< மாற்கு 10 >
1 ௧ இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
અનન્તરં સ તત્સ્થાનાત્ પ્રસ્થાય યર્દ્દનનદ્યાઃ પારે યિહૂદાપ્રદેશ ઉપસ્થિતવાન્, તત્ર તદન્તિકે લોકાનાં સમાગમે જાતે સ નિજરીત્યનુસારેણ પુનસ્તાન્ ઉપદિદેશ|
2 ௨ அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
તદા ફિરૂશિનસ્તત્સમીપમ્ એત્ય તં પરીક્ષિતું પપ્રચ્છઃ સ્વજાયા મનુજાનાં ત્યજ્યા ન વેતિ?
3 ௩ அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
તતઃ સ પ્રત્યવાદીત્, અત્ર કાર્ય્યે મૂસા યુષ્માન્ પ્રતિ કિમાજ્ઞાપયત્?
4 ௪ அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
ત ઊચુઃ ત્યાગપત્રં લેખિતું સ્વપત્નીં ત્યક્તુઞ્ચ મૂસાઽનુમન્યતે|
5 ௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
તદા યીશુઃ પ્રત્યુવાચ, યુષ્માકં મનસાં કાઠિન્યાદ્ધેતો ર્મૂસા નિદેશમિમમ્ અલિખત્|
6 ௬ ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
કિન્તુ સૃષ્ટેરાદૌ ઈશ્વરો નરાન્ પુંરૂપેણ સ્ત્રીરૂપેણ ચ સસર્જ|
7 ௭ இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
"તતઃ કારણાત્ પુમાન્ પિતરં માતરઞ્ચ ત્યક્ત્વા સ્વજાયાયામ્ આસક્તો ભવિષ્યતિ,
8 ௮ அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
તૌ દ્વાવ્ એકાઙ્ગૌ ભવિષ્યતઃ| " તસ્માત્ તત્કાલમારભ્ય તૌ ન દ્વાવ્ એકાઙ્ગૌ|
9 ௯ எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
અતઃ કારણાદ્ ઈશ્વરો યદયોજયત્ કોપિ નરસ્તન્ન વિયેજયેત્|
10 ௧0 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.
અથ યીશુ ર્ગૃહં પ્રવિષ્ટસ્તદા શિષ્યાઃ પુનસ્તત્કથાં તં પપ્રચ્છુઃ|
11 ௧௧ அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
તતઃ સોવદત્ કશ્ચિદ્ યદિ સ્વભાર્ય્યાં ત્યક્તવાન્યામ્ ઉદ્વહતિ તર્હિ સ સ્વભાર્ય્યાયાઃ પ્રાતિકૂલ્યેન વ્યભિચારી ભવતિ|
12 ௧௨ மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.
કાચિન્નારી યદિ સ્વપતિં હિત્વાન્યપુંસા વિવાહિતા ભવતિ તર્હિ સાપિ વ્યભિચારિણી ભવતિ|
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
અથ સ યથા શિશૂન્ સ્પૃશેત્, તદર્થં લોકૈસ્તદન્તિકં શિશવ આનીયન્ત, કિન્તુ શિષ્યાસ્તાનાનીતવતસ્તર્જયામાસુઃ|
14 ௧௪ இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
યીશુસ્તદ્ દૃષ્ટ્વા ક્રુધ્યન્ જગાદ, મન્નિકટમ્ આગન્તું શિશૂન્ મા વારયત, યત એતાદૃશા ઈશ્વરરાજ્યાધિકારિણઃ|
15 ௧௫ யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
યુષ્માનહં યથાર્થં વચ્મિ, યઃ કશ્ચિત્ શિશુવદ્ ભૂત્વા રાજ્યમીશ્વરસ્ય ન ગૃહ્લીયાત્ સ કદાપિ તદ્રાજ્યં પ્રવેષ્ટું ન શક્નોતિ|
16 ௧௬ அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
અનનતરં સ શિશૂનઙ્કે નિધાય તેષાં ગાત્રેષુ હસ્તૌ દત્ત્વાશિષં બભાષે|
17 ௧௭ பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
અથ સ વર્ત્મના યાતિ, એતર્હિ જન એકો ધાવન્ આગત્ય તત્સમ્મુખે જાનુની પાતયિત્વા પૃષ્ટવાન્, ભોઃ પરમગુરો, અનન્તાયુઃ પ્રાપ્તયે મયા કિં કર્ત્તવ્યં? (aiōnios )
18 ௧௮ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
તદા યીશુરુવાચ, માં પરમં કુતો વદસિ? વિનેશ્વરં કોપિ પરમો ન ભવતિ|
19 ௧௯ விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.
