< லூக்கா 6 >
1 ௧ பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
அசரஞ்ச பர்வ்வணோ த்³விதீயதி³நாத் பரம்’ ப்ரத²மவிஸ்²ராமவாரே ஸ²ஸ்யக்ஷேத்ரேண யீஸோ²ர்க³மநகாலே தஸ்ய ஸி²ஷ்யா: கணிஸ²ம்’ சி²த்த்வா கரேஷு மர்த்³த³யித்வா கா²தி³துமாரேபி⁴ரே|
2 ௨ பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
தஸ்மாத் கியந்த: பி²ரூஸி²நஸ்தாநவத³ந் விஸ்²ராமவாரே யத் கர்ம்ம ந கர்த்தவ்யம்’ தத் குத: குருத²?
3 ௩ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,
யீஸு²: ப்ரத்யுவாச தா³யூத்³ தஸ்ய ஸங்கி³நஸ்²ச க்ஷுதா⁴ர்த்தா: கிம்’ சக்ரு: ஸ கத²ம் ஈஸ்²வரஸ்ய மந்தி³ரம்’ ப்ரவிஸ்²ய
4 ௪ தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
யே த³ர்ஸ²நீயா: பூபா யாஜகாந் விநாந்யஸ்ய கஸ்யாப்யபோ⁴ஜநீயாஸ்தாநாநீய ஸ்வயம்’ பு³ப⁴ஜே ஸங்கி³ப்⁴யோபி த³தௌ³ தத் கிம்’ யுஷ்மாபி⁴: கதா³பி நாபாடி²?
5 ௫ மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
பஸ்²சாத் ஸ தாநவத³த் மநுஜஸுதோ விஸ்²ராமவாரஸ்யாபி ப்ரபு⁴ ர்ப⁴வதி|
6 ௬ வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.
அநந்தரம் அந்யவிஸ்²ராமவாரே ஸ ப⁴ஜநகே³ஹம்’ ப்ரவிஸ்²ய ஸமுபதி³ஸ²தி| ததா³ தத்ஸ்தா²நே ஸு²ஷ்கத³க்ஷிணகர ஏக: புமாந் உபதஸ்தி²வாந்|
7 ௭ அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
தஸ்மாத்³ அத்⁴யாபகா: பி²ரூஸி²நஸ்²ச தஸ்மிந் தோ³ஷமாரோபயிதும்’ ஸ விஸ்²ராமவாரே தஸ்ய ஸ்வாஸ்த்²யம்’ கரோதி நவேதி ப்ரதீக்ஷிதுமாரேபி⁴ரே|
8 ௮ அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
ததா³ யீஸு²ஸ்தேஷாம்’ சிந்தாம்’ விதி³த்வா தம்’ ஸு²ஷ்ககரம்’ புமாம்’ஸம்’ ப்ரோவாச, த்வமுத்தா²ய மத்⁴யஸ்தா²நே திஷ்ட²|
9 ௯ அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,
தஸ்மாத் தஸ்மிந் உத்தி²தவதி யீஸு²ஸ்தாந் வ்யாஜஹார, யுஷ்மாந் இமாம்’ கதா²ம்’ ப்ரு’ச்சா²மி, விஸ்²ராமவாரே ஹிதம் அஹிதம்’ வா, ப்ராணரக்ஷணம்’ ப்ராணநாஸ²நம்’ வா, ஏதேஷாம்’ கிம்’ கர்ம்மகரணீயம்?
