< மல்கியா 2 >

1 இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது.
A sad vas opominjem, svećenici!
2 நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Ako ne budete poslušali, ako ne budete k srcu uzeli da proslavite Ime moje - govori Jahve nad Vojskama - kletvu ću na vas svaliti i proklet ću vaš blagoslov. I već ga prokleh jer to niste k srcu uzeli.
3 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
I slomit ću vam ruku, bacit ću vam u lice izmetine, izmetine vaših svetkovina, i s njima ću vas splaviti.
4 லேவியுடன்செய்த என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Po tom ćete znati: to je bila moja opomena da ostane Savez moj s Levijem - govori Jahve nad Vojskama.
5 அவனோடே செய்த என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்திற்குப் பயந்தும் இருந்தான்.
A moj Savez s njim, to bijaše život i mir - ja sam mu ih dao: bijaše to strah - i on me se bojao, Imena se moga plašio.
6 சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
Zakon istine bijaše u njegovim ustima i pakost mu ne kaljaše usana; u miru i pravičnosti hodio je sa mnom i mnoge je od grijeha odvratio.
7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன்.
Da, usne svećenikove treba da čuvaju znanje, a iz njegovih usta treba tražiti Zakon: ta on je glasnik Jahve nad Vojskama.
8 நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Ali vi ste s puta zašli, učinili ste da se mnogi o Zakon spotiču, raskinuli ste Savez Levijev - govori Jahve nad Vojskama.
9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன்.
Zato učinih da vas preziru i ponizuju svi narodi jer se putova mojih vi držali niste, nego ste bili pristrani primjenjujuć Zakon.
10 ௧0 நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மை உருவாக்கவில்லையோ? நாம் நம்முடைய முற்பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்கு ஏன் துரோகம் செய்யவேண்டும்?
Nemamo li svi jednog Oca? Nije li nas jedan Bog stvorio? Zašto smo onda jedan drugome nevjerni te skvrnimo Savez svojih otaca?
11 ௧௧ யூதா மக்கள் துரோகம் செய்தார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; யெகோவா சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா மக்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் மகள்களை திருமணம்செய்தார்கள்.
Iznevjerio se Juda: učinili su sramotu u Izraelu i Jeruzalemu, jer Juda je oskvrnuo Svetinju, Jahvi dragu, i ženi se kćerju tuđega božanstva.
12 ௧௨ இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் யெகோவா அழிப்பார்.
Svakog tko tako učini, ma tko bio on, nek iskorijeni Jahve iz šatora Jakovljevih i izmeđ onih koji prinose žrtvu Jahvi nad Vojskama!
13 ௧௩ நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
I ovo još vi činite: zalijevate suzama Jahvin žrtvenik tužeći i ridajući, jer on više neće da se žr tvi prikloni, iz ruke mu vaše ona nije ugodna.
14 ௧௪ ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே.
I vi pitate: “Zašto?” Zato što je Jahve bio svjedok između tebe i žene mladosti tvoje kojoj si nevjeran premda ti drugarica bijaše i žena tvoga saveza.
15 ௧௫ அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Nije li On načinio jedno jedino biće dahom životnim obdareno? A što to jedino biće traži? Božanski naraštaj! Poštuj dakle život svoj i ne budi nevjeran ženi svoje mladosti.
16 ௧௬ விவாகரத்தை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் ஆடையை மூடுகிறான் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்செய்யாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Jer ja mrzim otpuštanje žena - govori Jahve, Bog Izraelov - i onog koji nevjerom haljine svoje kalja - govori Jahve nad Vojskama! Poštujte dakle život svoj, ne budite nevjerni!
17 ௧௭ உங்கள் வார்த்தைகளினாலே யெகோவாவை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் யெகோவாவின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
Dosađujete Jahvi svojim riječima, a pitate: “U čemu mu dosađujemo?” Time što govorite: “Svi koji zlo čine dobro su viđeni u očima Jahvinim i takvi su mu mili!” ili: “Gdje je Bog pravde?”

< மல்கியா 2 >