પરસ્ત્રીં નાભિગચ્છ; નરં મા ઘાતય; સ્તેયં મા કુરુ; મૃષાસાક્ષ્યં મા દેહિ; હિંસાઞ્ચ મા કુરુ; પિતરૌ સમ્મન્યસ્વ; નિદેશા એતે ત્વયા જ્ઞાતાઃ|
20 ௨0 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.
તતસ્તન પ્રત્યુક્તં, હે ગુરો બાલ્યકાલાદહં સર્વ્વાનેતાન્ આચરામિ|
21 ௨௧ இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
તદા યીશુસ્તં વિલોક્ય સ્નેહેન બભાષે, તવૈકસ્યાભાવ આસ્તે; ત્વં ગત્વા સર્વ્વસ્વં વિક્રીય દરિદ્રેભ્યો વિશ્રાણય, તતઃ સ્વર્ગે ધનં પ્રાપ્સ્યસિ; તતઃ પરમ્ એત્ય ક્રુશં વહન્ મદનુવર્ત્તી ભવ|
22 ௨௨ அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
કિન્તુ તસ્ય બહુસમ્પદ્વિદ્યમાનત્વાત્ સ ઇમાં કથામાકર્ણ્ય વિષણો દુઃખિતશ્ચ સન્ જગામ|
23 ௨௩ அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
અથ યીશુશ્ચતુર્દિશો નિરીક્ષ્ય શિષ્યાન્ અવાદીત્, ધનિલોકાનામ્ ઈશ્વરરાજ્યપ્રવેશઃ કીદૃગ્ દુષ્કરઃ|
24 ௨௪ சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!
તસ્ય કથાતઃ શિષ્યાશ્ચમચ્ચક્રુઃ, કિન્તુ સ પુનરવદત્, હે બાલકા યે ધને વિશ્વસન્તિ તેષામ્ ઈશ્વરરાજ્યપ્રવેશઃ કીદૃગ્ દુષ્કરઃ|
25 ௨௫ செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ઈશ્વરરાજ્યે ધનિનાં પ્રવેશાત્ સૂચિરન્ધ્રેણ મહાઙ્ગસ્ય ગમનાગમનં સુકરં|
26 ௨௬ அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
તદા શિષ્યા અતીવ વિસ્મિતાઃ પરસ્પરં પ્રોચુઃ, તર્હિ કઃ પરિત્રાણં પ્રાપ્તું શક્નોતિ?
