< லூக்கா 5 >

1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள்.
有一天,耶稣站在革尼撒勒湖边,众人簇拥着他,希望聆听上帝之道。
2 அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
耶稣看见两只船停在湖边,渔夫离开船去洗网了。
3 அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.
他走上西门的那只船,请他撑船到离岸不远的水面,然后坐下,在船上教导众人。
4 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார்.
教导结束后,他对西门说:“把船划到水更深的地方,下网打鱼吧!”
5 அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான்.
西门说:“老师,我们整夜劳苦工作却一无所获,不过我愿听从你,我会撒网。”
6 அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள்.
西门撒网后捞上很多鱼,几乎将网撑裂。
7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
于是他叫来另外那只船上的同伴来帮忙,他们捞上来的鱼把两只船装满了,甚至压得船开始下沉。
8 சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
西门(彼得)看见这番情景,就跪在耶稣面前说:“主啊,你不能靠近我,因为我是个罪人。”
9 அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.
因为他和身边其他人一样,完全被刚才捕捞上来的鱼数量惊住了。
10 ௧0 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.
西庇太的儿子雅各和约翰是西门的打鱼同伴,他们也有同样的感觉。耶稣对西门说:“不要怕!从现在起,你就要成为收获人的渔夫了。”
11 ௧௧ அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
这几名渔夫把两只船靠上岸后,便放下一切跟随耶稣。
12 ௧௨ பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
有一次,耶稣来到一个城中,一名严重的麻风病人看到他,就伏倒将脸贴在地上,求他说:“主啊!如果你愿意,就治愈我。”
13 ௧௩ அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.
耶稣伸手触碰他,说:“我愿意,治愈吧!”于是这个人的麻风病立刻好了。
14 ௧௪ அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
耶稣嘱咐他:“不要告诉其他人,去给祭司看看,然后照着摩西所说的,为你的治愈进行献祭,向大家作证。”
15 ௧௫ அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
但关于耶稣的消息却传得越来越远,大量的民众来到这里聆听耶稣教导,希望他能治愈他们的疾病。
16 ௧௬ அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
但耶稣却经常躲到安静的地方祷告。
17 ௧௭ பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.
有一天,耶稣正在教导众人之时,人群中有法利赛人和宗教老师,他们来自加利利和犹太的乡村以及耶路撒冷。因为主的力量与耶稣同在,所以他可以治愈病患。
18 ௧௮ அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள்.
几个人用床抬着一个瘫痪之人,想送他到耶稣跟前。
19 ௧௯ மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
但因为这里的人实在太多,无法挤进房间,于是他们爬上房顶,在屋瓦中挖了一个洞,将患者和垫子通过洞放了下来,正好落在人群中耶稣的面前。
20 ௨0 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
耶稣看出了他们对他的信任,于是说:“你们的罪被宽恕了。”
21 ௨௧ அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள்.
于是宗教老师和法利赛人开始议论:“这人是谁?竟然会说如此亵渎上帝之语?除了上帝,谁能宽恕罪过?”
22 ௨௨ இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?
耶稣知道他们正在讨论这个问题,于是对他们说:“你们为什么会想到这样的问题?
23 ௨௩ உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
说‘你的罪已被宽恕’容易,还是说‘站起来走吧’容易?
24 ௨௪ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
我想要向你们证明的是,人子在人间也有宽恕罪过的权力。”然后他对瘫痪之人说:“我现在对你说,站起来,拿着你的垫子回家去吧。”
25 ௨௫ உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.
那人立刻在众人面前站起来,拿起刚才躺着的垫子,赞美着上帝离开了。
26 ௨௬ அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
众人对眼前的一切感到震惊,在倍感敬畏之余也纷纷开始赞美上帝。他们说:“我们今天见证了令人惊讶的事情。”
27 ௨௭ இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.
稍后,耶稣离开了这个城镇,看见一位名叫利未的税吏坐在交税亭处,于是对他说:“跟随我吧!”
28 ௨௮ அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
于是利末站起来放下一切,决定跟随耶稣。
29 ௨௯ அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.
利未在自己家中大摆宴席,客人中除了很多税吏,还有其他一些人。但法利赛人和宗教老师开始抱怨耶稣的门徒,说:
30 ௩0 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.
“你们为什么要跟税吏和那些罪人一起吃喝呢?”
31 ௩௧ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை.
耶稣回答:“健康之人不需要医生,病患才需要。
32 ௩௨ நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
我来这里并非感召正道之人,而是要召唤罪人。”
33 ௩௩ பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.
他们对耶稣说:“约翰的门徒经常禁食和祈祷,法利赛人的门徒也是,但你的门徒却大吃大喝。”
34 ௩௪ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா?
耶稣又问:“男傧相和新郎在一起时,怎么可以让男傧相禁食呢?
35 ௩௫ மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
时间一到,新郎要离开大家了,那一刻他们就要禁食了。”
36 ௩௬ அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.
耶稣又讲了一个比喻:“没有人会从新衣服上撕下一块布,补在旧衣服上。如果这样,不但新衣服撕破了,新撕下来的布与旧衣服也不协调。
37 ௩௭ ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.
没有人会把新酒装在旧皮袋中,否则新酒就会把皮袋胀破,不但酒漏掉了,皮袋也损坏了。
38 ௩௮ புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
人们总是把新酒放在新皮袋里。
39 ௩௯ அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
人们喝了陈酿的酒,就不想喝新酒了,他们会说:‘陈酿的口味就是好。’”

< லூக்கா 5 >