< மாற்கு 13 >
1 ௧ இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Amikor Jézus a templomból kiment, tanítványai közül az egyik ezt mondta neki: „Mester, nézd, milyen kövek, és milyen épületek!“
2 ௨ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
Jézus pedig ezt felelte neki: „Látod ezeket a nagy épületeket? Nem marad kő kövön, amelyet le nem rombolnak.“
3 ௩ பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:
Mikor pedig az Olajfák hegyén ült, a templommal átellenben, maguk között megkérdezte tőle Péter, Jakab, János és András:
4 ௪ இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
„Mondd meg nékünk, mikor történnek meg ezek, és mi lesz a jel, amikor mindezek beteljesednek?“
5 ௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
Jézus pedig felelt nekik, és ezt kezdte mondani: „Vigyázzatok, hogy valaki meg ne tévesszen titeket.
6 ௬ ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.
Mert sokan jönnek majd az én nevemben, akik azt mondják: Én vagyok – és sokakat megtévesztenek.
7 ௭ யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.
Mikor pedig hallani fogtok háborúkról, és háborúk híreiről, meg ne rémüljetek, mert ezeknek meg kell lenniük, de ez még nem a vég.
8 ௮ மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
Mert nemzet nemzet ellen, és ország ország ellen támad, lesznek földindulások mindenfelé, és lesznek éhségek és háborúságok.
9 ௯ நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
Nyomorúságok kezdetei ezek. Ti pedig vigyázzatok magatokra, mert törvényszékeknek adnak át titeket, a gyülekezetekben vernek meg, helytartók és királyok elé állítanak énértem, bizonyságul nekik.
10 ௧0 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.
De előbb hirdetni kell az evangéliumot minden pogány között.
11 ௧௧ அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.
Mikor pedig elfogva visznek, hogy átadjanak titeket, ne aggodalmaskodjatok előre, hogy mit szóljatok, és ne gondolkodjatok, hanem ami adatik nektek abban az órában, azt szóljátok, mert nem ti vagytok, akik szóltok, hanem a Szentlélek.
12 ௧௨ அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
Akkor pedig testvér testvérét, atya gyermekét fogja halálra adni; gyermekek támadnak szülők ellen, és megöletik őket.
13 ௧௩ என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
És gyűlöletesek lesztek mindenki előtt az én nevemért, de aki mindvégig kitart, az üdvözül.
14 ௧௪ மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
Mikor pedig meglátjátok a »pusztító utálatosságot« – amelyről Dániel próféta szólt – ott állni, ahol nem kellene (aki olvassa, értse meg!), akkor akik Júdeában lesznek, fussanak a hegyekre,
15 ௧௫ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும்.
a háztetőn levő pedig le ne szálljon a házba, se be ne menjen, hogy házából valamit kivigyen;
16 ௧௬ வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.
és a mezőn levő haza ne térjen, hogy ruháját elvigye.
17 ௧௭ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
Jaj pedig a terhes és a szoptató asszonyoknak azokban a napokban.
18 ௧௮ இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.
Imádkozzatok pedig, hogy a ti futástok ne télen legyen.
19 ௧௯ ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும்.
Mert azok a napok olyan nyomorúságosak lesznek, amilyenek a világ kezdete óta, amelyet Isten teremtett, mind ez ideig nem voltak, és nem is lesznek.
20 ௨0 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
És ha az Úr meg nem rövidítette volna azokat a napokat, egyetlen test sem menekülne meg, de a választottakért, akiket kiválasztott, megrövidítette azokat a napokat.
21 ௨௧ அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.
„Ha pedig akkor ezt mondja nektek valaki: Íme, itt a Krisztus, vagy: Íme, amott, ne higgyétek.
22 ௨௨ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
Mert hamis Krisztusok és hamis próféták támadnak, jeleket és csodákat tesznek, hogy megtévesszék, ha lehet, még a választottakat is.
23 ௨௩ நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
Ti pedig vigyázzatok, íme, előre megmondtam nektek mindent!
24 ௨௪ அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது;
De azokban a napokban, azután a nyomorúság után, »a nap elsötétedik, és a hold nem fénylik,
25 ௨௫ வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
és az ég csillagai lehullanak, és az egekben levő hatalmasságok megrendülnek.«
26 ௨௬ அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.
Akkor meglátják az Emberfiát eljönni felhőkön, nagy hatalommal és dicsőséggel.
27 ௨௭ அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.
És akkor elküldi az angyalait, és egybegyűjti választottait a világ négy tája felől, a föld végső határától az ég végső határáig.
28 ௨௮ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
A fügefáról vegyétek pedig a példát. Amikor ága már zsendül, és levelet hajt, tudjátok, hogy közel van a nyár.
29 ௨௯ அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
Azonképpen ti is, mikor látjátok, hogy ezek meglesznek, tudjátok meg, hogy közel van ő, az ajtó előtt.
30 ௩0 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Bizony mondom néktek, hogy el nem múlik ez a nemzetség, amíg meg nem lesznek mindezek.
31 ௩௧ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Az ég és a föld elmúlnak, de az én beszédeim soha el nem múlnak.
32 ௩௨ அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.
Arról a napról és óráról pedig senki semmit sem tud, sem az égben az angyalok, sem a Fiú, hanem csak az Atya.
33 ௩௩ அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
Figyeljetek, vigyázzatok és imádkozzatok, mert nem tudjátok, mikor jön el az az idő!
34 ௩௪ ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.
Úgy, mint az az ember, aki messze útra kelve, házát elhagyva, szolgáit felhatalmazva, kinek-kinek a maga dolgát megszabva, az ajtónállónak is megparancsolta, hogy vigyázzon.
35 ௩௫ அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.
Vigyázzatok azért, mert nem tudjátok, mikor érkezik meg a háznak ura, este-e vagy éjfélkor, vagy kakasszókor, vagy reggel.
36 ௩௬ நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள்.
Nehogy, ha hirtelen megérkezik, alva találjon titeket.
37 ௩௭ நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
Amiket pedig nektek mondok, mindenkinek mondom: Vigyázzatok!“