27 ௨௭ இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
તતો યીશુસ્તાન્ વિલોક્ય બભાષે, તન્ નરસ્યાસાધ્યં કિન્તુ નેશ્વરસ્ય, યતો હેતોરીશ્વરસ્ય સર્વ્વં સાધ્યમ્|
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
તદા પિતર ઉવાચ, પશ્ય વયં સર્વ્વં પરિત્યજ્ય ભવતોનુગામિનો જાતાઃ|
29 ௨௯ அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,
તતો યીશુઃ પ્રત્યવદત્, યુષ્માનહં યથાર્થં વદામિ, મદર્થં સુસંવાદાર્થં વા યો જનઃ સદનં ભ્રાતરં ભગિનીં પિતરં માતરં જાયાં સન્તાનાન્ ભૂમિ વા ત્યક્ત્વા
30 ௩0 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
ગૃહભ્રાતૃભગિનીપિતૃમાતૃપત્નીસન્તાનભૂમીનામિહ શતગુણાન્ પ્રેત્યાનન્તાયુશ્ચ ન પ્રાપ્નોતિ તાદૃશઃ કોપિ નાસ્તિ| (aiōn , aiōnios )
31 ௩௧ ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
કિન્ત્વગ્રીયા અનેકે લોકાઃ શેષાઃ, શેષીયા અનેકે લોકાશ્ચાગ્રા ભવિષ્યન્તિ|
32 ௩௨ பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:
અથ યિરૂશાલમ્યાનકાલે યીશુસ્તેષામ્ અગ્રગામી બભૂવ, તસ્માત્તે ચિત્રં જ્ઞાત્વા પશ્ચાદ્ગામિનો ભૂત્વા બિભ્યુઃ| તદા સ પુન ર્દ્વાદશશિષ્યાન્ ગૃહીત્વા સ્વીયં યદ્યદ્ ઘટિષ્યતે તત્તત્ તેભ્યઃ કથયિતું પ્રારેભે;
33 ௩௩ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
પશ્યત વયં યિરૂશાલમ્પુરં યામઃ, તત્ર મનુષ્યપુત્રઃ પ્રધાનયાજકાનામ્ ઉપાધ્યાયાનાઞ્ચ કરેષુ સમર્પયિષ્યતે; તે ચ વધદણ્ડાજ્ઞાં દાપયિત્વા પરદેશીયાનાં કરેષુ તં સમર્પયિષ્યન્તિ|
34 ௩௪ அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
તે તમુપહસ્ય કશયા પ્રહૃત્ય તદ્વપુષિ નિષ્ઠીવં નિક્ષિપ્ય તં હનિષ્યન્તિ, તતઃ સ તૃતીયદિને પ્રોત્થાસ્યતિ|
35 ௩௫ அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.
તતઃ સિવદેઃ પુત્રૌ યાકૂબ્યોહનૌ તદન્તિકમ્ એત્ય પ્રોચતુઃ, હે ગુરો યદ્ આવાભ્યાં યાચિષ્યતે તદસ્મદર્થં ભવાન્ કરોતુ નિવેદનમિદમાવયોઃ|
36 ௩௬ அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
તતઃ સ કથિતવાન્, યુવાં કિમિચ્છથઃ? કિં મયા યુષ્મદર્થં કરણીયં?
37 ௩௭ அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
તદા તૌ પ્રોચતુઃ, આવયોરેકં દક્ષિણપાર્શ્વે વામપાર્શ્વે ચૈકં તવૈશ્વર્ય્યપદે સમુપવેષ્ટુમ્ આજ્ઞાપય|
38 ௩௮ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.
કિન્તુ યીશુઃ પ્રત્યુવાચ યુવામજ્ઞાત્વેદં પ્રાર્થયેથે, યેન કંસેનાહં પાસ્યામિ તેન યુવાભ્યાં કિં પાતું શક્ષ્યતે? યસ્મિન્ મજ્જનેનાહં મજ્જિષ્યે તન્મજ્જને મજ્જયિતું કિં યુવાભ્યાં શક્ષ્યતે? તૌ પ્રત્યૂચતુઃ શક્ષ્યતે|
39 ௩௯ அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
તદા યીશુરવદત્ યેન કંસેનાહં પાસ્યામિ તેનાવશ્યં યુવામપિ પાસ્યથઃ, યેન મજ્જનેન ચાહં મજ્જિય્યે તત્ર યુવામપિ મજ્જિષ્યેથે|
40 ௪0 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
કિન્તુ યેષામર્થમ્ ઇદં નિરૂપિતં, તાન્ વિહાયાન્યં કમપિ મમ દક્ષિણપાર્શ્વે વામપાર્શ્વે વા સમુપવેશયિતું મમાધિકારો નાસ્તિ|
41 ௪௧ மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
અથાન્યદશશિષ્યા ઇમાં કથાં શ્રુત્વા યાકૂબ્યોહન્ભ્યાં ચુકુપુઃ|
42 ௪௨ அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
કિન્તુ યીશુસ્તાન્ સમાહૂય બભાષે, અન્યદેશીયાનાં રાજત્વં યે કુર્વ્વન્તિ તે તેષામેવ પ્રભુત્વં કુર્વ્વન્તિ, તથા યે મહાલોકાસ્તે તેષામ્ અધિપતિત્વં કુર્વ્વન્તીતિ યૂયં જાનીથ|
43 ௪௩ உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும்.
