< மல்கியா 3 >
1 ௧ இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Ось Я посилаю Свого ангола, і він перед обличчям Моїм приготу́є доро́гу. І на́гло прибу́де до храму Свого Госпо́дь, Якого шукаєте ви, і Ангол запові́ту, Якого жада́єте. Ось іде Він, говорить Господь Саваот!
2 ௨ ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
І хто ви́терпить день Його прибуття́, і хто всто́їть, коли Він з'я́виться? Бо Він, як огонь той у золотаря́, і як у пра́льників луг.
3 ௩ அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
І Він сяде топи́ти та чи́стити срі́бло, і очи́стить синів Леві́я, і їх перечи́стить, як золото й срі́бло, і будуть для Господа жертву прино́сити в правді.
4 ௪ அப்பொழுது ஆரம்பநாட்களிலும் கடந்த வருடங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும்.
Тоді бу́де дар Юди та Єрусалиму приє́мний для Господа, як за днів вікові́чних і за років старода́вніх.
5 ௫ நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
І прибу́ду до вас Я на суд, і буду сві́дком швидки́м проти чарівників, і на перелю́бників, і проти тих, хто прися́гу складає на лжу, і проти тих, хто запла́тою на́ймита тисне, вдову́ й сироту́, хто відхилює право чужи́нця, Мене ж не боїться, говорить Госпо́дь Савао́т.
6 ௬ நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
Бо Я, Господь, не змі́нююся, тому ви, сини Яковові, не будете зни́щені.
7 ௭ நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் நாட்கள் துவங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நாங்கள் எந்த காரியத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
Від уста́в Моїх ви відступили́ з днів ваших батькі́в, і їх не стерегли́. Верніться ж до Мене, і верну́сь Я до вас! промовляє Господь Савао́т. Та говорите ви: „У чо́му пове́рнемось?“
8 ௮ மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே.
Чи Бога люди́на обманить? Мене ж ви обма́нюєте, ще й говорите: „Чи́м ми Тебе обмани́ли?“— Десяти́ною та прино́сами!
9 ௯ நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள்.
Прокля́ттям ви про́кляті, а Мене обмани́ли, о люду ти ввесь!
10 ௧0 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Принесіть же ви всю десяти́ну до дому скарбни́ці, щоб стра́ва була́ в Моїм храмі, і тим Мене ви́пробуйте, — промовляє Господь Саваот: чи небесних отво́рів вам не відчиню́, та не ви́ллю вам благослове́ння аж на́дмір?
11 ௧௧ பூமியின் கனியை அழித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சைக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
І ради вас насварю́ Я все те, що жере́, і воно не пони́щить вам зе́много пло́ду, і не заб'є винограду вам на по́лі, говорить Господь Саваот.
12 ௧௨ அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
І будуть всі люди вважати вас блаже́нними, бо бу́дете ви любим кра́єм, говорить Господь Саваот.
13 ௧௩ நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.
Жорстокі ваші слова́ проти Мене, — говорить Госпо́дь, — а ви кажете: „Що́ ми на Тебе сказали?“
14 ௧௪ தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்?
Ви кажете: „Ма́рність служити для Бога! І що за ко́ристь, що ми стереже́мо Його службу, та ходимо в жало́бі перед лицем Господа Саваота?
15 ௧௫ இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.
А тепер ми вважаємо пи́шних щасли́вими, і ті, хто вчиня́є безбожне, буду́ються та випробо́вують Бога, і втікають“.
16 ௧௬ அப்பொழுது யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; யெகோவா கவனித்துக் கேட்பார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புத்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
Змовлялись тоді один з о́дним і ті, хто стра́х перед Го́сподом має, — і прислу́хавсь Господь, і почув, і перед обличчям Його була пи́сана па́м'ятна книга про тих, хто стра́х перед Го́сподом має, і хто поважає Йме́ння Його.
17 ௧௭ என் செல்வத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய மகனுக்கு இரக்கம்காட்டுவதுபோல நான் அவர்களுக்கு இரக்கம்காட்டுவேன்.
І бу́дуть Мені вони вла́сністю, — каже Господь Савао́т, — на той день, що вчиню́, і змилосе́рджусь над ними, як змилосе́рджується чоловік над синами своїми, що служать йому.
18 ௧௮ அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்.
І ви зно́ву побачите різницю́ між пра́ведним та нечести́вим, між тим, хто Бо́гові служить, та тим, хто не служить Йому́.