10 ௧0 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
பஸ்²சாத் சதுர்தி³க்ஷு ஸர்வ்வாந் விலோக்ய தம்’ மாநவம்’ ப³பா⁴ஷே, நிஜகரம்’ ப்ரஸாரய; ததஸ்தேந ததா² க்ரு’த இதரகரவத் தஸ்ய ஹஸ்த: ஸ்வஸ்தோ²ப⁴வத்|
11 ௧௧ அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
தஸ்மாத் தே ப்ரசண்ட³கோபாந்விதா யீஸு²ம்’ கிம்’ கரிஷ்யந்தீதி பரஸ்பரம்’ ப்ரமந்த்ரிதா: |
12 ௧௨ அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
தத: பரம்’ ஸ பர்வ்வதமாருஹ்யேஸ்²வரமுத்³தி³ஸ்²ய ப்ரார்த²யமாந: க்ரு’த்ஸ்நாம்’ ராத்ரிம்’ யாபிதவாந்|
13 ௧௩ பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
அத² தி³நே ஸதி ஸ ஸர்வ்வாந் ஸி²ஷ்யாந் ஆஹூதவாந் தேஷாம்’ மத்⁴யே
14 ௧௪ அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
பிதரநாம்நா க்²யாத: ஸி²மோந் தஸ்ய ப்⁴ராதா ஆந்த்³ரியஸ்²ச யாகூப்³ யோஹந் ச பி²லிப் ப³ர்த²லமயஸ்²ச
15 ௧௫ மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
மதி²: தோ²மா ஆல்பீ²யஸ்ய புத்ரோ யாகூப்³ ஜ்வலந்தநாம்நா க்²யாத: ஸி²மோந்
16 ௧௬ யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ச யாகூபோ³ ப்⁴ராதா யிஹூதா³ஸ்²ச தம்’ ய: பரகரேஷு ஸமர்பயிஷ்யதி ஸ ஈஷ்கரீயோதீயயிஹூதா³ஸ்²சைதாந் த்³வாத³ஸ² ஜநாந் மநோநீதாந் க்ரு’த்வா ஸ ஜக்³ராஹ ததா² ப்ரேரித இதி தேஷாம்’ நாம சகார|
17 ௧௭ பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.
தத: பரம்’ ஸ தை: ஸஹ பர்வ்வதாத³வருஹ்ய உபத்யகாயாம்’ தஸ்தௌ² ததஸ்தஸ்ய ஸி²ஷ்யஸங்கோ⁴ யிஹூதா³தே³ஸா²த்³ யிரூஸா²லமஸ்²ச ஸோர: ஸீதோ³நஸ்²ச ஜலதே⁴ ரோத⁴ஸோ ஜநநிஹாஸ்²ச ஏத்ய தஸ்ய கதா²ஸ்²ரவணார்த²ம்’ ரோக³முக்த்யர்த²ஞ்ச தஸ்ய ஸமீபே தஸ்து²: |
18 ௧௮ அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
அமேத்⁴யபூ⁴தக்³ரஸ்தாஸ்²ச தந்நிகடமாக³த்ய ஸ்வாஸ்த்²யம்’ ப்ராபு: |
19 ௧௯ அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.
ஸர்வ்வேஷாம்’ ஸ்வாஸ்த்²யகரணப்ரபா⁴வஸ்ய ப்ரகாஸி²தத்வாத் ஸர்வ்வே லோகா ஏத்ய தம்’ ஸ்ப்ரஷ்டும்’ யேதிரே|
20 ௨0 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
பஸ்²சாத் ஸ ஸி²ஷ்யாந் ப்ரதி த்³ரு’ஷ்டிம்’ குத்வா ஜகா³த³, ஹே த³ரித்³ரா யூயம்’ த⁴ந்யா யத ஈஸ்²வரீயே ராஜ்யே வோ(அ)தி⁴காரோஸ்தி|
21 ௨௧ இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.