કિન્તુ યુષ્માકં મધ્યે ન તથા ભવિષ્યતિ, યુષ્માકં મધ્યે યઃ પ્રાધાન્યં વાઞ્છતિ સ યુષ્માકં સેવકો ભવિષ્યતિ,
44 ௪௪ உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும்.
યુષ્માકં યો મહાન્ ભવિતુમિચ્છતિ સ સર્વ્વેષાં કિઙ્કરો ભવિષ્યતિ|
45 ௪௫ அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
યતો મનુષ્યપુત્રઃ સેવ્યો ભવિતું નાગતઃ સેવાં કર્ત્તાં તથાનેકેષાં પરિત્રાણસ્ય મૂલ્યરૂપસ્વપ્રાણં દાતુઞ્ચાગતઃ|
46 ௪௬ பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
અથ તે યિરીહોનગરં પ્રાપ્તાસ્તસ્માત્ શિષ્યૈ ર્લોકૈશ્ચ સહ યીશો ર્ગમનકાલે ટીમયસ્ય પુત્રો બર્ટીમયનામા અન્ધસ્તન્માર્ગપાર્શ્વે ભિક્ષાર્થમ્ ઉપવિષ્ટઃ|
47 ௪௭ அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.
સ નાસરતીયસ્ય યીશોરાગમનવાર્ત્તાં પ્રાપ્ય પ્રોચૈ ર્વક્તુમારેભે, હે યીશો દાયૂદઃ સન્તાન માં દયસ્વ|
48 ௪௮ அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.
તતોનેકે લોકા મૌનીભવેતિ તં તર્જયામાસુઃ, કિન્તુ સ પુનરધિકમુચ્ચૈ ર્જગાદ, હે યીશો દાયૂદઃ સન્તાન માં દયસ્વ|
49 ௪௯ இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
તદા યીશુઃ સ્થિત્વા તમાહ્વાતું સમાદિદેશ, તતો લોકાસ્તમન્ધમાહૂય બભાષિરે, હે નર, સ્થિરો ભવ, ઉત્તિષ્ઠ, સ ત્વામાહ્વયતિ|
50 ௫0 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.
તદા સ ઉત્તરીયવસ્ત્રં નિક્ષિપ્ય પ્રોત્થાય યીશોઃ સમીપં ગતઃ|
51 ௫௧ இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.
તતો યીશુસ્તમવદત્ ત્વયા કિં પ્રાર્થ્યતે? તુભ્યમહં કિં કરિષ્યામી? તદા સોન્ધસ્તમુવાચ, હે ગુરો મદીયા દૃષ્ટિર્ભવેત્|
52 ௫௨ இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.
તતો યીશુસ્તમુવાચ યાહિ તવ વિશ્વાસસ્ત્વાં સ્વસ્થમકાર્ષીત્, તસ્માત્ તત્ક્ષણં સ દૃષ્ટિં પ્રાપ્ય પથા યીશોઃ પશ્ચાદ્ યયૌ|