௬௭ குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்.
ⲝ̅ⲍ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉⲥⲛⲁⲩ ⲉⲡⲉⲧⲣⲟⲥ ⲉϥⲑⲙⲟ ⲙⲙⲟϥ ⲁⲥϭⲱϣⲧ ⲉϩⲟⲩⲛ ⲉϩⲣⲁϥ ⲉⲥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲛⲧⲟⲕ ϩⲱⲱⲕ ⲛⲉⲕϣⲟⲟⲡ ⲙⲛ ⲓⲏⲥ ⲡⲛⲁⲍⲁⲣⲏⲛⲟⲥ
68 ௬௮ அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.
ⲝ̅ⲏ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲁⲣⲛⲁ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩⲧⲉ ⲛϯⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲙⲙⲟϥ ⲟⲩⲇⲉ ⲛϯϭⲛ ⲉⲣⲉϫⲱ ⲙⲙⲟⲥ ⲁⲛ ϫⲉ ⲟⲩ ⲁⲩⲱ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲑⲁⲉⲓⲧ
69 ௬௯ வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
ⲝ̅ⲑ̅ⲧϩⲙϩⲁⲗ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉⲥⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲡⲉϫⲁⲥ ⲛⲛⲉⲧⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ϫⲉ ⲡⲁⲓ ⲟⲩⲉⲃⲟⲗ ⲙⲙⲟⲟⲩ ⲡⲉ
70 ௭0 அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
ⲟ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲟⲛ ⲁϥⲁⲣⲛⲁ ⲙⲙⲛⲛⲥⲁ ⲕⲉⲕⲟⲩⲓ ⲇⲉ ⲛⲉⲧⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲡⲉϫⲁⲩ ⲙⲡⲉⲧⲣⲟⲥ ϫⲉ ⲁⲗⲏⲑⲱⲥ ⲛⲧⲕ ⲟⲩⲉⲃⲟⲗ ⲙⲙⲟⲟⲩ ⲕⲁⲓ ⲅⲁⲣ ⲛⲧⲕⲟⲩⲅⲁⲗⲓⲗⲁⲓⲟⲥ
71 ௭௧ அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
ⲟ̅ⲁ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲁⲣⲭⲓ ⲛⲕⲁⲉⲩⲱ ⲉϩⲣⲁⲓ ⲁⲩⲱ ⲉⲱⲣⲕ ϫⲉ ⲛϯⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲙⲡⲉⲓⲣⲱⲙⲉ ⲉⲧⲉⲧⲛⲧⲁⲩⲟ ⲙⲙⲟϥ
72 ௭௨ உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.
ⲟ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁⲡⲁⲗⲉⲕⲧⲱⲣ ⲙⲟⲩⲧⲉ ⲙⲡⲙⲉϩⲥⲉⲡⲥⲛⲁⲩ ⲁϥⲣⲡⲙⲉⲉⲩⲉ ⲇⲉ ⲛϭⲓ ⲡⲉⲧⲣⲟⲥ ⲙⲡϣⲁϫⲉ ⲛⲑⲉ ⲛⲧⲁⲓⲏⲥ ϫⲟⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲙⲡⲁⲧⲉ ⲟⲩⲁⲗⲉⲕⲧⲱⲣ ⲙⲟⲩⲧⲉ ⲛⲥⲉⲡⲥⲛⲁⲩ ⲕⲛⲁⲁⲡⲁⲣⲛⲁ ⲙⲙⲟⲓ ⲛϣⲙⲛⲧⲥⲱⲱⲡ ⲁⲩⲱ ⲁϥϩⲓⲧⲟⲟⲧϥ ⲁϥⲣⲓⲙⲉ

< மாற்கு 14 >