ஹே அது⁴நா க்ஷுதி⁴தலோகா யூயம்’ த⁴ந்யா யதோ யூயம்’ தர்ப்ஸ்யத²; ஹே இஹ ரோதி³நோ ஜநா யூயம்’ த⁴ந்யா யதோ யூயம்’ ஹஸிஷ்யத²|
22 ௨௨ மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
யதா³ லோகா மநுஷ்யஸூநோ ர்நாமஹேதோ ர்யுஷ்மாந் ரு’தீயிஷ்யந்தே ப்ரு’த²க் க்ரு’த்வா நிந்தி³ஷ்யந்தி, அத⁴மாநிவ யுஷ்மாந் ஸ்வஸமீபாத்³ தூ³ரீகரிஷ்யந்தி ச ததா³ யூயம்’ த⁴ந்யா: |
23 ௨௩ “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
ஸ்வர்கே³ யுஷ்மாகம்’ யதே²ஷ்டம்’ ப²லம்’ ப⁴விஷ்யதி, ஏதத³ர்த²ம்’ தஸ்மிந் தி³நே ப்ரோல்லஸத ஆநந்தே³ந ந்ரு’த்யத ச, தேஷாம்’ பூர்வ்வபுருஷாஸ்²ச ப⁴விஷ்யத்³வாதி³ந: ப்ரதி ததை²வ வ்யவாஹரந்|
24 ௨௪ செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
கிந்து ஹா ஹா த⁴நவந்தோ யூயம்’ ஸுக²ம்’ ப்ராப்நுத| ஹந்த பரித்ரு’ப்தா யூயம்’ க்ஷுதி⁴தா ப⁴விஷ்யத²;
25 ௨௫ திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.
இஹ ஹஸந்தோ யூயம்’ வத யுஷ்மாபி⁴: ஸோ²சிதவ்யம்’ ரோதி³தவ்யஞ்ச|
26 ௨௬ எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.
ஸர்வ்வைலாகை ர்யுஷ்மாகம்’ ஸுக்²யாதௌ க்ரு’தாயாம்’ யுஷ்மாகம்’ து³ர்க³தி ர்ப⁴விஷ்யதி யுஷ்மாகம்’ பூர்வ்வபுருஷா ம்ரு’ஷாப⁴விஷ்யத்³வாதி³ந: ப்ரதி தத்³வத் க்ரு’தவந்த: |
27 ௨௭ “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
ஹே ஸ்²ரோதாரோ யுஷ்மப்⁴யமஹம்’ கத²யாமி, யூயம்’ ஸ²த்ருஷு ப்ரீயத்⁴வம்’ யே ச யுஷ்மாந் த்³விஷந்தி தேஷாமபி ஹிதம்’ குருத|
28 ௨௮ உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
யே ச யுஷ்மாந் ஸ²பந்தி தேப்⁴ய ஆஸி²ஷம்’ த³த்த யே ச யுஷ்மாந் அவமந்யந்தே தேஷாம்’ மங்க³லம்’ ப்ரார்த²யத்⁴வம்’|
29 ௨௯ உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
யதி³ கஸ்²சித் தவ கபோலே சபேடாகா⁴தம்’ கரோதி தர்ஹி தம்’ ப்ரதி கபோலம் அந்யம்’ பராவர்த்த்ய ஸம்முகீ²குரு புநஸ்²ச யதி³ கஸ்²சித் தவ கா³த்ரீயவஸ்த்ரம்’ ஹரதி தர்ஹி தம்’ பரிதே⁴யவஸ்த்ரம் அபி க்³ரஹீதும்’ மா வாரய|
30 ௩0 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.
யஸ்த்வாம்’ யாசதே தஸ்மை தே³ஹி, யஸ்²ச தவ ஸம்பத்திம்’ ஹரதி தம்’ மா யாசஸ்வ|
31 ௩௧ மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
பரேப்⁴ய: ஸ்வாந் ப்ரதி யதா²சரணம் அபேக்ஷத்⁴வே பராந் ப்ரதி யூயமபி ததா²சரத|
32 ௩௨ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.
யே ஜநா யுஷ்மாஸு ப்ரீயந்தே கேவலம்’ தேஷு ப்ரீயமாணேஷு யுஷ்மாகம்’ கிம்’ ப²லம்’? பாபிலோகா அபி ஸ்வேஷு ப்ரீயமாணேஷு ப்ரீயந்தே|
33 ௩௩ உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
யதி³ ஹிதகாரிண ஏவ ஹிதம்’ குருத² தர்ஹி யுஷ்மாகம்’ கிம்’ ப²லம்’? பாபிலோகா அபி ததா² குர்வ்வந்தி|
34 ௩௪ திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
யேப்⁴ய ரு’ணபரிஸோ²த⁴ஸ்ய ப்ராப்திப்ரத்யாஸா²ஸ்தே கேவலம்’ தேஷு ரு’ணே ஸமர்பிதே யுஷ்மாகம்’ கிம்’ ப²லம்’? புந: ப்ராப்த்யாஸ²யா பாபீலோகா அபி பாபிஜநேஷு ரு’ணம் அர்பயந்தி|
35 ௩௫ உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
அதோ யூயம்’ ரிபுஷ்வபி ப்ரீயத்⁴வம்’, பரஹிதம்’ குருத ச; புந: ப்ராப்த்யாஸா²ம்’ த்யக்த்வா ரு’ணமர்பயத, ததா² க்ரு’தே யுஷ்மாகம்’ மஹாப²லம்’ ப⁴விஷ்யதி, யூயஞ்ச ஸர்வ்வப்ரதா⁴நஸ்ய ஸந்தாநா இதி க்²யாதிம்’ ப்ராப்ஸ்யத², யதோ யுஷ்மாகம்’ பிதா க்ரு’தக்⁴நாநாம்’ து³ர்வ்டத்தாநாஞ்ச ஹிதமாசரதி|
36 ௩௬ எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
அத ஏவ ஸ யதா² த³யாலு ர்யூயமபி தாத்³ரு’ஸா² த³யாலவோ ப⁴வத|
37 ௩௭ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
அபரஞ்ச பராந் தோ³ஷிணோ மா குருத தஸ்மாத்³ யூயம்’ தோ³ஷீக்ரு’தா ந ப⁴விஷ்யத²; அத³ண்ட்³யாந் மா த³ண்ட³யத தஸ்மாத்³ யூயமபி த³ண்ட³ம்’ ந ப்ராப்ஸ்யத²; பரேஷாம்’ தோ³ஷாந் க்ஷமத்⁴வம்’ தஸ்மாத்³ யுஷ்மாகமபி தோ³ஷா: க்ஷமிஷ்யந்தே|
38 ௩௮ கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
தா³நாநித³த்த தஸ்மாத்³ யூயம்’ தா³நாநி ப்ராப்ஸ்யத², வரஞ்ச லோகா: பரிமாணபாத்ரம்’ ப்ரத³லய்ய ஸஞ்சால்ய ப்ரோஞ்சால்ய பரிபூர்ய்ய யுஷ்மாகம்’ க்ரோடே³ஷு ஸமர்பயிஷ்யந்தி; யூயம்’ யேந பரிமாணேந பரிமாத² தேநைவ பரிமாணேந யுஷ்மத்க்ரு’தே பரிமாஸ்யதே|
39 ௩௯ பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
அத² ஸ தேப்⁴யோ த்³ரு’ஷ்டாந்தகதா²மகத²யத், அந்தோ⁴ ஜந: கிமந்த⁴ம்’ பந்தா²நம்’ த³ர்ஸ²யிதும்’ ஸ²க்நோதி? தஸ்மாத்³ உபா⁴வபி கிம்’ க³ர்த்தே ந பதிஷ்யத: ?
40 ௪0 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
கு³ரோ: ஸி²ஷ்யோ ந ஸ்²ரேஷ்ட²: கிந்து ஸி²ஷ்யே ஸித்³தே⁴ ஸதி ஸ கு³ருதுல்யோ ப⁴விதும்’ ஸ²க்நோதி|
41 ௪௧ நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
அபரஞ்ச த்வம்’ ஸ்வசக்ஷுஷி நாஸாம் அத்³ரு’ஷ்ட்வா தவ ப்⁴ராதுஸ்²சக்ஷுஷி யத்த்ரு’ணமஸ்தி ததே³வ குத: பஸ்²யமி?
42 ௪௨ அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.
ஸ்வசக்ஷுஷி யா நாஸா வித்³யதே தாம் அஜ்ஞாத்வா, ப்⁴ராதஸ்தவ நேத்ராத் த்ரு’ணம்’ ப³ஹி: கரோமீதி வாக்யம்’ ப்⁴ராதரம்’ கத²ம்’ வக்தும்’ ஸ²க்நோஷி? ஹே கபடிந் பூர்வ்வம்’ ஸ்வநயநாத் நாஸாம்’ ப³ஹி: குரு ததோ ப்⁴ராதுஸ்²சக்ஷுஷஸ்த்ரு’ணம்’ ப³ஹி: கர்த்தும்’ ஸுத்³ரு’ஷ்டிம்’ ப்ராப்ஸ்யஸி|
43 ௪௩ நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.
அந்யஞ்ச உத்தமஸ்தரு: கதா³பி ப²லமநுத்தமம்’ ந ப²லதி, அநுத்தமதருஸ்²ச ப²லமுத்தமம்’ ந ப²லதி காரணாத³த: ப²லைஸ்தரவோ ஜ்ஞாயந்தே|
44 ௪௪ ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
கண்டகிபாத³பாத் கோபி உடு³ம்ப³ரப²லாநி ந பாதயதி ததா² ஸ்²ரு’கா³லகோலிவ்ரு’க்ஷாத³பி கோபி த்³ராக்ஷாப²லம்’ ந பாதயதி|
45 ௪௫ நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.
தத்³வத் ஸாது⁴லோகோ(அ)ந்த: கரணரூபாத் ஸுபா⁴ண்டா³கா³ராத்³ உத்தமாநி த்³ரவ்யாணி ப³ஹி: கரோதி, து³ஷ்டோ லோகஸ்²சாந்த: கரணரூபாத் குபா⁴ண்டா³கா³ராத் குத்ஸிதாநி த்³ரவ்யாணி நிர்க³மயதி யதோ(அ)ந்த: கரணாநாம்’ பூர்ணபா⁴வாநுரூபாணி வசாம்’ஸி முகா²ந்நிர்க³ச்ச²ந்தி|
46 ௪௬ என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
அபரஞ்ச மமாஜ்ஞாநுரூபம்’ நாசரித்வா குதோ மாம்’ ப்ரபோ⁴ ப்ரபோ⁴ இதி வத³த²?
47 ௪௭ என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
ய: கஸ்²சிந் மம நிகடம் ஆக³த்ய மம கதா² நிஸ²ம்ய தத³நுரூபம்’ கர்ம்ம கரோதி ஸ கஸ்ய ஸத்³ரு’ஸோ² ப⁴வதி தத³ஹம்’ யுஷ்மாந் ஜ்ஞாபயாமி|
48 ௪௮ ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
யோ ஜநோ க³பீ⁴ரம்’ க²நித்வா பாஷாணஸ்த²லே பி⁴த்திம்’ நிர்ம்மாய ஸ்வக்³ரு’ஹம்’ ரசயதி தேந ஸஹ தஸ்யோபமா ப⁴வதி; யத ஆப்லாவிஜலமேத்ய தஸ்ய மூலே வேகே³ந வஹத³பி தத்³கே³ஹம்’ லாட³யிதும்’ ந ஸ²க்நோதி யதஸ்தஸ்ய பி⁴த்தி: பாஷாணோபரி திஷ்ட²தி|
49 ௪௯ என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.
கிந்து ய: கஸ்²சிந் மம கதா²: ஸ்²ருத்வா தத³நுரூபம்’ நாசரதி ஸ பி⁴த்திம்’ விநா ம்ரு’து³பரி க்³ரு’ஹநிர்ம்மாத்ரா ஸமாநோ ப⁴வதி; யத ஆப்லாவிஜலமாக³த்ய வேகே³ந யதா³ வஹதி ததா³ தத்³க்³ரு’ஹம்’ பததி தஸ்ய மஹத் பதநம்’ ஜாயதே|